வலைப்பதிவு துவங்குதல் - கருத்தரங்குகள்


அழகிய தருணங்கள், ஒரு கவிதையாய், சாரல் மழைத்துளியின் சிணுங்கலாய், மிக எளிதாய்க் கைகூடும் என்பது மற்றுமொருமுறை நிரூபணமாகியிருக்கிறது. என்னையும் இத்தனை நண்பர்களையும் இணைத்து வைத்த வலைப்பக்கத்தை நம்மையொத்த மனிதர்களிடம் திணிப்போம் அல்லது ஊட்டுவோம் என்பது நீண்ட கால ஆசை…


அப்படிப்பட்ட அற்புத தருணம் இன்று கைகூடியது. நண்பர் பதிவர் பழமைபேசியின் ஈரோடு வருகையை வித்தியாசமாக அமைக்க விரும்பிக் கொண்டிருந்த நேரத்தில் இரு வேறு பொறியியற் கல்லூரிகளில் பணிபுரியும் இரண்டு பேராசிரியர்களிடம் தனித்தனியே பேசும் போது, தங்கள் கல்லூரியில் எதாவது ஒரு நிகழ்ச்சிக்கு நண்பர்  பழமைபேசியிடம் இசைவு பெற்றுத் தர இயலுமா என வினவ, நான் வலைப்பதிவுகள் குறித்து உங்கள் மாணவர்களிடம் அவரை வைத்து ஒரு கருத்தரங்கம் நடத்தலாம் என்று கூற, ஒரு வழியாக நிகழ்ச்சி கை கூடி வந்தது.

பெருந்துறை கொங்கு பொறியியற் கல்லூரிஆனாலும், பொறியியற் கல்வியில் மூழ்கிய மாணவர்களிடம் ஆங்கிலம் அதிகமாய்க் கோலோச்சும் காலத்தில் தமிழ் பதிவுகள் குறித்த கருத்தரங்கம் எந்த அளவுக்கு வெற்றியைத் தன்வசம் கொள்ளும் என்ற சந்தேகம் மனதில் கனத்தைக் கூட்டிக் கொண்டேயிருந்தது.

 

ஒரு வழியாய் திட்டமிட்டபடி 07.08.2010 காலை பத்து மணிக்கு பெருந்துறை கொங்கு பொறியற் கல்லூரிக்கு சென்றடைந்தோம்.

கணினி தொழில் நுட்பத் தலைவர் முனைவர். ஜெயபதி, கணினி பிரிவுகள் முதன்மைத் துறைத் தலைவர் முனைவர். பாலமுருகன், இந்திய கணினி சமூக அமைப்பு (CSI) ஒருங்கிணைப்பாளர் முனைவர்.கௌசல்யா மற்றும் பேராசிரியை. ஜெயந்தி ஆகியோர் முன்னிலையில் இந்திய கணினி சமூக அமைப்பு (CSI) உறுப்பினர்கள் (கணினி அனைத்துப்பிரிவுகளையும் சார்ந்தவர்கள்) சுமார் 260 பேருக்கான கருத்தரங்கம் நடைபெற்றது. நண்பர். பழமைபேசி அவர்கள் முதலில் வெளிநாட்டு கல்வி, வேலை வாய்ப்புகள் குறித்து சிறிது உரையாற்றியபின் தமிழில் வலைப்பக்கங்களின் அவசியம், அதை உருவாக்குதல், அதில் இடுகைகள் மூலம் பங்கேற்பு என்பது குறித்து மிக விரிவாக கருத்தரங்க உரையாற்றினார். பொறியியற் கல்லூரி மாணவர்கள் மத்தியில் தமிழ் வலைப்பதிவுகள் குறித்த விளக்கங்கள் மிகப் பெரிய அதிர்வை ஏற்படுத்தியது.


கருத்தரங்கில் குறிப்பிட்ட சில வலைப்பக்கங்கள், திரட்டிகள், ஈரோடு குழுமம் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. வலைப்பக்கங்களில் என்னுடைய பங்கு என்ற தலைப்பில் நானும் சிறிது உரையாற்றினேன். 


