”கடன் பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன்” எனும் வரியை கம்பன் எழுதின அன்று
அவர் வீட்டுக் குழந்தையிடம் எதாச்சும் சில்லறைக்காசு கடன் வாங்கியிருப்பார் என்றே தோன்றுகிறது
ரெண்டு ரூவா... அதிகம் இல்ல ஜெண்டில்மேன்.... ரெண்டே ரெண்டு
ரூவா....
என் மகளிடம் எதோ அவசரத்துக்கு இரண்டு ரூபாய் சில்லறைக் காசு
கைமாத்து வாங்கிட்டேன்.
”எப்பத் தருவீங்க, உண்டியல்ல போட வெச்சிருந்த காசுப்பா அதுனு”
இன்றைக்கு மட்டுமே நாலாவது போன். அதிலும் 2 ரூபா காசு மட்டுமேதான் வேணுமாம்.
இன்னிக்கு எப்படியாவாது, கொள்ளையடித்தாவது அந்த ரெண்டு ரூவா
காசைக் கொடுத்துவிடுவது எனத் திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றேன்.
ஆனாலும் அதுவரைக்கும்
………………………………. # கடன் அன்பை வளர்க்கும்!
………………………………. # கடன் அன்பை வளர்க்கும்!
-
பொதுவாக ATMல் பணம் எடுப்பது எவ்வளவு எளிதோ அதற்கு நிகரான எதிர்செயல்
வங்கியில் பணம் செலுத்துவது. அதுவும் மிகக்குறைவான தொகையாக இருந்தால் வரும் சலிப்பு
கொடுமையானது. அதுவும் இன்னொருவரின் கணக்கில் செலுத்திட நிற்கும்போது தோன்றும் அலுப்பு
இருக்கின்றதே அது எதிரிக்கும் கூட வந்துவிடக்கூடாது.
அப்படிப்பட்ட தருணத்தில், “மாமோய் எங்கிருக்கீங்க” என வரிசையில்
நின்ற ஒருவரின் கைபேசி அலறி எல்லோரும் அவரைத் திரும்பி வித்தியாசமாகப் பார்த்த
கணத்தில் என் கைபேசி டர்ர்ர் டர்ர்ரென அதிர்ந்தது. மனைவி பெயர் ஒளிர்ந்தது.
என் முறை வருவதற்கு இன்னும் நேரம் இருக்கிறதென்பது தெரிந்ததால்,
பின்னால் நிற்பவரிடம் சைகையில் என் இடத்தை உறுதி செய்துவிட்டு வெளியில் வந்தேன்.
“ஹலோ”
”என்னங்க…. ஊட்ல ஒரே பிரச்சனைங்க”
மகள் பள்ளியிலிருந்து வந்துவிட்டாள் எனப்புரிந்தது.
“என்னாச்சு”
“இந்த தமிழ்ப் பாடத்தை யாரு கண்டுபிடிச்சாங்களோ, அவங்களையும்
திருவள்ளுவரையும் உடனே கொலை பண்ணனுமாம்”
”ஏன் என்னாச்சு”
“இன்னிக்கு பரிட்சை முடிச்சுட்டு இப்பத்தான் ஊட்டுக்குள்ளே காலு
வைக்கிறாங்க மேடம்… நாளைக்கு தமிழ் பரிட்சையாமாம்”
எனக்கும் யாரையாவது கொலை செய்யவேண்டும் போல் தோன்றியது, முதலில் என்னையே!
-
8 comments:
இவ்வ்ளோதானா???? இன்னும் எவ்வ்ளோ இருக்குப்பா!!!
எல்லா வீட்டிலும் இதே கதைதான் அண்ணா...
சுகமான தருணங்கள் இவை...
அன்பின் கதிர் - சரி சரி - மகளா இருந்தாலும் சரி - ரெண்டு ரூபாதானேன்னு நினைச்சாலும் சரி - வாங்கின கடன உடனே அடைங்க ஆமாம் - இல்லன்னா மக சார்பில கேஸ் போடுவேன் - ஆமா வங்கிக்கு மக கணக்குல 2 ரூபா கட்டத்தான் போனிங்களா ? இவ்வளவு சலிசுக்கிறீங்க - நல்வாழ்த்துகள் கதிர் - நட்புடன் சீனா
”எப்பத் தருவீங்க, உண்டியல்ல போட வெச்சிருந்த காசுப்பா அதுனு” இன்றைக்கு மட்டுமே நாலாவது போன். அதிலும் 2 ரூபா காசு மட்டுமேதான் வேணுமாம்.//
அவர்களுக்கு இரண்டு ருபாய் இரண்டு இலட்சத்துக்கு சமம்-)) “இந்த தமிழ்ப் பாடத்தை யாரு கண்டுபிடிச்சாங்களோ,-)) இங்கேயும் இதே கதைதான்-))
:))))
Ellar veetlayum nadapathu thaan...but the way it's portrayed!! it's lovely :)
Tamil valka
same.......... boat........ but bit different model..
Post a Comment