இடமாறு தோற்றச் சரி


பின்நகர்ந்து
கரைந்த நாட்களுக்குள்
தஞ்சம் புகுந்து
கடிதம் ஒன்று எழுத ஆசை
உறை பிரித்து வாசிக்கத்தான்
ஒருவரும் இல்லை

---><---

ஊழல் ஒருபோதும்
இடமாறுவதில்லை
நிகழ்த்துவதிலும்,
குற்றம்சாட்டுவதிலும்
கட்சிகள்தான்
இடம் மாறுகின்றன!


---><---

ஓடி ஒளிந்த பிறகு
ஒவ்வொருமுறையும்
மனதிற்குள் சுடுகிறது
தவறவிட்ட
மழைத்துளிகள்

---><---

அவசரச்சிகிச்சைக்கு
அளித்த
கீழ்சாதிக்காரனின்
இரத்தத்தில் மட்டும்
மறித்துப்போகிறது
தீட்டு அணுக்கள்

---><---

அனாதை விடுதிப்
பிள்ளைக்கு
விடுமுறை நாட்கள்
வலிய திணிக்கிறது
இல்லாத குடும்பம்
குறித்த ஏக்கத்தை

---><---

20 comments:

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

//அவசரச்சிகிச்சைக்கு
அளித்த
கீழ்சாதிக்காரனின்
இரத்தத்தில் மட்டும்
மறித்துப்போகிறது
தீட்டு அணுக்கள்//

தூக்கிக் கொண்டு போய்ச் சேர்த்தவன் சிகிச்சை அளித்த டாக்டர் நர்ஸ் எல்லாரிடத்துலயும் மரித்துப் போகிறது...

முனைவர் இரா.குணசீலன் said...

ஊழல் ஒருபோதும்
இடமாறுவதில்லை
நிகழ்த்துவதிலும்,
குற்றம்சாட்டுவதிலும்
கட்சிகள்தான்
இடம் மாறுகின்றன!

நல்லாச் சொல்லீங்க..

ஓலை said...

"உறை பிரித்து வாசிக்கத்தான்
ஒருவரும் இல்லை"

அட! நாங்க இருக்கோமுல! inland லெட்டர் போஸ்ட் பண்ணுங்க ஒன்னு.

ஓலை said...

ஒவ்வொன்னும் நச் நச் ன்னு இருக்கு.
Nice.

அகல்விளக்கு said...

அனைத்தும் அருமை...

ஆனாலும் இறுதிக்கவிதை மட்டும்
என்னவோ செய்கிறது...

vasu balaji said...

பாட்டம் டு டாப் டாப்.

*இயற்கை ராஜி* said...

கடிதம் ஒன்று எழுத ஆசை//

வேணாம்ன்னா ரிஸ்க்..அப்புறம் அதை அண்ணி படிச்சுட்டாங்கன்னா, சோத்துக்குத் தாளம் போடணும்:)

*இயற்கை ராஜி* said...

சுடுகிறதுதவறவிட்டமழைத்துளிகள்//


ம்ம்.. மனதினுள் ஒரு மழைக்காலமோ.... இருக்கட்டும்..:‍)

*இயற்கை ராஜி* said...

"இடமாறு தோற்றச் சரி"//

ஓ..அந்த ரயில் பார்ட்டி இடத்தை மாத்தி உக்காருதோ? :-))

*இயற்கை ராஜி* said...

இடமாறு தோற்றச் சரி"//இதன் தொடர்ச்சி தலை ஆருரன் எழுதனா நல்லாருக்குன்னு நெனைக்கறேன்.. நீங்க என்ன சொல்றீங்க‌:-)))

*இயற்கை ராஜி* said...

ஊழல் /

ம்க்கும்....மேயர்ன்னு சொன்ன உடனே நெனப்பு எங்க போகுது பாரேன்

*இயற்கை ராஜி* said...

அவசரச்சிகிச்சைக்குஅளித்தகீழ்சாதிக்காரனின்இரத்தத்தில் மட்டும்மறித்துப்போகிறதுதீட்டு அணுக்கள்//


ரயில்ல போறப்ப கூடத்தான் யாரும் சாதி பாக்கறதில்லை..அதுக்கு ஒரு கவிதை எழுதனும்ன்னு பொறுப்பு இருக்கா:)

பனித்துளி சங்கர் said...

////ஊழல் ஒருபோதும்
இடமாறுவதில்லை
நிகழ்த்துவதிலும்,
குற்றம்சாட்டுவதிலும்
கட்சிகள்தான்
இடம் மாறுகின்றன!
//////

இன்னும் பலர் உணர்ந்திராத உண்மை .

ராமலக்ஷ்மி said...

அனைத்தும் அருமை.

முதலும் கடைசியும் மிகவும்..

Thenammai Lakshmanan said...

"இடமாறு தோற்றச் சரி"//

ஓ..அந்த ரயில் பார்ட்டி இடத்தை மாத்தி உக்காருதோ? :-))

ராஜி யாரு அந்த பார்ட்டி..:))

VELU.G said...

அனைத்து கவிதைகளும் அருமை

VELU.G said...

இடமாறு தோற்றம் சரியா?

*இயற்கை ராஜி* said...

@தேனம்மை மேடம்.. அதத் தனியா சொல்றேன் மேடம்..எங்க அண்ணாவ ஒரேயடியா பப்ளிக்ல டேமேஜ் ஆக்கப் பாசம் தடுக்குது

ஆ.ஞானசேகரன் said...

//ஓடி ஒளிந்த பிறகு
ஒவ்வொருமுறையும்
மனதிற்குள் சுடுகிறது
தவறவிட்ட
மழைத்துளிகள்//

அருமை

க.பாலாசி said...

தவறவிட்ட மழைத்துளிகள், தீட்டு அணுக்கள், கடிதம், அனாதை விடுதி ஒவ்வொன்றும் நச்... நல்ல கவிதைகள்..