பயணங்கள்


பயணம் 1:
அவசரமான உன் வெளியூர்ப் பயணம்
பயணச்சீட்டு, பணம், பற்பசை, சீப்பு,
சோப்பு, பவுடர், பூட்டு, சார்ஜர், கண்ணாடி
போர்வை, எதற்கும் கூடுதலாய் உடை
திரும்ப திரும்ப நினைவூட்டுகிறேன்
அலுத்துக்கொள்கிறாய் எல்லாம் இருப்பதாய்
வண்டி நகர்ந்த பின் வெற்று மார்பில் உணர்கிறேன்
நினைவூட்டாமலே நீ எடுத்துப்போனதை

பயணம் 2:
நியாயங்களின் இயலாமைகளும்
அநியாயங்களின் களிப்புகளும்
சன்னலோரப் பயணத்தின்
எதிர்காற்று கலைக்கும் கேசமாய்
வளைத்து ரசிக்கிறது நம்பிக்கை நாணலை...
ஒரு போதும் கவலையில்லை
வளைந்த வேகத்தில் நிமிரும் நாணலுக்கு...

பயணம் 3:
நேசம் தொலைந்த நெருக்கத்தில்
உராய்வின் எரிச்சல் வியர்வை ஈரத்தில்
மூன்றாம் வகுப்பு பெட்டிப் பயணத்தில்
உருவாகும் பொதுவுடமைத் தத்துவம்
யாரோ எழ யாரையோ தள்ளித்தாவிய
சன்னலோர இருக்கையில்
கட்டியணைக்கும் காற்றின் காதலில்
சட்டெனெ காணாமல் போவதேனோ?

______________________________________

42 comments:

கலகலப்ரியா said...

நன்று... நன்று.. நன்று....

vasu balaji said...

/அலுத்துக்கொள்கிறாய்.. எல்லாம் இருப்பதாய்
நினைவூட்டாமலே எடுத்துப்போனதை
பேருந்து கிளம்பிய பின்
வெற்று மார்பில் உணர்கிறேன்/

வந்து கிழிக்கப் போறாங்க. வச்சிட்டு போனத என்ன பண்ணன்னு. அருமை:)

/எதிர்காற்று கலைக்கும் முடியாய்வளைத்து ரசிக்கிறது நம்பிக்கை நாணலை...ஒரு போதும் கவலையில்லைவளைந்த வேகத்தில் நிமிரும் நாணலுக்கு.../

நன்று

/பொதுவுடமைத் தத்துவம்யாரோ எழ யாரையோ தள்ளித்தாவியசன்னலோர இருக்கையில்கட்டியணைக்கும் காற்றின் காதலில்சட்டெனெ காணாமல் போவதேனோ?/

நச்

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

பயணம் 3: பல முறை நானே அனுபவித்திருக்கிறேன். நினைத்திருக்கிறேன். பொதுவுடமைத் தத்துவம் உடைவதைப் பற்றி எழுதியிருப்பது ரசிக்கவைக்கிறது. இது, பேருந்து நெரிசலிற்கும் பொருந்தும்.

பயணம் 1: அழகு.

கலகலப்ரியா said...

மீ த பர்ஸ்ட்டு....

அரசூரான் said...

பயண கவிதை 2, உங்க மாப்பு பழமைக்குத்தானே? இந்திய பயணத்திற்க்கு பிறகு இப்ப நாணல் மாதிரி நிமிர்ந்து நிக்கிறாருங்கோ... மூன்று பயணமும் அருமை

Anonymous said...

ம்ம்ம். நடக்கட்டும் :))

பழமைபேசி said...

//சன்னோலரப் பயணத்தின்//

சன்னலோரப்...

அண்ணாமலையான் said...

ரொம்ப நல்லாருக்கு

ஜெ.ஜெயமார்த்தாண்டன் said...

முதல் கவிதை அழகு

Toto said...

ப‌ய‌ண‌ம் 3 ரொம்ப‌ அருமைங்க‌..

-Toto

பத்மா said...

அட்டகாசம் ..ஏதும் மறந்து விட்டு விட்டு போகலையா

க ரா said...

மூண்றும் அருமை. முதல் மிகவும் அருமை

ரோகிணிசிவா said...

