Showing posts with label ஈழப்படுகொலை. Show all posts
Showing posts with label ஈழப்படுகொலை. Show all posts

May 18, 2012

ஜெயமோகன், நீங்க நல்லா வருவீங்க பாஸ்






//இந்திய அமைதிப்படைக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட உக்கிரமான பொய்ப்பிரச்சாரம் பற்றிய கசப்புதான் பின்னர் பேரழிவின் கடைசிக்கணங்களில் இந்தியா தலையிடவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தபோது அதை ராணுவமோ இந்திய ஊடகமோ பொதுமக்களோ ஆதரிக்காமலானதற்குக் காரணம்.//

இலங்கை சென்ற அமைதிப் படையைப் புனிதப்படுத்த முனைந்ததில் இறுதியாக, எழுத்தாளர் ஜெயமோகன் சமீபத்தில் வெளிப்படுத்தியிருந்த உன்னதமான ஒரு கண்டுபிடிப்பு

இதைப் படித்தவுடனே பிதாமகன் படத்தில் ஒரு காட்சியில் லைலா “ லூசாப்பா நீ” என்று கேட்பது போல் “லூசா பாஸ் நீங்க” என்று கேட்கவே தோன்றியது.

ஒரு படைப்பாளனுக்கான கர்வத்தை வாசகனே தீர்மானிக்கிறான் என்பதை மீண்டும் மீண்டும் படைப்பாளன் நிரூபிப்பது நமது சமகால அவலம் என்பதில் மறுப்பேதுமில்லை.

அந்த கட்டுரையில், மேலே குறிப்பிட்ட கடைசிப் பத்தியைப் படித்த போது சிரிப்பும், ”அய்ய்ய்ய்யே” என்ற உணர்வுமே வந்தது.

//இந்திய அமைதிப்படைக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட உக்கிரமான பொய்ப்பிரச்சாரம் பற்றிய கசப்புதான்//


அமைதிப்படை அக்மார்க் நல்லவங்களாகவே ஜெயமோகனுக்கும், பக்தர்களுக்கும், தேச பக்தி (!) மிகுந்தோருக்கும் இருந்துவிட்டே போகட்டும். அக்மார்க் நல்லவங்களான அமைதிப் படைக்கு எதிராக ஊடகங்களும், புலிகளும், புலி ஆதரவானவர்களும் கட்டவிழ்த்துவிட்ட (அவர் சொல்லும்) பொய்பிரச்சாரம் மட்டும்தான் இறுதி பேரழிவில் இந்திய ராணுவத்தை நவதுவாரங்களை அடைத்து வைத்துக்கொண்டு அமைதி காக்க வைத்ததா?

கோரப்பசியில் திரிந்த இந்திய அரசியலின் கீழ் இயங்கும் ராணுவம் தன்னிச்சையாக என்ன செய்திட முடியும்.

”இந்திய ராணுவம் ஆயுதம் கொடுக்கவில்லை, நேரடியாக வீரர்களை அனுப்பவில்லை, ஆனால் இறுதிக்கட்டப் போரில் அனைத்து தொழில்நுட்ப உதவிகளையும், ரேடார் உட்பட உதவி புரிந்தது. இந்திய உதவியில்லாமல் இலங்கையால் எதும் செய்திருக்க முடியாது” என்று சொன்னோர், புலிகளோ, புலிகளின் ஆதரவாளர்களோ இல்லை. நீண்ட வருடங்களாக ஐ.நா சபையின் சார்பில், இலங்கையில் தங்கி கன்னிவெடி அகற்றும் பணியில் இருக்கும் இந்திய ராணுவத்தைச் சார்ந்த வீரர்கள்தான். ஓமந்தை அருகே 2010ல் நான் நேரிடையாகச் சந்தித்து பேசும்போது அவர்கள் பகிர்ந்துகொண்ட உண்மை இது. இன்றும் கூட அவர்கள் அங்கே, அதே பணியில்தான் இருக்கின்றார்கள் என நம்புகிறேன். அவசியப்படின் ஜெயமோகன் ஒரு எட்டு போய் அவர்களைச் சந்தித்துவிட்டு வரலாம், நன்றாக சோறாக்கி, பருப்பு கொழம்பு வைத்து சோறு போட்டார்கள், இப்போதும் போடுவார்கள் என்றே நினைக்கின்றேன்.