நிகழ்ச்சியில் மிகவும் அசந்து போன துறைத்தலைவர் முனைவர். ஜெயபதி நிகழ்ச்சி நிறைவிற்குப் பின் கொங்கு வளாகத்தில் இயங்கும் கொங்கு பண்பலையில் உடனடியாக ஒரு செவ்விக்கு (பேட்டி) ஏற்பாடு செய்து பழமைபேசி மற்றும் என்னிடம் செவ்வி எடுத்து பதிவு செய்யப்பட்டது. சட்டென திட்டமிட்ட நிகழ்வில் எந்த முன் தயாரிப்புமின்றி செவ்விக்காக கேள்விகளை வீசிய இரண்டு மாணவிகளின் திறமை மிகுந்த வியப்பை ஏற்படுத்தியது.


சென்னிமலை
எம்பிஎன்எம்ஜெ (MPNMJ) பொறியியல் கல்லூரி

நிகழ்ச்சியின் நிறைவில் கொங்கு வளாகத்தில் திளைத்த மகிழ்ச்சியுடன், அடுத்த நிகழ்ச்சியை நடத்த சென்னிமலைக்கு கிளம்பினோம். நிகழ்வு சென்னிமலையில் இருக்கும் எம்பிஎன்எம்ஜெ (MPNMJ) பொறியியல் கல்லூரியின் மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை (ECE) சார்ந்த 263 மற்றும் 30க்கும் மேற்பட்ட பேராசிரியர்களுக்கு நடத்தத் திட்டமிட்டிருந்தோம்.
தாளாளர் திருமதி. வசந்தா சுத்தானந்தன், முதல்வர் (பொறுப்பு) பேரா.சண்முகசுந்தரம், மிகுந்த முன்னேற்பாடுகளுடன் திட்டமிட்டிருந்த துறைத்தலைவர் பேரா. பார்த்திபன், விரிவுரையாளர்கள் திரு.மோகன், திரு. கோபி, திரு. மகேஷ் ஆகியோர் நன்றிக்கு உரியவர்கள்.

உரிய நேரத்தில் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. நண்பர். பழமைபேசி அவர்கள் அந்த மாணவர்களிடமும் வெளிநாட்டுக் கல்வி, வேலை வாய்ப்புகள் குறித்து உரையாற்றிய பின் தமிழ் வலைப்பதிவுகள் குறித்து மிக நேர்த்தியாக, மிக அற்புதமாக, தெளிவாக கருத்துரை வழங்க, ஆங்காங்கே மாணவர்களிடமிருந்து கேள்விக்கணைகள் பறந்தன. மாணவர்களிடையே ஊடுருவி, ஒன்றாய் கலந்து நண்பர் மிக அற்புதமாக நிறைவு செய்தார்.
நிகழ்ச்சி தொகுப்புரையை வழங்கிய ஐந்து மாணவ, மாணவியர்களின் தயாரிப்பு மெச்சத் தகுந்த அளவில் இருந்தது.

ஒரு மனிதனின் சமூகக் கடமை மற்றும் அதில் என் வலைப்பக்கங்களின் பணி என்ற தலைப்பில் முப்பது நிமிடங்கள் உரை நிகழ்த்தும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
கிடைத்த வாய்ப்பினை மிக நேர்த்தியாக பயன்படுத்தி, கனவுகளை வீரியமாகக் கொண்டுள்ள மாணவ சமுதாயத்திடம் நிதானமாக விதைகள் ஆழமாக ஊன்றப்பட்டுள்ளன. அரவணைத்து வளர்ப்போம், நமக்கும் நம் அடுத்த தலைமுறைக்கும் தாய்மொழி சார்ந்த இடைவெளியை கொஞ்சம் கொஞ்சமாய் நிரப்புவோம்.இரு நிகழ்ச்சிகளும் சிறப்புற நிறைவடைந்த மகிழ்ச்சியோடு இன்றைய பொழுது மிகப் பயனுள்ளதாக நிறைந்தது.

