மீட்ட வாராயோ...!






நெரிசலற்ற பேருந்தின்
இருக்கை முழுக்க
கால்நீட்டிய
சன்னலோர
நீள் பயணங்களிலும்…

கடைசிப் பேருந்தைத்
தவறவிட்டு
எட்டி நடைபோடும்
நிலவு பூத்த 
நிசிப்பொழுது நடைகளிலும்

ஒற்றையடிப் பாதையில்
எதிர்காற்றில் மூச்சுவாங்க
ஓங்கி சைக்கிள் மிதிக்கும்
அடரிரவுத் தருணங்களிலும்

நடுத்தர விடுதியின்
நைந்த மெத்தையின்
உறக்கம் பிணையாத
வெளுத்த இரவுகளிலும்

முறுக்கித் தளரவும்
நினைத்துச் சுவைக்கவும்
தேவையாய் இருக்கிறது
இசை வழியும்
காதலின்
எத்தனையோ ராகங்கள்!

-

10 comments:

thamilarasi said...

CLASS

everestdurai said...

அருமை கதிர்

everestdurai said...

அருமை கதிர்

Unknown said...

Super sir

காமராஜ் said...

ஆஹா...
அழகுக்கவிதை

'பரிவை' சே.குமார் said...

அருமையான பகிர்வு அண்ணா...
கவிதை அருமை...

Anonymous said...

சில ச்மயம் இசை நம்மை மீட்டெடுக்குது என்பது உண்மைதான். தலைப்பும் கவிதையும் அருமை.

Anonymous said...
This comment has been removed by the author.
Anonymous said...
This comment has been removed by the author.
Unknown said...

நம்மை மீட்டெடுக்கும் விந்தையும் செய்வது உண்டு..