//பின்னர் பேரழிவின் கடைசிக்கணங்களில் இந்தியா தலையிடவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தபோது அதை ராணுவமோ இந்திய ஊடகமோ பொதுமக்களோ ஆதரிக்காமலானதற்குக் காரணம்//

தமிழகம் தவிர்த்து ஏனையோருக்கு ஈழத்தமிழன் எந்த வித தொப்புள் கொடி உறவும் இல்லாதபோது, இந்தியாவில் நடக்கும் அக்கிரமங்களை கண்டும் காணாமல் போகும் இந்தியன், ஈழத்து சனங்கள் குறித்து பொங்க வேண்டிய அவசியம் என்ன?

இந்தியா தலையிட வேண்டும் என்று கோரிக்கை எழுந்தபோது, ராஜீவ் மரணத்துக்கான பழிவாங்கலாக, புலிகளின் அழிவை ரசித்துக் காத்திருந்த இந்திய அரசியலுக்கு போரை நிறுத்தி மக்களை / புலிகளைக் காப்பதில் என்ன அவசியம் இருந்துவிடப்போகிறது. அந்த அரசின் கீழ் இயங்கும் இந்திய ராணுவம் என்ன சாகசத்தை செய்துவிடப்போகிறது.

//இந்திய ஊடகமோ//
ஊடக நேர்மை மேல் ஜெயமோகன் வைத்திருக்கும் அலாதியான நம்பிக்கைக்கு ஒரு பெரிய சல்யூட், அன்னா ஹசாரே உண்ணாவிரதம் vs  ஐரோம் ஷர்மிளா உண்ணாவிரதம் குறித்து ஊடகத்தின் வியாபாரத்தை, இதோ இப்பத்தானே பார்த்தோம்.

//பொதுமக்களோ ஆதரிக்காமலானதற்கு//
பொதுமக்கள்னா யாரு? ஜெயமோகனின் வாசகர்களா?  தமிழர்களா? காஷ்மீர், அஸ்ஸாம் வரை இருக்கும் இந்தியர்களா? ராஜீவைக் கொன்னது புலிகள் எனும் பரப்புரை இருக்கும்போது தமிழன் தவிர்த்து, ஈழத்தில் செத்த தமிழன் / புலிகள் மேல், இந்தியனுக்கு என்ன அக்கறை வேத்து வடியப்போகுது


இறுதிக்கட்டப் போரின் போது மத்திய, மாநில அரசாங்கம் செய்த பசப்புகளும், கயமைத்தனங்களும், இறையாண்மை அச்சுறுத்தல்களும்தான் மக்களை மௌனிக்கச் செய்ததே தவிர, அமைதிப் படையை இழித்ததற்கான அறச்சீற்றம் அல்லவே. 

ஜெயமோகனின் கட்டுரை குறித்து ஜெயமோகனுக்கு நெருக்கமான ஒரு ஈரோட்டு நண்பரிடம் பேசும்போது, ”இது ஜெமோக்கு தேவையில்லாத வேலைங்க, எதோ திட்டத்தோட, நோக்கத்தோட செயல்படுற மாதிரி இருக்குங்க” என்றார் கடும் வருத்தத்தோடு. ஜெயமோகன் எழுத்தில் நேர்மையும், அறமும் இருக்க வேண்டும் என எப்போதும் விரும்பும் நபரும் கூட அவர்.


பிடித்த எழுத்தாளர் என்பதற்காக, அவர் எதை எழுதினாலும் கொண்டாட ஆள் இருக்கும்வரை ”ஜெயமோகன், நீங்க நல்லா வருவீங்க பாஸ்”! என்று மட்டும் சொல்லத்தோன்றுகிறது,

-0-

விதைக்கப்படும் துயரங்கள்

  நமக்கு வாழ்க்கை மீதிருக்கும் காதல் அலாதியானது. செய்யும் அத்தனையும் அதற்கானதுதான்.  உண்பது, உடுத்துவது, உழைப்பது, உறங்குவது எனும் அடிப்படைத...