லட்டு, ஜிலேபி
அல்லது
சர்க்கரையையேனும்
தேடி வந்திருந்த
எறும்புக் கூட்டமொன்று
வேறு வழியின்றி
ராகிவடை மேல்
மொய்த்துக் கொண்டிருந்தது
கொஞ்சம் சர்க்கரையை
கோடை மழைபோல்
வீசிவிட்டு வந்திருக்கிறேன்
வறுமைக்கோடு
கரைந்தழியுமென
ஒரு கவிதையெழுதும்
விருப்பத்தோடு!
7 comments:
அருமை.
ஆதங்கத்தில் எழுதப்பட்ட கவிதை அருமை.
மிக அருமை..விருப்பமும்.
Nice
தூவிய சர்க்கரையும்
துவண்டு போகும்
தூவியவனின் வறுமை கணக்கின்
துயரம் கேட்டால்...
ம்ம்....விருப்பம் நிறைவேரட்டும்..
Post a Comment