மதியமே, சிறப்பு விருந்தினரான நாமக்கல் மாவட்ட ஆட்சியர் எத்தனை மணிக்கு வருவார் என்று விசாரித்தபோது, தவிர்க்க இயலாத தன் சொந்த அலுவல் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தன் சொந்த ஊருக்குச் சென்றிருக்கிறார். எப்படியும் வந்து விடுவார் என்ற தகவல் மிகப் பெரிய பீதியை கிளப்பியது. ஆனாலும் கடைசியாக 7.45 மணிக்கு நாமக்கல் வந்து சேர்ந்து, ஒரு வழியாக ஈரோடு கிளம்பிவிட்டார் என்ற செய்தி மகிழ்ச்சியான செய்தியோடு, குறித்த நேரத்தில் கூட்டத்தை துவக்கி விட்டோம்.
சட்டை அணியும் பழக்கமில்லாததால் வேட்டியும் துண்டும் மட்டும் அணிந்து வெற்று மேலோடு வந்திருந்த பெரியவர் திரு. அய்யாசாமி அரங்கத்தில் ஒரு அதிர்வினை ஏற்படுத்தினார். உடன் மகள் வயிற்றுப் பேரனை அழைத்து வந்திருந்தார்.
திரு. நாகராஜன் தன் மனைவி திருமதி. பிரேமா மற்றும் பேரனுடன் வருகை புரிந்தார்.
குறிப்பாக திரு. அய்யாசாமி சொன்ன தகவல் மரம் வளர்த்த செடியாக நட்டு வளர்ப்பதைவிட, விதையாக ஊன்றி விட்டால், அது செடியாக முளைத்து வந்த பின் அதற்கு தண்ணீர் ஊற்ற வேண்டிய வேலை இல்லை என்ற தகவல் மிகுந்த ஆச்சரியமாக இருந்தது.ஆட்சியர் வருகை தாமதமானதையடுத்து, வந்திருந்த மரங்களின் நாயகர்களோடு கலந்துரையாடலை ஏற்படுத்தி அந்த நேரத்தை மிக உபயோகமாக பயன்படுத்திக் கொண்டோம்.
எந்த மரம் சிறந்தது என்ற கேள்விக்கு திரு. நாகராஜன் புங்கை மரம்தான் சிறந்தது, அதுதான் அதிகப்படியான ஆக்சிஜனைத் தருகிறது என்றார்.
உடல் நிலை பாதிக்கப்பட்ட போதும் கூட தன் உறுதியை விட்டுக்கொடுக்காமல், தொடர்ந்து மரக் கன்றுகள் நட்டுவருவதாகக் கூறும் போது கூட்டத்திலிருந்தோர் மனமெல்லாம் சிலிர்த்தது. தான் மரம் நடப்போகும் சமயங்களில், அந்த இடங்களுக்கே உணவு, தண்ணீர் யார் மூலமாவது கொடுத்து அனுப்பும் மனைவியைப் பெற்றது வரம் என்று நெகிழ்ச்சியோடு திரு. நாகராஜன் பகிர்ந்து கொண்டார்.
மிக நீண்ட பயணத்திற்கு பிறகு கொஞ்சம் களைப்போடு வந்தாலும் கலெக்டர் திரு. சகாயம் அவர்கள் மிக உற்சாகமாகவே இருந்தார். மரங்களின் நாயகர்கள் இருவரையும் சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தார், கூடவே மிக எழுச்சியாக உரை நிகழ்த்தத் தொடங்கினார்.
பயணக் களைப்பாக இருப்பதால் ஒரு பதினைந்து நிமிடத்தில் முடித்து விடுவாரோ என்ற பயத்தை தவிடு பொடியாக்கி முப்பது நிமிடங்களுக்கு மேலாக உரை நிகழ்த்தி அசத்தினார். உரை முழுதும் சிறிதும் விழாவுக்கு தொடர்பானதை விட்டு விலகாமல்,முழுக்க முழுக்க மரங்களின் பிதாக்களை பாராட்டி கௌரவிப்பதையும், மரங்கள் வளப்பது குறித்த தனது அனுபவத்தையும்,அரிமா சங்கம் மரம் நடுவதை தனது இலக்காக மேற்கொள்ள வேண்டிய அவசியத்தையும் திரும்பத் திரும்ப மிக எழுச்சியோடு எடுத்துக் கூறினார்.
