போச்சே... ரெண்டாயிரம்


ஏழு மாசத்துக்கு முந்தி போன
எம்.எல்.ஏ புண்ணியத்துல
இந்த மாசம் வருதாமே
எங்கூருக்கு எடத்தேர்தலு..

தார்ரோடு போடுவாங்களாம்
தண்ணி நிக்காம வருமாம்
பொசுக்பொசுக்குனு போற கரண்டு
இனி பொழுதுக்கும் எரியுமாம்...

டிவி பொட்டி தருவாங்களாம்
வேட்டி சேல தருவாங்களாம்
துண்டு பீடி குடிச்சவங்கூட
சிகரெட்ட பொட்டியா வாங்குறான்

கெடா விருந்து, கர்நாடகா சரக்கு
ஊரு ஒன்னுகூடி பிடிகொடுக்காம பேசுனா
தலைக்கு ரெண்டாயிரம் ரூவாயாம்
ஊட்டுக்கு அஞ்சு லிட்டர் பெட்ரோலாம்

ஊரே கேளு நாடே கேளுன்னு
எல்லாரும் கொண்டாட இந்த
பாழாப்போன பெருசு இன்னொரு மாசம்
கழிச்சு செத்துருக்கக்கூடாதா!

___________________________________
நன்றி : யூத்புல் விகடன்

___________________________________

34 comments:

அகல்விளக்கு said...

நெற்களங்களில் உழைப்பது போய்த்தொலைந்து இன்று தேர்தல்களத்தில் உழன்று கொண்டிருக்கும் மக்களுக்கு...

நெத்தியடி...

Baiju said...

ஹை நான் தான் first...

Thenammai Lakshmanan said...

மிகவும் அருமை கதிர் வோட்டுப் பெட்டியின் ரூபமும்.. அரசியலின் சுயரூபமும்..
கடைசி வரி அருமை ...

ராமலக்ஷ்மி said...

விகடனில் இப்போதுதான் வாசித்தேன். நல்லா சொல்லியிருக்கீங்க.

திருநாவுக்கரசு பழனிசாமி said...

//பாழாப்போன பெருசு இன்னொரு மாசம்
கழிச்சு செத்துருக்கக்கூடாதா!//

"வட போச்சே"...

vasu balaji said...

அல்லாம் சொல்லிபோட்டு தேர்தலன்னிக்கி, எண்ணிக்கையன்னிக்கி குடுக்கற பிரியாணி கோட்டரு உட்டுபுட்டீங்களே!அந்த கணக்குல ஆட்டைய போட்டுட்டாங்களோ!

ரோகிணிசிவா said...

ம்ம்ம்

Chitra said...

யூத்புல் விகடனில் வெளியான கவிதைக்கு, பாராட்டுக்கள்.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

அக்கக்கனு...இருக்கு கதிர்.

கலக்கல்!!

பனித்துளி சங்கர் said...

///////தார்ரோடு போடுவாங்களாம்
தண்ணி நிக்காம வருமாம்
பொசுக்பொசுக்குனு போற கரண்டு
இனி பொழுதுக்கும் எரியுமாம்...

டிவி பொட்டி தருவாங்களாம்
வேட்டி சேல தருவாங்களாம்
துண்டு பீடி குடிச்சவங்கூட
சிகரெட்ட பொட்டியா வாங்குறான் /////////


இந்த தருணங்களில் மட்டும் எப்படியோ நாம் உறங்கி போகின்றோம் . என்ன செய்வது எல்லாம் பணம் செய்யும் மாயம் .

cheena (சீனா) said...

அன்பின் கதிர்

விகடனில் வெளியானதற்கு பாராட்டுகள் கலந்த நல்வாழ்த்துகள்

கவிதை அருமை - எண்ணம் ஆதங்கம் நன்று

என்ன செய்வது ... காலத்தின் கோலம் - தவிர்க்க இயலவில்லை

நல்வாழ்த்துகள் கதிர்
நட்புடன் சீனா

அம்பிகா said...

கவிதையில் குறிப்பிட்ட அத்தனையும் இடைதேர்தல்களின் போது நடக்கின்றன. போகிற போக்கை பார்த்தால் எப்படா நம்ம
M.L.A.போய் சேருவாருன்னு மக்கள் எதிர்பார்க்க ஆரம்பித்து விடுவார்கள்.

Paleo God said...

ஊரே கேளு நாடே கேளுன்னு
எல்லாரும் கொண்டாட இந்த
பாழாப்போன பெருசு இன்னொரு மாசம்
கழிச்சு செத்துருக்கக்கூடாதா!//

ப்ச்..!

அவனுங்க பிடிச்சிருக்குற நாடிய, சரியா பிடிச்சீங்க கதிர். என்னிக்குத்தான் விடுதலையோ??

அன்பரசன் said...

கலக்கல் தல.

காமராஜ் said...

அடிசக்கை.
என்னா எள்ளல் கதிர்.

நாங்க இந்த கான்செப்ட்ல
ஒரு குறும்படம் துவக்கினோம்.
ப்ச்...முடிக்கல.

க.பாலாசி said...

தேர்தலைப்பொருத்தமட்டில் எனக்கொரு ஆதங்கமிருப்பதுண்டு... ஒரு நியாயஸ்தன் போடும் ஓட்டு 10 அறிவிலிகளால் அமிழ்ந்துவிடுகிறதேயென்று.... பணத்திற்கு வாய்ப்பிளக்கும் பிணமாக எத்தனை அடிமைகளிங்கே....