சன்னலோர இருக்கையில்
கட்டியணைக்கும் காற்றின் காதலில்-சில்லயென வீசும் பூங்காற்று !
அருமையான வார்த்தை பயணம் எல்லா கவிதைகளும்!


எல்லாம் சரி ,தங்கமணி எல்லா வார வெள்ளிக்கிழமையும் ஊருக்கு போறது .......?
no thangamani enjoy till two
திட்டத்தின்படி (நன்றி-கேமரா பில்ட்ப்பு பதிவு)கட்டாயபடுத்தி ,பஸ் ஏத்தி விடுவீங்க போல !

பா.ராஜாராம் said...

பயணம் ஒண்ணு,பயணம் மூணு,பயணம் ரெண்டு கதிர்!

சீமான்கனி said...

பயணம் மூன்றும் அழகு அண்ணே...வார்த்தைகள் தேடுகிறேன்....

Chitra said...

மூன்றாம் வகுப்பு பெட்டிப் பயணத்தில்
உருவாகும் பொதுவுடமைத் தத்துவம்

.........சரிதான்.

பயணக் கவிதைகள் அத்தனையும் அருமை.

ஆரூரன் விசுவநாதன் said...

ம்ம்ம்ம்.......

புலவன் புலிகேசி said...

//சன்னோலரப் பயணத்தின்
எதிர்காற்று கலைக்கும் கேசமாய்
வளைத்து ரசிக்கிறது நம்பிக்கை நாணலை...//

நான்ய்ம் ரசித்திருக்கிறேன்..ஆனால் உங்களைப் போல் எழுதத் தோன்றவில்லை..அழகாய் வடித்திருக்கிரீர்கள்..

Anonymous said...

//வண்டி நகர்ந்த பின் வெற்று மார்பில் உணர்கிறேன்
நினைவூட்டாமலே நீ எடுத்துப்போனதை//

r u in love kathir.....அட தங்கமணி மேலத்தான்ப்பா....

Anonymous said...

முதல் பயணம் சுகமானது பயணிப்பவர் மட்டுமே உணரக்கூடிய உணர்வு....எவ்வளவு சாதாரணமா சொல்லிட்டீங்க ஒரு அசாதாரண உணர்வை.....

Anonymous said...

//நியாயங்களின் இயலாமைகளும்அநியாயங்களின் களிப்புகளும்சன்னோலரப் பயணத்தின்எதிர்காற்று கலைக்கும் கேசமாய்வளைத்து ரசிக்கிறது நம்பிக்கை நாணலை...ஒரு போதும் கவலையில்லைவளைந்த வேகத்தில் நிமிரும் நாணலுக்கு...//

ரசிப்பும் உவமையும் மிக அழகு....

Anonymous said...

நேசம் தொலைந்த நெருக்கத்தில்உராய்வின் எரிச்சல் வியர்வை ஈரத்தில்மூன்றாம் வகுப்பு பெட்டிப் பயணத்தில்உருவாகும் பொதுவுடமைத் தத்துவம்யாரோ எழ யாரையோ தள்ளித்தாவியசன்னலோர இருக்கையில்கட்டியணைக்கும் காற்றின் காதலில்சட்டெனெ காணாமல் போவதேனோ?

பயணங்களில் அனுபவம் அந்த நேரத்திற்கு ஏற்றவாறு அதை ரசிக்கவும் வெறுக்கவும் தோன்றும்... நிறைய பயண அனுபவமா கதிர்? இத்தனை சுவாரஸ்யமாய் கவிதையில் பயணித்து இருக்கிறீர்கள்....

Thenammai Lakshmanan said...

முதல் பயணம் அருமை கதிர்

*இயற்கை ராஜி* said...

//வண்டி நகர்ந்த பின் வெற்று மார்பில் உணர்கிறேன்
நினைவூட்டாமலே நீ எடுத்துப்போனதை//

mmm... sari...sari...:-)

அன்புடன் அருணா said...

மூன்று பயணங்களும் ரசிக்கும் படியிருந்தது.பூங்கொத்து!

செ.சரவணக்குமார் said...

பயணம் அருமை கதிர் அண்ணா. மூன்றும் முத்துக்கள்.

அகல்விளக்கு said...