அதன் தொடர்ச்சியாக மரங்களின் பிதாக்களான திரு. நாகராஜன் மற்றும் திரு. அய்யாசாமி ஆகியோருக்கு திரு. சகாயம் அவர்கள் மூலம் நினைவுப் பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது.
அடுத்து கடந்த மாதத்தில் கண் தானம் அளித்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு திரு. சகாயம் சான்றிதழ் வழங்கினார்.
இந்த நெகிழ்ச்சியான, மகிழ்ச்சியான பெருமை மிகு விழாவில் பதிவுலக நண்பர்கள் கேபிள் சங்கர், பாலாசி, அகல்விளக்கு ராஜா, காலப்பயணி வசந்த்குமார் மற்றும் திருப்பூர் பதிவர் நிகழ்காலத்தில் சிவா தனது மனைவி மற்றும் மகளுடன் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
மிகச் சிறந்த மனிதர்களான திரு. சகாயம் ஐ.ஏ.எஸ், திரு. அய்யாசாமி, திரு. நாகராஜன் ஆகிய மூன்று பேரை ஒரே இடத்தில் ஒன்று கூட்டி மகத்தான விழா எடுத்த, என்னுடைய ஈரோடு சுப்ரீம் அரிமா சங்கங்கத்தில் நானும் ஒரு உறுப்பினர் என்பதை மிகப் பெரிய பெருமையாக கருதுகிறேன்.
வாழ்நாளில் ஒவ்வொரு பொழுதும் ஒவ்வொருவிதமாக கழிந்திருக்கின்றன. வீணாக கழிந்த பொழுதுகளும் உண்டு, பொன்னான காரியங்களை, நினைவுகளை பதித்து விட்டுப் போன பொழுதுகளும் உண்டு. நேற்றைய பொழுது என் வாழ்நாளில், ஒரு மறக்கமுடியாத தாக்கத்தை ஏற்படுத்திப்போன பொழுது. எல்லாம் நிறைவடைந்து படுக்கையில் சாய்ந்த போது, நீண்ட நேரம் பிடித்தது மகிழ்ச்சியின் உச்சத்திலிருந்து உறக்கத்தை கைக்கொள்ள.
திரு சகாயம் I.A.S. அவர்களின் பாராட்டுரை
|
53 comments:
வாழ்த்துக்கள்.
பகிர்வுக்கு நன்றி.
சூட்டோடு சூடாய் படம் ஒலியோடு அருமையான இடுகை... அதுதான் கதிர்...
உங்களால் எங்களுக்கும் பெருமை நண்பர்களாய் இருப்பதில்...
பிரபாகர்...
வாசிக்கும்போது மிக மகிழ்ச்சியாக உணர்கிறேன் கதிர் அண்ணா. அருமையான விழா எடுத்த ஈரோடு அரிமா சங்கத்தினருக்கு நன்றி. மரங்களின் தந்தைகளை வணங்குகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நெகிழ்வாக உணர்கிறேன் சார். எளிமையான மனிதர்களால் வாழ்க்கை மென்மேலும் புத்துணர்வு அடைகிறது.
சிறப்பான விழாத் தொகுப்புக்கு மிக்க நன்றி. புகைப்படங்கள் பங்கேற்றது போன்ற உணர்வைத் தருகின்றன. உரையை வீட்டில் கேட்கிறேன்.
நெகிழ்வான நிகழ்வுகள்.அருமை..
நாமும் ஏதேனும் செய்ய வேண்டும் என்னும் ஊக்கத்தை விதைக்கிறது
வாழ்த்துக்கள்.
பகிர்வுக்கு நன்றி.
மகத்தான விழாவை வெற்றிகரமாக நடத்தியமைக்கு வாழ்த்துக்கள்.
அன்புடன்
சந்துரு
மிக அவசியமான முக்கிய நிகழ்வு .
சிறப்பாக நிகழ்த்தியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் .
நேரில் வரமுடியாத குறையைத்தீர்த்தது.பகிர்வு இனிது.வாழ்த்துக்கள் தோழா.
விழா மிகச் சிறப்பாக நடந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி. பகிர்வுக்கு நன்றி கதிர் அண்ணே!
இது அல்லவா வாழ்க்கை. நல்லவரெல்லாம் நலம் பெறுவார் என்ற நம்பிக்கை பிறக்கின்றது. நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.
