கீச்சுகள் - 30



கடந்த காலம் நினைவில் மிதக்கட்டும், எதிர்காலம் நோக்கி நீந்துவோம்!

-                  

தங்கம் கிராமுக்கு 8 ரூபா இறங்கினதையுமாதங்கம் விலை வீழ்ச்சினு ஃப்ளாஸ் நீயூஸ் போடுவீங்க. உங்க கடமை உணர்ச்சிக்கு அளவேயில்லையாப்பா?

-                     

ஒரு கட்டுரை எழுதனும், ஆனா எங்க ஆரம்பிச்சு எங்க முடிக்கிறதுனு தெரியலைனு புலம்பின ஒரு எழுத்தாளர்கிட்டே....

கட்டுரையோட முதல் வார்த்தையில தொடங்கி, கடைசி வார்த்தையில் முடிங்கனு சொன்னது ஒரு குத்தமா.... 

அதுக்காக போனை லொடக்னு வைக்கனுமா?

-




ஒட்டுமொத்த உலகத்தையும் ஒரு குழந்தையிடம் கண்டுவிடமுடிகிறது 

-           


தமிழ் பண்பாட்டில் காதலே இல்லை - ’விஞ்ஞானிராமதாஸ் # காமத்துப் பால் எழுதின திருவள்ளுவர் மேல ஒரு அவதூறு வழக்குப்போடு தலைவா?

-                     

ஃபேஸ்புக் என்பதை முகநூல் என மாற்றுவது மொழிப்பற்று அல்ல... மொழி வெறி. ”சோறுஎன்பதைரைஸ் / ஒயிட் ரைஸ்என மாற்றாமல் இருப்பதே மொழி ஆளுமை!

-                     

டிவி ரியல் எஸ்டேட் விளம்பரத்துல வர்ற பக்கிங்களுக்கு அங்கேயே 6x2- இடம் ஒதுக்கிடுங்க. இதுக பேசுற பொய்யை பார்க்கும்போது வயிறு எரியுது :(

-

எல்லாரிடமும் நிறைய இருக்கின்றன சொல்லவும், தவிர்க்கவும்!

-                     

படிக்காதவனைவிட படித்தவன் நல்லா சிந்திப்பானு ஏன் எதிர்பார்க்கனும். படித்தவன் படித்தவைகளில் மட்டும் சிந்திக்கலாம், படிக்காதவனுக்கு எல்லை இல்லை

-                     

புதிதாய் ஒரு உலகம் உருவாக்கி, அதற்குள் தொலைந்துபோக எல்லாருக்கும் ஆசைதான்.

-                     

வாசிப்பவர்களைவிட கவிஞர்கள் அதிகம் இருப்பது போலவே, பார்வையாளர்களைவிட அதிகமாக செய்தி தொலைக்காட்சிகள் # தமிழ்ச் சூழல்

-                     


அன்புச் சுத்தியலின் அடியில் எல்லாம் தகர்கிறது!

-                     

தப்பு செஞ்சா சாமி கண்ணைக் குத்தும்எனும் நம்பிக்கை(!) பல இடங்களில் இருந்தால் நல்லதென்றே தோன்றுகிறது!

-                     

மௌனத்திற்குள் புதையும் சொற்கள் சில நேரத்தில் உரமாகவும், பல நேரத்தில் விதைகளாவும் மாறிவிடுகின்றன.

-                     

பனங்காட்டு நரிசலசலப்புக்கு அஞ்சுமா அஞ்சாதாஎன்பதை எந்தப் பனங்காட்டு நரியிடம் நம்மாளுக கேட்டாங்கனே தெரியல!

-                     

பன்றிகளின்உணவுபன்றிகளுக்கு இழிவானதாக இருக்க முடியாது!

-                     

நண்பனிடம் நீண்ட நாட்கள் கழித்து வாய் வலிக்கப் பேசினேன், அவன் காது வலிப்பது குறித்து கவலையற்று. கரண்ட் இல்லை, காதில் வடிந்த இரத்தம் தெரியல

-

பாசமோ, பாதுகாப்போ தாராளமா என்னைய அண்ணானு கூப்பிட்டுக்குங்க, ஆனா பத்து வயசு அதிகம் இருந்துட்டு அண்ணானு கூப்பிடாதீங்க அக்காக்களே!

