சாணென்ன மொழமென்ன?
அடங்காப் பசியிலும் அவிச்சு திங்காம
கைபடாம காத்துப்படாம பத்திரப்படுத்தி
அடைகாத்த வெதப்பயறு
ஆடி மாசம் வராத தண்ணியால
பூச்சி புழுவுக்கு சோறாப்போச்சு...

வாரக்கணக்குல கருக்கிய மானம்
வழியவுட்ட ஒத்த மழைய நம்பி
ஏமாந்து வெதச்ச சோளம்
மறு மழை பேயாம போனதுல
மண்ணோட புழுங்கிப்போச்சு...

தப்பித் தவறி மொளைச்சு கிளைச்சு
தழைச்சு நின்னு தலைநிமிர்ந்து சிரிக்கையில
ஐப்பசியில வந்த அடைமழை
பேய் மழையா நின்னு பேஞ்சதுல
மூழ்கி அழுகிப்போச்சு...

வெள்ளைக்காரன் போடற துணிக்கு
வெளிநாட்டுக்கார் வாங்குன முதலாளி
வெளியேத்துன சாயத்தண்ணியில
கொஞ்ச நெலமும் செத்துப்போச்சு
குடிதண்ணியும் வெசமாச்சு...

தலைக்கு மேல அட சாணென்ன மொழமென்ன
போனது போட்டும் நடப்பது நடக்கட்டும்
எல்லா ஊருக்கும் கொடுத்துட்டாங்களாமே
கரியில்லாத கேஸ் அடுப்பும் கலர் டிவியும்
எப்படா கொடுப்பாங்க நம்மூருக்கு?
___________________________________________

27 comments:

பழமைபேசி said...

வெசாழக் கெழமை தாறதுன்னு ஊர் வாசல்ல பேசிகிட்டாங்க மாப்பு!!!

பழமைபேசி said...

//எல்லா ஊருக்கும் கொடுத்துட்டாங்களாமே
கரியில்லாத கேஸ் அடுப்பும் கலர் டிவியும்
//

கேட்டுகுங்கப்பா.... இங்கன தர்றல அங்கன தர்றலன்னு யாரும் இட்டுகட்டி எழுதப்படாது....

ஊர்க்காரன் கூட்டணிக்கு ஒலை வெச்சாலும் குத்துறது மாறப்படாது பாருங்க....

பழமைபேசி said...

//ஐப்பசியில வந்த அடைமழை
பேய் மழையா நின்னு பேஞ்சதுல
மூழ்கி அழுகிப்போச்சு...//

அப்பிசிக்கு வந்த அடமழை
பேயா நின்னு அடிச்சதுல
வேரழுகி நாசமாத்தேன் போச்சு...

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

கொடுமைங்க கதிர்..

கவிதை வரிகளும் அதற்கு வெடித்த நிலத்தில் நிற்கும் பெரியவரும் வலியை ஏற்படுத்துகின்றன :(

vasu balaji said...

காஞ்ச தரைய கட்டம் கட்டி வித்துபோட்டு
காச எண்ணி வங்கியில கட்டிப்போட்டு
வார வட்டியில ரேசன் சாமான் வாங்கிப் போட்டு
கவருமெண்டு கேசுல கட்டன் டீ கலந்து போட்டு
காலாட்டி படுத்து கலர் டி.வி. பார்த்து போட்டு
பொங்கல் வந்தா குடுக்குற புதுத் துணிய கட்டிகிட்டு
கூவலாம் வாங்கடா பொங்கலோ! பொங்கல்ங்கொய்யால!!!

செல்வா said...

//வெள்ளைக்காரன் போடற துணிக்கு
வெளிநாட்டுக்கார் வாங்குன முதலாளி
வெளியேத்துன சாயத்தண்ணியில
கொஞ்ச நெலமும் செத்துப்போச்சு
குடிதண்ணியும் வெசமாச்சு...
///
கலக்கிட்டீங்க ..!!

Baiju said...

அருமை

க ரா said...

நிதர்சனம்

வால்பையன் said...

தேர்தல் வரும்பொழுது

S.M.Raj said...

வலியின் வேதனை .........

சத்ரியன் said...

//காஞ்ச தரைய கட்டம் கட்டி வித்துபோட்டு
காச எண்ணி வங்கியில கட்டிப்போட்டு
வார வட்டியில ரேசன் சாமான் வாங்கிப் போட்டு
கவருமெண்டு கேசுல கட்டன் டீ கலந்து போட்டு
காலாட்டி படுத்து கலர் டி.வி. பார்த்து போட்டு
பொங்கல் வந்தா குடுக்குற புதுத் துணிய கட்டிகிட்டு
கூவலாம் வாங்கடா பொங்கலோ! பொங்கல்ங்கொய்யால!!//

அண்ணே இதென்ன, எதிர்க்கூவலா இல்ல தெரியுது!