ஆதங்கத்தின் வெளிப்பாடு கவிதையில் புரிகிறது....

யூத்புல் விகடனுக்கு வாழ்த்துக்கள்....

சீமான்கனி said...

இங்கயும் ஒட்டு போடணுமே...விகடன்!! வாழ்த்துகள்...ஐ...வட்டாரமொழி கவிதை அரிகள் அனைத்தும் அருமை அண்ணே...

பிரபாகர் said...

ஒரு பேரிறப்பு, ஒரு பெரிசிறப்பு.... இரண்டையும் இணைத்து இரண்டாயிரம் இழப்பு என சொன்னது மிக சிறப்பு!

பிரபாகர்...

ஜோசப் பால்ராஜ் said...

ஹ்ம்ம்ம்ம்ம்ம்
எங்க தொகுதியிலயும் தான் எம் எல் ஏ இருக்காரு......

தாராபுரத்தான் said...

நாம் செய்கின்ற தப்பை நாமே எழுதி படித்து சிரித்து மகிழ வேண்டியதுதான்.

பழமைபேசி said...

ஆசிரியர் க.பாலாசி அவர்களை வழி மொழிகிறேன்.

ஆசிரியர் க.பாலாசி அவர்களோட குசும்புக்கு அவரோட பின்னூட்டங்களைத் தொடருங்கள் அனைவரும்!

Anonymous said...

பெருசுக்காக வருந்தப்படற உங்க மனசும் ரொம்ப பெரிசு தாங்க கதிர்....
உண்மையை இப்படி புட்டு வைக்க கூடாதும்மா தப்பு சாமி கண்ணை குத்திடும்.......

Ahamed irshad said...

வரிகள் உண்மை...

ஹரிணி அம்மா said...

கெடா விருந்து, கர்நாடகா சரக்கு
ஊரு ஒன்னுகூடி பிடிகொடுக்காம பேசுனா
தலைக்கு ரெண்டாயிரம் ரூவாயாம்//

யதார்த்தம்!!

நாமக்கல் சிபி said...

அருமையான ஆதங்கம்!

பார்த்து சூதனமா இருங்கப்பூ!

ஆட்டோ வந்துடப்போவுது!

Rajan said...

அவ்வ்வ்வ் ! போச்சே போச்சே

Dr. Srjith. said...

நல்ல பகிர்வு நண்பரே தொடர்ந்து எழுதுங்கள்

கலகலப்ரியா said...

நச்சுன்னு இருக்கு கதிர்...

இளங்கோ said...

// பாழாப்போன பெருசு இன்னொரு மாசம்
கழிச்சு செத்துருக்கக்கூடாதா!//

:) வடை போச்சே.. !

'பரிவை' சே.குமார் said...

பணப்பெட்டியின் அடியில்தான் இன்று ஓட்டுப் பெட்டி அகப்பட்டுக்கிடக்கிறது.
அன்றாடங்காச்சியும் அடிக்கடி வரவேண்டும் தேர்தல் திருவிழா என்கிறான்.
ஆள்பவனே செலவழிக்கும் லட்சங்களை கோடிகளாக்கும் லட்சியத்தில்...

நாளைய தேசத்தில் மலிவுவிலை தேர்தலால் மனிதம் மலிந்து மட்டுமல்ல மரித்தும் போகும்.

உங்கள் கவிதை அருமை கதிர்.

YUVARAJ S said...

அடுத்தவ குறை சொல்லுவது உங்க உப தொழிலா?

எதுக்கு சார் இந்த வெட்டி ஆதாங்கம்? ஒரு பைசாக்கு புன்னியமில்லாத ஆதங்கம்.

நீங்க தேர்தல்ல நின்னு, மக்களுக்கு புத்தி சொல்லுங்க. "மக்களே மக்களே, நீங்க காசு வாங்காம வோட்டு போடுங்க. அப்போ தான் எங்கள மாதிரி படிச்சவங்க, அரசியலுக்கு வருவாங்க"

அத விட்டுபுட்டு சும்மா பெனாத்துறீங்க.

அண்ணன் தாரபுரத்தான் கருத்தை நான் வழிமொழிகிறேன்

//நாம் செய்கின்ற தப்பை நாமே எழுதி படித்து சிரித்து மகிழ வேண்டியதுதான்//.

மார்க்கெட் கொஞ்சம் டல்லா இருக்கு. கம்ப்யூட்டர் திரைய இன்னும் நல்ல உத்து பாருங்க. இப்படி வெட்டித்தனமா எழுதுனா சீத பேதி கணக்கா புடிங்கிரும். ஒரு சோடா கூட விக்க முடியாது.

Radhakrishnan said...

:) எதிர்பார்ப்புகள் எல்லா இடத்திலும் இருக்கத்தான் செய்கிறது, அது மரணமெனினும் கூட.

Deepak Kumar Vasudevan said...

>>பாழாப்போன பெருசு இன்னொரு மாசம்
கழிச்சு செத்துருக்கக்கூடாதா

உண்மையில் மரித்தது ஜனநாயகம் தான். வென்றுள்ளது பண நாயகம்.

Unknown said...

இவ்ளோ நல்லது நடக்கும்னா எடத்தேர்தல் வர்றது தப்பில்லன்னுதான் தோணுது....