//வண்டி நகர்ந்த பின் வெற்று மார்பில் உணர்கிறேன்
நினைவூட்டாமலே நீ எடுத்துப்போனதை//

அருமை அண்ணா...

தாராபுரத்தான் said...

மகனே உன் சமத்து.காத்து நல்லா வரணுமே.

ஈரோடு கதிர் said...

நன்றி @@ கலகலப்ரியா

நன்றி @@ வானம்பாடிகள்

நன்றி @@ செந்தில்வேலன்
நன்றி @@ அரசூரான்

நன்றி @@ மயில்

நன்றி @@ பழமைபேசி

நன்றி @@ அண்ணாமலையான்

நன்றி @@ ஜெ.ஜெயமார்த்தாண்டன்

நன்றி @@ Toto

நன்றி @@ padma

நன்றி @@ க.இராமசாமி

நன்றி @@ rohinisiva

நன்றி @@ பா.ராஜாராம்

நன்றி @@ seemangani

நன்றி @@ Chitra

நன்றி @@ ஆரூரன் விசுவநாதன்

நன்றி @@ புலவன் புலிகேசி

நன்றி @@ தமிழரசி

நன்றி @@ thenammailakshmanan

நன்றி @@ இய‌ற்கை

நன்றி @@ அன்புடன் அருணா

நன்றி @@ செ.சரவணக்குமார்

நன்றி @@ அகல்விளக்கு

நன்றி @@ தாராபுரத்தான்

Unknown said...

" நேசம் தொலைந்த நெருக்கத்தில்
உராய்வின் எரிச்சல் வியர்வை ஈரத்தில்
மூன்றாம் வகுப்பு பெட்டிப் பயணத்தில்
உருவாகும் பொதுவுடமைத் தத்துவம் "

அழகாக சொல்லி சொல்லி இருக்கிறீர்கள் கதிர்.
அழகு,அருமை.

மதுரை சரவணன் said...

veru maarpil unarkiren . kavithai arumai . vaalththukkal.

கே. பி. ஜனா... said...

இனிமை!அருமை!புதுமை!

பனித்துளி சங்கர் said...

/அலுத்துக்கொள்கிறாய்.. எல்லாம் இருப்பதாய்
நினைவூட்டாமலே எடுத்துப்போனதை
பேருந்து கிளம்பிய பின்
வெற்று மார்பில் உணர்கிறேன்/


ஆஹா மிகவும் அருமை வகையில் . வாழ்த்துக்கள் நண்பரே !

அகநாழிகை said...

மூன்று கவிதைகளும் அருமை கதிர்.
வாழ்த்துகள்.

க.பாலாசி said...

பயணம்1: காதல் பயணம்

பயணம்2: உடையாத நம்பிக்கை

பயணம்3: தனக்கு மிஞ்சிதான தானமும் தர்மமும்... சோ...

Baiju said...

Arumayana Kavithaigal

சசிகுமார் said...

அருமையான பதிவு,நீங்கள் தொடர்ந்து எழுதி மேலும் பல சாதனைகள் புரிய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

அன்புடன் நான் said...

பயணம்..... சிலிர்ப்பு.

ஈரோடு கதிர் said...

நன்றி @@ அபுல் பசர்

நன்றி @@ Madurai Saravanan

நன்றி @@ K.B.JANARTHANAN

நன்றி @@ வாசகனாய் ஒரு கவிஞன் சங்கர்

நன்றி @@ அகநாழிகை

நன்றி @@ க.பாலாசி

நன்றி @@ Baiju

நன்றி @@ சசிகுமார்

நன்றி @@ சி.கருணாகரசு

Venkat M said...

Kathir - Who's photo is that in the profile.... (old is gold ...)

Thamira said...

கவிதைத்தன்மை குறைவாக இருந்தாலும் (பின்னே விமர்சிப்போம்ல.. நாங்களும் கவிஞர்தான்) உணர்வுகள் சிறப்பானவை. அதுவும் முதல் கவிதை ரொமான்ஸ்.!

(தலையில் முடி இல்லாத யூத்துகள் ரொமான்ஸ் கவிதை எழுத தடை போடணூம்யா முதலில்)

Rathnavel Natarajan said...

அருமை சார்.