வஞ்சனையில்லையடி கிளியே







செடியோடு பிடுங்கிச் சுட்ட கடலை
காரமாய் வறுத்த முருங்கைக் காய் 
பச்சை மாங்காய்
உச்சிக் கொய்யா
கொஞ்சம் கோழிக்கறி
பம்ப் செட் குளியல்

கிறங்கிக் கத்தும் பேர் தெரியாப் பறவை
தத்தித்தாவியோடும் அணில் குஞ்சு
வாலால் விசிறும் எருமை
காலைச் சுற்றும் நாய்
எட்டி நக்கும் மாட்டுக் கன்று
தூரத்தில் மேயும் மயில் கூட்டம்
கயிற்றுக் கட்டில்
வேப்பமர நிழல்

ஒருபோதும்
வஞ்சிப்பதில்லை கிராமம்

வேண்டாமென வெளியேறி
ஒற்றை ஞாயிறுகளில்
ஒதுங்குபவனையும்!

-0-

12 comments:

கிருத்திகாதரன் said...

அருமை..

Prapavi said...

கண்முன் நிறுத்தும் வரிகள், நேரில் பார்க்க தூண்டுகிறது!அருமை!


புதியவன் பக்கம் said...

இப்பதான் ஊருலேருந்து வந்து ஹேங்-ஓவர்ல தவிச்சுகிட்டிருக்கேன். நீங்க வேற படுத்துறீங்களே...

quadhirababil said...

அடுத்த முறை செல்லும்போது மறவாமல் அழைக்கவும், ஒரு நாள் முன்னமே.

Rathnavel Natarajan said...

பம்ப் செட் குளியல் =
இப்போது உள்ள குழந்தைகள் பார்த்திருக்கவே மாட்டார்கள். அருமையான பதிவு.
நன்றி கதிர் சார்.

தெய்வசுகந்தி said...

Mmmmmmmm....


JAYARAJ MATHS TEACHER said...

Nan lam 2 yrs fulla lalgudi yil bump set kuliyal than!
adhukku piragu suthama vaippe kidaikale!

'பரிவை' சே.குமார் said...

அருமையான கவிதை...
கிராமத்து வாழ்க்கையின் சுவையே தனிதான் அண்ணா.

அருணா செல்வம் said...

அதுக்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேண்டும் என்று நினைக்கிறேன்...

cheena (சீனா) said...

அன்பின் கதிர் - அருமையான, அனுபவத்தால் எழுதப்பட்ட கவிதை - மிக மிக இரசித்தேன் - முக்கியமான ஒன்றினை மறந்து விட்டீர்களே - ம்ம்ம் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

ezhil said...

அந்த ஒருநாள் இன்பம் சிறிதுகாலத்திற்கு நம்மை உத்வேகத்துடன் வைத்திருக்கும் வலிமை வாய்ந்தது... அருமை

Unknown said...

செடியோடு பிடுங்கிச் சுட்ட கடலை
பம்ப் செட் குளியல்
எட்டி நக்கும் மாட்டுக் கன்று
கயிற்றுக் கட்டில்
வேப்பமர நிழல்..............எனக்கு பிடித்த வரிகள்