தூரிகை விரல்

________________________
கால்கள் இல்லாத குழந்தை
பிடறி சிலிர்த்தோடும்
குதிரையை வரைந்து
வேண்டும் இடத்துக்கெல்லாம்
பயணப்பட்டுக் கொள்கிறது


________________________

மீனை வரையச் சொன்னேன்
முதலில் தண்ணீரை வரைந்தாள்
பறவையை வரையச் சொன்னேன்
முதலில் வானத்தை வரைந்தாள்
ஏனென்று கேட்டேன்….
தண்ணியில்லாட்டி மீன் செத்துடும்
வானம் இல்லாட்டி எப்படி பறக்கும்?


33 comments:

க ரா said...

குழந்தைங்க செரியதான் யோசிக்கிறாங்க இல்ல :)

ராமலக்ஷ்மி said...

முதல் கவிதை நெகிழ்வு.

அடுத்ததில் குழந்தைக்கு சபாஷ்:)!

ராமலக்ஷ்மி said...

தலைப்பும் அருமை.

Unknown said...

அழகு.

Unknown said...

பெரியவங்க கைய காமிக்கரீங்களே, என்ன சொல்லுதுன்னு கேளுங்க அந்தக் குழந்தைகிட்ட.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

:) நல்லாருக்கு..

அமைதி அப்பா said...

நன்று.

vasu balaji said...

முதல் சூப்பர், ரெண்டாவது குறும்பு:)

தமிழ்க்காதலன் said...

கவிதைகள் கலக்கல். அருமை. நல்ல கவிதைக்கேற்ற படத்தை தேர்ந்தெடுங்கள். மிக்க நன்றி. வருகை தர ...( ithayasaaral.blogspot.com )

க.பாலாசி said...

கலக்கல்... கால்கள் இல்லாத குழந்தை மனதெங்கும் பயணப்படுக்கிறது.

VELU.G said...

//கால்கள் இல்லாத குழந்தை
பிடறி சிலிர்த்தோடும்
குதிரையை வரைந்து
வேண்டும் இடத்துக்கெல்லாம்
பயணப்பட்டுக் கொள்கிறது
//

மிக மிக அருமை

நம் எல்லோருக்கும் இது போல் பயணங்கள் இருக்கும். நம்மால் முடியாததை இந்த குதிரைகளில் தான் நிறைவேற்றுகிறோம்.

super

VELU.G said...

//கால்கள் இல்லாத குழந்தை
பிடறி சிலிர்த்தோடும்
குதிரையை வரைந்து
வேண்டும் இடத்துக்கெல்லாம்
பயணப்பட்டுக் கொள்கிறது
//

மிக மிக அருமை

நம் எல்லோருக்கும் இது போல் பயணங்கள் இருக்கும். நம்மால் முடியாததை இந்த குதிரைகளில் தான் நிறைவேற்றுகிறோம்.

super

Geetha said...

:)

பவள சங்கரி said...

இரண்டும் அழகான கவிதையாக இருந்தாலும் குறும்புதான் எனக்குப் பிடித்தது.......தலைப்பு....அழகு....

Rekha raghavan said...

இரண்டு கவிதைகளும் அருமை.

ரேகா ராகவன்.

செல்வா said...

//தண்ணியில்லாட்டி மீன் செத்துடும்
வானம் இல்லாட்டி எப்படி பறக்கும்?
///

இந்த வரிகள் கலக்கல் அண்ணா .., நல்லா இருக்கு .!!

sakthi said...

ரெண்டாவது கவிதை மிக அழகு!!!!

sakthi said...

தண்ணியில்லாட்டி மீன் செத்துடும்
வானம் இல்லாட்டி எப்படி பறக்கும்?

குட் கொஸ்டின்!!!

நேசமித்ரன் said...

கவிதை அழகு கதிர் சார் !

நல்லாருக்கு !

Kumky said...

இரண்டும் நல்லாருக்கு...

முதல் கவிதையை போலத்தான் மலையாள் கவிஞர் குன்ஞுன்னியின் கவிதைகளும் இருக்கும்...அல்லது அதைப்போலவே இது என்பதாக..

இரண்டாம் கவிதையில் ள்”க்கு பதிலாக ன்” வரைந்து பார்த்தேன் மனதில் ..கவிதை இல்லை.

குழந்தைகளின் பெண் அழகுதான் இல்லையா..?

Thamira said...

முதல் அழகு. இரண்டாவதில் கவிதை நயம் இல்லை.

பழமைபேசி said...

முதல் கவிதைக்கு உங்களுக்கு பாராட்டு!

இரண்டாவது கவிதைக்கு, சின்னம்மணிக்குப் பாராட்டு!!

priyamudanprabu said...

மிக மிக அருமை
+1

Anisha Yunus said...

//மீனை வரையச் சொன்னேன்
முதலில் தண்ணீரை வரைந்தாள்
பறவையை வரையச் சொன்னேன்
முதலில் வானத்தை வரைந்தாள்
ஏனென்று கேட்டேன்….
தண்ணியில்லாட்டி மீன் செத்துடும்
வானம் இல்லாட்டி எப்படி பறக்கும்?//

கவிதைன்னு சொல்லி ஒரு வார்த்தைல முடிக்க முடியாத விஷயம். இவர்களின் புரிதலில் நாம் மக்குதான்!!

இரண்டுமே அழகு :)

'பரிவை' சே.குமார் said...

கவிதை நல்லாருக்கு ..!

ஹேமா said...

குழந்தைகள் நிறையவே யோசிக்கிறார்கள்.நம்மைவிட புத்திசாலிகளாக வருவார்கள் !

கலகலப்ரியா said...

நல்லாருக்கு... (டெம்ப்ளேட் இல்ல..)

பழமைபேசி said...

//கலகலப்ரியா said...
நல்லாருக்கு... (டெம்ப்ளேட் இல்ல..)
//

அப்ப ஒன்னு வாங்கி குடுத்துருங்க மாப்பு!

கலகலப்ரியா said...

||பழமைபேசி said...
//கலகலப்ரியா said...
நல்லாருக்கு... (டெம்ப்ளேட் இல்ல..)
//

அப்ப ஒன்னு வாங்கி குடுத்துருங்க மாப்பு!||

அதெல்லாம் வேணாம்... அதுக்குண்டான துட்டு அனுப்பி வச்சா நானே வாங்கிக்கறேன்..

காமராஜ் said...

இப்பதான் வினோவின் வலைக்குப்போய் பிள்ளைக் கனியமுது பருகி வந்தேன், இங்கேயும்.
இருந்தும் என்ன திகட்டவா போகிறது.
அருமை, அருமை, மிக அருமை கதிர்.

பாலு மணிமாறன் said...

'முதலில்' என்ற வார்த்தகளை எடுத்து விட்டால், கவிதைக்கு இன்னும் கூடுதல், அழுத்தமும், அழகும் வந்து விடுவதாகத் தோன்றுகிறது. இது ஒரு வெளிப்பார்வைதான்...!

பாலு மணிமாறன் said...
This comment has been removed by the author.
Unknown said...

குழந்தைகளிடம் கற்றுகொள்ள எவ்வளவோ இருக்கிறது...அப்படியொரு மனம் வாய்க்கப்பெற்றவர்கள் பாக்கியசாலிகள்