நகரத்தின்
மையப்பரபரப்பில்
நாட்கள்
பல கழித்து
கண்டேன்
ஒரு காகத்தை
கசகசக்கும்
மதியத்தில்!
சலசலப்புகளைப்
புறந்தள்ளி
செத்துப்போன
ஒரு எலியின்
உப்பிய
வயிற்றை குறிவைத்து
கூர்அலகு
பாய்ச்சிக் கொண்டிருந்தது!
உணவு
கிடைத்தால்
உடனே
கரைந்தழைக்கும் காக்கை
என
எப்போதோ படித்தது
நினைவுக்குள்
கொத்தியது
ஒற்றைக்
காகமாய்
உண்டு
கொண்டிருந்தது
கரையவுமில்லை
கத்தவுமில்லை
கத்தவுமில்லை
கரைந்தழைக்க
நகரத்தில்
காக்கைகள் இல்லாமலுமிருக்கலாம்
காக்கைகள் இல்லாமலுமிருக்கலாம்
கரைந்தழைக்கும்
குணம்
நகரத்தில்
கரைந்தும் போயிருக்கலாம்!
_
கல்கி
(26.01.14) இதழில் வெளியான கவிதை.
நன்றி : கல்கி
நன்றி : கல்கி
6 comments:
அன்பின் கதிர் - கவிதை அருமை -
//
கரைந்தழைக்க நகரத்தில்
காக்கைகள் இல்லாமலுமிருக்கலாம்
கரைந்தழைக்கும் குணம்
நகரத்தில் கரைந்தும் போயிருக்கலாம்!
//
இரண்டுமே உண்மையாகத்தான் படுகிறது - நன்று நன்று கதிர் - நல்வாழ்த்துகள் கதிர் - நட்புடன் சீனா
ஒற்றுமையை காகத்திடமிருந்து நாம் கற்றுக் (கொண்டதைப் போல...?) கொள்ள வேண்டும் என்பதைப் போல, அதுவும் நம்மிடமிருந்து கற்றுக் கொண்டது போல...!
வாழ்த்துக்கள்...
நல்ல கவிதை.
அதற்கான ஓவியமும் அருமை.
வாழ்த்துகள்!
அருமையான கவிதை. நகரத்து மாந்தரைப் பார்த்துக் காக்கையும் சுயநலமியானதுதான் சோகம்.
குடியரசு தின நல்வாழ்த்துக்கள்...
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_26.html) சென்று பார்க்கவும்... நன்றி...
Nice lines..!!
Post a Comment