கீச்சுகள் - 21



தள்ளிப்போடுவதின் (அற்ப) சுகம் வேறெதிலும் இல்லை #சோம்பேறித் தனத்த எப்படி ’ஷோக்கா’ சொல்லுது பாரு பயபுள்ள. (அட, என்னையச் சொன்னேன்)

*

சண்டை போடுறதும் அதே வாய், சமாதானம் பேசுறதும் அதே வாய்.

*

தன் தோல்விகளை விட, மற்றவர்களின் வெற்றிகள் ஏற்படுத்தும் சஞ்சலமே அதிகம்.

*

IRCTC-ல Tatkal பயணச்சீட்டு பதிவு பண்ற நேரத்துல ஆமை மேல உட்கார்ந்து அந்த ஊருக்கே போய்ட்டு வந்துடலாம் போல # இந்தியா வல்லரசு ஆயி......டும்.

*

சாதிவாரி கணக்கெடுப்புல அவிங்கவிங்க சாமிய அதோட குடும்பம் குட்டிகளோட சேத்து எழுதச்சொல்லிட்டீங்ளா, எண்ணிக்கை கொறஞ்சா சாமி குத்தமாயிடும்

*

எல்லா மௌனமும் கோழைத்தனம் அல்ல.

*

ஜனாதிபதி தேர்தலில் நாமும் வாக்களிக்க வகை செய்யனும்னு ஒருத்தர்கூட ’கல்யாண் பிரபு’ மாதிரி போராடலையே. தலைக்கு 500-1000 கிடைக்கும்ல #வடபோச்சே

*

உலகத்தில் எவருக்குமே கிட்டாத அளவு சகிப்புத் தன்மையை தமிழ்நாடு மின்வாரியம் தமிழனுக்கு ’ஊட்டி’யிருக்கிறது / ’கொடை’யளித்திருக்கிறது







அவனை அவனாகவே வெளிப்படுத்த விரும்பாமல், வேறு ஒருவனாக நிறுவிக்கொள்ளத்தான் இத்தனை போராட்டமும்!

*

சமரசம் நிலவும் இடங்கள்: இ/சுடுகாடு, டாஸ்மாக் வரிசையில் இப்போ ”வண்டியோட்டும்போது செல்போன் பேசுறது”

*

’இப்படி இருப்பார்கள்’ என்று நினைக்கும் எவருமே பெரும்பாலும் ’அப்படி இருப்பதில்லை’ # உடல், புத்தி, மனசு! :)

*

உறக்கத்தில் சூழும் மௌனம் ஓர் வரம்.

*

’அன்னையர் தினம்’ என அறியாத அன்னையரே அநேகம் பேர்!

*

’வாழ்த்த வயதில்லை’னு சொல்றவங்களே, வாழ்த்துறதுக்கு வயசைவிட மனசு ரொம்ப ரொம்ப முக்கியம்ப்பா!

*

முன்னால போற டூவீலர் இன்டிக்கேட்டர் போடாம, கை காட்டாம சட்டுனு திரும்புதுனா, அந்த இடத்துல/சந்துல டாஸ்மாக் இருக்க அதிக வாய்ப்புகள் உண்டு

*

ஆற்றங்கரையில் நாகரிகம் வளர்ந்தது அந்தக்காலம், சாயப்பட்டறைகள் வளர்ப்பது இந்தக்காலம்!

*

”முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து தன்னிலை விளக்கம் அளிப்போம் ” - நித்தி & ஆதீனம் # கைப்புள்ளைகளுக்கு கட்டஞ்செரியில்ல!

*

பீகார், தமிழகம், உ.பியில் கொடி நாட்டிய ராகுல் காந்தியை குடியரசுத் தலைவராக்கி கட்சியைக் காப்பாத்தனும்னு காங்கிரஸ்ல ஒருத்தருக்குமே தோணலையா?

*

தாக்கவும், தற்காக்கவும் மௌனத்தைவிடச் சிறந்த ஆயுதமில்லை!

*

முன் முடிவுகளற்ற அணுகுமுறையில், பெரிதும் சிக்கல்கள் உருவாகுவதில்லை!

*

ஈமூக் கோழி யேவாரத்துல(!) காசு கட்டாதவிங்கள, ஊரவுட்டு ஒதுக்கீருவாங்களாட்டருக்குது #கட்டுங்கப்பா கட்டுங்க பாக்கத்தானே போறோம்!

*

கேட்கிறவங்களுக்கு 'உண்மை பிடிக்காது' என்பதனாலேயே சொல்கிறவங்க 'பொய்' சொல்லுறாங்க!

*

கூழாங்கற்கள் பிறப்பதில்லை உருவாகின்றன!

