கீச்சுகள் - 12



தென்றல் புயலாய் மாறியதாக உணர்ந்தால், ஏதோ உறவுக்குள் சிக்கிவிட்டீர்கள் என்று அர்த்தம். சுனாமியாய் உணர்ந்தால் அது திருமணமாகவும் இருக்கலாம் :)

-

2011ல் அதிக லாபம் அடைந்தும், மிகப்பெரியகாமடியன்போல் மாறிய கதாநாயகன் விஜயகாந்த் என்றே நினைக்கிறேன்.

-

பிடித்தவையெல்லாம் சரி எனவும், பிடிக்காதவையெல்லாம் தவறு எனவுமே மனது பட்டியல் இடுகிறது!

-

வன்னியர் வாக்கு வங்கியாக மாற குழந்தைகள், குலதெய்வம், பெற்றோர்கள் மேல சத்தியம் வாங்க வேண்டும்-ராமதாஸ் #அப்படியே உங்க தலையிலும் ஒரு சத்தியம்.

-

அமைதி என்பது சூழல் தரும் ஒரு வரம்

-

ரெண்டு பேருக்கு போன் போட்டு பொறந்த நாள் வாழ்த்துச் சொல்லிட்டேன். இதுல சந்தோசம் என்னன்னா அவங்களுக்கு ஒரு வயசு கூடிடுச்சு என்பதுதான் :)

-

நேரத்தை நாமும் தொலைக்கலாம், வேறு எவரிடமாவது களவும் கொடுக்கலாம். எப்படிப்பார்க்கினும் இழப்பு நமக்குத்தான்.

-

புளி, வெங்காயம், கல் உப்பு மூன்றையும் அம்மியில் வெச்சு அரைச்சு.... இப்ப நாக்குல எச்சில் ஊறலைனா, நாக்குனு ஒன்னு என்னாத்துக்கு இருக்கனும்!?

-

சில மௌனங்கள் சாதுர்யம் எனினும், அவை நம்மை மழுங்கடிப்பவை. மௌனத்தில் கூர்தீட்ட கூடுதல் வலிமை தேவை.

-

எதாச்சும் கிறுக்கனுமேன்னு நாமளும் கிறுக்குறோம், அதுக்கு எதாச்சும் சொல்லனுமேன்னு அவங்களும் சொல்றாங்க #பலநேரங்களில்

-

அநியாயத்துக்கு குளிருது....... ஃபேனை ரிவர்ஸில் சுத்தவிட்டால் குளிர் எதும் குறையுமா!?

-

வருசத்துல ஏன்தான் இந்தக் கடைசி வாரம் வருதோ? எங்க பார்த்தாலும் TOP-10 பட்டியல்தான்! நம்மாளு ஒருத்தர் TOP-10 டாஸ்மாக் லிஸ்ட் போடுறாரு!

-

நேசம் வழியும் நட்புகள் அடர்த்தியாய் வைக்கும் புள்ளிகளுக்குள், அன்பு தோய்ந்த ஆயிரம் சொற்களை வாசிக்க முடிகின்றது

-

மனைவியைவிட காதலிக்கு அதிக செலவு செய்யும் ஆண்கள் - ஆய்வில் தகவல்
# இதுக்கெதுக்குடாஆய்வுஎல்லாம். லூசுப்பசங்களா! :)

-

ஒருவரை மகிழ்விப்பதைவிட, கோபப்படுத்துவது எளிதாக இருக்கின்றது!

-

என்னதான் இருக்கு என எல்லாவற்றிலும் எட்டிப்பார்த்தது ஒரு காலம், எதுக்கு இதுல தலையை விடனும்னு ஒதுங்கிப்போவது ஒரு காலம் #இணைய பொங்கல்கள்

-

வெகு இறுக்கமான, கடுப்பான மனோநிலையை, பூங்கொத்து போல் கைகளில் தஞ்சம் புகும் குழந்தையால், ஒற்றை நொடியில் ஒட்டுமொத்தமாய் கரைத்துவிட முடிகிறது!

-

இருக்கும் பதில்களுக்கு கேள்விகளைத் தயாரித்துக் கொண்டிருக்கிறோம்.

-

பாராட்டை பொதுவில் சொல்லு, குறையை தனியா சொல்லுனா, மக்கள் எதை எங்கிட்டு எப்படிச் சொல்லனும்னு தெளிவா இருக்காங்க!
-

எல்லோருக்குமே மத்தவங்க மட்டும் தங்களைவிட சந்தோசமா இருக்கிற மாதிரியே ஒரு மாய நினைப்பு #ஃபீலிங்ஸ்!

-
ஏற்ற வேடத்துக்கு 100% நேர்மையாய்ப் பாடுபடும் நடிகர்களுள் ஒருவர் "பிரஷாந்த்".
#இதை எழுதினவன் மட்டும் என் கையில கிடைச்சா, சட்னிதான்! :)

-

பால், தகுதி, அழகு, வசதியென எல்லாம் கடந்து ஒருவரைக் கூடுதலாய் நேசிக்கும்போது நினைக்கத் தோன்றுகிறது இது ஏதோ ஜென்மத்தின் விட்டகுறை தொட்டகுறையென

-

கடிக்கும் கொசுவைத் தடுக்க முடியாதபோது வலிமையற்றவனாகிறேன்!

-

பலருக்காக சிலரையும், பலவற்றிற்காக சிலவற்றையும் தாங்கிக்கொள்கிறோம் # சமரசங்கள்

-

எல்லாக் கேள்விகளுக்கும் அவளால் அன்பை மட்டுமே பதிலாகத் தரமுடிகின்றது.

-

முல்லை பெரியாறு விசயத்துல சினிமாக்காரங்க மழுப்புன மழுப்பல் இருக்கே யெப்பா, தண்ணியில்லாட்டி 5 மாவட்டத்துல திருட்டு DVDலகூட படம்பார்க்க ஆளிருக்காதே!

-


போராட்டங்களை கலவரங்களாக மாற்றி பின் கொண்டாட்டங்களாக மாற்றுவதில் மனிதசமூகம் மிகக் கேவலமாய் முன்னேறிவிட்டது

-

IPL போட்டியில் ஹர்பஜன் சிங் என்னை அறையவேயில்லை - ஸ்ரீசாந்த் பல்டி # முல்லைப் பெரியாறு மேட்டரை டீல் பண்ண உன்னை மாதியான ஆளுதான்யா சரி!

-

2 comments:

Anonymous said...

//நேசம் வழியும் நட்புகள் அடர்த்தியாய் வைக்கும் புள்ளிகளுக்குள், அன்பு தோய்ந்த ஆயிரம் சொற்களை வாசிக்க முடிகின்றது// அருமை...

ஷர்புதீன் said...

//இறுக்கமான, கடுப்பான மனோநிலையை, பூங்கொத்து போல் கைகளில் தஞ்சம் புகும்குழந்தையால், ஒற்றை நொடியில் ஒட்டுமொத்தமாய் கரைத்துவிட முடிகிறது!//

மிக சமீபத்தில் பஸ் பயணத்தில் ஒரு நான்கு வயது குழந்தையின் கை எனது தொடையில் சில நிமிடங்கள் இருந்தது. நான் கொலை செய்யும் நோக்கத்துடன் அந்த கணத்தில் இருந்திருந்தால் கூட அந்த முடிவை தவிர்த்திருப்பேன்!