வௌவ்வால் தத்துவம்

சங்ககிரி மலை மீது இருக்கும் கோட்டைக்கு நீண்ட நாளாக போகவேண்டும் என்ற ஆசை. திடீரென அந்த ஞாயிற்றுக் கிழமை, நான், வலைப்பதிவு நண்பர்கள் ஆரூரன், பாலாஜி மூவரும் சங்ககிரியில் ஒன்றிணைந்தோம்.

காலை 11.30 மணிக்கு மலை ஏற ஆரம்பித்தோம், வெயில் உச்சந்தலை வழியே மெல்ல கசிந்தது. ஆஹா தப்பு பண்ணிட்டமோ, இந்த வெயில்ல வந்திருக்கக் கூடாதோ என வெயில் உறைக்க ஆரம்பித்த பின் மனதிற்கு உறைத்தது.

இனி என்ன செய்யமுடியும், பத்துப் படி ஏறும் முன்னே, “வெயில் சுடுது திரும்பிப் போய்டாலாமானு” கேக்க முடியுமா? கூட வர்றங்க நாளைக்கு நாம வெயில் சுடுதேனு சொன்னத ஒரு இடுகையா போட்டுட்டா நம்ம டங்குவாரு அந்து போய்டுமே என்று, நானும் நம்பி ஏற ஆரம்பிச்சப்பவே, காலையில வீட்டில் எடுத்துக் கொடுத்துவிட்டு வந்த கோழிக்கறி ஞாபகத்திற்கு வந்தது.

இப்பவே திணறுதே, க்க்கும்ம்ம்ம் எப்போ ஏறி, எப்போ இறங்கி, எப்பொழுது வீடு போய்ச் சேருவோம். இன்னைக்கு மதியம் கோழிக்கறி அவ்வளவுதானானு ரொம்ப ஃபீலோட பத்துப் படிகள் வேகமா ஏறி திரும்பிப்பார்த்த... பாலாஜி மட்டும் பக்கத்தில நிற்கிறாரு...

ம்ம்ம்ம்ஹூம்... ஆரூரனைக் காணவில்லை, எங்கேயென்று தேடினால்

சும்மா பி.சி.ஸ்ரீராம் கணக்காக, படிக்கட்டு, மதில் சுவரு, அதில இருக்கிற கல், பக்கத்தில சிந்தியிருந்த மண் என்று சும்மா கண்ணுல பட்டதையெல்லாம் கிர்க்..கிர்க் என போட்டோவா எடுத்து தள்ளிட்ருக்காரு..

“சா............ர் வாங்க போலாம்”னு கத்திக் கூப்பிட்டாலும் அவர் வருவாருனு தோணல...
அதனால............ ............ கூப்பிடல.

முதல் படியிலேயே போட்டோ பிடிக்க ஆரம்பிச்சிட்டாரே, இன்னும் எத்தன படி இருக்கோனு, திப்புசுல்தான் மேல பாரத்தப் போட்டு, (அவர்தான் இதையெல்லாம் கட்டிய புண்ணியவான்), மூச்சு வாங்க ஏற ஆரம்பித்தோம்.

ஐந்து நிமிடம் நடந்திருப்போம், மூன்று சிறுவர்கள் சிட்டாக பறந்து எங்களை கடந்து ஓடினார்கள். கையில் ஒரு கேரி பேக், அதில் சில தண்ணீர் பாக்கெட்டுகள்.

என்னடா.. இந்த வெயில்ல இந்த பசங்க ஏறுகிறார்களேனு ஆச்சரியமா “தம்பீ எங்கடா போறீங்கனு” கேட்க, “வௌவ்வால் பிடிக்க போறோம்” னு சொல்லிட்டு தெறிச்சு ஓடினார்கள்.

இது என்னடா கொளுத்தற வெயில்லே எங்கபோய் இந்தப் பயபுள்ளைக வௌவ்வால் புடிக்கப் போகுதுனு ஒரு சந்தேகம் வேற.