*

உலகத்தில் ”பொழுதைப் போக்க” மெனக்கெடும் ஒரே உயிரினம் மனிதன்! # பொழுதுபோக்கு

*

தமிழகத்தில் பா.ஜனதா ஆட்சி மலரும் - பொன். ராதாகிருஷ்ணன் # கர்நாடகாவுல மலர்ந்ததே ’கப்’ அடிக்குதே! அதுல இங்கே வேற ராமாதாசுக்கு போட்டியாவா?

*

10ம் வகுப்பு மாணவனை கழுத்தை அறுத்துக் கொன்ற சக மாணவன் # ’பிறந்தவுடன் பிரசவ வார்டில் மருத்துவரைக் கொன்ற குழந்தை’ எனும் செய்திதான் பாக்கி :(

*

ராவணனே விடுதலையாகும் போது ராசா ஆகக் கூடாதா? - கருணாநிதி # சசிகலாவே கோர்ட்டுக்கு நடக்கும்போது கனிமொழி நடக்கக்கூடாதா? - கோபாலபுரம் :)))

*

நூறு மரணங்களில் 1 மரணம் எய்ட்ஸ் நோயால் நிகழும்பட்சத்தில், பத்து மரணங்களில் 2 - 3 புற்றுநோயால் நிகழ்கிறது என்பதை உணர்ந்திருக்கிறோமா?!

*

ரஞ்சிதா உறவில் பார்வைகள் குவிய, நித்தியின் விரிவடைந்த சாம்ராஜ்யத்தின் தில்லாலங்கடித்தனங்கள், ஆதீனம் என எதுவுமே பெரிதாக தோன்றவில்லையே!

*

அட அப்ரசண்டிங்களா, ’நித்தி’ எனும் கடலில் ’ரஞ்சிதா’ வெறும் கை அளவு தண்ணிப்பா....

*

அமைச்சரவையை மாற்றமே செய்யாமல், தமிழகத்தில் ஆளுநர் என ஒருவர் இருப்பதையே இருட்டடிப்பு செய்கிறார் ஜெ. # சொன்னாலும் சொல்வாங்க!

*

கரும்பு வெட்டும் எந்திரங்கள் வாங்கியதில் ரூ.6 கோடி ஊழல் # கரும்பு ’விவசாயிகளை வெட்டும்’ இயந்திரம்னு ஒன்னு தயாரிச்சு ஊழல் பண்ணாம போனாங்களே!

*

பொண்ணு வீட்டைவிட்டு ஓடினால் பிடித்து கொன்று விடுங்கள் - உத்திரபிரதேச டிஐஜி #இவனை பெத்தாங்களா சந்தையில தவுட்டுக்கு வாங்கியாந்திருப்பாங்களா?

*

திருமணமான பெண்கள் சீதை போல வாழ வேண்டும் - மும்பை நீதிமன்றம். #அந்தப் பேனாவைப் புடுங்கி நடுமண்டையில ’நச் நச்’னு குத்தனும் போல இருக்கு!

*

கோபமே ஒரு கோழைத்தனம், இந்த லட்சணத்தில் ஒருவரிடம் இருக்கும் கோபத்தை வேறொருவரிடம் திணிப்பது அயோக்கியத்தனமன்றி வேறேதுமில்லை!

*

கோடிப்பேரிடம் பிடுங்கி, கொஞ்சம் தந்து மிச்சத்தை ஆட்டையைப்போட்ட லாட்டரிக்கு சற்றும் சளைத்ததல்ல கோடிஸ்வரனாக்க துடிக்கும் டிவி நிகழ்ச்சிகள்

*

எப்போதுமே பாராட்டியிராத ஒருவரை குறைமட்டும் சொல்லும் அதிகாரத்தை உங்களுக்கு யார் அளித்தது!?

*

யாரோ ஒருவர் செய்கையில் தவறாகவும், தான் செய்கையில் தவறு இல்லாததாகவும்படுகிறது. அதை நியாயப்படுத்தவும் மனம் விழைகிறது #மனிதன்

*

”எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது”னு சொன்னவர், புது tariff-ல கரண்ட் பில் வராத காலத்துல தைரியமா சொல்லிட்டாரு போல!

*

காவிரி டெல்டா பகுதியில் வெள்ள நீரைச் சேமிக்க ரூ.1560 கோடியில் திட்டம் - ஜெ #ஆத்துல மணல் அள்ளி ஆயிரக்கணக்கான கெணறு தோண்டின பிறகு இது ஏன்?

*

பேச்சுவாக்கில் ”எனக்கு ’ஒன்னு’ மட்டும் புரியலைங்க”னு அடிக்கடி சொல்றாங்களே, புரியாத அந்த ’ஒன்னு’ எதுவா இருக்கும்!

