பகலின் மூப்பில்
தீர்ந்துபோகும்
ஒளிக்குப் பதிலாக
ஒரு சிரிப்பையும்
விரல் பிணைப்பைப் பாலமாகவும்
வருடலைக் கவிதையாகவும்
அழுகையை மொழியாகவும்
முத்தத்தைப் போர்களாகவும்
உணரப் பழக்கி விட்டிருக்கிறாய்
விடியற்
தருணப் படுக்கையில்
இடமும் வலமும்
தேடும் கையில் படர்ந்திட
எப்போதும்
ஈர
நினைவுகளை
வைத்திருக்கிறாய்
ஒற்றைச் சொல்லில்
தாகம்
தணிக்கவும்
நீச்சலடிக்கவும்மூழ்கடிக்கவும்
கற்பித்திருக்கிறாய்
ரொம்பப் பிடித்த
ஏதோ ஒரு நொடியில்தான்
நீயும் நானும்
அடைந்திருக்கலாம்
தொலைந்துமிருக்கலாம்
ஆமாம்…
அது எந்த
நொடி!?
-
9 comments:
Super
nice
Superb.. really nice.. people like me remember every special min..ரொம்பப் பிடித்த
ஏதோ ஒரு நொடியில்தான்
நீயும் நானும்
அடைந்திருக்கலாம்
தொலைந்துமிருக்கலாம்...
Sema வரிகள்.
அருமை சார்.
ஒரு சொல்லின் அசல் வலிமையை காதல் உணர்த்திவிடும்....
அந்த நொடி பொக்கிஷம்தான்...அழகு கவிதை
ஒற்றைச்சொல் !
தேவதைகணம் !!
கதிரே! ... இமைக்காமல் படிக்க வைக்கிறாய் .. இந்த நொடிப்பொழுது பயன் பெற்றது. :-)
தாபம்
Post a Comment