விதி வலியது


அடிக்க கூடும் கைகளுக்கிடையே
வெறும் சப்தத்தை பிரசவித்துவிட்டு
தன் மரணத்தை தள்ளிப்போடுகிறது 
பறக்கும் கொசு!

-0-

பொரி அள்ளும் பிள்ளையை
சிந்தாமல் தின்றென அதட்டும்போதே
பிதுங்கிச் சிதறியோடுகிறது 
என் விரலிடுக்கில் சில

-0-

கல்லுக்குள் ஒளிந்துகிடக்கும் தன்னை
எந்தக் கடவுளும் ஈன்றெடுப்பதில்லை
செதுக்கிப் பிரசவிக்கும் சிற்பியை 
எவரும் கடவுளாய் நினைப்பதில்லை
  
-0-

எங்கோ எதற்கோ யாரிடமோ
ஏதாவது ஒரு பொய்
உதிர்ந்துகொண்டேயிருக்கிறது
சிலநேரங்களில் நம்மிடமே நாமும்

-0-

14 comments:

'பரிவை' சே.குமார் said...

4 kavithaikalum arumai... athil 2nd KALAKKAL.

ஓலை said...

Arumai.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அழகான கவிதைத்துளிகள்...

vasu balaji said...

ஆமாங்ணா.

ராமலக்ஷ்மி said...

clever கொசு:))! அனைத்தும் நன்று:)!

அதிரைக்காரன் said...

அன்புள்ள சகோதர்/சகோதரி,

மாவட்ட அளவில் மூன்றாமிடமும், பள்ளியளவில் முதலிடமும் பெற்று +2 தேர்வில் 1171/1200 மதிப்பெண்கள் பெற்றுள்ள அரியலூரைச் சார்ந்த ஓர் ஏழை கூலித்தொழிலாளியின் மகன் ராஜவேல்,மருத்துவப் பட்டப்படிப்புக்கு அனுமதி கிடைத்தும் ஏழ்மைநிலை காரணமாக இன்னொரு கூலித்தொழிலாளியாகிக் கொண்டிருப்பதாக வந்த செய்தியைத் தொடர்ந்து,தமிழிணைய பதிவர்களைத் திரட்டி,இந்த மாணவனுக்கு உதவும் நோக்கில் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்துடன் இந்தப்பதிவை நீங்களும் மீள்பதிவாகவோ அல்லது சகவலைப்பதிவர்களுக்குப் பரிந்துரைத்தோ அந்த மாணவனின் கல்விப்பயணம் தொடர்வதற்கு நம்மால் இயன்ற முயற்சிகளை செய்வோமே!

பரிந்துரைக்க வேண்டிய சுட்டி : http://vettippechu.blogspot.com/2011/07/blog-post.html . மீள்பதிவிட முடியவில்லை எனில் உங்கள் பதிவில் நேரடியாக புதிய பதிவிட்டு அதற்கான சுட்டியை adiraiwala@gmail.com என்ற முகவரிக்கு அறியத்தரவும். இதிலும் சிரமம் இருந்தால் http://vettippechu.blogspot.com/2011/07/blog-post.html பதிவில் பின்னூட்டமிட்டு அறிந்தந்தாலும் மிக்க நன்றி.

தன்னார்வலர்களிடம் நிதியுதவி கோருவதைவிட, இத்தகைய மாணவர்களுக்கு அரசின் உதவியைப் பெற்றுக்கொடுப்பதே கவுரமாக இருக்கும் என்று கருதுகிறேன்.

மேலதிக தகவல் தேவையெனில் தயங்காமல் கேட்கவும். சாதி/மதங்கள் கடந்த இந்த உன்னதமுயற்சிக்கு உங்களின் ஒத்துழைப்பு மட்டுமே கோரப்படுகிறது. இந்த கோரிக்கையை இந்நேரம்.காம் செய்திதளமும் செய்தியாக வெளியிட்டுள்ளது.

நன்றி.

அன்புடன்,
அதிரைக்காரன்
adiraiwala@gmail.com

ஹேமா said...

சாதாரணமாக நடக்கும் விஷயங்களாக வாழ்வில் நகர்ந்துகொண்டிருந்தாலும் உற்று யோசித்தால் அதற்குள்ளும் தத்துவம் நிறைந்த்துதானிருக்கிறது !

r.v.saravanan said...

அனைத்தும் நன்று அதிலும் முதலாவது மிக நன்று கதிர்

தாராபுரத்தான் said...

கொசு விரட்டுவதை யெல்லாம் கவிதையாக்கி...எங்கேயோ பொறி தட்டுதங்கோ..

நட்புடன் ஜமால் said...

எங்கோ எதற்கோ யாரிடமோ
ஏதாவது ஒரு பொய்
உதிர்ந்துகொண்டேயிருக்கிறது
சிலநேரங்களில் நம்மிடமே நாமும்]]

நிதர்சணம்

சத்ரியன் said...

உண்மைய படிக்கும்போது..உள்ளம் குருகுருக்குதய்யா...!

ஸ்ரீராம். said...

மூன்றாவது கவர்ந்தது.

வெட்டிப்பேச்சு said...

கவிதைகள் அனைத்தும் அருமை.

வாழ்த்துக்கள்.

ரேவதி மணி said...

சிற்பியை யாரும் கடவுளாய் நினைப்பதில்லை .... சிந்திக்கதூண்டும் வார்த்தைகள்.குட்டிக்குட்டி கவிதைகள் ஆனால்பெரிய பெரிய சிந்தனைகள்.அருமை கதிர் .உங்களுக்கு மட்டும் எப்படி இது மாதிரி எல்லாம் வருகிரது?