ஏற்கனவே தின்னுபோட்டு சும்மா கடனேனு கொறிக்க வர்றவங்களுக்கு தனியா பந்தி போடுங்கய்யா. பொசுக்னு இலைய மூடி நம்ம வயித்துல அடிக்கிறாங்க!
-
பாராளுமன்றம் நடந்தது, 24 மணி நேரம் மின் விநியோகம் இருந்தது என்பதையெல்லாம் இனி இத்துப்போன பழைய செய்தித்தாள்களில் மட்டுமே படிக்க இயலும்!
-
டெண்டுல்கர் பேட்டுக்கே அவ்ளோ பெரிய பந்து சிக்காத போது, நம்ம பேட்டுக்கு இவ்ளோ சின்ன கொசு சிக்காதது ஒரு குத்தமா! # கொசு(Bat) ராக்ஸ்
-
ஏதோ ஒரு நொடியில் சூழும் வெறுமை, ஏதோ ஒரு நொடியில் விலகும். அது எந்த நொடி எனத் தெரியாததுதான் வாழ்வின் அதிசுவாரசியம்!
-
ஜார்க்கண்டில் கொசுவுக்கு கோவில் கட்டி வழிபாடு # தப்பு பண்றவங்களை கடவுள் இனி கண்ணைக் குத்தமாட்டார் உடனே ’கடிப்பார்’!
-
பகல் நேரத்தில் மது அருந்தும் நண்பர்கள் மத்தியில் எதேச்சையாக இருப்பதும் ஒருவித ’போதை’தான். ஆனாலும் எத்தனையெத்தனை உண்மைகள்! #அடேங்கப்பா
ஒவ்வொரு செடியும் மரமும் அறியும் தன்னில் பூக்கும் மலர், உதிரும் என்பதை!
-
கோபம் கொள்ளும் கணத்தில் மட்டும், கோபத்திற்கான காரணத்தை ஏனோ மனது இரட்டிப்பாக்கிக்கொள்ள துடிக்கிறது #ம்ம்ம்ம்... நல்லா வருவடா!
-
எல்லோரிடமும் கதை இருக்கின்றது. சிலருக்கு எழுதத் தெரிவதில்லை, பலருக்கு வாசிக்கத் தெரிவதில்லை!
-
ROFLனு போட்டு ”வுழுந்து பொரண்டு சிரிக்கிறவங்க” போட்டிருக்கிற துணியில புழுதி ஆயிடாது!? # ரொம்போ நாளு டவுட்டு :)
-
ஒவ்வொரு மணி நேர முடிவிலும் ”இப்ப கரண்டு போய்ருமோ”னு பதட்டமா நினைச்சு நினைச்சே சீக்கிரம் மாரடைப்பு வந்துடும் போல இருக்கு
-
நேரமில்லை என்பதை ”மனம் இல்லை” என்றும் நிரப்பிக்கொள்ளலாம்!
-
எனக்கு கரப்பான் பூச்சியை பிடிக்காமல் போனதற்கு நேரிடைப் பகை ஏதுமில்லை. யார்யாரோ கரப்பான்பூச்சியை தங்களுக்குப் பிடிக்காது என்று சொன்னதாலும்
-
”நான் செய்வது மட்டுமே சரி” எனும் தவறை அடிக்கடி செய்கிறோம்.
-
”வரையறைகள்” மாறுதலுக்குட்பட்டவை.
-
மகிழ்ந்ததெல்லாம் மகிழ்ந்திருக்க வேண்டியதோ, வருந்தியதெல்லாம் வருந்தியிருக்க வேண்டியதோ அல்ல!
-
என்னையே நான் திருப்தி செய்திட இயலுவதில்லை, இதில் உங்களை......!!!! #ரொம்பதான் பேராசை உங்களுக்கு!
-
கிராமத்துல கரண்டு மட்டும்தான் இல்லைனு நினைக்காதீங்க....
’கொசு’வும் சுத்தமா இல்லை!
-
பேருந்துகளிலும், ரயிலிலும் பிதுங்கும் கூட்டத்தைப் பார்க்கும்போது பெரு நகரங்கள் எவ்வளவு வீங்கியிருக்கின்றன என்பது புரிகிறது!
-
தடையில்லா மின்தடை! தடையில்லா டாஸ்மாக் சேவை!! வாழ்க எம்மண் வையத்து நாட்டிலெல்லாம்!