-

நோயைவிட நோய் குறித்த அச்சம் மனித குலத்தை ஆட்டிப்படைக்கிறது # வளர்ச்சி Vs வீக்கம்

-
உலகம் அழிந்தால் சாவது குறித்து பயமில்லை என்போருக்கு சொல்ல விரும்புவதுசாவு குறித்து பயமில்லையென்றால் நீங்கள் எப்போதே இறந்திருப்பீர்கள்

-

உலகின் ஆகக்கொடும் விளம்பரம், கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களில் பதியப்படும் பெயர்கள்!

-

கடந்து வந்திருக்கிறேன். கடந்து போக வேண்டும்!

-

எல்லா வம்பு தும்புகளுமேநாம் செய்யவேண்டிய நம் வேலைகளை விட்டுவிட்டு நாமே இழுத்துப் போட்டுக்கொள்வதுஎனும் ரகசியம் தாமதமாகவே புரிவது ஏன்?

-                      

 

எல்லாத் தவறுகளையும் சரி செய்யஒரு சரிபோதுமானதாக இல்லை. எல்லா சரிகளையும் தவறுகளாக்கிடஒரு தவறுபோதுமானதாக இருக்கின்றது!

-                     

பெரும் முயற்சியெடுத்து படிக்கும் பாடங்களை விட, சட்டென ஒரு நிகழ்வு கற்றுத்தரும் பாடம் ஒருபோதும் மறப்பதில்லை!

-                     

மலம் கிடந்தால்ஓவர் சீன் போட்டுமுகம் சுழித்துப் போவோர் உடலுக்குள்ளும் கொஞ்சம் மலம் இருக்கிறது என்பது ஏனோ புரிவதேயில்லை!

-                     

முதல்நாளே படம் பாத்து (முக்கால்வாசிக்கு) மூக்கு உடைபடுற தியாகிகளுக்கு, தேறுற படத்தை ஆறஅமர பாக்குற சோம்பேறிகள் நன்றிக் கடன்பட்டுள்ளோம்

-                     

நான் வாதம் செய்யல, விவாதம் தான் செய்றேனு சொல்லிட்டு நம் கருத்தை முன் வைத்து வாதத்தை முன்னெடுத்துச் செல்வது எளிதாக இருக்கின்றது.

-                     

எல்லாவற்றையும்சொல்லித்தான்புரியவைக்க வேண்டும், ஈடுசெய்ய வேண்டும் என்பதில்லை.

-                     

நிலாவில் காய்கறித் தோட்டம் அமைக்க சீனா திட்டம் # அப்போ, இனிமே பாட்டிமசால் வடைசுடுறதுக்கு சிரமப்பட வேண்டியதில்லை!

-                     

7 கோடி இந்தியர்களுக்கு வேலையில்லை: மத்திய அரசு # ஏழரைக் கோடி கடையிலஆட்கள் தேவைனு போர்டும் போட்டிருக்கான்.

-                     

பெற்றோர் இருக்க பிள்ளை இறந்த சோகம்குறித்து அருகிலிருக்கும் இருள் அறையில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் சிலர் தங்கள் ஆற்றாமைகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். 

ஒவ்வொருவரையும் குரல்களின் மூலம் நானே ஏதோ வடிவம் சமைக்கிறேன். ஏதேதோ நினைவுகளை மீட்டு எமனைச் சபிக்க இடைவிடாது தூண்டிக் கொண்டிருக்கிறார்கள்! :(

-
                     
பின் இரவின் மொட்டைமாடித் தனிமையில் ஏதோ ஒரு கைபேசியிலிருந்து ஏற்ற இறக்கமாய் காற்றில் மிதந்து வரும்மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்உணர்த்துகிறது சொர்க்கம் இப்படியும் இருக்கும் என்பதாய்!

