நீயும் படிக்கவில்லை
நானும் படிக்கவில்லை
விரல் நுனி உரசலில்
வேதியல் மாற்றம் நிகழுமென்பதை
நோக்கும் நொடியிலெல்லாம்
புது மலராய் பூத்து நிற்கிறாய்
மடி சாய்கையில் மட்டும்
மல்லிகைச் சரமாய் வாடுகிறாய்…
புது மலராய் பூத்து நிற்கிறாய்
மடி சாய்கையில் மட்டும்
மல்லிகைச் சரமாய் வாடுகிறாய்…
வார்த்தைகளைத் தேடுகிறேன்
உன் இதழ்களில்
வரிகளைத் தருகிறாய்
விழியசைவில்…
வரிகளைத் தருகிறாய்
விழியசைவில்…
அன்பு ஆர்பரிக்கும் தருணங்களில்
அணையிலிட்டுத் தேக்கி
திகட்டிய அன்பைக் கொஞ்சம்
ஆவியாக்கி ஊடல் பூணுகிறோம்
அன்பு கனத்த கரு மேகம்
கிழிந்து பொழிகிறது
புத்தம் புது அன்பு
புதுவேகம் பூணுகிறது
கற்ற மொழிகளெல்லாம் தீர்ந்து
கரைந்த மௌனப் பொழுதில்
உடலும் ஒரு மொழி என்பதை
உன்னை வாசிக்கையில் அறிகிறேன்
மௌனங்களின் வரிகளை வாசிக்கவும்
கற்பனையில் வாசனையை நுகரவும்
கனவுகளில் வர்ணங்களைக் காணவும்
கற்கிறேன் காற்றாய் உனை சுவாசிக்கையில்
-
12 comments:
அருமை அருமை . நன்றி பாராட்டுகள் வாழ்த்துக்கள்
அருமை!.
//உடலும் ஒரு மொழி என்பதை// -
பல மாற்று திறனானிகளுக்கு உடல் அசைவும் மொழி தான் !!
க்ளாஸ்
மிக அருமையான கவிதை.
வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
ஆஹா... என்ன ஒரே ரொமான்ஸ் மூடு.:-)))
சூப்பர்.
பாஸ், கட்டுரை நல்லா இருக்கு பாஸ்! ஆமா, இது எதைப்பத்தினது?
உங்கள் காதல் பாத்திரம் நிரம்பி தளும்புகிறது....!
நான் நன்கு ரசித்த கவிதை. அருமை.
நான் மிகவும் ரசித்த நல்ல கவிதை. அருமை.
மிக அருமை கதிர்....ஒவ்வொரு வரிகளும் அர்த்தமுள்ளவை...
ஒவ்வொரு வரியும் அழகு, அருமை அண்ணா
மொழிகளை கடந்த மவ்னம் கசிகிறது...ரகசியமாய் !
Post a Comment