இரவு







இரவின் அழுக்கை

விடியவிடிய வெளுத்ததில்

வெளுக்கிறது கீழ்வானம்



-



நீண்டு பயணிக்கும் இரவு

தான் விரும்பும் ஒரு கணத்தில்

பகல்மீது தடம் புரளலாம்



-



இரவில் நனையும் தினம்

பகலில் காயும்

வேறொன்றும் புதிதில்லை



-



ஏகாந்தமாய்

விளையும் இரவில்
எவர் பசி தீரும்



-


6 comments:

Prapavi said...

Wonderful Kathir!

Unknown said...

nyc...

ILA (a) இளா said...

எதிர் பதிவு இங்கே


http://vivasaayi.blogspot.com/2013/05/blog-post_29.html

இந்த முறை கவிதை குடி, குடித்தனமில்லாம போட்டிருக்கிறேன்

ராமலக்ஷ்மி said...

அருமை.

cheena (சீனா) said...

அன்பின் கதிர் - இரவு கவிதை அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

RAGHU said...

இப்போதெல்லாம் பகலும் நனையுது -
மக்களின் வேர்வையால் .