சுயசரிதையின்
ஒரு முக்கியக்
காரணி, அதிலிருப்பதை
உண்மையென நம்புமாறு
நிர்பந்தம் செய்வது!
-
தன்
மீதிருக்கும் சந்தேகம்
சில நேரங்களில்
பாதுகாப்பு, பல
தருணங்களில் பெரும்
’பிணி’
-
நமக்குள்ளிருக்கும்
உலகத்தின் எல்லைகளை,
தான் நீண்டு
செல்லும் பாதையெங்கும்
விரிவுபடுத்துகிறது ’விவாதம்’.
-
திட்டமிட்ட
சந்திப்புகளைவிட, எதிர்பாராமல்,
திட்டமிடாமல், முன்முடிவுகளற்று
நிகழும் சந்திப்புகள்
தரும் சுவை
அலாதியானது.
-
ஒரு
தனியார் பள்ளியின்
அரங்கத்தில் காமராஜர்
படம் பெரிதாக
ஒட்டப்பட்டிருக்கிறது. சமூகத்திற்கு
என்னவோ சொல்ல
வர்றாங்க... ஆனா
எனக்குப் புரியல!
-
’வாக்கிங்
போறேன்’னு
கடுப்பேத்தியவனிடம், “நடந்து
போ!” எனச்
சொல்லி தற்காலிகமாகப்
பழி தீர்த்துக்
கொண்டேன்! :)
-
இந்த
மழை மண்
வாசனையைக் கொண்டு
வராவிட்டாலும் பரவாயில்லை.
தார் ரோட்டில்
தேய்ந்த டயர்களின்
நாற்றத்தை அகற்றும்
அளவிற்கேனும் வந்தால்
போதும்!
-
கிளையில்
அமரும் பறவை
மரத்தின் வேர்
குறித்தெல்லாம் ஆராய்ச்சி
செய்வதில்லை!
-
கீழ்நோக்கி
வரைந்த கோடு
ஒன்றினை முற்றுப்புள்ளி
வைத்து நிறுத்தினேன்
புள்ளி வழிந்துகொண்டிருக்கிறது
-
நெடுஞ்சாலை
‘டோல்கேட்’களில்
வேலை செய்யும்
பையனிடம் கட்டணம்
குறித்த கோபத்தைக்
காமிப்பதும் உலகின்
தலைசிறந்த மொக்கைத்தனமே!
-
தராசுத்
தட்டுகளில் அமைதியும்
கொண்டாட்டமும்! முள்ளொன்றும்
நேராக நிற்க
வேண்டியதில்லை!
-
அடர்
வனமொன்றில் அவசரமாய்த்
தொலைந்து போகலாம்
வாருங்கள்! அவசரமொன்றுமில்லை
ஆற அமரத்
தேடிக்கொள்வோம்!
-
டிபன்
பாக்ஸ்லயிருந்து திங்கிறது
என்ன சோறுனு
தெரியாம அள்ளிப்
போடுறதும், போன்
பண்ணி அதென்ன
சோறுனு கேக்காம
மறந்து போறதும்கூட
ஜென் நிலைதான்!
-
கடந்தோடும்
ஒவ்வொரு நாளும்
சுவாரஸ்யங்களை நம்
உள்ளங்கையில் வைத்து,
விரல்களை மடக்கி
மூடி, விரல்களின்
மேல் செல்லமாய்
தட்டிவிட்டுப் போகின்றன.
-
முரண்களின்
மொத்தத் தொகுப்பாகவும்,
சுவாரஸ்யங்களின் கிடங்காவும்
தங்களை தகவமைத்துக்
கொள்வதில் மனிதர்களுக்கு
நிகர் மனிதர்களே.
-
ஒரு
விடியலின் சாயம்
குழந்தைக்கு ஒருவிதமாகவும்,
பெற்றோர்களுக்கு அதன்
நேரெதிராகவும், அக்கம்பக்கத்தாருக்கு
இன்னொரு விதமாகவும்
அமைகின்றது
-
வாழ்க்கையின்
ஆகச்சிறந்த சுவாரஸ்யம்
நாம் வாழவேண்டிய
எந்த ஒரு
நாளையும், அது
இப்படித்தான் இருக்க
வேண்டுமென வடிவமைத்துக்கொள்ள
-
என்னைக்
குறித்து நீங்கள்
நினைக்கும், கற்பனை
செய்யுமளவிற்கு இருக்க,
நினைக்க, கற்பனை
செய்ய எனக்கு
என்னிடம் அனுமதியில்லையென்பதே
நிதர்சனம்!
-
நாத்திகன்
மேல் ஆத்திகனுக்கு
வரும் கோபம்,
கடவுளை நம்பவில்லையே
என்பதைவிட, தன்
நம்பிக்கையை நம்பவில்லையே
என்பதுதான்! :)
-
எட்டிப்பிடிக்க
முடியா முதுகின்
மையத்தில் ஊர்ந்து
செல்லும் எறும்பை
நசுக்கவோ/உதறவோ
தவிப்புபோல் வாழ்வின்
சில சூழல்கள்
தவிக்க வைக்கின்றன.
-
5 comments:
/கீழ்நோக்கி வரைந்த கோடு//
நீங்கள் வரையவில்லை என்றான பின் அதை எப்படி கீழ் நோக்கி வரைந்தது என்று சொல்ல முடியும்?
கீச்சுக்கள் அருமை அண்ணா...
சுயசரிதையின் ஒரு முக்கியக் காரணி, அதிலிருப்பதை உண்மையென நம்புமாறு நிர்பந்தம் செய்வது!
SACHIN!?
class as usual
Post a Comment