-                     

மனதிடம்இது வேண்டும், இது வேண்டாம்என என்னால் தீர்மானிக்க முடிவதில்லை. சூழல் அதைத் திறம்படத் தீர்மானிக்கின்றது.

-                     



வெளியேறும் வழி தெரியாத எல்லா உள் நுழைவும் சூதாட்டமே!

-                  

எங்களை சீனாவுக்கு விரட்டுகிறார் மன்மோகன் - ரத்தன்டாடா # அவரு எங்களையும்தான் விரட்டுறாரு, ஆனா எங்கேனுதான் எங்களுக்கும் அவருக்கும் புரியல

-                     

"பெண் கொசுதான் கடிக்கும்" என்பதைக் கண்டறிந்து உலகுச் சொன்னவன், ஒரு கணவனாகத்தான் இருந்திருப்பான். :)

-                     

 
பல ஆண்டுகளுக்குப்பிறகு கேம்லின் மை பேனா பிடிக்கும் வாய்ப்பு. எளிமையென பால்பாயிண்ட் பேனாவில் தொலைத்த எழுத்தின் பழைய வடிவம் கொஞ்சம் கண்டேன்

-                     

மூளையில் 'டோபோமைன்' வேதிப்பொருள் சுரக்கும்போது ஏற்படும் கிளர்ச்சி, சந்தோசமுமே இணைய சமூகவலை தளத்தில் அடிமையாக காரணம் #தப்பு நம்முதில்ல

-                     



துரோகங்களில் தோற்பது மனிதர்கள் அல்ல. மனிதர்களை நம்பிய நம்பிக்கைதான்! 

-                 

உலகின் செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியலில் 25 வது இடத்தில்ஃபேஸ்புக் மார்க் ஜூகர்பெர்க்” # இதெல்லாம் நாங்க கடுமையா உழைச்சு போட்ட தர்மம்

-                     

நாலு ட்விட் போட்டதுல எல்லாக் கோபமும்(!) நீர்த்துப்போச்சுப்பா. இப்ப ஒரு பிரச்சனையும் இல்ல # இல்லாட்டி மட்டும் என்னத்த கிழிச்சி... தைச்சு

-                  

கர்நாடக அணைகளில் மொத்தம் எவ்வளவு தண்ணீர் உள்ளதுஎன்பதைக்கூட தெரிந்துகொள்ள கையாலாகாத வல்லரசாக இந்தியா இருப்பதில் பெருமிதம் கொள்வோம்.

-                     

என்கற்பனைக்குநிகரான ஒரு நல்லவனையோ, கெட்டவனையோ இதுவரைக் கண்டதில்லை!

-                     

அப்போ, என்னை ஏன் பெத்தீங்க?” ஒருமுறையேனும் பிள்ளைகள் கேட்காவிட்டால், பெற்றோரின் வளர்ப்பில் ஏதோ குறை இருக்கிறதென்று அர்த்தம்! :)

-                     

ஒரு அற்பக் கொசுவிடம் இருந்து தப்பிப்பதற்காக 
கொசு வத்தி, கொசு மேட், கொசு லிக்விட், கொசு பேட், கொசு வலை, ஓடோமாஸ், ஜன்னல் வலை  .......................... என எத்தனையோ பயன்படுத்திய பிறகும் 
இந்த கொசுத் தொல்ல தாங்கலடா நாராயணா # கவுண்டமணி = தீர்க்கதரிசி :))

-



ஒரு தவறான புரிதலுக்கு விநாடிப் பொழுது போதும். விளக்கம் பெற / தர ஒரு யுகம் தேவைப்படுகிறது!

-
 

வீட்டு வாசற்படி கடக்கையில் சாக்கடைக்கு முகத்தைச் சுழிப்பதில் துவங்குகிறது அந்த தினத்திற்கான சகிப்புத்தன்மை!

-                   

உன்னை நீயாகவும், என்னை நானாகவும்..... # இப்போதைக்கும் எப்போதைக்கும்! :)

-                     

மரணம் மட்டுமே ஒருவனுடைய குற்றங்களை மற(றை)க்கச்செய்து புனிதனாக்கும் என்றால்கசாப்பும் புனிதனே!

·