மூச்சிறைக்க ஒரு வழியாக அரை மணி ஏறிய பிறகு ஒரு மசூதியில் போன்ற சின்ன மண்டபத்தில் அந்த படிகள் முடிந்தது.

அங்கே பார்த்தால், எங்களைத் தாண்டி ஓடி வந்த அந்த சிறுவர்கள் சட்டையில்லாமல், வெறும் அரை ட்ரவுசரோடு பரபரப்பாக குதித்துக் கொண்டிருந்தார்கள்.

“பசங்களா... என்றா பண்றீங்க, இங்க”

“வௌவ்வால் புடிக்கிறம்ணா”

“வௌவ்வாலா, எங்க இருக்கு வௌவ்வால்”

“அந்த சொரங்கத்லணா”

திப்பு சுல்தான் கோட்டை பற்றியும், அவர் பாதாளச் சுரங்கம் தோண்டி அது வழியாக வந்து போனதாக என் பாட்டி சொன்ன கதை நினைவுக்கு வந்தது.

அந்தச் சிறுவன் கை காட்டிய இடத்தைப் பார்த்தால் ஒரு குறுகிய பாதையோடு சுரங்கத்துள் செல்லும் இருண்ட பாதை இருப்பது தெரிந்தது.

“ஏம்பா, இதுதான் திப்புசுல்தான் கட்டின சுரங்கமா”

“தெரியலண்ணா”

இருட்டு அடர்த்தியாக இருந்தது. பத்தடி தூரத்தில் வெளியே வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது. குகையில் இருட்டு நனைந்த பனை மரம் போல் அப்பிக்கிடந்தது. எப்படி இந்த இருட்டில் இந்தப் பையன்கள் புழங்குகிறார்கள்.

“வௌவ்வால் புடிச்சு என்ன பண்ணுவீங்க”

“தீயில சுட்டு திம்போம்ணா”

வௌவ்வால் பிடித்து, இறக்கையைப் பிய்த்து, கம்பியில் குத்தி, தீயில் சுட்டு சாப்பிடுபவர்களைச் சின்ன வயசில் பார்த்த ஞாபகம் வந்தது.

“சரி உள்ளே எவ்வளவு தூரம், போக முடியும்”

“கொஞ்ச தூரம்தான்ணா, பயங்கர இருட்டா இருக்கும், லைட் இருந்தாத்தான் போக முடியும், சும்மா போனீங்னா ரிஸ்க்ண்ணா”

“சரி... எத்தன வௌவ்வால் புடிச்சிருக்கீங்க, காட்டுங்க பார்க்கலாம்”

“இல்லண்ணா... உள்ள புடிச்சிட்டிருக்காங்க”

“யாரு”

“பெரிய பசங்க, உள்ள புடிச்சிட்டிருக்காங்க”

ஒரு ஆர்வத்தில் அந்த சுரங்கப் பாதைக்குள் ஒரு பத்தடி தூரம் நடந்திருப்போம். உடல் முழுதும் இருட்டு ஒட்டியது போல் இருந்தது. நீண்ட காலமாக உள்ளே போகும் போது வெளிச்சத்திற்காக எரித்திருந்த டயர் நாற்றமும், சுரங்கப் பாதையின் வீச்சமும் ஒன்றாய் சேர்ந்து சுவாசத்தை கடினப்படுத்தியது.

மனது திடுக்கென்றது. கொட்டிக் கிடக்கும் இருட்டில், மூச்சை அடைக்கும் நாற்றத்தில் எப்படி உள்ள சிறுவர்கள் இருக்கிறார்கள். அப்படி என்ன கிடைத்துவிடும் இந்த வௌவ்வால் பிடிப்பதில்.

