இறுதியாய் நானிட்ட
முற்றுப்புள்ளிக்குள்
முற்றுப்புள்ளிக்குள்
புதைந்த வார்த்தைகளுக்கு
கொஞ்சம் பூக்கள்
கொஞ்சம் பூக்கள்
தூவிச் செல்லுங்கள்!
*
உள்ளங்கையில்
ஏந்தியிருக்கும்
கல்
விரலிடுக்கில்
வழிந்தோடும் நீரால்
செய்யப்பட்டிருக்காலம்!
*
வலிக்கட்டும்
வலிக்கு
பிடித்திருக்கும் வரை
வலிக்கு வலிக்கும்வரை
வலியை நோக்குவதைத் தவிர
திட்டமேதுமில்லை
*
3 comments:
மூன்றும் வெகு அருமை!!!
முத்துக்கள்.
உங்க கையிலே இருக்கபிடிச்சுருக்கலாம் அந்த கல்லுக்கு...
Post a Comment