நேரில் கலந்து கொள்ளமுடியாத குறையை போக்கிவிட்டீர்கள்.அந்த மூன்று மாமனிதர்களுக்கும், கவுரவப்படுத்திய உங்கள் அமைப்பிற்கும் எனது நல்வாழ்த்துக்கள்.
இந்த கணிப்பொறியை பயன்படுத்தி பழகியமைக்காக இன்றுதான் இறுமாப்புடன் எழுந்திருக்கிறேன்.நன்றி சொல்லி உங்களை இழிவு படுத்த விரும்பவில்லை.
//எந்த மரம் சிறந்தது என்ற கேள்விக்கு திரு. நாகராஜன் புங்கை மரம்தான் சிறந்தது, அதுதான் அதிகப்படியான ஆக்சிஜனைத் தருகிறது என்றார்.//
அதோடில்லாம் எந்த சீதோஷ்ணநிலையையும் தாங்கி வளரும் என்றும் கூறினார்.
மற்ற தாவரங்கள் உறிஞ்சும் நீரைவிட புங்கை மரம் மிகக்குறைவான நீரையே உறிஞ்சி வளரும். மிகுந்த கோடைக்காலமானாலும் நீரே இல்லாவிடினும் இருக்கின்ற கொஞ்ச ஈரப்பதத்தின் மூலம் பலனளிக்ககூடியது புங்கை மரம். அதற்கு அதிகமான பராமரிப்பு வேலையும் தேவையில்லை.
பகிர்விற்கு நன்றி...
வணக்கம்.. இந்த தகவல் சிறப்பான தகவல் தான்,,,, இந்த நிகழ்சி பற்றிய தக்வலை முன்னமே சொல்லியிருந்தால் இன்னும் பயனுள்ளதாக இருந்திருக்க்குமே. மேலும் எமது விவசாய தகவல் ஊடக வாசகர்களுக்கும் இந்த தகவல் நிகழ்ச்சி பற்றிய விபரம் தெரிந்திருக்கும்.. இனி இது போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும் ஆயின் தகவல்களை எமக்கும் தெரிய படுத்துங்களேன்... எமது தளம் மற்றும் தள சேவை குறித்து முன்னமே தங்களுக்கு தெரியப் படுத்தியும் உள்ளேன்... எங்களி விவசாய தகவல் சேவை சிறப்பாக செயல் பட இது போன்ற நிகழ்சிகளின் தகவல்கள் இருப்பின் முன்னதே தெரிவியுங்கள்.... நன்றி...
வாழ்த்துகள்...!
சாதனையாளர்கள் வாழும் காலத்திலேயே
பாராட்டப்பட வேண்டும் என்பதை சாதித்துக் காட்டி விட்டீர்கள்.
நல்ல விசயம் கதிர். மகிழ்ச்சியாக இருக்கிறது. தொடருங்கள்!!
நல்ல மனிதர்களை சிறப்பித்த...ஈரோடு அரிமா சங்கத்துக்கும்..எல்லா அலுவல்களுக்குமிடையே வந்து சிறப்பித்த திரு. சகாயம் அய்யா அவர்களுக்கும்...... நாடு கடந்து லட்சோப லட்ச வாசகர்களின் பார்வைக்கு இதை வெளிக் கொணர்ந்த திரு. கதிர் சார் அவர்களுக்கும்.... நெகிழ்ச்சியான நன்றீகள் ஆயிரம்.
மனித தெய்வங்களின் பாதம் தொட்டு சிரம் தாழ்த்தி வணங்கி வாழ்த்துகிறேன்!
இவர்களின் அலை பேசி எண்கள் இருந்தால் கொடுங்க கதிர் சார்....! எங்களால் ஆன எல்லா உதவிகளையும் செய்ய காத்திருக்கிறோம்,
இது போன்ற நல்ல விஷயங்கள் நடக்கையில் எத்தனை சந்தோஷமாக இருக்கிறது?
இது போன்ற நல்ல விஷயங்கள் நடக்கையில் எத்தனை சந்தோஷமாக இருக்கிறது?
நல்ல நிகழ்ச்சி பாராட்டுக்கள்.
சிறப்புற செய்துள்ளீர்கள்!