நெஞ்சம் நிறைந்த நன்றிகள் நண்பர் பழமைபேசி, முனைவர், கௌசல்யா மற்றும் பேராசிரியர் பார்த்திபன்.

இந்த நிகழ்ச்சி குறித்து திட்டமிட்டபோது தட்டிக்கொடுத்த எம் ஈரோடு தமிழ் வலைப்பதிவர் குழுமத்திற்கே இந்த மகிழ்ச்சி சமர்ப்பணம்.

___________________________________________________________________

60 comments:

dheva said...

It's Really Gr8 to read about all........

CONGRATES....KATHIR!

நேசமித்ரன் said...

வாழ்த்துகள் பழமைபேசி ஐயா.. வாழ்த்துகள் கதிர் சார்

vasu balaji said...

அல்லோ! பேசினத ஒலிப்பதிவு செஞ்சிருந்தா பகிரலாம்ல. மாப்பு அண்ட் மாப்பு காம்பினேஷன் கலக்கல்:)

vasu balaji said...

சீரிய முயற்சிக்கு பாராட்டுகள் உங்களுக்கும் பழமைக்கும்:)

பின்னோக்கி said...

வலைத்தளங்களை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தும் உங்கள் பணி பாராட்டத்தக்கது.

மாணவர்கள், புதிய சிந்தனைகள் வந்தால் வலைத்தளங்களுக்கு மேலும் நல்லது.

தொடருங்கள் உங்கள் பணியை. பிரம்மிப்புடன் நாங்கள்.

Thamiz Priyan said...

உங்களது இந்த சீரிய முயற்சிகளுக்கு எங்களது வாழ்த்துக்கள்! பணி தொடர பிரார்த்தனைகள்.

anbarasan said...

"க்ளிக்" செய்து படியுங்கள்.

ம‌த‌ம்மாற்ற‌ம் செய்ய தில்லுமுல்லு மொள்ள‌மாரித்த‌ன‌ம்.

Anonymous said...

குட் வெரிகுட் :))

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

பழமையண்ணன் & கதிர்,

இருவருக்கும் என் பாராட்டுகள்.

மூன்று வார விடுமுறையில் வெளிநாட்டில் இருந்து வந்தால் எந்த அளவிற்கு வேலையாக இருப்பீர்கள் என்று புரிகிறது. அந்த கடுமையான வேலைப்பழுவிலும் இந்த மாதிரி நேரத்தை தமிழிற்காகச் செலவிடுவது மிகுந்த பாராட்டிற்குரியது. உங்களுக்கு மீண்டும் ஒரு முறை ராயல் சல்யூட்.

கதிர், எப்பொழுதெல்லாம் சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற முனைப்புடன் செயல்படும் உங்களுக்கும் ஒரு சல்யூட்.

தொழில்நுட்பக்கல்லூரி மாணவர் தமிழ் வலைப்பூக்கள் மீது ஆர்வம் செலுத்துவது நல்ல அறிகுறியாகப் படுகிறது.

பகிர்விற்கு நன்றி.

sakthi said...

வாழ்த்துகள் பழமைபேசி சார்.. வாழ்த்துகள் கதிர் சார்!!!!!!!

பிரபாகர் said...

கலக்கல் என் அன்பு கதிர்! மிகவும் பயனுள்ளதாய் இன்றைய பொழுதினை பலருக்கு அண்ணனும் நீங்களும் மாற்றியிருக்கிறீர்கள்...

பிரபாகர்...

கலகலப்ரியா said...

பாராட்டுகள்... பதிவரா இருக்கறதில பெருமையா இருக்குபா...

Unknown said...

வாழ்த்துகள் பழமைபேசி ஐயா.. வாழ்த்துகள் கதிர் சார்

சி.பி.செந்தில்குமார் said...

