காரிருள் சூழ் மாளிகையில்
மூடிய
அறையின்
கதவிடுக்கில்
கசியும்
வெளிச்சக்
கீற்றில்
இருள்
கொஞ்சம் இளகுகிறது
சாவித்துளை
வழியே
நோக்கும்
விழியில்
கரைந்திளகும்
இருளில்
கலந்து
இறுகுகிறது
அறையின் ரகசியங்கள்
அறையின் ரகசியங்கள்
ரகசியங்களின் சுவை பருகும்
துளை வழியே
மூடிய அறைக்குள்
கரைந்தொழுகும்
சாத்தியமுமுண்டு!
கரைந்தொழுகும்
சாத்தியமுமுண்டு!
-
8 comments:
அருமை சார்.
வணக்கம் தங்களது பதிவு இன்று வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது//http://blogintamil.blogspot.in/2014/07/super-hit-post.html// நன்றி!
வணக்கம்
இன்று வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்
அறிமுகம் செய்தவர்-மகிழ்நிறை மைதிலி கஸ்தூரி ரெங்கன்
பார்வையிடமுகவரி-வலைச்சரம்
அறிமுகம்செய்த திகதி-18.07.2014
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மகிழ்நிறை மைதிலி கஸ்தூரி ரெங்கன் இன்று வலைச்சரத்தில் தங்களை அறிமுகப்படுத்தியதறிந்து மகிழ்ச்சி. தங்களின் பதிவைக் கண்டேன். வாழ்த்துக்கள்.
www.drbjambulingam.blogspot.in
www.ponnibuddha.blogspot.in
அருமை வலைசர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் ...!
அன்பின் கதிர் - பாயுமொழி நீ எனக்கு - பதிவு நன்று - வலைச்சர அறிமுகம் வழியாக பலர் வந்துள்ளனர் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
தூய அமுதாய் உள்ளன கவியின் வரிகள் . மனம் நிறை வாழ்த்துக்கள் . சொல்லவொனா சொற்களை , நினைக்க இயலா தருணங்களில் , எழுத்தில் வடிக்கும் வல்லமை , எழுத்தாளன் ஒருவனுக்கே ....
மிக அருமை. பகிர்வினிற்கு நன்றி..!
நண்பர்கள் தின வாழ்த்து அட்டைகள், வாழ்த்துகள், எஸ்.எம்.எஸ்.களுக்கு:
Happy Friendship Day 2014 Images
Post a Comment