கீச்சுகள் தொகுப்பு - 63காய்ந்துதிர்ந்த இலையில் தேங்கியிருக்கும் வெயிலை வருடிக் கொண்டிருக்கிறேன்-

 "நல்லதோர் வீணை செய்து" என்று படிக்கையில் வீணை, இசை என்பதை விட்டு அதை நலங்கெடப் புழுதியில்எனத் தோன்றினால் நம்ம டிசைன் அப்படினு அர்த்தம்!

-

புத்தன் சொன்னதாகப் பகிரப்படுவதை புத்தனின் ஆவியும், கலாம் சொன்னதாகப் பகிரப்படுவதை கலாமின் ஆவியும் வாசித்திடாதவரை ஆவிகளுக்கு ஆபத்தில்லை!

-

அவர் தனக்கு மிகப்பிடித்த மனிதர் குறித்து குற்றப்பத்திரிக்கை வாசிக்கையில், என்னைப் பிடிக்கும் என்போர் குறித்து யோசித்துக் கொண்டிருக்கிறேன்!

-

ஹோண்டா ப்ளெஸர்க்கு 'கிக்கர்' டிசைன் பண்ணினவனைத் தெரிஞ்சா சொல்லுங்க.... நாலு மிதி மிதிச்சு கிக்கர் எப்படி மிதிக்கிறதுனு கத்துக்கணும்.

-


ரத்தம் குடிக்க நம்மை கொசு கடிக்குது. என்னத்துக்கு இந்த எறும்பு கடிக்குது!?

-அபத்தங்களுக்கு உதாரணம் தேவைப்படின், தேர்தல் ஆணையம் செய்யும் சிலை மறைப்பு, காசு பிடித்தல் உட்பட சில செயல்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

-

கோபம் தவறு என ஒப்புக்கொள்ள வேண்டிய சூழலில், அதற்கு வெட்கப்படுகிறவர்கள்தான் கோபம் இருக்கிற இடத்துலதான் குணம் இருக்கும்என சமாளிக்கிறார்கள்
-

பொறுமையும் உழைப்பின் ஓர் அங்கம் தான்!

-

ஒரு படைப்பு, காலம் கடந்து ஒரு விமர்சனத்தினை உருவாக்கும்போது தனக்கு புதிய சிறகுகளைப் பூட்டிக் கொள்கின்றது.

-

தலைவருங்க எதையாச்சும் சொல்லிப்புடுறாங்க.... பாவம் அதுக்கு தொண்டருங்க பரிதவிச்சு 'தம்' கட்டுற கொடுமை இருக்கே.... #ஷ்ஷப்பப்பா!

-

உறவின் ஆகச்சிறந்த அறம்...! சந்தேகிக்கத் தேவையிருக்காத இடங்களில் சந்தேகிக்காமல் இருப்பது!

-

இந்தச் சந்தன நிற இரவில் பெயரறியாப் பறவையொன்று தன்வழியில் மொழிபெயர்ப்பதை பிரியமெனக் கொள்கிறேன்.

-

ஒரு நகரம், நரகமாய் மாறுவதற்கான அடையாளங்களில் ஒன்று ஞாயிற்றுக்கிழமைகளில் கூட நகரப் பேருந்துகள் பிதுங்கி வழிவதுதான்!

-

எதையும் மிக எளிதில் வைரல் ஆக்கும் வாட்சப்’, ஒரு மிகக் கூரிய கத்தி என்பதையும் மனதில் கொள்ளுங்கள்.

-

எல்லோரையும் திருப்தி செய்ய முடியாதுஎனும் ஞானம்தான் அவ்வப்போது மிகப்பெரிய விடுதலையைத் தருகின்றது

-

பிள்ளைகளுக்கு உணவு தரும்போது "மொத வாயி சாப்ட்டு பாருங்க" என்பதை (பரிசோதனை எலியோ என்ற நிஜம் சுடும் என்பதால்) பாசத்தின் மொழியாகப் பாருங்கள்.

-

தென்னைமரத் தோப்புகளை விட டாஸ்மாக் கடைகள் குறைவு. ஆனால் மது விற்பனையைவிட இளநீர் விற்பனை மிகமிகக் குறைவு!

-

ஒவ்வொரு மருத்துவமனையும் சிலருக்கு நெகிழ்ச்சியான நினைவுகளையும், சிலருக்கு கசப்பான நினைவுகளையும் தருகின்றது

-

முத்தமிட்டுக்கொள்ளும் அந்த இருவர் யாரோ, எவரோ! அறிவு, புத்தி இன்னபிற கழட்டி வச்சிட்டு சிறு புன்னகையோடு கடக்கும் பக்குவம் இருந்தால் வாழ்வு இனிது.

-

நான் செய்கிறேன்முழு ஒப்புக்கொள்ளலாகக் கருதலாம். செய்ய முயற்சி செய்கிறேன்திருப்தி செய்யும் பதிலாக இருக்கலாம்

-

கொடுப்பவருக்கும் பெறுபவருக்கும் அலைவரிசை பொருந்தினால் போதும்! அது பூனை மீது செலுத்தும் அன்பேயெனினும் கூட!

-

தூரத்திலிருந்து பார்க்க பெரும் பிரச்சனையாகத்தான் தெரிகிறது. அருகில் சென்று கூர்ந்து நோக்குகையில் அது ஏதோ ஒன்றின் நிழலெனப் புரிகிறது!

-

இலக்குகள் பல தருணங்களில் அவர்களுக்கானதாக மட்டும் இருப்பதில்லை. உடனிருந்து பல வகைகளில் தியாகம் செய்திருப்பவர்களுக்குமானதாகவும் இருக்கும்!

-