இருட்டு


பழகிச் சலித்த இடமெனினும்
கோரப்பல் கூரிய நகமென
எதையாவது மனக்குகையில்
நிரப்பித்தான் வைக்கிறது
புதிதாய் புகுந்தாளும் இருள்...

மெதுவாய் பாதம் பாவி
கலைக்காமல் கைகள் துழாவி
இருளில் சுற்றும் மாயப்பிசாசை
கண்கள் தின்று தீர்க்க
கரைகிறது அச்சக்குன்று...

இருளே ஆதியும் அந்தமும்
கருவறையோ கல்லறையோ
உடனிருப்பது இருளேயெனினும்
இடைவந்த வெளிச்ச மோகம்
இருளைத் தின்று வாழ்கிறது!

______________

39 comments:

சத்ரியன் said...

//இருளே ஆதியும் அந்தமும்
கருவறையோ கல்லறையோ
உடனிருப்பது இருளேயெனினும்
இடைவந்த வெளிச்ச மோகம்
இருளைத் தின்று வாழ்கிறது//

கதிர்,

உண்மைய அழகா கவிதைப்படுத்தி இருக்கீங்க!

பிரபாகர் said...

அதுக்குள்ள முந்திகிட்டாங்கப்பா!... மொத ஆளா கமெண்ட் போடலாம்னு நினைச்சா!...

பிரபாகர்...

சத்ரியன் said...

430 பேரு கலந்துக்கிட்ட கூட்டத்துல முந்தியடிச்சி மொத வடைய கைப்பத்திட்டோம்......ல!

பிரபாகர் said...

ம்... அப்புறம், கவிதை வழக்கம்போல் இருக்கு... கலக்கலா இருக்குன்னு சொல்ல வந்தேன்...

பிரபாகர்...

பழமைபேசி said...

பாலாண்ணே... இருளில் இருந்து வெளிப்படுகிறது இந்தக் கதிர்... உங்களுக்கான நேரம் இந்த மணித்துளொயில் இருந்து துவங்குகிறது... ட்டிங்!

சத்ரியன் said...

//அதுக்குள்ள முந்திகிட்டாங்கப்பா!... மொத ஆளா கமெண்ட் போடலாம்னு நினைச்சா!...//

வலைப்பக்கம் மேய வந்து நெடு நாளாச்சி மக்கா....அதான் அடிச்சி புடிச்சி ....!

பிரபாகர் said...

இருக்கட்டும் சாரலின்பா டாட்... அடுத்த தபா பார்த்துடுவோம்...

பிரபாகர்...

சத்ரியன் said...

//பாலாண்ணே... இருளில் இருந்து வெளிப்படுகிறது இந்தக் கதிர்... //

பழமையண்ணே (!) ஆச்சரியக் குறிய சொல்ல மறந்துட்டீங்க.

பிரபாகர் said...

கதிரிடமிருந்து பிறக்கும் எல்லாக் கவிதையும் பளிச்சென (தலைப்பு ‘இருட்டு’ என்றாலும்) பிரகாசமாகத்தான் இருக்கிறது...

பிரபாகர்...

சத்ரியன் said...

//இருக்கட்டும் சாரலின்பா டாட்... அடுத்த தபா பார்த்துடுவோம்...//

நமக்குள்ள போட்டியெல்லாம் வேணாம் பிரபா! நான் இப்பவே வெலகிக்கிறேன்...!

பிரபாகர் said...

பழமையண்ணே சொல்லியும் என் ஆசானை இன்னும் காணோம்?

வாங்க ஆசான், வாங்க!...

பிரபாகர்...

பிரபாகர் said...

இல்லப்பா, பார்த்து பேசி ரொம்ப நாளாச்சே.... அதான் சும்மா!...

பிரபாகர்...

Unknown said...

அழகு!

இருளுக்கு கதிரின்(ஈரோடு) வெளிச்சம்
விலகுவதுக்கு அல்ல
அருமையை உணர்த்துவதற்கு.

Anonymous said...

//இடைவந்த வெளிச்ச மோகம்
இருளைத் தின்று வாழ்கிறது!//

மொத்த கவிதையின் மெய் பொருளை இவ்விரு வரிகள் சொல்லிவிட்டது..

vasu balaji said...

ஏனுங்ணா! படம் கரண்டு போன டாஸ்மாக் கடை கவுண்டருங்ளா#டவுட்டு

பழமைபேசி said...

//விலகுவதுக்கு //

பொருட்பிழை ராலேக்காரரே!! விலக்குவதற்கு அல்ல அப்படின்னு சொல்லோணும்!!

பிழையக் கண்டான் பொறுக்க மாட்டான் இந்தப் பழமை... பிழையக் கண்டா பொறுக்க மாட்டான் இந்தப் பழமை...பிழையக் கண்டா பொறுக்க மாட்டான் இந்தப் பழமை...

(எல்லாம் ஒரு நினைப்புதேன்... இஃகிஃகி)

vasu balaji said...

ங்கொய்யால பல்பு குடுத்த கவுஜயாச்சா! ரெம்ப பிடிச்சிருக்கு.
/கருவறையோ கல்லறையோஉடனிருப்பது இருளேயெனினும்இடைவந்த வெளிச்ச மோகம்இருளைத் தின்று வாழ்கிறது!/

இது ரொம்ப நல்லா வந்திருக்கு.

