Jul 22, 2014

ஃபேஸ்புக் நட்பு



நட்பு பூணுதலும்
துண்டித்துக்கொள்தலும்
ஃபேஸ்புக்கில்
ஆகச்சிறந்த
எளிய காரியமாயிருக்கின்றது
 
இருவரில்  
எவர் சொடுக்குவதெனினும்
இணைக்க
இரட்டைச் சொடுக்கும்
ஒதுங்கி விலக
ஒற்றைச் சொடுக்கும்
போதுமாயிருக்கின்றது!

நினைவுகளிலிருந்து
நீக்கிடமட்டும்
சொடுக்கச்
சொடுக்க
முரணாய்ப்
பிணைந்திறுகுகிறது!

-

2 comments:

Rathnavel Natarajan said...

அருமை சார்.

Durga Karthik. said...

சரி தான் .

விதைக்கப்படும் துயரங்கள்

  நமக்கு வாழ்க்கை மீதிருக்கும் காதல் அலாதியானது. செய்யும் அத்தனையும் அதற்கானதுதான்.  உண்பது, உடுத்துவது, உழைப்பது, உறங்குவது எனும் அடிப்படைத...