ஊர்ல உலகத்துல
அங்கங்க ”நாலு பேரு” நம்மள படுத்துற பாடு பெரும்பாடு. ஆனா அந்த “நாலு பேரு” கருப்பா செவப்பா,
நெட்டையா குட்டையானு கூட தெரியறதில்ல!
*
சாலையோரம் போதையில் கிடந்த குடிமகனை
மானசீகமாக வணங்கிக் கடந்தேன், சாலை போட நான் அளிக்கும் வரி(!)யை விட அவனே அதிகம்
பங்களிக்கிறான்.
*
“அன்பு / காதல் / கோபம் /
இன்பம்.......etc” எனும் உணர்வுகளுக்கான வரையறைகள், அவரவர் மனதுப்படி மட்டுமே
தீர்மானிக்கப்படுகின்றன.
*
மின்சாரம் தொலையும் இரவுகள்
உணர்த்துகின்றன, வானத்தில் நட்சத்திரங்களும் இருக்கின்றன என்பதை
#நகரம்
*
மறதி ஓர் விடுதலை!
*
சிரிப்பே வராத மாதிரி ‘ஜோக்’கை
சொல்லிட்டு, நாம சிரிக்கலையேனு ஏக்கமா பார்க்கிறவங்களைப் பார்க்கும் போதுதான்
சிரிப்பு பொத்துக்கிட்டு வருது.
*
சமூக இணையதளங்களில் நம்மை தொடர்பவர்களின் / நட்பில் இருப்பவர்களின் எண்ணிக்கையை எண்ணி(!) நாம் கொள்ளும் கர்வம் அல்பத்தனமாக இருக்கின்றது! :(
*
அவளை அவனுக்குள் தொலைத்தான் / அவனை
அவளுக்குள் கண்டெடுத்தாள் # புரியலதானே!? எப்பவுமே அவ’ள்’தான் புத்திசாலி!
# புரியுதுதானே!? :)
*
கழுத்த சாய்ச்சு செல் பேசிட்டு ஒருகைல
வண்டி ஓட்டுறவங்கள விட்டு, ஒழுங்கா ஓட்டுறவங்கள குறிபார்த்து விழுகுறாங்களே! அவங்க
நல்லவங்களா கெட்டவங்களா?
*
வார்த்தையால் வாங்கும் அடிக்கு
அன்பால் திருப்பி அடித்தால் ஊடல் முடியப்போகிறதென அர்த்தம்.
*
இத்தன தண்டச்செலவு செய்ததற்குப்
பதிலா, 3-இடியட்ஸ்க்கு தமிழில் ”SUB TITLE” மட்டும் போட்டிருக்கலாம் #
கடுப்பேத்தும் ‘நண்பன்’
*
’முக்கியமான மேட்டர் பேசனும்’னு
பீடிகையோட பீதியைக் கிளப்பிட்டு, உப்புச்சப்பில்லா மேட்டர் பேசுறவங்கள யாருகிட்டே
புடிச்சுக்குடுக்கலாம்?
*
வயது கூடக்கூட முதுமையோடு சுயநலமும்
கூடுகிறது!
*
”தவறாகப் புரிந்துகொள்வதில்” மிகச்
சரியாக இருக்கின்றோம் பல நேரங்களில்!
*
ஜல்லிக்கட்டை நிறுத்தச்சொல்லிப்
போராடுறவங்க மாடு துன்புறுதேன்னு போராடுறாங்ளா? இல்ல சகமனிதனை இரத்தக்காவு கொடுக்குறமேன்னு
போராடுறாங்ளா?
*
கடவுளை அதீதமாய் நம்புபவனின்
ஆச்சரியங்களில் ஒன்று ”கடவுளை நம்பாதவனுக்கும், எப்படி நல்லது நடக்கிறது!?”
*
பீத்தப் பிடிவாதங்கள் சில நேரங்களில்
பெரும் பாடுபடுத்துகின்றன.
உதா’ரணம்’: “குளிர் காலத்திலும் பச்சத் தண்ணியிலதான் குளிப்பேன்”
உதா’ரணம்’: “குளிர் காலத்திலும் பச்சத் தண்ணியிலதான் குளிப்பேன்”
*
பிரதமர் அலுவலகம் ’ட்விட்டரில்’
இணைந்தது. அறுக்க மாட்டாதவன் இடுப்புல அம்பத்தெட்டு அறுவாளாம் #பழமொழி
*
எதைக் கேள்வியுற்றாலும், ஏதாவது ஒரு
நிலைப்பாடு எடுக்கத் துடிக்கிறோம்.
*
ரூ.1000 கடனைத் திருப்பிக்கேட்ட
அண்ணன் தம்பி இருவர் படுகொலை. 32 & 26 ரூவா வறுமைக்கோடுனு இருக்குற நாட்ல 1000
ரூவா ரொம்ப பெரிய தொகைதானே :(
*
ஜனவரி 26-ஐக் கூட நம்ம
விருப்பத்துக்கேத்த மாதிரி வெள்ளிக்கிழமைல வரவெச்சு 3 நாள் விடுமுறை கொண்டாட
நமக்கு உரிமையில்லை. இதுல என்ன குடியரசோ போங்க :)
*
கொள்ளையடிக்கப்பட்ட சென்னை வங்கியில்
கண்காணிப்பு கேமரா இல்லை. # துணி மாத்துற ரூம்ல, கழிவறைல கூட கேமரா இருக்கு. பாவம்
வங்கி ரொம்ப ஏழை போல!