என் மனது குறுக்கும் நெடுக்குமாக கணக்குப் போட்டது. என்ன கிடைக்கும் இந்த வௌவ்வால் பிடிப்பதில். எது இவர்களை இவ்வளவு கடினப்பட்டு, சிரமப்பட்டு வௌவ்வால் பிடிக்க வைக்கிறது. வறுமையா, இவர்களின் பெற்றோர் என்ன செய்து கொண்டிருப்பார்கள் என மீண்டும் மனது இடது, வலதுமாக புத்திசாலித்தனமாக கணக்குப் போட்டுக் கொண்டிருந்தது.

சில நிமிடங்களில் அந்த இருட்டு சுரங்கத்திலிருந்து திமுதிமுவென ஆறு “பெரிய” பையன்கள் குதித்துக் கொண்டு வந்தனர். கைகளில் ஒரு பழைய கொசு வலை இருந்தது. கொசுவலையை உதறினார்கள், எட்டு வௌவ்வால்கள் விழுந்தன.

எல்லோரும் உடலிலும் இருட்டுக்கு நிகராக அழுக்கு அப்பிக் கிடந்தது. பெரும்பாலும் மேலாடையில்லை.

கனமான மனதோடு, “இவ்வளவு சிரமப்பட்டு, உயிரைப் பணயம் வைத்து வௌவ்வால் பிடிக்கிறீங்களே, ஒரு வௌவ்வால் எவ்வளவு விற்கும்” என கேட்டபோது.

ஒரு பையன் சத்தமாக சிரித்துக்கொண்டே சொன்னான் “இது விக்கறது இல்லண்ணா, நாங்களே சுட்டு சாப்பிடுவோம்”

அந்த பையன்களைப் பற்றி விசாரித்தபோது, பெரிய பையன்களில் ஐந்து பேர் லாரி பட்டறையில் காண்ட்ராக்ட்டாக வெல்டிங், டிங்கரிங், பெயிண்டிங் என நன்றாக சம்பாதிப்பது தெரிந்தது


“சரி தம்பி, ஒரு வௌவ்வால் என்ன விலைதான் போகும்”.

ஒரு வௌவ்வால் பத்து ரூபாய் என்றால் கூட மொத்தம் எண்பது ரூபாய் தானே போகும், இதுக்குப் போயி இந்த ரிஸ்க் எடுக்கிறார்களே என என் புத்தி அதிலேயே சுத்தியது.

“அதெல்லாம் தெரியாதுண்ணா. இது லீவுல ஜாலிக்காக நாங்க சேந்து பண்றதுங்க, இந்த ஜாலிக்கும், சந்தோஷத்துக்கும் எப்பிடிங்ண்ணா விலை சொல்ல முடியும்?”

எதையும் பணம், எதிலும் லாபம் என்ற நகரத்துப் புத்தியில் பளீரென்று அறைந்தது போல் இருந்தது.

சிறுவனாக கிராமத்தில் வாழ்ந்த காலத்தில் கள்ளிப்பழம் பறித்து முட்களை கல்லில் உரைத்து, அப்படியும் நாக்கில் முள் குத்த சாப்பிட்டதும், விடிகாலை இருட்டில் யாரும் வரும் முன் கால்களில் குச்சி கிழிக்க ஓடிப்போய், இரவு விழுந்திருந்த பனம் பழம் எடுத்து வந்து வீட்டில் பத்திரப்படுத்தி விட்டு, மாலையில் பள்ளிக்கூடம் விட்டு வந்து, அதை சுட்டு சப்பி சாப்பிட்டது நினைவுக்கு வந்தது.

அதற்கெல்லாம் என்ன விலை!!! விடையொன்றும் தென்படவில்லை.

இருட்டு சுரங்கத்திலிருந்து வெளியே வந்த போது கண் கூசியது போல்,
மனது கூசும் அளவிற்கு மனதுக்குள் வெளிச்சம் பிரகாசமாக அடித்தது.