*

அவதூறு பரப்பினால் மானநஷ்ட வழக்கு தொடருவேன் - நித்யானந்தா # சென்செக்ஸ் ஷேர்ல பட்டியலாகியிருந்த ’மான’த்துக்கு இப்ப நஷ்டம் வேற வந்துடுச்சோ!

*

புன்னகைக்க வேண்டிய இடத்தில் புன்னகைக்க மறுப்பதின் மூலம் என்ன சாதித்துவிடப்போகிறோம்.

*


வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்திலும் ஜெயிக்கிறோம், தோற்கிறோம், கொண்டாடுகிறோம், கூப்பாடு போடுகிறோம், இறுதியாக மரணத்திடம் தோற்றுப்போக!

*

காதலனோடு ஓடிப்போவது குறித்து பேருந்தில் சப்தமாக விவாதிக்கும் பெண், உடன் பயணிக்கும் அம்மாக்களுக்குள் இனம்புரியா பயத்தை திணிக்கிறாள்.

*

கனவின் நீளத்தையும், காட்சிகளையும் நான் தீர்மானிக்க முடிவதில்லை, அது நான் காணும் கனவுதான் என்றபோதிலும்!

*

கர்நாடகாவில் யார் முதல்வர் ஆனாலும் காவிரியில் தண்ணீர் விடுவதில்லை என்பதிலும், தமிழ்நாட்டில் யார் முதல்வர் ஆனாலும் காவிரியில் தண்ணீர் பெறுவதில்லை என்பதிலும் ”உறுதியாக” உள்ளனர்.

*

கடைசி நிமிசத்துல 'திக் திக்'னு ரயிலைப் பிடிக்கிறவங்களுக்காகவேதான் ரயிலு அப்பப்போ லேட்டா வருது போல! :)

*

உலகில் 3% மக்கள் மட்டுமே நாத்திகர்கள் # சாமி கும்பிட 500 / 1000னு டிக்கெட் போட்டு வசூலிக்கிற தைரியம் எப்படி வந்துச்சுன்னு இப்ப புரியுது

*

சில முட்டாள்தனங்களைக் காண கருணையற்ற கோபம் வருகிறது. அதை முட்டாள்தனமாக நினைப்பது, நம் தவறாக இருக்கும் பட்சத்தில் கோபம் முட்டாள்தனமாகிறது.

*

என் தலைமுடியைப் பாராட்டினார் மதுரை ஆதீனம்-நித்தியானந்தா # பாஸ், நீங்க ’எர்வாமாடின்’ பயன்படுத்துற ரகசியம் அந்தப் பெருசுக்கு தெரியலபோல! :)

*

தேர்வு எழுதியவுடன் மறந்துபோகும் மந்திரத்தோடே, வடிவமைக்கப்பட்டுள்ளன நமது பாடத்திட்டங்கள்.

*

ஜனாதிபதி பதவி காங்கிரசுக்கு.... துணை ஜனாதிபதி பதவி பாஜகவுக்கு..... ”டீல்” # கணபதி ஐயர் - வீரபாகு பேக்கரி டீலிங் மாதிரியே இருக்குய்யா!

*

குட்டிக்கரணம் போட்டுகூட யோசித்துப் பார்த்துவிட்டேன், நித்தியானந்தா மேல் எனக்கிருக்கும் கோபத்தில், பொறாமையும் கலந்துதான் இருக்கின்றது.

*

ஒவ்வொன்றிற்கும் 'தயார் படுத்துதலே' வாழ்க்கை எனப்படுகிறது!

*

மன்னிப்பை விட மிகப்பெரிய மருந்து ஏதுமில்லை # கேட்கையில், கொடுக்கையில்!

*

6 comments:

arul said...

arumai anna

cheena (சீனா) said...

அன்பின் கதிர் - அத்தனையும் அருமை - கீச்சுகள் பல விதம் - ஒவ்வொன்றும் ஒரு விதம் - நட்புடன் சீனா

MARI The Great said...

அனைத்தும் அருமை!

KSGOA said...

எல்லாமே நல்லா இருக்குங்க

Anonymous said...

சூப்பர் கதிர்..ஒவ்வொன்றும் படிக்க படிக்க புன்னகையும், யோசனையும் தூண்டி விடுகிறது..

Unknown said...

ஒரே நேரத்தில் இவ்வளவு கருத்துக்களா?

வியப்படைகின்றேன்., தஞ்சையிலிருந்து

தினமும் திருச்சிக்கு வந்து செல்பவரும்

முனைவர் பட்டம் பெற்றவரும்,
வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம்

தமிழில் கணினியில் எழுதுவதைப் பற்றித் தமிழகம் முழுவதும்

பயிற்சி அளிப்பவருமான ஒரு அன்பர்
தங்களைப் பற்றிச் சொன்னதெல்லாம் உண்மை என்பதை உணர முடிகின்றது.

வாழ்த்துக்கள்.