ஒரு கேமராவும், ஓவர் பில்டப்பும்

நீண்ட நாட்களாக ஒரு கேமரா வாங்கனும் ஆசை. ஆசைப்பட்டதெல்லாம் செரி, ஆனா அதுக்கு காசு வேணுமேன்னு நானும் சும்மா இருந்தேன். அதுவும் வலையுலகத்துக்கு வந்தபிறகு ஆளாளுக்கு போட்டோ போடுறதப் பார்த்துட்டு செரி நாமளும் ஒரு கேமரா வாங்கிடாலாம்னு ஒரு நாள் பேச்சுவாக்குல, நண்பர் சிங்கப்பூர் பிரபாகரிடம் “பிரபா ஒரு கேமரா வாங்கனும், ஏதாவது ஐடியா கொடுங்கன்னு கேட்டேன்”.

“பொறுங்க கதிர், நான் இங்கேயிருந்து உங்களுக்காக நல்லதா ஒன்னு வாங்கி அனுப்புறேன்”னு சொன்னார், கிட்டத்தட்ட நான் அத மறந்துட்ட்ட்ட்ட்ட்ட்ட நேரத்துல, (அட இப்போதான் மூனாவது டேர்ம் பீஸ் கட்டிமுடிச்சம்ல).

நான்கு நாட்களுக்கு முன் போன் செய்த பிரபாகர் ”கதிர் உங்களுக்காக ஒரு கேமரா வாங்கியிருக்கேன், பிரண்டுகிட்டே கொ்டுத்து அனுப்புறேன், சென்னையில வானம்பாடி அய்யாகிட்ட கொடுக்கச் சொல்றேன், நீங்க கலக்ட் பண்ணிக்குங்க”.

”பிரபா அமௌண்ட் எங்க அனுப்பட்டும்”

“ஒரு பார்ட் பிரண்டோட அக்கவுண்ட் நெம்பர் தர்றேன் அதுல கட்டிடுங்க, மீதிய நான் உங்கள பாக்கும்போது கலக்ட் பண்ணிக்கிறேன்” என்றார்.

சரிடா... கைப்புள்ள பணத்த ரெடி பண்ணுன்னு ரெண்டு நாளா, என்னை நானே தயார் படுத்தும் போது... வானம்பாடிகிட்டே இருந்து ஒரு மெசேஜ் “மெயில் பாருங்கன்னு”

மெயில் பார்த்தா “சில்வர் கலரு ஜிங்குச்ச்சான்னு” கேமராவோட படத்தையும், அதோட விபரங்களையும் அனுப்பி.... சாமி சாமான் வந்துருச்சு... பணத்தை ரெடி பண்ணிக்கோங்க“ என்றிருந்தது.

இனி தவிர்க்க முடியாது, தப்பிக்க முடியாதுங்கிற நிலமையில “பிரபா, பாலாண்ணா கேமராவ வாங்கிட்டாராம், அக்கவுண்ட் நெம்பர் குடுக்கவே மாட்டேங்கிறீங்க(!!!!) கொடுத்தாத்தானே பணம் அனுப்ப முடியும், எப்படியாவது ஒன் வீக்ல அக்கவுண்ட குடுங்க பிரபா... அப்போதானே அமௌன்ட் ட்ரேன்ஸ்பர் பண்ணமுடியும்னு (எப்படியும் ஒருவாரம் கழிச்சுத்தான் அக்கவுண்ட் நம்பர் தருவாருன்னு (பிரபாகரை என்ன மாதிரி சோம்பேறின்னு நினைச்சு)) பந்தா காட்ட, இருங்க இப்போ அக்கவுண்ட் டீடெய்ல்ஸ் தர்றேன்னு சட்டுன்னு அனுப்பிட்டாரு.... அடக் கெரகமே ஜிமெய்ல் இவ்வ்வ்வளவு வே..க...மாவ்வ்...வா இருக்குது !!!... நாங்க டிசைன் பண்ணி புரூப் அனுப்பினா மட்டும் வரவேயில்லைனு பலதடவ  பிரச்சனையாகும், ஆனா பாருங்க, நாம பணம் கட்டனும்னா மட்டும் பொசுக்குன்னு உடனே வந்துருது”.

பிரபாகர் சொன்ன கணக்குல பணத்த டிரான்ஸ்பர் பண்ணிட்டு, சதாவுக்கு லவ் லட்டர் கொடுத்துட்டு நெஞ்ச நிமுத்தி நடந்த அந்நியன் விக்ரம் மாதிரி தொப்பையோட உதவியால நெஞ்ச நிமுத்தி வானம்பாடிக்கு போன போட்டு ”அண்ணா, இன்னிக்கு வண்டியில கொடுத்து விட்டுறீங்களான்னு (அது ஒரு ரகசிய சர்வீஸ், ரயிலு வண்டி டிரைவர் மூலமா பண்ற வேலை) ஆசையாய் கேட்க!! (அதுதான் காசு அனுப்பிட்டம்ல... அனுப்பிட்டம்ல)

”இல்லீங்க, ஞாயித்துக்கிழமை வைஃபும், தம்பியும் ஒரு வேலையா ஈரோடு வர்றாங்க அவங்ககிட்ட கொடுத்துவிடறேன்” என்றார். அவரோட தம்பி ஒரு இன்ட்ரஸ்டிங் கேரக்டர், அவர சந்திக்கிறது ரொம்ப சந்தோசம் கூடுதலா

இதுக்குள்ள இந்த கேமரா வாங்குற மேட்டர வீட்ல ப(நொ)ந்தாவ சொல்லிருந்ததால ஸ்கூல்ல இருந்து வந்தவுடனே நாலு நாலா, பாப்பா போன் பண்ணிகேட்க... இன்னிக்கு வந்துடும்டா குட்டின்னு சமாளிச்ச சோகம் எனக்குத்தானே தெரியும்...

