இப்படிக்கு






நாவிலிருந்தோ
நரம்புவழி கடந்து
விரல் நுனி வழியோ
வெளியேறும்
எல்லா வார்த்தைகளும்…

எவரெவரோ உருவாக்கி
எவரெவரோ பயன்படுத்தி
அழகுபடுத்தியும்
எச்சில்படுத்தியும்
எறியப்பட்டவைகளே!

எழுத்தும் வார்த்தையும்
என்னாலும் உங்களாலும்
உருவாக்கப்படவில்லை
இருந்தும்…
அடியில் பதிக்கிறோம்
அவரவர் பெயரை அழகாக!

-

6 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ஒவ்வொறு வார்த்தையும்

நேற்று யாரோ ஒருவருடையது..

இன்று நம்முடையது..

நாளை யாரே ஒருவருக்கு...

உண்மை....

vasu balaji said...

நைசு:)

பவள சங்கரி said...

அழகான சொல்லாடல்... நிதர்சனம். வாழ்த்துகள் கதிர்.

ஓலை said...

Aammamilla. :-)

சத்ரியன் said...

உண்மைதான் கதிர்.

Durga Karthik. said...

நல்லா இருக்கு அப்படின்னு ஒரு வசதி ப்ளீஸ்.Everything is from the universe என்பது போல.