டிஸ்கி: டெர்ரரா !!!! கருஞ்சிவப்பு நிறத்துல பேசினது நான். நீல எழுத்தில பேசுனது அந்தப் பசங்க. கடைசியா பச்சை எழுத்தில இருப்பது தான் வௌவ்வால் கத்துக்கொடுத்த பாடம் (தத்துவம்!!!!, சும்மா கேயஸ் தியரிக்காக)
-------------------------------------------------------------------------
முழுவதும் படித்தீர்களா, பிடித்திருந்தால் உங்கள் கருத்தை பதிவு செய்துவிட்டு தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள்.42 comments:

ஆரூரன் விசுவநாதன் said...

இருட்டு சுரங்கத்திலிருந்து வெளியே வந்த போது கண் கூசியது போல்,
மனது கூசும் அளவிற்கு மனதுக்குள் வெளிச்சம் பிரகாசமாக அடித்தது.


மிக அருமை...


வாழ்த்துக்கள்

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

இவண்
உலவு.காம்

சிவபார்கவி said...

அது சரி, சங்ககிரி மலையின் கோட்டையைப் பற்றி ஏதுவும் சொல்லாது கோட்டை விட்டது ஏனோ, புகைப்படங்கள் எங்கே நண்பரே.

வால்பையன் said...

ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்!

தடுத்தது எதுவோ!?

வால்பையன் said...

பாலோ அப் மறந்துட்டேன்!

குடந்தை அன்புமணி said...

//“அதெல்லாம் தெரியாதுண்ணா. இது லீவுல ஜாலிக்காக நாங்க சேந்து பண்றதுங்க, இந்த ஜாலிக்கும், சந்தோஷத்துக்கும் எப்பிடிங்ண்ணா விலை சொல்ல முடியும்?”//

உண்மைதானே... அந்த சந்தோசத்து ஏதுங்க விலை...

அதுசரி, கோட்டையை முழுசா சுத்தி பார்க்கவில்லை போல... அந்த சிறுவர்கள் ஆராய்ச்சிலேயே பொழுது போயிடுச்சா...

பிரபாகர் said...

கதிர்,

அருகிலிருந்தாலும் நிஜமாய் நான் கேள்விப்பட்டதில்லை...

சிறு வயதில் தூண்டிலை எடுத்துக்கொண்டு மீன் பிடிக்க சென்றது நினைவிற்கு வருகிறது.

அடுத்தமுறை வரும்போது கொல்லிமலைப்பக்கம் நாமெல்லாம் போவோம்...

பிரபாகர்.

vasu balaji said...

அதெல்லாஞ்செரி. படி ஏறும்போதே கோழி கோழின்னு அல பாய்ஞ்சது கோட்டை விட்டாச்சா?:))

ஈரோடு கதிர் said...

//ஆரூரன் விசுவநாதன் said...
மிக அருமை...//

ரொம்ப பெரிய மனசுங்க.
போட்டோ கொடுத்து உதவியதோடு, முதல் பின்னூட்டமும்...

சரி நிறைய எழுதாமல் விட்டிருக்கிறேன்
பார்த்து கவர் பண்ணிடுங்க...

நன்றி @@ உலவு.காம்

நன்றி @@ சிவபார்கவி
//சங்ககிரி மலையின் கோட்டையைப் பற்றி ஏதுவும் சொல்லாது கோட்டை விட்டது ஏனோ//

கோட்டைக்கே போகலீங்க

//புகைப்படங்கள் எங்கே நண்பரே.//

ஆரூரன் இது குறித்து எழுதி வருகிறார்


நன்றி @@ வால்பையன் said...

//ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்!
தடுத்தது எதுவோ!?//

தவறுதான், திடீரென முடிவான ஒன்று
விரைவில் மீண்டும் நாம் போவோம்

நன்றி குடந்தை அன்புமணி

//உண்மைதானே... அந்த சந்தோசத்து ஏதுங்க விலை...