எங்க ஊரு சென்னிமலை.வருகைக்கு நன்றி.முத்லிலேயே தகவல் தெரிந்திருந்தால் உங்களை சந்தித்து இருபேன்( அதனாலதான் சொல்லலைனு சொல்றீங்களா?)

cheena (சீனா) said...

அன்பின் கதிர் மற்றும் பழமைபேசி

அரிய பணி - மாணவர்களுக்கிடையே வலைப்பூக்களை அறிமுகம் செய்த பணி நன்று - மாணவ உலகம் இனி கலக்கும் இங்கு.

நல்வாழ்த்துகள் சம்பந்தப் பட்ட அனைவருக்கும்
நட்புடன் சீனா

'பரிவை' சே.குமார் said...

வாழ்த்துகள் பழமைபேசி ஐயா.. வாழ்த்துகள் கதிர் சார்.

கார்த்திகைப் பாண்டியன் said...

யோவ் எங்க கல்லூரிய்யா.. அது எங்க செமினார் ஹால்.. ஹையோடா.. ரொம்ப சந்தோசமா இருக்கு கதிர்.. அநியாயத்துக்கு நான் இல்லாமப் போயிட்டேனே..

இராகவன் நைஜிரியா said...

ஈரோடு குழுமத்திற்கும், பழமை ஐயா அவர்களுக்கும், கதிர் அண்ணன் அவர்களுக்கும் வாழ்த்துகள்

நீச்சல்காரன் said...

அற்புதமான தருணங்கள்.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

படங்களப் பார்த்தே புரிஞ்சிட்டது.. எல்லாம் நல்லா நிறைவா செஞ்சிருக்கீங்கன்னு.. வாழ்த்துக்கள்...

vasu balaji said...

கார்த்திகைப் பாண்டியன் said...

யோவ் எங்க கல்லூரிய்யா..//

ரெண்டு கல்லூரில எது? கார்த்தி

க ரா said...

நல்லதொரு நிகழ்வு.. நன்றி பகிர்ந்தமைக்கு :)

பா.ராஜாராம் said...

பகிர்விற்கு நன்றி கதிர்!

a said...

பகிர்விர்க்கு நன்றி கதிர்.....

பழமை அண்ணே : நீங்க US திரும்பியதும் நெறய பேசணும் போலிருக்கே......

உண்மைத்தமிழன் said...

நல்ல விஷயம்.. வாழ்த்துக்கள் கதிர்..! உங்களால் முடிந்த அளவுக்கு வலையுலகத்தை இளைஞர்களிடம் கொண்டு செல்லுங்கள்..!

அகல்விளக்கு said...

அற்புதமான ஆரம்பம்....

இதுவரை ஏற்படாத மாற்றத்தை ஆரம்பித்து வைத்ததற்கு மகிழ்ச்சியும் பாராட்டுக்களும்...

Unknown said...

வலைத்தளங்களை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தும் உங்கள் பணி பாராட்டத்தக்கது.

மாணவர்கள், புதிய சிந்தனைகள் வந்தால் வலைத்தளங்களுக்கு மேலும் நல்லது.

ஷங்கர் said...

பதிவர்களே ...,ஒரு ப்ளாக் எப்படி ஆரம்பிச்சு ...எல்லா திரட்டி களையும் எப்படி இணைகிரதுன்னு பதிவு போடுங்க உங்கள்ளுக்கு ரொம்ப புண்ணியமா போகும் ...
இந்த தமிழ் மண கருவி கருவி பட்டையை எப்படி இணைகிரதுன்னு சொல்லுங்க சாமி ..ஏன் நண்பன் உயிரை எடுக்கிறான்

நசரேயன் said...

//
அல்லோ! பேசினத ஒலிப்பதிவு செஞ்சிருந்தா பகிரலாம்ல. மாப்பு அண்ட் மாப்பு காம்பினேஷன் கலக்கல்:)
//

ஆமா..ஆமா

Ravichandran Somu said...

வாழ்த்துகள் பழமைபேசி! வாழ்த்துகள் கதிர்!

அன்புடன்,
-ரவிச்சந்திரன்

Mahi_Granny said...