-
வரவர வீட்ல எதுனா பேசும்போதுகூட வீட்டில் உள்ளவங்க Like, Comment போடனும்னு தோண ஆரம்பிச்சிடுச்சு (கிடைப்பது பல்பு) - FB மேனியா #முத்தின நிலை
-
உண்மையச் சொல்லுங்க... நிஜமாவே பொருள் தேவைனு வாங்குறீங்ளா? இல்ல காசு இருக்குதேனு வாங்குறீங்ளா?
-
பெல் அடிச்சா போன் எடுத்துடுறோம்னு போன் பண்ற டெலிமார்கெட்டிங் ஆளுங்களுக்கு சவால் “தில் இருந்தா EB ஆபிஸ்கு போன் பண்ணி பேசிடு பார்க்கலாம்”
-
தூங்குறாங்னு தெரிஞ்சே எழுப்பி தூக்கமானு கேக்குற புத்திசாலித்தன கேள்வியை, பாதாளச்சாக்கடைக்கு தோண்டி இன்னும் மூடாதவங்ககிட்டே காட்டுங்களேன்!
-
ஒவ்வொரு முறையும் முதல் துளி ஞாபகத்தில் இருக்கிறது கடைசித்துளி எதுவென்பதுதான் நினைவிலிருப்பதில்லை!
-
வெந்த சோத்தை திரும்பவும் சட்டியில் போட்டு வறுக்கிறதுக்குப் பேருதானே ஃபாஸ்ட் ஃபுட்!
-
ஒரு நிமிடம் என்பது குறுகியதாகவோ, நீண்டதாகவோ தோன்றுவதை கடிகாரம் தீர்மானிப்பதில்லை.
மனதும், சூழலும்தான்!
-
உன்னைச் சொல்லாததை ”என்னைச் சொன்னியானு கேக்குற அளவுக்கும் சுறுசுறுப்பா இருக்காதே” # முடியவே முடியலை! :))))
-
சோம்பேறியாக இரு. அது உன் விருப்பம். ஆனால் சோம்பேறி என்பதைக் கூட அறிய முடியாத அளவுக்கு சோம்பேறியாக இருக்காதே #முடியலத்துவம் :)
-
உங்க ஃபேக் ஐடி புரட்சிக்கு ஒரு அளவே இல்லையா? ”டெங்கு கொசு”னு கூட பேர் வைப்பீங்க!? :)))
-
இதோ இந்தக் காற்றை சுத்திகரித்த மரத்தை நான் வைக்கவில்லை.
-
தமிழ்நாட்ல ஏன் வேஷ்டிகளுக்கு இத்தனை விளம்பரம்?. இங்கு அந்தளவுக்கு சந்தை இருக்கா என்ன!? # சீரியஸ் (ICU) டவுட்டு
-
சென்னைக்காரங்களை நினைக்கவே பொறாமையா இருக்கு. இப்ப மழை, கரண்ட் ரெண்டுமே அங்கேதான் அதிகம்! # லெக் தாதா
-
”அன்புள்ள” எனத் தொடங்கும் பிரபலங்கள் / அரசியல் கடிதங்களில் அன்பு இருப்பதில்லை # அவதானிப்பு!
-
பேருக்கு பின்னால சாதி/டிகிரிக்கு பதிலா ப்ளட்குரூப் போடுங்க. இரத்தக்காட்டேரிபோல டெங்கு ஊரெங்கும் இரத்தவெறில திரியுது
-
ஒன்றைப் புரிந்துகொள்ள முதலில் அது குறித்துத் தெரிந்துகொள்ள வேண்டும்!
-
பொழுதுகளை தூசி தட்டி! புதுசு படுத்தித்தரும் வல்லமை குழந்தைகளுக்கான வரம்!
-
மிளகை கண்டுபிடிச்சது யாராகவோ இருக்கலாம், ஆனா காய்ந்த பப்பாளி விதையை மிளகு என மாற்றியது ஒரு அயோக்கிய களவாணியாத்தான் இருக்கனும்!
-
எல்லாமே பரிசுதான். சிலது நாம் வேண்டியது. பலது அவர்களிடம் மிஞ்சியது!
-
3 comments:
கீச்சுகளும் நிலைத் தகவல்களும் நன்று கதிர் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ஒரு நிமிடம் என்பது குறுகியதாகவோ, நீண்டதாகவோ தோன்றுவதை கடிகாரம் தீர்மானிப்பதில்லை. மனதும், சூழலும்தான்!
அருமையான கீச்சுப் பகிர்வுகள்..
very nice kadhir sir,,,
Post a Comment