அதுசரி, கோட்டையை முழுசா சுத்தி பார்க்கவில்லை போல... //

ஆமாங்க அன்புமணி

நான்றி @@ பிரபாகர்
வாங்க புது மாப்பிள,
வாழ்த்துகள்

//அருகிலிருந்தாலும் நிஜமாய் நான் கேள்விப்பட்டதில்லை...//
நீங்களாவது ஆத்தூருங்க, நான் பிறந்த ஊரே சங்ககிரிலிருந்து 6 மைல்தானுங்க, நானே 34 வருசமா போனதில்லை

//அடுத்தமுறை வரும்போது கொல்லிமலைப்பக்கம் நாமெல்லாம் போவோம்...//
கண்டிப்பாக

நன்றி @@ வானம்பாடிகள்
//கோழி கோழின்னு அல பாய்ஞ்சது//

மூனு மணிக்கு வந்து பக்காவா முடிச்சாச்சுங்க...

பழமைபேசி said...

மொதல்ல, மூவேந்தர்கள் கூடினதுக்கு வாழ்த்துகள்!

ரெண்டாவது, ஒரு பேச்சுக்கு கூட எனையெல்லாம் கூப்பிடவே இல்லைனு ஒரு வயித்தெரிச்சல்!

மூனாவது, அப்படியே திகில் பயணம் மாதிரி, அடுத்து, அடுத்து ஒரு எதிர்பார்ப்பைக் கூட்டுற மாதிரியான எழுத்து!

நான்காவது, அன்றைய நாள் குகை வாசல்லயே தொக்கி நிக்குதே? மிச்சம்?? யாரு, நாங்க வந்து எழுதவா???

பழமைபேசி said...

//வௌவ்வால்//

வெளவால்... இல்லை, உங்களுக்கு உச்சரிப்புல ஏதும் குழறல் இருக்கா?? என்னா ’லொல்’??

manjoorraja said...

அவர்கள் வவ்வால் பிடிக்க ஓடும்போதே அது ஒரு ஜாலிக்குதான் என்பதை நான் புரிந்துக்கொண்டேன். அதெல்லாம் ஒரு சுகம். சிறுவனாக இருக்கும் போது நானும் காட்டு முயல், காட்டுக்கோழி என பிடிச்சிருக்கேன்.

ஏன் உங்களுக்கு நகர வாழ்க்கையில் அவை மறந்துவிட்டன என தெரியவில்லை.

அது சரி கோட்டையை பற்றி ஒன்றுமே காணலெயே... கோட்டை விட்டுவிட்டீரா?

Raju said...

என்னாது மறுபடியும் கயாஸ் தியரியா...? ஓடுங்க..!
எல்லாரும் ஓடிருங்க.
:-)

ஈரோடு கதிர் said...

நன்றி @@ மாப்பு பழமைபேசி
//நான்காவது, அன்றைய நாள் குகை வாசல்லயே தொக்கி நிக்குதே? //

வெயில்லே இதுக்கே டங்கவாரு அந்து போச்சு மாப்பு

போதும்னு இறங்கிட்டோம்

//வௌவ்வால்//
வெளவால்... இல்லை,//
//என்னா ’லொல்’??//

ஞாயித்துக்கிழமை மத்தியான வெயில், அதனால ஒரு "வ்" சேர்ந்து போச்சு

ஈரோடு கதிர் said...

நன்றி @@ மஞ்சூர் ராசா
//ஏன் உங்களுக்கு நகர வாழ்க்கையில் அவை மறந்துவிட்டன என தெரியவில்லை.//

ஆமாங்க

//கோட்டையை பற்றி ஒன்றுமே காணலெயே... //

போகல தல... விரைவில் போவோம்


நன்றி @@ ராஜு
//என்னாது மறுபடியும் கயாஸ் தியரியா...? ஓடுங்க..!
எல்லாரும் ஓடிருங்க. //

அப்பாடா, தலைப்பு போட்டது தப்பா போகல

இஃகிஃகி

சந்தனமுல்லை said...

