தே.மு.தே.பி

அவன்...

தேர்தலுக்கு முன்...
சீறிமறையும் வாகனத்தின் சக்கரங்களில்
சிதறிப் படியும் புழுதியில் வாக்குறுதிகளை
வரைந்து வைத்து விட்டுப்போனான்

தேர்தலுக்குப் பின்...
பறவையின் எச்சத்தில் விழுந்த விதையில்
விளைந்த மரத்தின் நிழலில்
வேட்டைக்காரனாய் ஓய்வெடுக்கிறான்


இவன்...

தேர்தலுக்கு முன்...
காந்தி நோட்டு குவாட்டர் கோழி பிரியாணி
நேர்ந்து விட்டான் தாடி மீசை தலைமுடியை
தலைவனின் கட்சி ஜெயிக்க...

தேர்தலுக்குப் பின்...
பொய்த்த பருவமழை காய்ந்தது காடும் கனவும்
நேர்ந்து விடுகிறான் இரட்டைச்சேவலை
ஆட்சியைத் தொலைத்து தேர்தல் கொண்டுவர

-------------------------------------------------------------------------
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள். தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள்.

21 comments:

vasu balaji said...

முதல் ஓட்டு மாப்புக்கு. அசத்தல்.

க.பாலாசி said...

//நேர்ந்து விட்டான் தாடி மீசை தலைமுடியை
தலைவனின் கட்சி ஜெயிக்க...//

‘ம’ கொடுக்கறதோட நிப்பாட்டிகிட்டா பரவாயில்லையே...

//தேர்தலுக்குப் பின்...
பொய்த்த பருவமழை காய்ந்தது காடும் கனவும் நேர்ந்து விடுகிறான் இரட்டைச்சேவலை ஆட்சியைத் தொலைத்து தேர்தல் கொண்டுவர//

அப்படி நேர்ந்து விட்ட சேவலையும் அடிச்சு பிரியாணி செஞ்சு போட்டுடுவானுங்க...அதையும் நம்மாளுக சாப்பிட்டுட்டு ஏப்பம் விட்டுடுவாய்ங்க...

கலகலப்ரியா said...

சூப்பரப்பு..

மக்களே தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள்.. (இது தே.மு. தானுங்களே..)

காமராஜ் said...

சினிமா என்பது கலையின் வடிவமாக இருந்து பின்னால் கனவுத்தொழிற்சாலையாக மாறியதுபோல.
அரசியலும் ஏமாற்றுத் தொழிற்சாலையாகிவிட்டது.

ஆரூரன் விசுவநாதன் said...

அடுத்த தாக்குதல் அரசியலிலா....

வாழ்த்துக்கள்
அன்புடன்
ஆரூரன்

தேவன் மாயம் said...

//தேர்தலுக்குப் பின்...
பொய்த்த பருவமழை காய்ந்தது காடும் கனவும் நேர்ந்து விடுகிறான் இரட்டைச்சேவலை ஆட்சியைத் தொலைத்து தேர்தல் கொண்டுவர//

ஓட்டுப் போட்டாச்சு!!

ஈரோடு கதிர் said...

நன்றி @@ பாலா அண்ணா

நன்றி @@ பாலாஜி
(‘ம’ மட்டும் தான் / நிறைய பிரியாணி சாப்டீங்களோ)

நன்றி @@ செந்தில்

நன்றி @@ பிரியா (ஓட்டும் போட்டதுக்கு)

நன்றி @@ காமராஜ்
(மிகச் சரியாக சொன்னீர்கள்)

நன்றி @@ ஆரூரன்
(இன்னிக்குதான் அரசியல், அடுத்தது இன்னும் யோசிக்கல!!!)

நன்றி @@ தேவன் மாயம்
(ஓட்டும் போட்டதுக்கு)

ராமலக்ஷ்மி said...

அவனும் இவனும்..

அருமையாய் சொல்லியிருக்கிறீர்கள்!

நாடோடி இலக்கியன் said...

நல்லாயிருக்குங்க இவன்.

வால்பையன் said...

சரியா புரிஞ்சி வச்சிருக்கிங்க

நாகா said...

அருமை அருமைன்னு ஒவ்வொரு கவிதைக்கும் template பின்னூட்டம் போட ஒரு மாதிரியாத்தான் இருக்கு. ஆனாலும் நல்லாருக்கற கவிதைய வேற எப்பிடி சொல்லி பாராட்டறது?

பழமைபேசி said...

100/100

பித்தனின் வாக்கு said...

இது கருத்துக்களே அல்ல பதிவே அல்ல

இது உன்மைத்தமிழனின் வாழ்க்கை வரலாறு.
உன்மையை நிதர்சனமாக எழுதீயுள்ளிர்கள்.
வாழ்த்துக்கள். ஆனால் இதுக்காக நாம் அனைவரும் வெக்கப்படும் நிலையில் உள்ளேம்.

ஈரோடு கதிர் said...

நன்றி @@ ராமலக்ஷ்மி

நன்றி @@ பாரி

நன்றி @@ வால்பையன் (மெய்யாலுமா)

நன்றி @@ நாகா
(நாகா வந்துட்டுப்போனாலே மகிழ்ச்சிதான்)

நன்றி @@ பழமைபேசி
(அப்பாடா!!! தப்பிச்சேன்)

நன்றி @@ பித்தன் said...
(செல்போன் சிக்னல் மாதிரி விட்டு விட்டுத்தானே வெக்கப்படறோம் பித்தன்)

Anonymous said...

நல்ல அலசல்......இந்தியனைப் பற்றியும்...அவன் அறியாமையைப் பற்றியும்......

ப்ரியமுடன் வசந்த் said...

அசத்தல் வரிகள்

மன உறுத்தல் இவனுக்கு மட்டும்தான்

மற்றவனுக்கு ?

கார்த்திகைப் பாண்டியன் said...

நிதர்சனம்..

சந்தனமுல்லை said...

ஹ்ம்...ம்ம்

ஈரோடு கதிர் said...

நன்றி @@ தமிழ்
(பிறந்த நாளுக்கு இனிப்பு தரவேயில்லை நீங்க)

நன்றி @@ வசந்த்
(மற்றவனுக்கும் மௌனமாக இருக்கத்தானே செய்யும்)

நன்றி @@ கார்த்திகைப் பாண்டியன்

நன்றி @@ சந்தனமுல்லை

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமை

Unknown said...

பறவையின் எச்சத்தில் விழுந்த விதையில் விளைந்த மரநிழலில் "வேட்டைகாரனாய்' -செம....செம...சிந்தனைக்கு ஒரு சல்யூட்...