கீச்சுகள் தொகுப்பு - 58



வழங்கப்பட்ட வாழ்க்கையில் எந்த மாற்றமும் இல்லாமல், சகித்துக்கொண்டு நாட்களை நகர்த்துதலைவாழ்தல்என்பதைவிடபிழைத்தல்என்றே அழைக்கலாம்.

-



காமம் நிதர்சனமானது. வெகு இயல்பானது. வெகு அழகானதும் கூட. ஆனால் அது ஒருபோதும் பலாத்காரத்தில் கிடைத்துவிடாது 


-

பெண் பைலட்கள் மெட்ரோவை அங்கு இயக்கும் அதே நேரத்தில், இங்கே ஒரு பெண் தரையை கால்களால் தேய்த்தவாறு ஸ்கூட்டியை நிறுத்த முயன்றுகொண்டிருக்கிறார

-

கனமானது... கூடுதல் மௌனம் கொண்டது... கவிதைத்தனம் பூசியது... அமைதியானதும் கூட... ஞாயிறு இரவுகள்!

-

தமிழ்நாடு ஸ்டேட் மார்கெட்டிங் கார்ப்ரேசன்போறேனு சொன்னாகெத்தாவும், அதையே சுருக்கிச்சொன்னா செத்த எலி போலவும் பார்ப்பதுதான் உலகின் தன்ம

-

ஊறுகாய்னு சொன்னவுடனே என்ன நினைவுக்கு வருதுனு ஒரு காலேஜ்ல கேட்டப்போ, பொண்ணுங்க தயிர்சாதம்னும், பசங்க சரக்குனும் கோரஸா சொல்றாங்க!

-

சிறுவயது குழந்தைத்தனம் நம்மிடம் எப்போதும் இருக்கத்தான் செய்கிறது. நாம்தான் முதிர்ந்தவர்களைப்போல் சதா நடித்துக் கொண்டேயிருக்கிறோம்.

-

வாழ்க்கையை விரும்பியவண்ணம் மாற்றிக் கொள்ளும் உரிமை, வாய்ப்பு அனைவருக்குமே பொது. அதற்குத் தேவையானது சரியான முடிவு, உழைப்பு & விடாமுயற்சி!

-

வேலை செய்யாத நாட்கள் தர்ற அலுப்புக்கு, எதாச்சும் வேலையை இழுத்துப்போட்டு செய்து களைத்துப்போதல் நலம்!

-

காலம் ஏற்படுத்தும் காயங்களுக்கு காலமே மருந்திடும்!

-

பரோட்டா மாஸ்டருக்கு 18000 சம்பளமானு விளம்பரத்தைப் பகிர்வதில் வயித்தெரிச்சல் இருக்கலாம். அதை வாங்க பரோட்டா மாஸ்டருக்கு உடல் முழுக்க எரியும

-

சீக்கிரம் சரியாயிடும்என்பதுதான் உலகின் ஆகச்சிறந்த, அழகிய, நல்லபொய்”!

-

ப்ளாஸ்டிக் எதிர்ப்பு பேரணியைஃப்ளெக்ஸ்பேனர் பிடித்தபடி நடத்தும் அவசரச் சமூகம் இதுவாகத்தான் இருக்கும்!

-

உறவினர் வருகையில் குதூகலமூட்டுபவை அவர்கள் வாங்கிவரும் பலகாரம், ரொட்டி மற்றும் இடைவிடாது விழும் அவர்கள் வீட்டுக் கதைகள்
 
-

வாழ்க்கையில் நம்மோடு இசைவாக சிலரும், முறுக்கிக்கொண்டு சிலரும் இருப்பார்கள். நம் வாழ்க்கையை நயமாக நடத்த யார் தேவையெனும் தெளிவு போதும்!

-

சிக்னலில் சிவப்பு தீரும் முன் சீறுபவர்களை, பச்சை தீரும்போது பறப்பவர்களை உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தினால் என்ன சொல்வார்கள்!?

-

எல்லாவிதங்களிலும், எல்லோரையும் திருப்தி செய்யும் வகையிலான நட்பை எப்போதும் பேண முடியாது.

-

நம் நேரத்தை மற்றவர்கள் களவாடுவதைவிட, தெரிந்தே நாம் வீணடிப்பதுதான் அதிகம்!

-

பயணக்களைப்பில் எங்கிருக்கிறோம் என்பது தெரியாமல் தூங்கி, விழிக்கும்போதுஎங்கே இருக்கோம்என நொடிப்பொழுது தடுமாறுவது எத்தனை அழகிய சுவாரஸ்யம

-
போட்டியாளன் வேறு, எதிரி வேறு!

-

பிள்ளைகள் தாயிடம் கொஞ்சம் தந்தைமையை எதிர்பார்ப்பதைவிட, தந்தையிடம் கொஞ்சம் கூடுதலாய் தாய்மையை எதிர்பார்க்கிறார்கள்

-

'கறுத்த' மேகம் தான் மழையாய்ப் பொழிகிறது!

-

கோடை மழை என்பது வராத கடன் வர்றதுக்குச் சமம்!

-



மனிதன் தன் கீழ்மைகளை தனக்குள்ளும், வெளியிலும் வெளிப்படுத்தும் நேரத்தை வேண்டுமானால் கெட்ட நேரம் எனப் பெயரிடலாம்!

-

யாரேனும் சிக்கலில் இருக்கும்போதுஎல்லாம் சரியாகிடும்எனும் ஆறுதலில், சரியாகாவிடில் பழகிவிடும் எனும் நம்பிக்கையும் அடங்கியிருக்கிறது! ;)

-

நாளும் கிழமையும் மறந்துபோகும் அளவுக்கு பரபரப்பாய் இருப்பதில் இருக்கும் கூடுதல் வசதி சிலபல கவலைகளும் மறந்துபோவதுதான் :)

-

ஆண் நண்பர்களுடனான வெளியூர் பயணங்களில் அஞ்சுவதே அதிர வைக்கும் குறட்டைக்குத்தான்! பி.கு : கோக்குமாக்கான கேள்விகளுக்கு நிர்வாகம் பதில் தராத

-

2 comments:

Durga Karthik. said...

குறட்டை உண்மை தான்.வீட்டிற்கு வரும் ஆண் உறவினர்கள் என்றால் கட்டில், குளிர் சாதனம் என்று அனைத்தையுமே தியாகம் செய்து விடுகிறார்கள் நம்ம வீட்டிலே.

Unknown said...

மரம் வளர்ப்போம் என்று காகித பதாகை ஏந்தி செல்வதும் நம் சமூகத்தில் தான்