நல்லாருந்துது..உங்க ஃபீல்ட் ட்ரிப்!!

//
இருட்டு சுரங்கத்திலிருந்து வெளியே வந்த போது கண் கூசியது போல்,
மனது கூசும் அளவிற்கு மனதுக்குள் வெளிச்சம் பிரகாசமாக அடித்தது.//

அருமை!

அகல்விளக்கு said...

மாம்ஸ்....

சொன்னா நானும் வந்திருப்பன்ல்....

க.பாலாசி said...

//வெயில் உச்சந்தலை வழியே மெல்ல கசிந்தது. ஆஹா தப்பு பண்ணிட்டமோ, இந்த வெயில்ல வந்திருக்கக் கூடாதோ என வெயில் உறைக்க ஆரம்பித்த பின் மனதிற்கு உறைத்தது.//

முடியிருந்த உங்களுக்கே இப்படின்னா, மொட்டையடிச்சிருந்த எனக்கு எப்டியிருந்திருக்கும் யாராவது நெனச்சுப்பாத்திங்களா?.

//காலையில வீட்டில் எடுத்துக் கொடுத்துவிட்டு வந்த கோழிக்கறி ஞாபகத்திற்கு வந்தது.//

அதப்பத்தி சொல்லவேயில்ல...நீங்க 1மணிக்கெல்லாம் போகணும்னு அடம்பிச்சப்பவே சந்தேகம்...

//திப்புசுல்தான் மேல பாரத்தப் போட்டு, (அவர்தான் இதையெல்லாம் கட்டிய புண்ணியவான்)//

நாம அங்க போறதுக்கும் காரணம் அவருதான்...

//குகையில் இருட்டு நனைந்த பனை மரம் போல் அப்பிக்கிடந்தது//

ஆகா...புனைவு அழகு...

//கனமான மனதோடு, “இவ்வளவு சிரமப்பட்டு, உயிரைப் பணயம் வைத்து வௌவ்வால் பிடிக்கிறீங்களே, ஒரு வௌவ்வால் எவ்வளவு விற்கும்”//

ம்கும்...நம்ம புத்தி எப்டில்லாம் வேலைசெய்யுது...அதையும் கொடுத்திருந்தா மார்க்கெட்டிங் பண்ணியிருக்கலாம்...


//“அதெல்லாம் தெரியாதுண்ணா. இது லீவுல ஜாலிக்காக நாங்க சேந்து பண்றதுங்க, இந்த ஜாலிக்கும், சந்தோஷத்துக்கும் எப்பிடிங்ண்ணா விலை சொல்ல முடியும்?”//

இது நச்....

ஆர்வம், அனுபவம், அதன் மூலம் நாம் கற்றுக்கொண்ட பாடங்கள்...எல்லாம் உங்களின் எழுத்துநடையில்...அருமை...

thiyaa said...

ஆகா அருமையாக உள்ளது வாழ்த்துகள்
எனக்கும் ஜாலியாக இருந்தது

நிலாமதி said...

மகிழ்வின் விலை (வெளவால் பிடிக்கும் )புரிந்ததா? ..........அருமையான பதிவு. ரசித்தேன்.

ஈரோடு கதிர் said...

நன்றி @@ சந்தனமுல்லை

//நல்லாருந்துது..உங்க ஃபீல்ட் ட்ரிப்!! //

நன்றி @@ அகல் விளக்கு
//மாம்ஸ்....
சொன்னா நானும் வந்திருப்பன்ல்....//

அடுத்த வாரம் போகலாம், நீங்களும் வாங்க


நன்றி @@ பாலாஜி

//முடியிருந்த உங்களுக்கே//

இஃகிஃகி, முடியிருக்கா, எனக்கா?

