ஓர் இரவும் ஒற்றை நொடியும்

நெகிழ்ந்து நெடுநேரம் மனம் பகிர்ந்து
நேர்த்தியாய் விரல்கள் பிரித்து
தூக்கத்தூளியில் நான் துவழ தூங்காமனம்
தேடியது நமக்கான வார்த்தைகளை

தென்பட்ட வார்த்தைகளை தேர்ந்து
அழகாய்க் கோர்க்க அடம்பிடித்து
இடம் வலமாய் மாறி அமர்ந்து
விடியவிடிய விளையாடியது

விடியல் எழுப்ப வேகமாய்த் தேடினேன்
விளையாடிய வார்த்தைகளை
கரைந்து போய் காலியாக இருந்தது
கருக்கொண்ட நமக்கான வார்த்தைகள்

எழுத மறந்த ஏட்டைத் திறந்தேன்
என்னிடம் களவுபோன வார்த்தைகள்
வர்ணம் பூசி, உன் வாசம் தாங்கி
இறைந்து கிடந்தது உன் பெயரோடு

அழகுக்கொடியாய் பிணைந்து கிடந்ததை
அள்ளியெடுத்து ஆசையாய் அணைத்தேன்
மூச்சுமுட்ட முகர்ந்து பார்த்தேன்
ஒருகணம் தொட்டது உயிரின் நுனியை

பனித்துளிக்குள் அடைபட்ட குளிர்
பட்டென சிறையுடைத்த சிதறலாய்
நீ என்னிடமும், நான் உன்னிடமும்
சுகமாய் பிறந்தோம் ஒற்றை நொடியில்

______________________________

32 comments:

*இயற்கை ராஜி* said...

ம்ம்.. வழக்கமான கலக்கல்

Chitra said...

ம்ம்ம்ம்ம்ம்ம்....... அருமை. :-)

*இயற்கை ராஜி* said...

ஓ.. இன்னும் படிக்கலியோ.. இருங்க படிச்சிட்டு வரேன்:-)

*இயற்கை ராஜி* said...

கவிதை நல்லாயில்லை...


அப்படின்னு சொல்லத்தான் ஆசை.. ஆனா என்ன பண்றது.... சான்ஸ் குடுக்க மாட்டேங்கிறீங்களே

ரோகிணிசிவா said...

ம்

*இயற்கை ராஜி* said...

ஆஹா... மீ த ஃப்ர்ஸ்டா...ம்ம்ம்ம்ம்ம்ம்:-)

Rekha raghavan said...

//பனித்துளிக்குள் அடைபட்ட குளிர்
பட்டென சிறையுடைத்த சிதறலாய்//

இந்த வார்த்தை ஜாலத்தை மிகவும் ரசித்தேன். நல்ல கவிதை கதிர்.பாராட்டுகள்.

ரேகா ராகவன்.
(சிகாகோவிலிருந்து)

க.பாலாசி said...

யப்பா.. சாமீ... என்னமோ போங்க... உங்கள அடிச்சிக்க ஆளில்ல..

பின்னிப்பின்னி பெற்றெடுத்த குழந்தை...ஒரு மலடனாய் வெறித்துப்பார்க்கிறேன்....

(நல்லவேள லேபில்ல அன்பு, கவிதைன்னு மட்டும் போட்டீங்க....)

VELU.G said...

சான்ஸே இல்லைங்க

பின்னறீங்க

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

ஆ.. ஆ.. (குணா ஸ்டைல்) கவிதை கவிதை..கலக்கல்.

கலக்கறீங்களே கதிர்..

மெருகேறிட்டே போகிறது. வாழ்த்துகள்.

பனித்துளி சங்கர் said...

////பனித்துளிக்குள் அடைபட்ட குளிர்
பட்டென சிறையுடைத்த சிதறலாய்
நீ என்னிடமும், நான் உன்னிடமும்
சுகமாய் பிறந்தோம் ஒற்றை நொடியில்////////

இறுதியில் மிகவும் அழகாக முடித்திருக்கிறீர்கள் .
அருமை !

Thenammai Lakshmanan said...

பிறந்த நொடியின் வலி உணர்கிறேன் கதிர் இந்தக் கவிதையில்....அருமை

பா.ராஜாராம் said...

ரொம்ப நல்லாருக்கு கதிர்!

vasu balaji said...

மூச்சுமுட்டுது வார்த்தைப் பின்னல். அபாரம்;)

அன்புடன் அருணா said...

மீண்டும் ஒரு பூங்கொத்து!

Unknown said...

கவிதை கலக்கல் கதிர்.

Unknown said...

//*இயற்கை ராஜி* said...
ம்ம்.. வழக்கமான கலக்கல்

April 28, 2010 8:05 PM

*இயற்கை ராஜி* said...
ஓ.. இன்னும் படிக்கலியோ.. இருங்க படிச்சிட்டு வரேன்:-)

April 28, 2010 8:06 PM//

இப்பிடியெல்லாம் ஆட்கள் இருக்கிறதால தான் பதிவுலகம் வாழ்ந்துக்கிட்டிருக்கு.. :)))

dheva said...

