மூப்பெய்தும் இரவு உறங்க அழைக்கிறது
ஒரு மடியின் கதகதப்பு வேண்டுமாயிருக்கிறது
புடவையில் பழமையின் வாசனை இருக்கவேண்டும்
மெல்லத் தலை கோதும் விரல்கள்
முதிர்ந்ததாய் சற்று முடிச்சிட்டதாய்
இருத்தல் பிடித்தம்
வீசும் சொற்களில் வெற்றிலையும்
வாசனைச் சுண்ணாம்பும் கொட்டைப் பாக்கும்
கலந்த ஒரு வாசனை வேண்டும்
இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமென்றால்
அது ஆயாவின் பிரியமாகவும்
அம்மாயியின் வாசனையாகவும் இருத்தல் போதும்!
கனவிலும் கூடுதல் அன்பாய்
இருக்கப் பிரியப்படுகிறேன்!
-
Subscribe to:
Post Comments (Atom)
விதைக்கப்படும் துயரங்கள்
நமக்கு வாழ்க்கை மீதிருக்கும் காதல் அலாதியானது. செய்யும் அத்தனையும் அதற்கானதுதான். உண்பது, உடுத்துவது, உழைப்பது, உறங்குவது எனும் அடிப்படைத...

-
வெயில் விழுதுகளாய் விழுந்து கொண்டிருக்கும் நடு மதிய நேரத்தில், கொழும்பு புறக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந...
-
அவர் அதுவரை என் பார்வையில் பட்டதில்லை. ஒருவேளை பட்டிருக்கலாம், நான் அவரை அடையாளப்படுத்தி மனதில் பதிந்துகொள்ளவில்லை. நடைபயிற்சியில் திரும்பி ...
-
வலையுலக வாழ்வில் மிக நெகிழ்ச்சியான நிகழ்வு இன்று இனிதே நிறைவேறியது. சென்ற ஆண்டு கொஞ்சம் ஆசையோடு நடத்திய பதிவர் சங்கமம் கொடுத்த உற்சாகம் எங்க...
3 comments:
அருமை
உண்மைதான் அந்த மடிக்கும் ,தலைவருடலுக்கும் மனம் ஏங்குகின்றது..
நேசம் சொல்லும் அருமையான கவிதை அண்ணா....
அந்த மடிக்கும்... தலை வருடும் கைகளுக்கும் இன்னும் கொடுப்பினை இருந்தும் வாழ்க்கை ஓட்டத்தில் தூர தேசத்தில்... மனம் ஏங்குகிறது அண்ணா...
Post a Comment