//நீங்க 1மணிக்கெல்லாம் போகணும்னு அடம்பிச்சப்பவே சந்தேகம்...//
இஃகிஃகி

//ஆகா...புனைவு அழகு...//
நன்றி

//ம்கும்...நம்ம புத்தி எப்டில்லாம் வேலைசெய்யுது...அதையும் கொடுத்திருந்தா மார்க்கெட்டிங் பண்ணியிருக்கலாம்...//

அந்த புத்தி வௌவால் தத்துவத்திற்கு பின் கொஞ்சம் மாறியிருக்கிறது


//ஆர்வம், அனுபவம், அதன் மூலம் நாம் கற்றுக்கொண்ட பாடங்கள்...//

மிக்க மகிழ்ச்சி பாலாஜி

நன்றி @@ தியாவின் பேனா
//எனக்கும் ஜாலியாக இருந்தது//

ஆஹா.. அப்படியா!!

நன்றி @@ நிலாமதி
//மகிழ்வின் விலை (வெளவால் பிடிக்கும் )புரிந்ததா?//

புரிந்தது நிலா

நாகராஜன் said...

நல்ல அனுபவம் தான்... போட்டு தாக்குங்க கதிர்... ஆனால் என்ன இந்த முறை நிறைய எழுத்துப்பிழை/வார்த்தைப்பிழை இருக்குது (ஒண்ணை பழமைபேசி திருத்திருக்கார்... இன்னும் சில இருக்கு), நிறைய எழுத மறந்த மாதிரி விஷயங்கள் தொக்கி நிக்குது... என்ன அவசரத்துல எழுதினதா?

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

உங்கள் பயண அனுபவமும், வௌவால் தத்துவமும் கலக்கல் :)

Anonymous said...

ஒவ்வொரு பயணமும் ஒரு அனுபவம் தருகிறது....கூடவே பாடமும்..

மாதவராஜ் said...

சுவாரசியமான பதிவு.
பால்ய நினைவுகளை கிளறிவிட்டன.
“வண்ணத்துப் பூச்சியின் இறகுகளை பிய்த்து பார்க்காத பிள்ளைப்பிராயம் உண்டா” என்னும் கவிதையும் உடன் வந்தது.
பகிர்வுக்கு நன்றி கதிர்!

ஈரோடு கதிர் said...

நன்றி @@ ராசுக்குட்டி
//நிறைய எழுத்துப்பிழை / வார்த்தைப்பிழை இருக்குது//

கவனிக்கிறேன்

நன்றி @@ செந்தில்

நன்றி @@ தமிழ்
//கூடவே பாடமும்..//
இது தான் முக்கியம்ங்க

ஈரோடு கதிர் said...

நன்றி @@ மாதவராஜ்

//“வண்ணத்துப் பூச்சியின் இறகுகளை பிய்த்து பார்க்காத பிள்ளைப்பிராயம் உண்டா”///

கவிதைக்கு கூடுதல் நன்றி நண்பரே

☀நான் ஆதவன்☀ said...

நல்ல பதிவு. புகைப்படங்கள் அவ்வளவு தானா?

ப்ரியமுடன் வசந்த் said...

நல்ல பயணக்கட்டுரை கூடவே அனுபவத்தையும் புரியுற மாதிரி சொல்லியிருக்கீங்க கதிர்........

ஈரோடு கதிர் said...

நன்றி @@ ஆதவன்
//புகைப்படங்கள் அவ்வளவு தானா?//

ஆரூரன் அவர்களின் அடுத்த இடுகையில் வரும்

நன்றி @@வசந்த்

//அனுபவத்தையும் புரியுற மாதிரி//

இஃகிஃகி

இரும்புத்திரை said...

கடைசில அந்த கோழிக்கறி உங்களுக்கு கிடைச்சுதா ?

பதிவு அருமை

ஈரோடு கதிர் said...