//சட்டை அணியும் பழக்கமில்லாததால் வேட்டியும் துண்டும் மட்டும் அணிந்து வெற்று மேலோடு வந்திருந்த பெரியவர் திரு. அய்யாசாமி அரங்கத்தில் ஒரு அதிர்வினை ஏற்படுத்தினார்//
தமிழகத்தில் தமிழன் இயல்பாய் இருப்பது அதிர்வுதான். எந்த விவசாயி சட்டை போட்டான்? டவுனுக்கு போனும்னாக்கூட துண்டுதான். கால்ம் மாறிவிட்டது. சட்டையே பிரதான பங்கு வகிக்கிறது.
**
இவரைப்போல் பலர் உள்ளார்கள் ஆக்சிஜனை உற்பத்தி செய்துகொண்டு.
அவர்களை பாராட்டி மகிழ்வதோடு அவர்களின் பாதையிலும் இது போன்ற சங்கங்க செல்ல வேண்டும். மாதம் ஒன்றுக்கு ஒவ்வொரு சங்க உருப்பினரும் 1 மரமாவாது நடவேண்டும் என்று பெரியவர் திரு. அய்யாசாமி வழியில் சென்று ஆக்சிஜனை உற்பத்தி செய்யதால் இன்னும் சிறப்பு.
**
மர ஆர்வலர்கள பற்றிய செய்தியைப் பகிர்ந்தமைக்கு நன்றி!
இப்படி ஒரு சிறப்பான பதிவு தர கதிர் அண்ணாவால் மட்டுமே சாத்தியம் நன்றி...அண்ணே...
மீ த 270 .
என்னால் வர இயலவில்லையே என்ற ஏக்கத்தை உண்டாக்கி விட்டீர்கள்.
வாழ்த்துக்கள்.
பாராட்டுக்கள்! மிகவும் அருமையாக புகைப்படங்களுடன் தொகுத்து வழங்கி உள்ளீர்கள்.
பாராட்டுகள் மற்றும் நன்றி
அவர்களைப் பாராட்டி கௌரவித்தமைக்கு நன்றி கதிர்.
//பயணக் களைப்பாக இருப்பதால் ஒரு பதினைந்து நிமிடத்தில் முடித்து விடுவாரோ என்ற பயத்தை தவிடு பொடியாக்கி முப்பது நிமிடங்களுக்கு மேலாக உரை நிகழ்த்தி அசத்தினார்.//
இந்த பத்தி இரண்டு முறை வந்துள்ளது. முடிந்தால் மாற்றிவிடவும். :-)
நன்றி கதிர். பகிர்வுக்கு. நிகழ்ச்சி சிறப்புற நடந்து முடிந்ததில் மிக்க மகிழ்ச்சி.
நன்றே செய்தீர்கள் அதுவும் இன்றே செய்தீர்கள்!
வாழ்த்துக்கள் பல பல!!
அன்பின் கதிர்
நல்லதொரு நிகழ்சியினை நேரில் கலந்து கொண்டது போல மகிழ்ந்தேன் - நல்லதொரு நேர்முக வர்ணனை - இயறகையினைப் பாதுகாக்க நம்மால் இயன்றதைச் செய்ய வேண்டும்.
நல்வாழ்த்துகள் கதிர்
நட்புடன் சீனா
சிறப்பான பணி மற்றும் தொகுப்பு.
பகிர்விற்கு நன்றி.
Blogger செ.சரவணக்குமார் said...
வாசிக்கும்போது மிக மகிழ்ச்சியாக உணர்கிறேன் கதிர் அண்ணா. அருமையான விழா எடுத்த ஈரோடு அரிமா சங்கத்தினருக்கு நன்றி. மரங்களின் தந்தைகளை வணங்குகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
செ.சரவணக்குமார் said
நெகிழ்வாக உணர்கிறேன் சார். எளிமையான மனிதர்களால் வாழ்க்கை மென்மேலும் புத்துணர்வு அடைகிறது.
.........இதையே நானும் சொல்லிக்கிறேன்...
இப்படிப்பட்ட ஒரு சிறப்பான நிகழ்வில் கலந்து கொள்ள, வரும் போது அவர்களுடனே பயணிக்கும் வாய்ப்பளித்த கதிருக்கு என் நன்றிகள்.
கேபிள் சங்கர்
நன்றி நன்றி
ஈரோடு அன்று மட்டுமல்ல.
இன்றும், என்றும் புரட்சி தான்
ரொம்ப நல்ல விஷயம்.. (திரும்பவும் அதுதான் சொல்லணும்..) ..