//ஒருகணம் தொட்டது உயிரின் நுனியை

பனித்துளிக்குள் அடைபட்ட குளிர்
பட்டென சிறையுடைத்த சிதறலாய்
நீ என்னிடமும், நான் உன்னிடமும்
சுகமாய் பிறந்தோம் ஒற்றை நொடியில்//

உயிரின் நுனியை தொட்டதா? கதிர்......வாவ்.............. நான் தியான நிலைக்குப் போய்டேன்.....கதிர்!

*இயற்கை ராஜி* said...

முகிலன் said...
//*இயற்கை ராஜி* said...
ம்ம்.. வழக்கமான கலக்கல்

April 28, 2010 8:05 PM

*இயற்கை ராஜி* said...
ஓ.. இன்னும் படிக்கலியோ.. இருங்க படிச்சிட்டு வரேன்:-)

April 28, 2010 8:06 PM//

இப்பிடியெல்லாம் ஆட்கள் இருக்கிறதால தான் பதிவுலகம் வாழ்ந்துக்கிட்டிருக்கு.. :)))
//
படிச்சிட்டு கமெண்ட் போட்டாலும் இதே கலக்கல்,அபாரம்,சூப்பர்,அருமை ஏதோ ஒரு வார்த்தைதான் தோணப் போகுது...
அதான் படிக்காமயே போட்டேன்..

ஈரோடு கதிர் said...

நன்றி @@ இயற்கை ராஜி
//ஏன் இத்தன கொலவெறி//

நன்றி @@ Chitra

நன்றி @@ ரோகிணிசிவா

நன்றி @@ KALYANARAMAN RAGHAVAN
நன்றி @@ க.பாலாசி
//உங்கள அடிச்சிக்க ஆளில்ல..//
ஏன் ராசா....


நன்றி @@ VELU.G

நன்றி @@ செந்தில்வேலன்

நன்றி @@ பனித்துளி சங்கர்

நன்றி @@ thenammailakshmanan

நன்றி @@ பா.ரா

நன்றி @@ வானம்பாடிகள்


நன்றி @@ அன்புடன் அருணா

நன்றி @@ முகிலன்
அப்பாடா ராஜிய கேள்வி கேக்க ஒரு ஆள் இருக்கே... வாழ்க முகிலன்

நன்றி @@ dheva

சீமான்கனி said...

//அழகுக்கொடியாய் பிணைந்து கிடந்ததை
அள்ளியெடுத்து ஆசையாய் அணைத்தேன்
மூச்சுமுட்ட முகர்ந்து பார்த்தேன்
ஒருகணம் தொட்டது உயிரின் நுனியை//

அழகான கவிதை அண்ணே... மிகவும் ரசித்தேன்...பிள்ளையாய் மாறிப்போன தந்தையாய்,,,,

ஹேமா said...

கவிதையும் குழந்தையின் மனதோடு நெகிழவைக்கிறது கதிர்.

தாராபுரத்தான் said...

கவிஞர் கதிர்க்கு வாழத்துக்கள்.

பத்மா said...

'
என்னிடம் களவுபோன வார்த்தைகள்
வர்ணம் பூசி, உன் வாசம் தாங்கி
இறைந்து கிடந்தது உன் பெயரோடு

கண்டுபிடிக்கும் தருணம் எத்தனை இன்பம்?
நல்லா வந்துருக்கு சார்
பிடிச்சுருக்கு

பிரேமா மகள் said...

கவித கவித.... ம்...

சீதாம்மா said...

வார்த்தைகளின் துள்ளிவிளையாடல்
வரிக்கு வரி ரசித்தேன்
சீதாம்மா

Thamira said...

நன்றாகயிருந்தது.

க.பாலாசி said...

//ஈரோடு கதிர் said...
//உங்கள அடிச்சிக்க ஆளில்ல..//
ஏன் ராசா....//

அடிக்க ஆளில்லன்னு போடவந்து மாத்தி போட்டுட்டுடேன்...

AkashSankar said...

//எழுத மறந்த ஏட்டைத் திறந்தேன்
என்னிடம் களவுபோன வார்த்தைகள்
வர்ணம் பூசி, உன் வாசம் தாங்கி
இறைந்து கிடந்தது உன் பெயரோடு//

நல்ல கற்பனை...

ஈரோடு கதிர் said...

நன்றி @@ seemangani

நன்றி @@ ஹேமா

நன்றி @@ தாராபுரத்தான்

நன்றி @@ padma

நன்றி @@ பிரேமா மகள்

நன்றி @@ சீதாம்மா

நன்றி @@ ஆதி

@@ க.பாலாசி
//பாவி...பாவி//

நன்றி @@ ராசராசசோழன்

"உழவன்" "Uzhavan" said...

ரொம்ப நல்லாருக்கு

*இயற்கை ராஜி* said...

//நன்றி @@ முகிலன்
அப்பாடா ராஜிய கேள்வி கேக்க ஒரு ஆள் இருக்கே... வாழ்க முகிலன்
//

ஹ்ம்ம்.. பாயிண்ட் நோட்டட் ஆபீசர்