நன்றி @@ அரவிந்த்
//கோழிக்கறி கிடைச்சுதா ?//

பக்காவா

ஷண்முகப்ரியன் said...

குகையில் இருட்டு நனைந்த பனை மரம் போல் அப்பிக்கிடந்தது. //

புதிய உவமைகள்.பழைய அனுபவங்கள்.இனிய பகிர்வு.
மகிழ்ச்சி,கதிர்.

ஆ.ஞானசேகரன் said...

//“அதெல்லாம் தெரியாதுண்ணா. இது லீவுல ஜாலிக்காக நாங்க சேந்து பண்றதுங்க, இந்த ஜாலிக்கும், சந்தோஷத்துக்கும் எப்பிடிங்ண்ணா விலை சொல்ல முடியும்?”

எதையும் பணம், எதிலும் லாபம் என்ற நகரத்துப் புத்தியில் பளீரென்று அறைந்தது போல் இருந்தது.//


நல்ல பகிர்வு நண்பரே.....

ஈரோடு கதிர் said...

நன்றி @@ ஷண்முகப்ரியன்

நன்றி @@ ஞானசேகரன்

Admin said...

நல்ல இடுகை ரசித்தேன்

நாஞ்சில் நாதம் said...

சுவாரசியமான பதிவு.

அப்ப கோட்டைக்குள்ள போகவேயில்லையா?

நாடோடி இலக்கியன் said...

சுவாரஸ்யமான இடுகை கதிர்.

பதிவை முடித்திருந்த விதம் அருமை.கள்ளிப் பழம் எனது பால்யத்தை நினைவு படுத்தியது.அது நாம் வாழ்ந்த காலம்.விரைவில் அதை பற்றின ஒரு இடுகையோடு எனது ரீஎண்ட்ரி இருக்கும்.

தொடர்ந்து அசத்தல் பதிவுகளையே அள்ளி வழங்கும் கதிர் வாழ்க வளமுடன்.

ஈரோடு கதிர் said...

//சந்ரு said...
நல்ல இடுகை ரசித்தேன்//

நன்றி @@ சந்ரு

//நாஞ்சில் நாதம் said...
சுவாரசியமான பதிவு.
அப்ப கோட்டைக்குள்ள போகவேயில்லையா?//

போகலண்ணா.... விரைவில் போவோம்

நன்றி @@ நாஞ்சில்நாதம்


//நாடோடி இலக்கியன் said...
சுவாரஸ்யமான இடுகை கதிர்.

பதிவை முடித்திருந்த விதம் அருமை.கள்ளிப் பழம் எனது பால்யத்தை நினைவு படுத்தியது.அது நாம் வாழ்ந்த காலம்.விரைவில் அதை பற்றின ஒரு இடுகையோடு எனது ரீஎண்ட்ரி இருக்கும்.//

சீக்கிரம் வாங்க பாரி

நன்றி நண்பா

//தொடர்ந்து அசத்தல் பதிவுகளையே அள்ளி வழங்கும் கதிர் வாழ்க வளமுடன்.//

ஏஏஏஏன்... இப்ப்ப்ப்பிடி

கிருத்திகாதரன் said...


//இருட்டு சுரங்கத்திலிருந்து வெளியே வந்த போது கண் கூசியது போல்,
மனது கூசும் அளவிற்கு மனதுக்குள் வெளிச்சம் பிரகாசமாக அடித்தது.// நச்..

Unknown said...

சந்தோஷத்திற்கு விலை பேச ஆரம்பித்திலிருந்து தெரிந்து கொள்ளலாம் நம் குழந்தை தன்மை நம்மை விட்டு எங்கோ சென்றுவிட்டதை....

Unknown said...

சந்தோஷத்திற்கு விலை பேச ஆரம்பித்திலிருந்து தெரிந்து கொள்ளலாம் நம் குழந்தை தன்மை நம்மை விட்டு எங்கோ சென்றுவிட்டதை....