சத்ரியன் said...

//எல்லா ஊருக்கும் கொடுத்துட்டாங்களாமே
கரியில்லாத கேஸ் அடுப்பும் கலர் டிவியும்
எப்படா கொடுப்பாங்க நம்மூருக்கு?//

கதிர்,

போன எலக்‌ஷனப்போ குடத்த வாக்குறுதி. இந்தா இன்னும் கொஞ்ச நாள்ல அடுத்த எலக்‌ஷன் வரப்போது.

டீவி-யும் குடத்தபாடில்ல... கேஸ் அடுப்பும் குடத்த பாடில்ல.

நாசமாப் போவுது வுடுங்க. என்னத்துக்கு வயித்தெரிச்சல் சொல்லிக்கிட்டு...

Thenammai Lakshmanan said...

வெள்ளைக்காரன் போடற துணிக்கு
வெளிநாட்டுக்கார் வாங்குன முதலாளி
வெளியேத்துன சாயத்தண்ணியில
கொஞ்ச நெலமும் செத்துப்போச்சு
குடிதண்ணியும் வெசமாச்சு...//

சரியா சொன்னீங்க கதிர்..

ராமலக்ஷ்மி said...

உங்கள் கட்டுரைகளைப் போலவே கவிதைகளிலும் நன்றாக வைக்கிறீர்கள் கடைசியில், நச் என ஒரு பன்ச்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

சரியா சொன்னீங்க. கொடுமை

கலகலப்ரியா said...

நல்லாருக்கு...

பனித்துளி சங்கர் said...

கவிதையின் ஒவ்வொரு வார்த்தையிலும் சமூகத்தின் மீது இருக்கும் உங்களின் அக்கறை மிகத் தெளிவாக தெரிகிறது . தொடரட்டும் உங்கள் பணி . வாழ்த்துக்கள் நண்பரே .

கார்த்திகைப் பாண்டியன் said...

:-(((((

Mahi_Granny said...

திரும்பத் திரும்ப வாசிக்கிறேன். அதிகமாக மழை பெய்தாலும், பெய்யாவிட்டாலும் சிரமப் படுகிற மக்கள் தொடர்ந்து சிரமப் படுகிறார்கள் .

Mahi_Granny said...

பின்னூட்ட கவிதையும் அருமை

தெய்வசுகந்தி said...

:(((((((!

r.v.saravanan said...

சரியா சொன்னீங்க

VELU.G said...

நெஞ்சைத் தொடும் அருமையான வரிகள்

இதற்கெல்லாம் முடிவே இல்லையா?

Unknown said...

"வெள்ளைக்காரன் போடற துணிக்கு
வெளிநாட்டுக்கார் வாங்குன முதலாளி
வெளியேத்துன சாயத்தண்ணியில
கொஞ்ச நெலமும் செத்துப்போச்சு
குடிதண்ணியும் வெசமாச்சு "

கலங்க வைத்துவிட்டீர்கள் கதிர்.
கவிதையும்,கவிதைக்கேற்ற படமும்
நெஞ்சில் சுமந்த சோகங்கள்.

'பரிவை' சே.குமார் said...

//தலைநிமிர்ந்து சிரிக்கையிலஐப்பசியில வந்த அடைமழைபேய் மழையா நின்னு பேஞ்சதுல மூழ்கி அழுகிப்போச்சு...//


கலங்க வைத்துவிட்டீர்கள்.

//எல்லா ஊருக்கும் கொடுத்துட்டாங்களாமே
கரியில்லாத கேஸ் அடுப்பும் கலர் டிவியும்
எப்படா கொடுப்பாங்க நம்மூருக்கு?//

டீவி-யும் குடத்தபாடில்ல... கேஸ் அடுப்பும் குடத்த பாடில்ல.

கவிதையும்,கவிதைக்கேற்ற படமும்
நெஞ்சில் சுமந்த சோகங்கள்.

பவள சங்கரி said...

அருமையான கவிதைங்க. இன்றைய நிலைமையை புட்டு புட்டு வைத்து விட்டீர்கள். சரி இதை எப்படி சரி செய்யப் போகிறீர்கள்? இது யார் வேலை? பிரச்சனையை வெளிச்சம் போட்டு காட்டுவது மட்டும் உங்கள் வேலை என்றால், தீர்வு சொல்லப் போவது யார் கதிர் சார்?

KANA VARO said...

வித்தியாசமான யோசனை! அருமை.