ஈர முத்தங்களோடு



                   ஒவ்வொரு வருகையிலும்
                   உன்னை என் கண்களினூடாக
                   உயிர்க்குடுவை முழுதும்
                   வழிந்தோடும் வரை
                   வண்ணச்சொட்டுகளால்
                   நிரப்பிப் போகிறாய்

 
                   நிரப்ப மறந்த
                   தினங்களில்
                   சுற்ற மறுக்கும்
                   சுவர்க்கடிகார முட்கள்
                   இடம் பெயர்ந்து
                   ஒரு துக்கத்தின்
                   குறிப்புரையை
                   நாட்காட்டிக் காகிதத்தில்
                   செதுக்கிவிட்டுச்செல்கிறது

                   பிடிபடாமல் சட்டெனபிடிபட்ட
                   கவிதை வரிகளாய்
                   சூரியகதிர்கள் திருட மறந்த
                   இளம் பனித்துளியாய்
                   காற்றில் கலந்துவந்து
                   கட்டியணைக்கும் பூ வாசமாய்
                   ஒவ்வொரு நொடியும்
                   எனக்குள் 
                   பூத்துக்கொண்டிருக்கிறாய்

  
                   எட்டிய தொலைவுக்கு
                   தட்டிக்கொடுக்கவும்
                   எட்டும் இலக்குக்கு
                   முடுக்கிவிடவும்
                   என் பாதையின் ஓரம்
                   மைல்கற்கள் மேல்
                   ஈர முத்தங்களோடு
                   காத்துக்கிடக்கிறாய்

                   -0-

14 comments:

ஓலை said...

கவிதை அருமை கதிர்.

vasu balaji said...

யாருங்ணா அது?

*இயற்கை ராஜி* said...

ஒவ்வொரு வருகையிலும்
ட்ரீட்செலவுக்கான
உன் பயத்தை
என் காலி வயிறு
வழிந்தோடும் வரை
நீர்ச் சொட்டுகளால்
நிரப்பிப் போகிறாய்

*இயற்கை ராஜி* said...

நிரப்ப மறந்த
தினங்களில்
கத்திக் கொண்டேருக்கும்
காலி வயிற்றின் பசி
இடம்பெயர்ந்து
காலியாவதற்கான‌ குறிப்புரையை
நண்பனின் பர்ஸில்
செதுக்கிவிட்டுச் செல்கிறது

*இயற்கை ராஜி* said...

பிடிபடாமல் சட்டெனபிடிபட்ட
உன் பிறந்த நாளின் நினைவாய்

ட்ரீட் கேக்க மறந்த‌
புதிய ஹோட்டல் உணவின் சுவையாய்
காற்றில் கலந்துவந்து
தாளிக்கும் சாப்பாட்டின் வாசமாய்
ஒவ்வொரு நொடியும்
எனக்குள்
பூத்துக்கொண்டிருக்கிறாய்

*இயற்கை ராஜி* said...

எட்டிய தொலைவுக்கு
தட்டிக்கொடுக்கவும்
எட்டும் இலக்குக்கு
முடுக்கிவிடவும்
என் பாதையின் ஓரம்
மைல்கற்கள் மேல்
ட்ரீட்டுக்கான அழைப்புடன்
காத்துக்கிடக்கிறாய்

*இயற்கை ராஜி* said...

நாங்களும் எழுதுவோம் " வெறும் வயிற்றோடு " கவிதை:-))

Anonymous said...

கவித கவித நல்ல இருக்கு பாஸ்

க ரா said...

நீங்க இன்னும் யூத்துதாங்கண்னா ! :) பின்றீங்க....

Thenammai Lakshmanan said...

மைல் கல் மேல குந்தி இருக்குறது யாரு..!!

shammi's blog said...

good ..

shammi's blog said...

thenu ma'am nalla kellunga yaar athu nu...

Kumky said...

மிலிட்ரி வண்டி ட்ரைவரு டவுன் பஸ் ஓட்டினாப்பில இருக்குங்நா.....

Arul Miku Kollang Kondan Ayyanar kovilL.- said...

ஒவ்வொரு வருகையுளும்
ட்ரிட் செலவுஇல்லாமல்
மனதில் உள்ளதைமாட்டும்
ஈந்துவிட்டு செல்லும் நான்
கவி கரங்களுக்கு மணார்ந்து
சொல்வது வாழ்த்துக்கள் மட்டுமே