சுடுகாட்டுக்குப் போகும் வழி
பூவரச மரத்தில்தான்
செத்துப்போனான் கோகுல்
அம்மாவின் உழைப்பறிந்த
அப்பா இல்லாப் பிள்ளை
வெளிக்கிருக்கப் போன
முத்தாயி பாட்டி சத்தத்தில்
ஊரே ஓடிப்பார்த்திருக்கிறது
அறுத்துப்போட்டபோது
அடிநெஞ்சு கதகதத்ததாம்
மரத்தடி வரப்பிலிருந்து
பள்ளத்தில் தொங்கியதாய்ப்
பேசிக்கொண்டார்கள்
ஆடோட்டிப் போய் வந்த
கோகுலம்மாவுக்கு அடிவயிறெல்லாம்
அமிலத்தில் வெந்தது
பத்தாவது பெயிலாயிடும்
பயமென பக்கத்து வீடும்
அம்மாகாரி திட்டுவதாலெனும்
அப்பா வழியுறவுகளும்
ஒரு தலையாய் லதாவைக்
காதலித்ததாலெனும்
லதாவைக் காதலிப்போரும்
பேசிப்பேசி கலைந்ததொரு தினத்தில்
ஆடு கட்ட நிழலுக்கென
அக்கம் பக்கம் நினைக்க
அவனுக்கொரு ஊஞ்சல் கட்டவென
வாசலில் ஒரு பூவரசஞ்செடி நட்டு
நீரூற்றினாள் கோகுலம்மா
எதிர்வீட்டு மெக்கானிக் கனவில் மட்டும்
ஒரே நாளில் வளர்ந்து கிளைத்த
பூவரசுக் கிளையில்
தனக்கெனத் தொங்கும்
தூக்குக் கயிறொன்று தெரிந்தது!
-
8 comments:
கதிர்.. கவிதையும் படமும் ஒரு வித கலக்கத்த ஏற்படுத்துது.
கடைசி வரி உண்மையாய் இல்லாது போகட்டும்
வணக்கம்,
நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
www.Nikandu.com
நிகண்டு.காம்
திக்கு தெரியாத...துக்கக் கயிறு .
வணக்கம்,
நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
www.Nikandu.com
நிகண்டு.காம்
துக்கம்....
அன்பின் கதிர் - இடமாறு தோற்றப் பிழை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
கவிதையின் கரு மனதில் ஒரு அழுத்தத்தை கொடுக்குது...தலைப்பு அசத்தல்.
Post a Comment