*
கோபங்கள் தேயும் இடங்களில் அன்பு
வந்து நிரம்புகின்றது
*
நம்மைப்பற்றி நமக்குத் தெரிந்ததையே
வேறொருவர், வேறு வார்த்தைகளில் சொல்ல உணர்ச்சி வயப்படுகிறோம் #பாராட்டு /
விமர்சனம்
*
வகைதொகை இல்லாம எல்லார் வீட்லேயும்
2012 படம் பார்க்கிறதப் பார்த்தா.... ஒருவேளை 2012ல் உலகம் அழிஞ்சுதான் போயிடுமோனு
தோணுது :)
*
புன்னகையை உணர்த்திட வார்த்தைகள்
போதாது, உதடுகளில் விரிவடையும் வரிகள் அவசியம்!
*
எல்லாம் புரிந்துகொண்டு, நம்மை
அப்படியே ஏற்றுக்கொண்டிட ஓர் உறவு வேண்டும் எனும் சுயநலத்தில் ஒருவனும் இதுவரை
வென்றதில்லை
*
இந்த சினிமாவுல மட்டும்தான் கொட்டும்
மழையில பிணத்தை அடக்கம் பண்றது / டூயட் பாடுறது / சண்டை போடுறது எல்லாம் நடக்குது!
*
நம்ம ஊர்ல ”இந்த சிவப்பழகு / ஏஜ்
மிராக்கிள் க்ரீம்” விக்கிற வெண்ணைங்க, ஏன் ஆப்பிரிக்க நாடுகளுக்குப் போய் யேவாரத்த
பெருக்கக்கூடாது!?
*
நிழற்படங்களை வைத்தே பலரை முற்றிலும்
புரிந்துகொள்ள முயல்கின்றோம்!
*
மனிதன் தனது கீழ்மைகளுக்கு, தன்னை
விலங்கோடு ஒப்பிடுகிறான் என்பது, எப்போதாவது விலங்குகளுக்கு புரிஞ்சுட்டாப் போதும்,
அன்றோடு சோலி சுத்தம்:)
*
பழிவாங்கும் உணர்வின் அடர்த்தியை
பெரும்பாலும் எதிராளியே தீர்மானிக்கின்றான்
*
யாருமே நமக்காக இல்லையென்று மனதில்
வெற்றிடம் தோன்றும்போது, யாருக்காகவும் நாமும் இல்லையோ என்பதை உணர்ந்தால், மனதில்
ஏதோ நிரம்பும்!
*
தெரிந்தவர்களைச் சந்திக்கும்போது
எப்படியிருக்கீங்க எனக்கேட்க “கிரேட்”னு சொல்பவர்களில் பாதிப்பேர் ”கிரேட்”ஆக
இல்லைனு அவங்க கண்ணு சொல்லிடுது
*
மேதை படம் 10 ஆண்டுக்கு முன்னே
வந்திருந்தா பாடமாம்.
தினத்தந்தியில் விமர்சனம் எழுதியவரின்
கைகளை கண்களில் ஒத்திக்கத் தோணுது! # டீகடை
*
எப்பொழுதாவது உண்மையை
ஒப்புக்கொள்வதின் போதை அபரிதமானது!
*
கல்வியை வணிகப் பொருளாக்கக் கூடாது -
கலாம்.
கல்யாண ஜூவல்லர்ஸ்க்கு பிரபு நடத்துற
புரட்சிப் போராட்டம் மாதிரியே இருக்குங்கய்யா!
*
ஒருவன் உருவாக்குவதை, இன்னொருவன்
எளிதில் தட்டிப்பறிக்கிறான் # சந்தை
*
இணையத்தில் பெண்கள் ஆண்களை எளிதாக
பெயர் சொல்லி அழைக்கின்றார்கள். ஆண்கள் பெண்களை அவ்வளவு எளிதில் பெயரிட்டு
அழைப்பதில்லை # நிஜமாவா!?
*
பிச்சைக்காரர்களைப் பார்த்து
பரிதாபப்பட்டு அருகிலிருக்கும் நண்பரை அழைத்து “பாவம் 5 ரூவா போடுங்க”னு
சொல்றீங்களே! அம்புட்டு நல்லவனாய்யா நீங்க?
*
6 comments:
கதிரானந்தரின் பொன்மொழிகள்:))
யாருமே நமக்காக இல்லையென்று மனதில் வெற்றிடம் தோன்றும்போது, யாருக்காகவும் நாமும் இல்லையோ என்பதை உணர்ந்தால், மனதில் ஏதோ நிரம்பும்...//
பிடித்தது...
தொடருங்கள் உங்கள் த்வீட்சை...
கதிர்,
ஒரு பார்வையாளனாக இந்த உலகை,ஏன் உங்களையுமே நீங்கள் பார்த்துகொள்வதை சொல்லும்போது, எங்களையும் நாங்களும் ஒருமுறை
பார்த்துகொள்கிறோம்...
நன்றி
/மறதி ஓர் விடுதலை!/
மிகச் சரி.
கதிர்,
அன்பு / காதல் / கோபம் /இன்பம்.......etc” எனும் உணர்வுகளுக்கான வரையறைகள், அவரவர் மனதுப்படி மட்டுமேதீர்மானிக்கப்படுகின்றன.
மிகச் சரி.
nise anna.....
Post a Comment