வலைபக்கங்களின் என் பங்கு பற்றி பேசியதை பகிருமாறு கேட்டுக் கொள்கிறோம் . இருவருக்கும் என் வாழ்த்துக்கள் .

கடல் said...

தமிழின் முதல் மகளிர் திரட்டி.
மகளிர் கடல்
அனுமதி அனைவருக்குமுண்டு ஆதரவு தாருங்கள்.

நன்றி.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வாழ்த்துகள் பழமைபேசி வாழ்த்துகள் கதிர்

தமிழ் நாடன் said...

வாழ்த்துக்கள் அனபின் கதிர் ஐயா!

இது போன்ற முயற்ச்சிகள் மாணவ சமுதாயத்தை திரைப்பட மோகத்திலிருந்து விலக்கி மொழி, கருத்தாக்கம், சமூகப்பொறுப்புணர்வு,படைப்பாற்றல் போன்றவற்றில் ஆர்வம் கொள்ள செய்யும். வாழ்த்துக்கள் பல!

சீமான்கனி said...

பாராட்டுகள் உங்களுக்கும் பழமைக்கும்...

சீமான்கனி said...

அண்ணன் பாராட்டுகள் உங்களுக்கும் பழமை அண்ணக்கும்...

Cable சங்கர் said...

வாழ்த்துக்கள் கதிர்..

நாடோடி said...

உங்க‌ளுடைய‌ முய‌ற்ச்சிக்கு வாழ்த்துக்க‌ள் க‌திர் சார்..

☼ வெயிலான் said...

வாழ்த்துக்கள் கதிர் மற்றும் பழமைபேசி!

CS. Mohan Kumar said...

உங்களுக்கும் பழமை பேசிக்கும் பாராட்டுக்கள்

எஸ் சம்பத் said...

நான் வலைப்பதிவுலகில் ஒரு எல்.கே.ஜி. எதிர்பாரா விதமாக நேற்றைய மதுரை வலைப்பதிவு நண்பர்கள் சந்திப்பில் நண்பர்கள் சிலர் இன்று ஈரோட்டில் நடைபெற இருக்கும் தங்கள் நிகழ்ச்சிக்கு செல்வதாக தெரிவித்தனர். இத்தனை விரைவாக அதன் விபரங்கள் வலையில் பார்த்தது மகிழ்ச்சி. தொடரட்டும் தங்கள் நல்ல பணி. -சம்பத்ஸ்ரீனிவாசன்

தாராபுரத்தான் said...

இந்த நிகழ்வுகள் நினைக்கும் போது மகிழ்ச்சியாக உள்ளதுங்க..இந்த பணிகள் தொடர முயற்சி செய்யுங்கள்.

Jerry Eshananda said...

ஈரோட்டு தமிழ் சொந்தங்களுக்கு என் வாழ்த்துகள்.

அ.முத்து பிரகாஷ் said...

பெரும்பாலான பொறியியற் கல்லூரிகளில் பல்கலைகழகங்களில் இணையம் இலவசமாகவே மாணவர்களுக்கு அளிக்கப்படுகின்றது.ஆகவே இத்தகைய கருத்தரங்குகள் கண்டிப்பாக புதிய வலைஞர்களை உருவாக்கும். தோழர் கதிர் இத்தகைய அரங்குகளை தொடர்ந்து ஏற்பாடு செய்ய வேண்டும்-பல்வேறு கல்லூரிகளில். அன்பு பழமை பேசிக்கு எனது ப்ரியங்கள்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

கதிர் சார்.. உங்களுக்கு ஒரு விருது கொடுத்துள்ளேன்.. அன்போடு பெற்றுக்கொள்ளுங்கள்..

http://ensaaral.blogspot.com/2010/08/blog-post_07.html

ஆ.ஞானசேகரன் said...

வாழ்த்துகள் நண்பர்களே.... மெச்சினேன்...

Unknown said...

சீரிய முன் முயற்ச்சி..

அன்பும் வாழ்த்துக்களும் தோழர்.

பரிசல்காரன் said...

எல்லாத்துலயும் முந்திக்கறீங்கய்யா.. உங்களை.....

நேர்ல வந்து வெச்சுக்கறோம்...

naanjil said...

Thampi Mani
I am proud of you. You are the MAN.
Convey my appreciations to Kadir thampi.
anbudan
naanjil Peter
World Thamil Organization, USA

ஈரோடு கதிர் said...

வாழ்த்துகளை பகிர்ந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி

@@ பரிசல்
வெயிலான்கிட்டே இது போல பல திட்டங்களை பகிர்ந்திருக்கிறேன்.... "வெயிலுக்கு கொஞ்சம் வெப்பம் ஏத்துங்க" அப்புறம் சேர்தளம் முன்னே ஓட நாங்க பின்னே ஓடி வர்றொம்

Saminathan said...

அருமை கதிர்...

Thenammai Lakshmanan said...

நல்ல முயற்சி கதிர்., வாழ்த்துக்கள் பழமைபேசி..

விக்னேஷ்வரி said...

வாழ்த்துகள் கதிர். இது போன்ற முயற்சிகள் தொடரட்டும்.

vasan said...

வ‌லைப் ப‌திவை, ஈர‌ நெஞ்ச‌ங்க‌ளில்
ப‌திவி/ப‌கிர்வு செய்திருக்கிறீர்க‌ள்.
வ‌ள‌ரும் த‌லைமுறை சுய‌மாய், சுக‌மாய் வாழ‌ட்டும்.
வாழ்த்துகள் பழமைபேசி! வாழ்த்துகள் கதிர்!

நா. கணேசன் said...

மி்ன்தமிழில் முனைவர் நா. கண்ணன் எழுதியதற்கு என் பதில்:


பழமைபேசியின் பயணங்களுக்கு இம்முறை ஈரோடு வலைப்பதிவர் வட்டம் மிக உதவியாய் உள்ளது. அருட்சுடர் பதிப்பகம் ஆரூரன் அவர்களும், ஈரோடு கதிரும், பேரூர் திருமடத்து அடியார் வேளராசி அவர்களும் பேருதவி புரிந்துள்ளனர்.

சிறப்புமிகு தமிழ்க் கல்லூரி (கோவை), சென்னிமலை, பெருந்துறை பொறியியற் கல்லூரிகளில் வலைப்பதிவுகள் பற்றிப் பேசியுள்ளார். நல்ல ஆர்வமாய் மாணவர் பலர்.http://maaruthal.blogspot.com/2010/08/blog-post_07.html

ஈரோடு வலைப்பதிவர் வட்டம் மக்கள் சிந்தனைப் பேரவை (ஸ்டாலின் குணசேகருடன் சேர்ந்து) பல ஊர்களில்
இணையம் பற்றி பட்டறைகள் நடத்தலாம். ’ஆரூரனைத் தெரியும், வரச் சொல்லுங்கள்’ என்றார் ஸ்டாலின். பெருமழை அண்மையில் சென்றுவந்த மு. இளங்கோவனார் போன்றோரையும் சேர்த்துக் கொள்ளலாம்.

மதுரையில் ஸ்ரீ பாண்டித்துரைத் தேவரவர்கள் 100+ ஆண்டுகளுக்கு முன்னம் பதித்த வரலாற்று நூல் ‘மதுரைத் திருப்பணி மாலை’.
என் வேண்டுகோளில் அதனை முனைவர் பட்டத்திற்கு எடுத்துக்கொண்ட பேரா. பாலசுப்ரமணியன் திருப்பத்தூர் புனித சிலுவைக் கல்லூரியில் தமிழ்த் துறையில். அவர் அறிமுக உரை ஆற்ற மு. இளங்கோ அவர்கள் வலைப்பதிவு பற்றித் திருப்பத்தூரில் இவ்வாரம் பேசுகிறார். விழா சிறப்பாக நடக்கட்டும்!

பள்ளிகளில் 11, 12 ஆம் வகுப்புகளில்
தமிழ் தட்டெழுத்து (அஞ்சல் (அ) போனடிக்), வலைப்பதிவு தொடங்கல், எல்லாக் கல்லூரியிலும் ஒரு விருப்பப் பாடமாக வைத்தல் - அரசு செய்தால் தமிழ் இணையம், பதிவுலகு, விக்கிப்பீடியா, .... எல்லாம் வளரும். அரிய சொற்கள் தமிழில் புகும், மரபுகளும், பழைய நூல்களும் தெரியவரும், பிடிஎப் ஆகும். அரசு செய்யுமா?

நா. கணேசன்

On Aug 9, 5:32 am, "N. Kannan" wrote:> பழமைபேசி:

> எழுத்தாளர் சுஜாதா இருந்திருந்தால் இன்று மிகவும் மகிழ்ந்திருப்பார்.
> கட்டை மாட்டு வண்டியின் பாகங்களை முறையாக அறிந்து கொள்வதன் மூலம்
> அப்பெயர்களையே இதர வாகனங்களுக்கும் (விமானம் உட்பட) பயண்படுத்தலாம் என்று
> சொன்னவர் அவர். ஆயினும் நகரமயமாகிவிட்ட நம் வாழ்வில் புதிது புதிதாய்
> கலைச்சொல் உருவாக்குகிறோமே தவிர தமிழிலுள்ள கலைச்சொற்களை நாம்
> பயன்படுத்துவதில்லை! சேவல்களில் 300 வகையா? ஆச்சர்யமாக உள்ளது! இது என்ன
> genetic variation in the same species (polymorphism)? அல்லது
> அவையெல்லாம் வெவ்வேறு இனங்களா? (species or subspecies). உயிரியல்
> ஆய்வாளர்களுக்கு சுரங்கம் போன்ற தரவுகளைத்தந்துள்ளீர்கள். கொங்குநாட்டின்
> சிங்கமே! நீர் உண்மையிலேயே மரபுச் செல்வர்!

> இதை நம் மரபுவிக்கியில் நிச்சயம் சேர்த்து வைக்க வேண்டும். அனுமதி உண்டா?

> உங்கள் கொங்கு நாட்டுப்பயணம் இப்படி எங்களுக்கும் பயனளிப்பதாய்
> அமையட்டும். மிகவும் பெருமையாக உள்ளது உம்மை நினைத்து!

> கண்ணன்

> 2010/8/9 பழமைபேசி

> > நான் கண்ட சேவல்கள்!!!

> > தமிழர்களின் வாழ்வில் இரண்டறக் கலந்த சேவல்கள் உருவத்தின் அளவால் சிறுவடை, பெருவடை மற்றும் காட்டுச் சேவல் என இனம் பிரிக்கப்பட்டுள்ளன என்பது முதலான பல பற்றியங்களைச் சென்ற இடுகையில் கண்டோம். அதைப் போலவே, நிறத்தாலும் பல வகைகளாகப் பெயரிடப்பட்டு உள்ளன.- Hide quoted text -

Sindhan R said...

சிறப்பா செயல்படரீங்க .. வாழ்த்துக்கள்

நண்பன் said...

வாழ்த்துக்கள் பழமைபேசி மற்றும் கதிர் அவர்களே..

தொடரட்டும் உங்களுடைய செயலாக்கங்கள்...

அன்புடன் அருணா said...

அடடா!கொஞ்சம் லேட்டாச்சு!பூங்கொத்து!

பனித்துளி சங்கர் said...

வாழ்த்துக்கள் நண்பரே . வரவேற்கத்தகுந்த மிக சிறந்த முயற்சி .

இனி வரும் இளைய சமுதாயத்தால் புது எழிச்சி உண்டாகட்டும் . பகிர்வுக்கு நன்றி நண்பரே

நட்புடன் ஜமால் said...

அருமை

வாழ்த்துகள்!

வானம்பாடியது போல் பகிருங்களேன்