பழமைபேசி said...

//மொத்த கவிதையின் மெய் பொருளை இவ்விரு வரிகள் சொல்லிவிட்டது..
//

ஏழுதோசை... ச்சீ... எழுத்தோசைப் பதிவரே... இவ்விரு வரிகள் சொல்லிவிட்டன என்பதே சரி... வரிகள் என்பது பன்மை!!!

Unknown said...

பிழமை கண்டுபிடிக்கும் பழமையை புரிந்து
தவறு திருத்தப் படுகிறது.

பழமைபேசி said...

//Sethu said...
பிழமை கண்டுபிடிக்கும் பழமையை புரிந்து
தவறு திருத்தப் படுகிறது.

November 12, 2010 5:42 PM//

மறுபடியுமா? அவ்வ்வ்வ்......


தவறு சரி செய்யப்படலாம்...
பிழை திருத்தப்படலாம்....

ஆனாத் தவறினைத் திருத்தம் செய்யுறது எப்புடி? ஏன்? ஏன்??ஏன்???

error can be rectified; false can be corrected... you see, error can't be corrected....

ராமலக்ஷ்மி said...

//இருளே ஆதியும் அந்தமும்
கருவறையோ கல்லறையோ
உடனிருப்பது இருளேயெனினும்
இடைவந்த வெளிச்ச மோகம்
இருளைத் தின்று வாழ்கிறது!//

அழகாய் சொல்லியிருக்கிறீர்கள்!

vasu balaji said...

/பிழையக் கண்டான்/

பிழையைக் கண்டான்:)) எப்புடீஈஈஈஈ

காமராஜ் said...

நல்லா இருக்கு கதிர்.

Unknown said...

இருள்மையே இறுதி.. இருள்தான் நிஜம்..

ஆரூரன் விசுவநாதன் said...

வாழ்த்துக்கள் கதிர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

அழகா கவிதைப்படுத்தி இருக்கீங்க!

vasu balaji said...

ஆரூரன் விசுவநாதன் said...

/வாழ்த்துக்கள் கதிர்/

எதுக்கு வாழ்த்து? கோணிமூட்டைய பார்த்து பயந்தாமாதிரி இல்லாம இருட்டு ரூமுக்குள்ள பயந்து பயந்துன்னாலும் போனதுக்கா?:))

'பரிவை' சே.குமார் said...

அழகாய் சொல்லியிருக்கிறீர்கள்!

பவள சங்கரி said...

கவிதையும், கமெண்டுகளும் போட்டி போடுதே..........சூப்பரு....

Unknown said...

" வானம்பாடிகள் said...
ஆரூரன் விசுவநாதன் said...

/வாழ்த்துக்கள் கதிர்/

எதுக்கு வாழ்த்து? கோணிமூட்டைய பார்த்து பயந்தாமாதிரி இல்லாம இருட்டு ரூமுக்குள்ள பயந்து பயந்துன்னாலும் போனதுக்கா?:))"

- சார்! கோணி மூட்டையைப் பார்த்து ஆரூர் 12 மணிநேரம்.
ஈரோட்டு மாப்பு! இருட்டப் பார்த்து எத்தனை மணி நேரம்!

பாருங்க! இதுக்கு பழமை என்ன சொல்லப் போறார்னு.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

நான் ரொம்பக் கடுமையா முரண்படறேன் :)) வெளிச்சம் இல்லாட்டி வாழக்காயும் விளையாது, அதைத் தின்று சுமக்கும் கருவறை வாழ்க்கையும் விளையாது..

கவிதை நல்லா வந்திருக்கு ஆனா..

கலகலப்ரியா said...

நல்லாருக்கு..

ஹேமா said...

கதிர்...முழுக்கவிதையுமே இருள் துளைத்தெழும் வெளிச்ச வரிகள்தான் !

நிலாமதி said...

சூரியன் கதிர் கண்டு இருள் விலகுமே. அது போல் ஈரோடு கதிருக்கு இருள் தேவையா?

தாராபுரத்தான் said...

நாமும் ஒரு ஆஐர் போட்டு வைப்போம்...

செல்வா said...

//பழகிச் சலித்த இடமெனினும்
கோரப்பல் கூரிய நகமென
எதையாவது மனக்குகையில்
நிரப்பித்தான் வைக்கிறது
புதிதாய் புகுந்தாளும் இருள்...//

உண்மைலேயே இருளைப் பற்றி அருமையா எழுதிருக்கீங்க அண்ணா ..!!

பணத்துக்காக வாழ்க்கையை தொலைத்தவன்:)) :(( said...

அருமை அருமை..

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

” இருளைத் தின்று வாழ்கிறது” என்ன ஒரு அருமையான வார்த்தைப் ப்ரயோஹம்..!!!

அன்புடன்,

ஆர்.ஆர்.ஆர்.

cheena (சீனா) said...

அன்பின் கதிர் - இருள் மனக்குகையில் நிரப்பத்தான் செய்யும்.

//இருளே ஆதியும் அந்தமும் கருவறையோ கல்லறையோஉடனிருப்பது இருளேயெனினும் இடைவந்த வெளிச்ச மோகம்இருளைத் தின்று வாழ்கிறது!//

சூப்பர் கதிர் - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா