பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்ட செயலை கேள்விப்பட்ட போது திராணியற்ற தமிழ்சமுதாயத்தில் நானும் ஒருவன் என்று நினைக்க வேதனையாக இருந்தது. அந்த வேதனையை பதிவாக எழுதி ஒன்றும் கிழிக்கமுடியாது என்ற ஆதங்கத்தில் அடர்த்தியான மனதோடு இருந்த நேரத்தில் பதிவர் பட்டாபட்டியின் இடுகை மூலம் பதிவர் டோண்டுவின் இடுகையை படிக்க நேர்ந்தது.
இதுவரை, ஒரு பதிவரின் இடுகை பிடிக்கவில்லையென்னும் போது விலகிச் செல்லும் மனோநிலை இங்கு வரவில்லை. டோண்டு பதித்துள்ள விசமத்தனம் படிக்கும் குமட்டிக்கொண்டு வந்தது. இவ்வளவு வக்கிரத்தோடு ஒரு மனிதன் தன் எழுத்தை கடை பரப்ப முடியுமா என்று.
விடுதலைப் புலி பிரபாகரனின் அன்னை பார்வதி அம்மையாரை தமிழகத்துள் வரவிடாது பிளேனிலேயே திருப்பி அனுப்பிய விவகாரம் இங்கு பல எதிர்ப்புகளை கிளப்பியுள்ளது. அவரவர் தத்தம் முந்தைய நிலைக்கேற்ப எதிர்வினை புரிகின்றனர்.
வயது முதிர்ந்த அந்த அம்மையாரை அனுமதிப்பதில் என்ன கெடுதல் வந்துவிடப்போகிறது என்பது இங்குள்ள பலரின் வாதங்களில் முக்கியமானது. முதலில் அதைப் பார்ப்போம்.
அப்படியே உள்ளே வந்தால் என்ன செய்திருப்பார்கள் புலிகளின் ஆதரவாளர்கள்? பிரஸ் மீட்கள் வைத்திருப்பார்கள்.
வயது முதிர்ந்த அந்த அம்மையாரை அனுமதிப்பதில் என்ன கெடுதல் வந்துவிடப்போகிறது என்பது இங்குள்ள பலரின் வாதங்களில் முக்கியமானது. முதலில் அதைப் பார்ப்போம்.
அப்படியே உள்ளே வந்தால் என்ன செய்திருப்பார்கள் புலிகளின் ஆதரவாளர்கள்? பிரஸ் மீட்கள் வைத்திருப்பார்கள்.
அய்யா மனசாட்சியே இல்லையா? மனநலம் குன்றிய பக்கவாதம் பாதித்த, அந்த மூதாட்டியை வைத்து எப்படி பிரஸ் மீட் வைக்க முடியும். அப்படி பிரஸ் மீட்டு புலி ஆதரவாளர்கள் ஒன்னும் வக்கிர புத்தி கொண்டவர்கள் இல்லை.
இப்படியெல்லாம் உங்களைப்போல் படித்த ஒரு மனிதனால் எப்படி யோசிக்க முடிகிறது
தனது பாசமிக்க மகனை நினைவில் இருத்தி அந்த பெண்மணி அழுவாச்சி பேட்டிகள் தந்திருப்பார்.
மிக மிக அசிங்கமான கற்பனை. உங்க பாழாப்போன கற்பனைக்கு அளவேயில்லையா?
இதுவரை அந்த அம்மா, அப்படி அழுததாகவோ, பேட்டி அளித்ததாகவோ யாரும் கேள்விப்பட்டதுண்டா?இதை விட அந்தத் தாயை ஒரு மனிதனால் இழிவு படுத்த முடியாது
பிறகு அவரது பாதுகாப்புக்கென ஒரு கணிசமான தொகையை நமது அரசுகள் செலவழிக்க வேண்டியிருக்கும்.
அடப்பாவிகளா, சிகிச்சைக்கு வந்த ஒரு மூதாட்டியை இங்கு பாதுகாத்து கிழிக்க என்ன இருக்கிறது. லட்சக்கணக்கான மக்களை நச்சுக்குண்டு வீசிக் கொன்ற ராஜபக்சேவின் குடும்பம் சாமி கும்பிடனு டூர் வந்த போது, கொடுத்த பாதுகாப்புக்கு செலவு பண்ணுனது யார் ஊட்டு அப்பன் காசு. அன்னிக்கு நம்ம அரசாங்கம் செலவு பண்ணினப்போ இனிச்சுதோ?
ஒரு முறை உள்ளே வந்தவரை வெளியில் அனுப்பவும் முடியாது முழி பிதுங்கியிருக்கும்.
வந்தாரை வாழவைத்த இந்த புண்ணிய தேசத்தில் ஒரு கிழவியை வைத்திருக்க வக்கில்லாமல், வெளியே அனுப்ப முழி வேற பிதுங்கித் தொலையனுமா?
எது எப்படியானாலும் பிரபாகரன் சம்பந்தப்பட்ட எதுவுமே அல்லது யாருமே நமக்கு வேண்டாம்.
நமக்குன்னா? டோண்டுவை வாசிக்கும் பாலோயர்களுக்கா?
நல்ல வேளையாக பிரபாகரனின் பிணத்தைக் கூட கண்ணில் காட்டாது எரித்து விட்டார்கள்.
பாவம் இந்த சி.பி.ஐக்காரங்க. டோண்டு சார்.... பிரபாகரன் செத்து எரிச்ச எவிடன்ஸ கொஞ்சம் சி.பி.ஐ கிட்ட சீக்கிரம் குடுங்களேன்
இல்லாவிட்டால் அவருக்கு நினைவாலயம் அமைக்கும் கூத்தெல்லாம் நிறைவேறியிருக்கும்.
அப்படி ஒன்னு நடந்தா, அதுக்கு யாராவது உண்டி குலுக்குனா நீங்க காசு போடவேணாம்
நாட்டின் நலனுக்கு இவை எதுவுமே உகந்ததில்லை.
உதவின்னு கேட்டு வந்த வயதான மூதாட்டிய திருப்பி அனுப்பினதால இந்த நாடு சுபிட்சம் அடைஞ்சிருச்சுங்களா?
ஆகவேதான் மத்திய அரசு இந்த முடிவை எடுத்திருக்க வேண்டும்.
இது உங்க கண்டுபி்டிப்புங்களா? இல்ல மத்திய அரசு உங்கள கலந்துக்கிட்டு இந்த முடிவ எடுத்தாங்களா? மலேசியாவுல விசா குடுக்குறப்போ உங்கள கேக்காம கொடுத்துட்டாங்களா?
மாநில அரசு தன்னிச்சையுடன் இதை பின்பற்றியதோ அல்லது வேறு வழியின்றி பின்பற்றியதோ எதுவாயினும் ஒரு அசம்பாவிதம் நடக்காமல் தடுக்கப்பட்டது.
என்ன என்ன்ன்ன்ன்ன அசாம்பாவிதம் நடந்துடும்?
வெறுமனே சிலரது நாடகத் தன்மை மிக்க செயல்பாடுகளுக்கு தீனி போட்டதாக அமைந்திருக்க வேண்டிய ஒரு நிகழ்வு முளையிலேயே கிள்ளி எறியப்பட்டது நல்லதுக்குத்தான்.
என்ன ஒரு வக்கிரமான சந்தோசம்.
ஒரு தமிழச்சி என்ற உணர்வு வேண்டாம், ஒரு பெண் என்ற இரக்கம் வேண்டாம். பாவம் தன் கடைசி காலத்தில் இருக்கும் ஒரு வயதான நோயாளி என்ற குறைந்த பட்ச இரக்கம் கூட இல்லையா உங்களிடம்
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு ராகவன்
’அன்புடன்’ க்க்க்கும் இந்த பாசாங்கு எதுக்கு. குறைந்த பட்ச மனித நேயம் இல்லாத உங்களுக்கு ”அன்புடன்” வார்த்தை மட்டும் எப்படி இனிக்குதோ?
நான் சொன்னதில் உறுதியாகவே இருக்கிறேன். இந்த எதிர்ப்பு பின்னூட்டங்கள் அவரவர் தத்தம் குற்ற உணர்ச்சியை மறைக்கவே ஓவர் சீன் காட்டுவதாக எனக்கு படுகிறது.
உங்களுக்கு எப்படி வேண்டுமானாலும் படட்டும்.... அதுதான் மட்டறுத்த 91 பின்னூட்டங்களிலேயே தெரிகிறதே.... உங்களைத் தவிர அங்கு பின்னூட்டம் இட்ட அத்தனை பேரும் குற்ற உணர்ச்சி கொண்டவர்கள்தான்.
உங்களுக்கு எப்படி வேண்டுமானாலும் படட்டும்.... அதுதான் மட்டறுத்த 91 பின்னூட்டங்களிலேயே தெரிகிறதே.... உங்களைத் தவிர அங்கு பின்னூட்டம் இட்ட அத்தனை பேரும் குற்ற உணர்ச்சி கொண்டவர்கள்தான்.
நான் ஒன்றும் இங்கே பாப்புலாரிடி காண்டஸ்டுக்கு எல்லாம் வரவில்லை.
என் மேல் மதிப்பு இல்லை எனச் சொன்னால் அது சொல்பவரது பிரச்சினை. அதை கூறுவது அவரது சுதந்திரம்.
அது சரி... உங்கள இத்தன நாள் படிச்சவங்களோட குற்றம்தான் அது.
------------------------------------------
சமீபத்தில் 1000 இடுகை எழுதியதாக அறிவித்த டோண்டு அவர்களின், இந்த இடுகையைப் படித்த போது அவரின் எழுத்தில் இருந்த வக்கிரம் குமட்டலை ஏற்படுத்தியது. தனக்கு எழுதத் தெரியும், தான் எழுதினால் வாசிக்க ஆள் இருக்கிறது என்ற தலைக்கனம் கொடுத்ததுதான் இது போன்ற மனிதநேயம் இல்லாத ஒரு இடுகைய எழுத தூண்டியிருக்கிறது.
நான் இந்த இடுகையை இடும் போது தமிழ்மணத்தில் அவர் இடுகைக்கு கிடைத்த ஓட்டு 7/45... அந்த 38 பேரின் கோபமும், 95% சதவிதத்திற்கு மேல் கண்டித்து வந்திருந்த பின்னூட்டங்களும், சில எதிர் இடுகைகளும் டோண்டு அவர்களுக்கு அவர் செய்த தவறை முகத்தில் அடித்தாற் போல் உணர்த்தும், ஆனால் உணர்வாரா?
அடிப்படை மனித நேயத்தை அடகு வைத்து விளம்பரம் தேடிய, மனித நேயமற்ற டோண்டு அவர்களுக்கு எதிரான என் கடும் கண்டனங்களை மனது முழுக்க அறுவெறுப்போடு பதிவு செய்கிறேன்.
____________________________________
80 comments:
&&லட்சக்கணக்கான மக்களை நச்சுக்குண்டு வீசிக் கொன்ற ராஜபக்சேவின் குடும்பம் சாமி கும்பிடனு டூர் வந்த போது, கொடுத்த பாதுகாப்புக்கு செலவு பண்ணுனது யார் ஊட்டு அப்பன் காசு. அன்னிக்கு நம்ம அரசாங்கம் செலவு பண்ணினப்போ இனிச்சுதோ?
&&
இருங்க இருங்க... பாதுகாப்புக்கு மட்டுமில்ல... நச்சுக்குண்டுக்கும் அவங்க துட்டுதான் சாமீ...
மனுசனுக்கு புத்தி கெட்டுப்போச்சு போல.
&&தனது பாசமிக்க மகனை நினைவில் இருத்தி அந்த பெண்மணி அழுவாச்சி பேட்டிகள் தந்திருப்பார்.
மிக மிக அசிங்கமான கற்பனை. உங்க பாழாப்போன கற்பனைக்கு அளவேயில்லையா?
இதுவரை அந்த அம்மா, அப்படி அழுததாகவோ, பேட்டி அளித்ததாகவோ யாரும் கேள்விப்பட்டதுண்டா?இதை விட அந்தத் தாயை ஒரு மனிதனால் இழிவு படுத்த முடியாது
&&
அவங்க அழக்கூடச் செய்திருக்கலாம்... மூப்பின் கொடுமையால்..!! ஆனால் பிரபாகரனின் தாய் மட்டுமல்ல... இன்னும் ஆயிரம் ஆயிரம் போராளிகளின் மறத்தாய்மார்கள் கண்ணில் நிரந்தரமாக உறைந்த கண்ணீருடன்... அளித்த பேட்டிகளைப் பார்க்கும் சந்தர்ப்பம் டோண்டு அவர்களுக்குக் கிடைத்திருக்காது!
அவரைப் பொறுத்தளவில்... அங்கிருக்கும் தமிழர்கள் கையேந்திக் கொண்டு சிகிச்சைக்கோ சாப்பாட்டுக்கோ வருவதாகவே கற்பனை பண்ணிக் கொண்டிருப்பார் போலும்!
தமிழனைக் கொன்று குவிப்பதற்கு சிங்களவனுக்கு வீசியெறிந்த நாய் பிஸ்கட் கணக்கு வைத்திருக்கிறாரா என்று கேட்க வேண்டும்..
ஹ்ம்ம்ம்....எல்லாக் கொடுமையும் பார்த்து புண்பட்டாச்சி....இது போன்ற வ்ந்த புண்ணில் வேலைப் பாய்ச்சும் கொடுமைகளையும் சகிச்சிக்கணுமா....
//பிறகு அவரது பாதுகாப்புக்கென ஒரு கணிசமான தொகையை நமது அரசுகள் செலவழிக்க வேண்டியிருக்கும்.
//
ஆமாம்... அவரக்கு அதுக்குங்க பாதுகாப்பு... நம்மிடையே அவர் பத்திரமாகவே இருந்திருப்பார்
//ஒரு முறை உள்ளே வந்தவரை வெளியில் அனுப்பவும் முடியாது முழி பிதுங்கியிருக்கும்.
//
ஆமாம்..அவர் உள்ள இருந்தா, ஈழத்தமிழர்க்கு உதவாம போன குற்ற உணர்ச்சி குத்திட்டே இருக்குமில்ல
-:(
//எது எப்படியானாலும் பிரபாகரன் சம்பந்தப்பட்ட எதுவுமே அல்லது யாருமே நமக்கு வேண்டாம்.
//
ஆமாம்.. நமக்கு வேணாம்... நம்மை நம்பி அவர்கள் மோசம் போக வேணாம்
மனிதனுக்கு மரியாதை செய்யலாம்..
ஆனால்.. வயதில் பெரியவர் , அறிவில் சிறியவரான, டோண்டுவை.. என்னால் மனிதனாக ஏற்கமுடியவில்லை..
இனி.. மிருகங்களை.. சாரி சார்..
வெறி கொண்ட மிருகங்களை கிழிப்பது தொடரும்.. ( ராவா...)
வேதனையுடன்.. மனிதன் எனும் பட்டாபட்டி
நல்லாச் சொன்னீங்க கதிர்.
முதலில் மனித நேயம் இருக்க வேண்டும்.
அது நமது அரசுக்கு மட்டும்தான் இல்லை என நினைத்தேன்.
திரு.டோண்டுவுக்கும் இல்லை.!
ஏட்டுச்சுரைக்காய்..:)))
முதல் இரண்டு கருத்துக்களை தான் படித்தேன்... அதற்கு மேல்... படிப்தற்கு மனம் ஒப்பவில்லை....
அமெரிக்காவின் வழியிலே இந்திய நடை போடுகிறது.... இவர்களை போன்றவர்களின் துணையுடன்...
சுப்பிரமணியன் சாமி....சுதர்சனம்....ஹிந்து ராம்.... போன்றவர்கள் மனிதாபிமானம் பற்றி பேசும் பொழுது....
இங்கே எனது சிறு கவிதை.... சற்று மனிதாபிமானம் இர்ருப்பதால்... http://a-aa-purinthuvitathu.blogspot.com/p/blog-page_19.html
அதெல்லாம் மாறமாட்டாங்க கதி்ர். அந்த ஆளை பிந்தொடர்தலிலிருந்து விலகிவிட்டேன் என போட்ட பின்னூட்டத்த ரிலீஸ் பண்ணல!
ஏன் தொடர்ந்தேன் என விலகியது, சனியனை தொலைத்த மாதிரி இருக்கு!
பிரபாகர்...
என்னாண்ண... சாக்கடைக்கு எதுக்கு சந்தன வாய்க்கால்.
Thayavu seithu antha pannaadaikku publicity kodukkaatheenga!
Thanks!
உங்களுக்கு ஏதேனும் தயக்கம் இருந்தால் மறுத்துவிடவும்.. எனது பதிவு புதியது...
சிங்கள ராணுவத்திடம் சிக்கி சின்னாபின்னம் ஆகிகொண்டிருக்கும் முன்னால் போராளியின் பார்வையிலே....
போராடினோம்...போராடினோம்...
தீவிரவாதி என்றார்கள்...
தோல்வியின் விளிம்பினில்...
ஆயுதங்களின் அமைதி என்றோம்....
தலைமையை பற்றி பலவாறு தகவல்...
நாங்களோ அந்நியனின் கைகளிலே...
அவன் எங்களை தமிழனாக பார்த்தான்... மனிதர்களாக அல்ல...
மானத்திற்காக போராடினோம் அன்று..
இன்று தினம் தினம் போராடி கொண்டிருக்கிறோம் உயிருக்காக...
தயவு செய்து யாரும் பேசாதீர்கள் மனிதாபிமானம் பற்றி...
நாங்கள் முன்னால் போராளிகள் தவறு தீவிரவாதிகள்... மனிதர்கள் அல்ல....
அழுவதற்கு கூட அவர்களிடம் அனுமதி வாங்கவேண்டும்....
ரொம்ப சூடா இருக்கு கதிர். ஆனால் உங்கள் கருத்துகள் சரியே.
அவரது இடுகையைப் படிக்கவில்லை. ஆனால் இப்படியும் யோசிக்க முடியுமா என்பதாகவே உள்ளது.
இதே டோண்டும் அவரது பக்கவாத்தியங்களும் 'உன் மகள் விதவையானால்' என்று ஒருமுறை அவரது நளினத்துடனேயே நான் சொன்னபோது, ஆச்சா போச்சான்னு அலட்டிக்கொண்டதைப் பார்த்திருக்கவேண்டும். இவரிடம் எதை எதிர்பார்த்தீர்கள்?
தனிப்பட, பிரபாகரனின் தாயார் இந்தியாவுக்கு மருத்துவ உதவிக்காக எக்காரணங்கொண்டும் போயிருக்கக்கூடாதென்பது என் கருத்து. ஆனால், அஃது அவரது விருப்பம்.
அடப்போங்க கதிர். உங்களோட இந்த இடுகையை சாக்கா வச்சு அவரோட பதிவுல புதுசா இன்னொரு இடுகையை ஏத்திடப்போறாரு.
டோண்டு போன்றவர்களின் அறியாமைக்கும்....முதிர்ந்து போனதாய் நினைத்துக் கொண்டிருக்கும் தன்மைக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்....வெட்கம் இல்லாத தமிழர்கள் எல்லாம்...இருக்கும் வரை....மனிதாபிமானம் என்பது என்ன விலை என்றுதான் இந்த மனிதர்கள் கேட்பார்கள்...அவரது பதிவை நான் இதுவரை படிக்க வில்லை கதிர் சார்.......ஆனால்.....தன்னை பிரபலமாக்கிக் கொள்ளும் ஒரு அறுவெறுப்பான செயல் தான்...இப்படி எல்லாம் எழுதச் சொல்லி தூண்டுகிறது...
அதிமேதாவித்தனத்தை இப்போது தான் நான் நேரில் பார்க்கிறேன்..இவரின் எழுத்தின் மூலமாக....மூதாட்டி திருப்பி அனுப்பியது பற்றி... நான் ஒரு பதிவிட்டுள்ளேன்....அதை....திருவாளர். டோண்டுவிற்கு சமர்ப்பிக்கிறேன்.....
http://maruthupaandi.blogspot.com/2010/04/blog-post_5450.html
மேலும் எனது வலுவான கண்டணங்களையும் பதிவு செய்து....கதிர் சாரை நான் வழிமொழிகிறேன்....!
ரொம்ப சரியா சொல்லியிருக்கீங்க கதிர் அண்ணா.
// உங்கள இத்தன நாள் படிச்சவங்களோட குற்றம்தான் அது.//
-WELL SAID DEAR!!!
- I REALLY CONDEMN U KATHIR FOR REWRITING SUCH A WORTHLESS ISSUE AND PROPAGATING HIM,IN YOUR PAGES
KATHIR ,WHY DID U MAKE HIM STILL MORE POPULAR , WE SHOULD HAVE IGNORED HIM RATHER THAN READING AND WRITING COMMENTS, BUT UNFORTUNATELY I REALISED IT MUCH LATER ,
அந்த 35ல நானும் ஒருவன் கதிர்.
எதிர்ப் பதிவு எழுதக்கூட லாயக்கற்றது அப்பதிவு.
எங்கோ எரிமலை குமுறியதாக சமீபத்தில் வாசித்தேன். அதன் உஷ்ணத்தை இந்தப் பதிவில் உணர முடிந்தது. சாட்டையடி கொடுத்திருக்கிறீர்கள்! சொரணையுள்ளவர்களுக்கு வலிக்கும் என்று எதிர்பார்க்க மட்டுமே முடியும்.
Some of these questions are answered by him in the comments section. I wonder why you missed them!..
I can understand your point of view, just like the way I can understand his point of view. I even know some tamil people who are from Srilanka and share his view. but half of the blogger's, who are going all out against Dondus don't know much about this.
Why everyone thinks anything against LTT is against Tamil? Or anything supporting LTT is supporting Tamil? this part I don't understand.
Once I read a srilankan tamil blogger who wrote that we from tamil nadhu only added fuel in the fire by supporting armed struggle, he said instead of barinwashing them to become fighters, tamil nadhu should have not allowed their growth .
Lastweek I watched Muralidharan interview in "Coffee with Anu", he did mentioned that "Everyone in Srilanka (including tamil) are really happy, on finally war is over, and there will be no bombblast from now"
So I am confused here, why all the tamil bloggers are going all out supporting anything that is LTT? can anyone really from Srilanka share there personal opinion here.
உடன்படுகிறென் உங்களுடனுடனும்...
http://ini2006.blogspot.com/2007/09/blog-post.html
:))))
see this link.. :)
its old.. but gold. :)
தஸ்லிமா நஸ்ரினுக்கு பாதுகாப்பு குடுப்பது கூட சரினு சொல்லுவாரு...
:))
வயசானவர் பாவம் பொழுது போயிருக்காது,இப்படி எதாவது உளரிக்கொட்டினா எதிர்ப்புக்கு பதில் சொல்றேன் பேர்வழின்னு 10 இடுகை தேத்துற டைப்பு, இப்பதிவால தேவையில்லாத பப்ளிசிட்டி டோண்டுவுக்கு.
சாக்கடைக்கு சந்தனவாய்க்கால் -- மிகச் சரி.
தலைப்புக்காகவே ஒரு +1 !!!
மற்றபடி, இந்தப் பதிவுக்கெல்லாம் அசரும் கும்பல் அல்ல அது.
வயசானா புத்தி பிசகிறுமோ?
அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு வர்றவனுங்கள இறங்கவிடாம துரத்திடலாமா?
நம்ம நாட்டில் இருந்து நிறையபேர் அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காக வர்றாங்கப்பா. முரசொலி மாறன், சச்சின் எல்லாம் இங்க வந்தாங்கப்பா.
சொரணை கேட்டவன் இல்லை!!! ரவ்திரமும் பழகியவன் தான் தமிழன்...சரியான சவுக்கடி பகிர்வு கதிர் அண்ணே...
what is LTT? Muralidharan is a sri lankan tamilian, and he has been playing for sri lanka even when eelam tamils were killed in thousands by his government.
What does Sri Lanka & LTT has to do with one old lady coming for medical treatment?
BTW, it is Tamilnadu for the official use sake, not TamilNadhu.
Of course, you are confused here & also there.
Just sit, relax, and enjoy the coffee with Anu in Florida rather than making half baked statements
//அதெல்லாம் மாறமாட்டாங்க கதி்ர். அந்த ஆளை பிந்தொடர்தலிலிருந்து விலகிவிட்டேன் என போட்ட பின்னூட்டத்த ரிலீஸ் பண்ணல!
ஏன் தொடர்ந்தேன் என விலகியது, சனியனை தொலைத்த மாதிரி இருக்கு!
பிரபாகர்...//
பதிவை படித்துவிட்டு நான் பண்ண முதல் காரியம் "Stop following this site".
உங்கள் கேள்வியெல்லாம் நியாயம். தப்பு அவர்மேல்தான்.
அந்த அம்மா வர வேண்டும் என்று சொல்லி எழுதியவர்களுக்கு வந்த ப்ளஸ் ஓட்டுக்களைவிட இவருக்கு வந்துள்ள மைனஸ் ஓட்டுக்கள் பலமடங்கு அதிகமாயிருக்கே! அப்ப எல்லாரும் அந்த தாயைப் பற்றிக் கவலைப்படவில்லை உங்க கவலையெல்லாம் இந்த பாழாப்போன இவருமேலைதான்.
//James Arputha Raj said...//
தம்பி சேம்சு, இங்க விடுதலைபுலிகளை பற்றி பேச வில்லை புரியாம உலராதிங்க ...
மனிதாபிமானத்தை பற்றித்தான் பேசுறாங்க
ஒரு பேச்சிக்கு நீங்க தீவிரவாதிதன்னு முத்திரை குத்தபட்டவருனா உங்க குடும்பத்தையே விரோதியா பார்கனும்ன்னு சொல்லுரின்களா ???
டோண்டுவின் பதிவு அவசரப்பட்டு கருத்தை மாற்றி புரிந்துகொண்டதாய் தெறிகிறது..
அவர் சொல்லிய கருத்துகள் , ஏன் சொல்லாதவைகளும் நடக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு..
சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டவர் நேர் வழியில் அரசுக்கு முறைப்படி தெரிவிக்கப்பட்டு வந்திருக்கலாம். அரசு அவரை வரவேண்டாம் என சொல்லவில்லை..
மேலும் சிகிச்சைக்காக இந்தியா வருவது நம்பவே முடியாத காரணமாகும்..
சின்ன தலைவலியை கூட தாங்க முடியா பெண்மணிகள் வெளிநாட்டில் தனியாக பிரசவம் செய்துகொள்ளும்போது வெளிநாட்டு சிகிச்சை முறைகளும் சேவையும் எத்தனை பாதுகாப்பானது உசத்தி என்பதை புரிந்துகொள்ளலாம்..
டோண்டுவின் கருத்துகள் நமக்கு உடன்பாடில்லாவிட்டாலும் , அதில் உண்மை இருக்கிறது என்பதே என் கருத்து...
மேலும் அவர் பார்வதி அம்மாளுக்கு எதிராக எதுவுமே தவறாக சொல்லிவிடவில்லை...
உணர்ச்சிவசப்படாமல் யோசிக்கலாம் ..
@@@ஒரு தமிழச்சி என்ற உணர்வு வேண்டாம், ஒரு பெண் என்ற இரக்கம் வேண்டாம். பாவம் தன் கடைசி காலத்தில் இருக்கும் ஒரு வயதான நோயாளி என்ற குறைந்த பட்ச இரக்கம் கூட இல்லையா உங்களிடம்.///
Valid Point..!Good one..!
@@ James Arputha Raj
ஒரு விசயத்தைப் புரிந்து கொள்ளுங்கள், நான் இங்கு புலிகளை ஆதரித்து இதை எழுதவில்லை... அவர் பார்வதிஅம்மாவா இல்லாவிடிலும் என் நிலை இதுவே! குறைந்த பட்ச மனித நேயம் தொலைந்த எழுத்தைக் கண்டிக்கும் போது புலிகள் பற்றிய பேச்சு எதற்கு..
@@ smart
//உங்க கவலையெல்லாம் இந்த பாழாப்போன இவருமேலைதான்.//
என்னங்க எனக்கும் பாழாப்போன அவருக்கும் வாய்க்கா வறப்பு தகராறா? அடிப்படை மனித நேயத்தை வெற்று விளம்பரத்திற்காக விலைபேசியருக்கு எதிரான என் கண்டனங்கள் மட்டுமே இந்த இடுகை...
@ நண்பர்களே
தனிப்பட்ட முறையில் பதிவர் டோண்டு அவர்களையும், அவருடைய சாதி குறித்தும் தாக்கி வந்த பின்னூட்டங்களை மட்டறுத்திருக்கிறேன்...
மட்டறுத்த பின்னூட்டங்களை இட்ட நண்பர்கள் மன்னிக்கவும்..
இந்த இடுகையின் நோக்கம் டோண்டு அவர்களின் அந்த குறிப்பிட்ட இடுகைக்கான கண்டனம் மட்டும் தானே தவிர, அவரின் தனிப்பட்ட குணாதிசயம மற்றும் சாதி குறித்து பேச அல்ல என்பது என் தாழ்மையான கருத்து....
நன்றி
உண்மையை உளறி விட்டது அபிஷ்டு.
உள்ளது தானே வரும்.
இத்தனை நாள் ஏமாந்து படித்தவர்கள் இந்த அபிஷ்டுவை சுத்தமா ஒதுக்குங்கோ.
பலரைப் பல நாள் ஏமாற்றியது முன்பொரு த்ரம் மாட்டியது.அப்பவே விரட்டியிருக்கணும்.
இனி அதப் படிப்பவன் தமிழனா இருக்க முடியாது.
//இப்படியெல்லாம் உங்களைப்போல் படித்த ஒரு மனிதனால் எப்படி யோசிக்க முடிகிறது//
அவர் படித்த, கற்ற வேதங்களும் குலக் கல்வியும் கற்றுக் கொடுத்தவற்றை தான் அங்கே
காட்டி இருக்கிறார் போலும்
//தனது பாசமிக்க மகனை நினைவில் இருத்தி அந்த பெண்மணி அழுவாச்சி பேட்டிகள் தந்திருப்பார்.//தன் மகனோ மகளோ மரணம் எய்தும் காலத்தில் அன்னார் குதூகலமாக எங்கே பிராமணன் எழுதுகிறாரா என பார்க்கலாம்
//பிறகு அவரது பாதுகாப்புக்கென ஒரு கணிசமான தொகையை நமது அரசுகள் செலவழிக்க வேண்டியிருக்கும்.//
அடடா !என்ன ஒரு சமுதாயப் பிரஞை ! எதில் சிரிப்பது என தெரியவில்லை
//சென்ஷி said...
அடப்போங்க கதிர். உங்களோட இந்த இடுகையை சாக்கா வச்சு அவரோட பதிவுல புதுசா இன்னொரு இடுகையை ஏத்திடப்போறாரு.
//
அதேதான் பாஸ்..
//பிறகு அவரது பாதுகாப்புக்கென ஒரு கணிசமான தொகையை நமது அரசுகள் செலவழிக்க வேண்டியிருக்கும்.//
என்ன மிகக் கீழ்த்தரமான சிந்தனை பாருங்க.... நாகரீகமாகூட திட்டனும்னு தோணைலங்க....
//நாட்டின் நலனுக்கு இவை எதுவுமே உகந்ததில்லை. ஆகவேதான் மத்திய அரசு இந்த முடிவை எடுத்திருக்க வேண்டும்.//இது டொண்டு//
மிஸ்டர் டோண்டு.
நீங்கள் நாட்டின் நலன் என்று சொல்வது "பார்ப்பானின் நலம்தான்".
தமிழின எதிர்ப்பு உங்கள் இரத்ததில் இருக்கிறது.
உங்கள் கூட்டத்தை தமிழ்நாட்டைவிட்டு விரட்டும் நாள்தான் தமிழனுக்கு சுதந்திரநாள்.
வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சுவத்ற்கு சரியான உதாரணமாகி விட்டார்.
கதிர்....
டொண்டுவின் பதிவ படித்து நேரத்தை வீணாக்கிட்டிங்க.....
அவங்க எல்லாம் அப்படித்தான்.....
//சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டவர் நேர் வழியில் அரசுக்கு முறைப்படி தெரிவிக்கப்பட்டு வந்திருக்கலாம். அரசு அவரை வரவேண்டாம் என சொல்லவில்லை.. //
எப்பா சாமிகளா எல்லாருமே இப்படித்தானா?
அவங்க என்ன கள்ளத் தோணியிலா வந்தாங்க.இந்திய அரசாங்கத்தின் விசா மூலம் தானே?????
அன்பின் கரிசல்காரன்,
அவர் விசா வாங்கியே வந்தாலும் அவர் பெயர் நுழைவு மறுக்கப்பட்டவர் பட்டியலில் உள்ளது ஜெயா அம்மையாரால்..
மாநில அரசிடம் பார்வதி அம்மையாருக்கு மருத்துவ உதவி குறித்து கட்டாயம் தெரியப்படுத்தவேண்டும்...
அவர் நம்மைப்போல் சாதாரணமானவர் அல்ல.. அவர் பிரச்னை ஒருபோதும் செய்யப்போவதில்லை..( அவர் மகன் இந்திய அரசால் தேடப்பட்ட குற்றவாளி என்றாலுமே) .. ஆனால் அவரை வைத்து பிரச்னை செய்ய மட்டுமே அரசுக்கு தெரிவிக்காமல் அழைத்து வந்ததாய் தெரிகிறது வெட்டவெளிச்சமாய்..
இதை தவிர்த்திருக்கலாம் , அழைத்து வந்தவர்கள்...
இனியாவது இதுபோன்ற அவசரக்குடுக்கை நடவடிக்கைகள் தவிர்க்கலாம்..
உங்கள் கோபம் நியாயமானது
நடராஜ் பென்சில் விளம்பரம் மாதிரி அவர்! :))
விடுங்க பாஸ்!
தல, நான் அந்த டோண்டுவின் இடுகையை படிக்கவில்லை, ஆனால் நல்லவேளையாக படிக்கவில்லை. உங்களின் இந்தபதிவுகூட அவருக்கு விளம்பரமாகிப்போகும் அபாயம் உண்டு.
அதுதான் பிரச்சனையே!
//////// பிரபாகர் said...
அதெல்லாம் மாறமாட்டாங்க கதி்ர். அந்த ஆளை பிந்தொடர்தலிலிருந்து விலகிவிட்டேன் என போட்ட பின்னூட்டத்த ரிலீஸ் பண்ணல!
ஏன் தொடர்ந்தேன் என விலகியது, சனியனை தொலைத்த மாதிரி இருக்கு!
பிரபாகர்...////////////
நண்பரே இப்படி செய்வது நமது இயலாமையை காட்டிவிடும் . அவரின் பதிவுக்கு நாமும் நமது பதிவுகளின் வாயிலாக சரியான பதில் கொடுப்போம் .அப்பொழுதான் புரியும் அவரின் எழுத்தின் அறியாமை என்னவென்று .
திரு. டோண்டு அவர்கள் ஆண் “லீனா மணிமேகலை”
அவ்வளவுதான் ஒரே வார்த்தைல புரிஞ்சுக்கோங்க....
இந்த தகவலை எல்லோருக்கும் சொல்லுவதில் இருக்கிற சிக்கலை நண்பர்கள் உணர்ந்து கொண்டதாக தெரியவில்லை.முன்னதாகவே பார்வதியம்மா வருவதை வெளியிட்டிருந்தால் கலைஞரே காங்கிரஸ் கயவாளிகள் இளங்கோவன்,ஞானசேகரன்,சுதர்சனம் போன்றவர்களைவிட்டு அறிக்கை விடவைத்திருப்பார்.இல்லாவிட்டால் ராஜிவின் ஆன்மாவைக்காக்கும் காவியத்தலைவி போயஸ் தோட்ட செல்வி நானாயிருந்தால் அனுமதிக்க விட்டிருப்பேனா என்று அறிக்கை விட்டு தன்பங்குக்கு பீதியூட்டியிருப்பார்.கடைசி வரை அந்த அம்மாவை திருப்பி அனுப்பியது தெரியாமல் வைகோ நெடுமாறனிடம் போலிஸ் கஸ்டடியில் எடுத்து நானே பாத்துக்கிறேன்னு சொல்லுவாரு கருணாநிதி என்று சொல்லிக்கொண்டிருந்தார்.யாரும் நம்பவில்லை திருப்பியனுப்புவர்கள் என்று
எச்சரிக்கை:
"பார்ப்பனர் கருத்துதான் பொதுமக்கள் கருத்து" என்பதுபோல் காட்டுவதற்காக ஆர்.எஸ்.எஸ் காரங்க பத்திரிகைகளில் 'வாசகர் கடிதம்' எழுதுவதற்காக ஒரு கூட்டத்தையே மாத சம்பளம் கொடுத்து வளர்த்து விட்டிருந்தாங்க.
அதுபோல இப்போ "டோண்டு" கூட்டமும் ஆர்.எஸ்.எஸ் கிட்ட சம்பளம் வாங்கும் கூட்டம் போலதான் தெரிகிறது. தமிழன எதிர்த்து எழுதுறது இவங்களோட ஹாபி இல்லை. முழுநேரத்தொழில்.
அதனால, பார்ப்பனர் கருத்துதான் பொதுமக்கள் கருத்து என்று காட்டும் இந்த முயற்சியை, ஏதோ நிறைய பேரோட கருத்து என நம்பிவிட வேண்டாம்.
மக்களே,
என்னடா இவனைக் காணோமேன்னு நினைச்சி இருப்பீங்க.... பூந்தாது ஒவ்வாமை + வெளியூர்ப்பயணம் + தமிழ்ச் சங்க வேலைகள்னு முசுவோ முசுவு....
எனக்குன்னு ஒரு கருத்து இருக்கத்தான் செய்யுது... என்ன செய்ய?
அரசியல் ஆக்கி ஆக்கியே, இனமான உணர்வு நீர்த்துப் போச்சு நாட்டுல... அதை நினைச்சு எதனா செய்யலாம்... இதெல்லாம் இரண்டாம் பட்சம்... நிறைய எழுத ஆவல் இருந்தாலும், நேரமின்மை கருதி....விடைபெறுகிறேன்!
வீடு வாடகைக்காக நெட்டிலும், ரோட்டிலும் சமீபமாய் அலைந்தேன். பல இடங்களில் பிராமின்ஸ் ஒன்லி என்று சொல்கிறார்கள். நெட்டிலும் அதே நிலைதான். இது மற்றவர்களைக் கேவலப்படுத்துவது போல இல்லையா? வேண்டுமானால் வெஜிடேரியன் ஒன்லி என்று போட்டுக் கொள்ளலாமே? அது தவறாகத் தெரிவதில்லை. இதைப் போல் மற்றவர்கள் போட்டால் என்ன ஆகும் என்று இவர்கள் யோசித்துப் பார்க்க வேண்டும். பிராமணாள் ஓட்டல்களை தார் வைத்து அழித்த தி.க.வினர்தான் இதற்கும் ஏதாவது பண்ண வேண்டும். வெள்ளையர்கள் ஓட்டல்களில் "கறுப்பர்களும், நாய்களும் உள்ளே வரக் கூடாது" என்று எழுதி வைத்தார்களாம். அதைப் போல இது இருக்கிறது. திருமாவளவன் ஏன் இதைக் கண்டு கொள்ளவில்லை? இது ரொம்ப காலமாக நடக்கிறது. மற்ற எல்லோரும் பிராமினைத் தவிர என்று போட்டுக் கொண்டால் இவர்கள் கதி? சமூகத்தோடு ஏன் ஒத்துப் போக மறுக்கிறார்கள்? இது அவர்கள் தங்கள் தலையில் தாங்களே மண்ணை வாரிப் போடும் முயற்சி என்று புரிந்து கொள்ள வேண்டும். இந்த சில காரணங்களால்தான் மீண்டும் ஜெயலலிதா வரவே கூடாது என்று தோன்றுகிறது. வந்தால் இவர்களைக கையில் பிடிக்க முடியாது.
நானும் ரவுடிதான்..ஜீப்பில் ஏறிட்டேன்..
(இவனுக்கெல்லாம் இனிமேல் என்ன மரியாதை வேண்டியிருக்கிறது..)
http://vanakkamnanbaa.blogspot.com/2010/04/blog-post_21.html
ஆயிரம் பதிவு-னு நம்பர்-ல இருந்து என்ன பயன்?
எவ்வளவு உபயோகமானதோ அதை விடுத்து, மீதமுள்ளதை பேப்பரில் பிரசுரித்து அளித்தால், நிறையப் பேருக்கு துடைக்க உதவும்.
எங்கே மனிதன்? என்று யாரையாவது தேடச்சொல்லனும்.
வரலாறுக்காக எனது பதிவும் இங்கே - (முன்னாள்) மதிப்பிற்குரிய டோண்டு சார் அவர்களுக்கு
இந்த வந்தேறி பார்ப்பணீயம் தமிழர்களுக்கு செய்த கொடுமை அளவில்லாதது .பிராமணியம் மனித தன்மைக்கு ,சமத்துவத்துக்கு ,சுய மரியாதை க்கு எதிரானது என்று காலம் காலமாய் நிருபிக்க பட்டிருக்கிறது .இந்த டோண்டு ராகவன் என்கிற முட்டாளுடன் நான் விவாதம் செய்ய வரவில்லை. பார்ப்பனீயம் தங்களுடைய சித்தாந்தங்களுக்கு தொண்டு செய்கிறவர்களை தான் உயர்த்தி பிடிக்கும் . தந்திரம்,சூழ்ச்சி ,நயவஞ்சகம்,பசப்பு, ஆசை காட்டல் முதலிய பஞ்சமா பாதகங்களை பயன்படுத்தி தன்னுடைய நலன்களை காத்துக்கொள்ளும் .இங்கே ஒன்று கவனிக்க வேண்டும் டோண்டு என்கிற மட பாப்பான் என்ன சொல்ல வருகிறார் "புலிகளின் ஆதரவாளர்கள்? பிரஸ் மீட்கள் வைத்திருப்பார்கள். தனது பாசமிக்க மகனை நினைவில் இருத்தி அந்த பெண்மணி அழுவாச்சி பேட்டிகள் தந்திருப்பார். பிறகு அவரது பாதுகாப்புக்கென ஒரு கணிசமான தொகையை நமது அரசுகள் செலவழிக்க வேண்டியிருக்கும்."
இதில் எவளவு வஞ்சம் கலந்திருக்கிறது. இங்கே அந்த வயதான தாய் வந்தது தன்னுடைய பக்கவாத நோய்க்கு மருத்துவம் பார்க்க .அரசியல் செய்ய அல்ல.அவர் இதற்க்கு முன்பு திருச்சியில் வாழ்ந்திருக்கிறார் . அவரை வைத்து எப்போது யார் அரசியல் செய்தார்கள் .அவரை கவனிக்க இங்கே ஆள் தேவை .இங்கே அவரை கவனித்து அவருக்கு வேண்டியவை செய்ய மனித நேயம் உள்ள நல்லவர்கள் இருகிறார்கள்.அதனால் தான் அவர் இங்கே வந்தார்.அந்த தாய் எப்போதுமே தான் இங்கே தங்கி இருந்த காலத்தில் அரசியல் யாரிடமும் பேசியது இல்லை.இங்கே வந்தேறி பார்ப்புகளும் ,சேட்டு களும் ,பணியாக்களும் ,மலையாளிகளும் வசதியாக வாழும் போது ஒரு தாய்க்கு தன்னுடைய ரத்த சொந்தங்கள் இருக்கும் நாட்டிற்கு வர உரிமைகள் மறுக்க படுவதும் அதை டோண்டு ராகவன் போன்ற வந்தேறி பார்ப்புகள் ஆதரித்து பேசுவதும் தமிழர்களுக்கு ஒரு கிழிந்து போன இத்தாலிய சேலையை தன்னுடைய துண்டாக ,கோவணமாக அணிந்து கொண்டிருக்கும் மற்றும் பணத்தால் உணர்விழந்து போன மட தலைவனால்தான். இங்கே காவி அணிந்து கொலை மற்றும் பல பஞ்சமா பாதகங்கள் செய்த காஞ்சிபுரம் சங்கராச்சாரி என்கிற அய்யோக்கிய பார்பான்கள் எல்லாம் நடமாடுகிற போது ஏன் என்னுடைய தாய் இங்கே வரகூடாது? .
இப்போது சசி தரூர் என்கிற ஒரு மலையாள பாப்பான் செய்த காரியம் என்ன . ஒரு நாட்டின் அமைச்சு பதவியில் இருந்து கொண்டு அவன் செய்த காரியம் தன்னுடைய தாயை கூட்டி கொடுபதற்க்கு சமமானது .அதை இந்த வந்தேறி பார்ப்புகள் தான் செய்ய முடியும் .
தாயே எங்களை மன்னித்து விடு .மீண்டும் ஒரு புத்தநும் ,ஒரு பெரியாரும் ,ஒரு நாராயண குருவும் ,ஒரு வேம்மன்நாவும் ,ஒரு பிரபாகரனும் ,ஒரு அய்யா வைகுண்டரும் இந்த புனித பூமியில் மீண்டும் பிறக்க ஆசி கூறு அவர்கள் பிறந்து பார்பனீயத்தை வேரோடு கருவருகட்டும் .
உமா.கா ,திருவனந்தபுரம்
//நான் இந்த இடுகையை இடும் போது தமிழ்மணத்தில் அவர் இடுகைக்கு கிடைத்த ஓட்டு 7/45... //
அதில் விழுந்த சில சதவீகித ஓட்டுக்களுக்கு அவைப் பொருந்தும். ஆனால் பட்டாப்பட்டி அவர்களின் பதிவைப் பார்த்தால் தெரியும் எவ்வளவு பேர் அந்த அம்மாவுக்கா கவலை கொண்டனர் என்றும், எவ்வளவு பேர் டோண்டு மேல் மட்டும் வெறுப்பு கொண்டனர் என்று புரியும்.
//இந்த இடுகையின் நோக்கம் டோண்டு அவர்களின் அந்த குறிப்பிட்ட இடுகைக்கான கண்டனம் மட்டும் தானே தவிர, அவரின் தனிப்பட்ட குணாதிசயம மற்றும் சாதி குறித்து பேச அல்ல என்பது என் தாழ்மையான கருத்து...//
இந்த நிலையை நானும் ஏற்கிறேன்.
இவரும் -அவர்- மாதிரி தான் கதிர்!
சிறந்த எதிர்வினை!
அந்தத்தாய்க்கு தேவை சிகிச்சை... அதை கொடுக்க மாட்டோம் என்ற அரசாங்கத்தின் நிலை நம்மை வெட்கப்பட வைத்தது என்றால் அதைவிட வெட்கக்கேடான செயல் திருவாளர் டோண்டு அவர்களின் பதிவு. அவருக்குள் மனித நேயம் என்ற ஒன்று துளிகூட கிடையாது என்பதையே காட்டுகிறது. பிரபல பதிவர் என்றால் என்ன வேண்டுமானாலும் எழுதலாம் என்ற தலைக்கனம் போலும். ஐயா, மனிதனாய் இருந்து எழுதுங்கள்.
கதிர் சார், உங்கள் கோபம் உங்கள் பகிர்வில் தெரிகிறது.
நல்லா நருக்குனு சென்னீங்க .
Yen anthammakku India vera stateee teriyatha ellai vera state lla hospitalleellaiya?
ஒருவகையில் பார்த்தால் டோண்டு நேர்மையானவர், அவர் எப்படிப்பட்டவர் எக்கொள்கையுடையவர் என்பதை வெளிப்படையாகவே மீண்டும் மீண்டும் அறிவிக்கிறார். அவரிடம் எப்படியாவது சமரசமாகப் போய்விடலாமே என்று நினைப்பவர்களிடம் தான் பிரச்னையிருக்கிறது.
மிகவும் ஆபத்தானவர்கள் டோண்டுவின் அல்லது சோவின் கொள்கையுடையவர்கள் ஆனால் பிழைப்புக்காக பச்சோந்தி வேசமிடும் சில பசப்பல் பேர்வழிகள். அவர்களிடம் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர்களைத்தான் புரிந்து கொள்ள வேண்டும்.
கதிர் என்ன சொல்றதுன்னே தெரியல.பர்வதியம்ம எந்னும் பெண் மணியின் சோகத்தை நினைத்து அதர்க்கு காரணமாகிவிட்டோமே என்று வெட்க்கபடுவதா இல்லை டோண்டு மாதிரி ஆளுங்களை நிநைத்து கோவப்படுவதா?
//-/சுடலை மாடன்/- said...//
அண்ணா, வணக்கம்! அதே! அதேதான் !!
Anonymous said...
Yen anthammakku India vera stateee teriyatha ellai vera state lla hospitalleellaiya?
//
பிள்ளைவாள்..
வந்தேரிகள் இங்கே அனுபவிக்கும்போது..இந்த மன்ணின் மைந்தர்கள், எதுகுப்பா வேற State-க்கு போகனும்?..
ஆமா.. பேரு இன்னும் வைக்கிலையா.. இல்ல அப்பன் பேரு தெரியலையா?..
என் கண்டனத்தோடு ஒட்டி, வெட்டி தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி...
தவிர்க்க இயலாத காரணங்களால் பல அனானி மற்றும் சில நண்பர்களின் பின்னூட்டங்களை வெளியிடவில்லை.. மன்னிக்கவும்
கருத்துக்களால் உடன்படுவோம், முரண்படும் இடத்தில் மோதுவோம், ஆனாலும் ஆரோக்கியமாகவே...
நன்றி
pattapatti sir.adhu nan illa.
அவருக்கு பப்ளிசிட்டி குடுக்கிறதே உங்களுக்கெல்லாம் வேலையா போச்சி.. அவர் அவ்ளோ வொர்த் இல்லைன்னு இன்னுமா உங்களுக்கெல்லாம் தெரியலை.?
வைகோ நெடுமாறன் போன்ற அரசியல் வியாபாரிகளால் டோண்டு போன்றவர்களுக்கு இப்படி வக்கிரத்தை வெளிப்படுத்த தொடர்ந்து வாய்ப்பு.. சில நாதாரிகளுக்கு ஒரே பின்னூட்டத்தை பல பதிவுகளில் வெளியிட வாய்ப்பு என அமைந்துவிட்டது.. இந்த கும்பல் எல்லாம் திருந்த வாய்ப்பே இல்லை.. அவர்கள் மட்டும் இந்த அம்மையாரின் வருகையை அரசியலாக்க நினைக்காமல் பொத்திக் கொண்டு வீட்டிலேயே இருந்திருந்தால் அவர் திரும்பி செல்ல வேண்டிய சூழல் வந்திருக்காது. இவர்களை நம்பியா அவர் சிகிச்சைக்கு வந்தார்? எப்போதும் போல் இந்த துரோகிகள் வாயாலேயே கெடுத்துவிட்டனர்.
யாருங்க அவரு சஞ்சய் காந்தி
நீங்க நெறைய படிச்ச புத்திசாலி போல அதாவது நாம டோண்டு வை போல.ஒரு நோய்வாய் பட்ட ஒரு வயதான மூதாட்டி வருகிறார் அவருடிய வருகை ஒரு சிலருக்கு மட்டும் தெரியபடூத்த படுகிறது .அந்த ஒரு சிலர் தான் நீங்கள் குறிபிட்டவர்கள்.அவர்கள் வராமல் ஒரு இத்தாலிய சேலையை துண்டாக அணித்து கொண்டிருக்கும் ஒரு தமிழ் இன துரோகி வீட்டு ஏவல் ஆளா வந்திருப்பான் ?
உலக மகா புத்திசாலி சஞ்சய் காந்தி அவர்களே அந்த வயதான தாயின் வருகையை அரசியலாக்கியது இத்தாலியில் இருந்து இங்கே பிழைக்க வந்து இந்திய பேரரசை தனுடைய முந்தியில் முடிந்து வைத்திருக்கும் ஒருவரும் அவருக்கு தன்னுடைய மானத்தை அடகு வைத்து கள்ளத்தை ஒட்டி கொண்டிருக்கும் ஒரு தமிழ் இன துரோகி யும் தான். அங்கே அந்த தாய் வந்த போது தமிழ்நாடு காவல்துறைக்கு என்ன வேலை ? புத்திசாலி ,மேதாவி அடுத்தவர்களை நாதாரி என்று தூற்றும் மேதகு மானமிகு தன்மான சிங்கம் சஞ்சய் காந்தி அவர்களே.
உமா .கா ,திருவந்த புறம்
நான் யார்னு தெரிஞ்சி என்னத்த கிழிக்கப் போறிங்க திரு.உமா அவர்களே..( நல்லா வச்சிக்கிறானுங்கடா பேர் ) . நான் ஒளிந்துக் கொண்டு கருத்து சொல்லும் ஜந்துக்களை எல்லாம் நான் கண்டுக்கிறதில்லை. துணிவிருந்தால் அடையாளத்துடன் வா. விவாதிப்போம்.. இல்லை எனில்.....
கொடுமை! :-(
Post a Comment