......வாழ்நாளில் ஒவ்வொரு பொழுதும் ஒவ்வொருவிதமாக கழிந்திருக்கின்றன. வீணாக கழிந்த பொழுதுகளும் உண்டு, பொன்னான காரியங்களை, நினைவுகளை பதித்து விட்டுப் போன பொழுதுகளும் உண்டு. நேற்றைய பொழுது என் வாழ்நாளில், ஒரு மறக்கமுடியாத தாக்கத்தை ஏற்படுத்திப்போன பொழுது. எல்லாம் நிறைவடைந்து படுக்கையில் சாய்ந்த போது, நீண்ட நேரம் பிடித்தது மகிழ்ச்சியின் உச்சத்திலிருந்து உறக்கத்தை கைக்கொள்ள.////////
உங்களின் உணர்வுகளை மிகவும் அழகா சொல்லி இருக்கிறீர்கள் நண்பரே . இதுபோன்ற விழாக்களில் கலந்துகொள்ளும் வாய்ப்புகள் தூரத்தில் போனாலும் . இதுபோன்ற பதிவுகளின் வாயிலாக அதை நேரில் பார்த்து மகிழ்ந்த ஒரு உணர்வு . மிகவும் மகிழ்ச்சி .
பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன் .
விழாவில் கலந்து கொண்ட உணர்வை ஏற்படுத்தி விட்டீர்கள்...
நல்லதொரு ஆரம்பம்...
இதுலயும் ஒன்னு கமுத்தி குத்தியிருக்கே கரண்ட்ல போற மூதேவி:))
தோழரே
இப்படி ஒரு அருமையான நிகழ்வை நேரில் பார்க்கவில்லையே என்ற வருத்தம் தோன்றுகிறது...
நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அனைத்து நல்உள்ளங்களுக்கும் நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கள்..
உங்கள் மாவட்ட ஆட்சியரின் பேட்டியை ஆனந்த விகடனில் படித்து,கண் கலங்கியதும் நினைவுக்கு வருகிறது..
இளைய தலைமுறையினருக்கு சிறந்த வாழும் உதாரணங்கள் முவரும்...
அனைத்தும் நன்றே, அவங்க ரெண்டு பேரும் திரும்ப ஊர் போவதுக்கு என்ன ஏற்பாடு பண்ணியிருந்தீங்க?
வாழ்த்துகள் தோழரே..... பகிர்வுக்கு நன்றி
//நேற்றைய பொழுது என் வாழ்நாளில், ஒரு மறக்கமுடியாத தாக்கத்தை ஏற்படுத்திப்போன பொழுது.//
சிறப்பான ஒரு செய்கையை செய்துள்ளது உங்கள் அமைப்பு. வாழ்த்துக்கள்.
பெரியவர் இருவரையும் கௌரவிக்க அலைச்சலிலும் சொன்னபடி வந்த மாவட்ட ஆட்சியருக்கும், மரம் வளர்க்கும் விதைகளான பெரியவர்களுக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
தகவலுக்கும் பகிர்வுக்கும் நன்றி
விழாவில் கலந்து கொண்டிருக்கலாமே என்ற ஆவலை ஏற்படுத்தி விட்டது
பகிர்வுக்கு நன்றி கதிர்
மிகச்சிறப்பான பணி. பின்புலத்தில் இருந்தோருக்கு நன்றி, வாழ்த்துகள்.
(திரு. அய்யாச்சாமியைப் பற்றி அறிவேன். ஆனால் திரு. நாகராஜன் யாரென நான் அறிந்திருக்கவில்லை, கெஸ் செய்துகொண்டேன். பொதுவாக இருவரைப்பற்றிய குறிப்புகளும் தந்திருந்தால் இன்னும் முழுமையாக இருந்திருக்கும்.)
இதெல்லாம் படிக்க மனசு மகிழ்வா இருக்குது.
kathir,
Can you please tell me the mail id or any contact of the left most in the photo where you stand the right most ?
I knew him(vasanth) from Anna university and suddenly I saw him and am very happy.
Thanks,
Sekar K
Inspiring! Thanks a lot for sharing.
கோடியில் இருவர்களை.,
வாழ்த்த வயதில்லாததால், அவர்களின் தொடர்ந்த சேவைக்கு துணையிருக்க இறையினை பிரார்த்தித்து வணங்குகிறேன்..
Post a Comment