எப்படியும் ஞாயித்துக்கிழமைதான் கேமரா வரப்போகுது, நாமதான் அவசரப்பட்டு 48 மணிநேரம் முன்னாடி பணத்த அனுப்பிட்டோம்ங்கிற சோகத்த தணிக்க ”என்ஜாய்! நோ தங்கமணி” திட்டத்தின் கீழ்(!!!! 2 ம்ணி வரைக்கும்), ஞாயித்துக்கிழமை காலையில 9 மணி வரைக்கும் தூங்கிட்டு எந்திரிச்சு பார்த்தா ஏழெட்டு மிஸ்டு கால், திருப்பி யாருண்ணு கூப்பிட்டா, நம்ம வானம்பாடியோட தம்பி...

ஆஹா... கேமரா வந்துடுச்சேன்னு அரைத் தூக்கத்துலேயே ஆர்வமா பேசினா, நாங்க இப்போ வெளியில இருக்கிறோம், மத்தியானம் கூப்பிடறோம் நீங்க வந்து வாங்கிக்கங்கன்னு சொன்னார்....

புஸ்ஸ்ஸ்ஸுன்னு காத்துப்போன பலூனா... மத்தியானம் வரைக்கும் ஆபிஸ் வேல பார்த்துட்டு, மாமியார் வீட்ல காத்துகிட்டிருக்கிற கோழிக்கறியா இல்ல கேமாராவான்னு பட்டிமன்றம் நடத்தினதுல கோழிக்கறி ஜெயிக்க (அவங்க எப்படியும் நைட் ட்ரெயினுக்குத்தான் கிளம்புவாங்கங்கிற தைரியத்துல) அங்க எஸ்கேப் ஆகிட்டேன். அங்கபோனா இடுப்புல கைய வச்சிகிட்டு கேமராவ வரவேற்க எங்க பாப்பா தயாரா நின்னுக்கிட்டிருந்திச்சு...

”இல்லடா குட்டி, வீட்டுக்கு போகும் போது வாங்கிக்கலாம்”னு ஒரு வழியா சமாளிச்சு, நல்ல்ல்ல்ல்லா சாப்பிட்டுட்டு, அரைத் தூக்கத்துல் ஆழ்ந்திருக்கும்போது போன், ”நாங்க நைட் கிளம்பனும், அதுக்கு முன்னாடி கொஞ்சம் ஷாப்பிங் இருக்கு நீங்க எதுக்கும் கேமராவ ஆறரை மணிக்குள்ள வந்து வாங்கிக்கங்க”னு சொல்ல, அவசர அவசரமா தூங்கிக்கிட்டிருந்த பாப்பாவ தூக்கி வண்டியில போட்டுக்கிட்டு பாதியில வரும்போது “ஏம்பா.. என்ன தூக்கத்துலயே தூக்கிட்டுப் போறீங்கன்னு கேட்க”

”குட்டிம்மா கேமரா வாங்கப்போறோம்டா”னு சொல்ல.... ”ஹைய்யா”னு வண்டிக்குள்ளேயே பாப்பா குதிக்க ஆரம்பிச்சது..

வரும் வழியில் வீடு, ”சரி ரெண்டு பேரையும் வீட்ல ட்ராப் பண்ணிட்டு நான் போய் கேமரா வாங்கிட்டு வர்றேன்”னு சொல்ல ”அதெல்லாம் முடியாது நானும் வருவேன்”னு பாப்பா அடம்பிடிக்க. காரிலேயெ ரெண்டு பேரையும் காத்திருக்கச் சொல்லிட்டு அவங்க தங்கியிருந்த அறைக்குப் போய் கேமராவா பாக்ஸை வாங்கிட்டு காருக்கு வந்து சேர

பரபரப்பா காத்துக்கிட்டிருந்தா பாப்பா... அவசர அவசரமா பாக்ஸ பிரிச்சு ஒவ்வொண்ணா எடுத்துச்சுச்சு... ”அப்பா என்னென்னமோ இருக்கு கேமராவ காணோம்”

“ஏய்... இருக்கும் குட்டி, நல்லாப் பாரு”

”அப்பா, சி.டி இருக்கு, என்னமோ புக் இருக்கு, ஒயரெல்லாம் இருக்கு.... ம்ம்ம்ம்.. இருங்க இன்னொன்னு இருக்கே... இதுதான் கேமராவா!!!??”

”என்னங்க இது, மைசூர் சேண்டல் சோப் சைஸ்ல இருக்கு கேமரா” பத்தாததுக்கு ஊட்டுக்காரம்மாவோட டயலாக்.... நாலுநாளா குளிக்க சோப்பு வாங்கி வைக்க துப்பு இல்ல, இதுல சோப்பு மாதிரியாம்....

”அப்பா... இதுதான் கேமராவா”

”ஆமாங்குட்டி”

”இது உங்களுக்கே ஓவராத் தெரியல, இந்த கேமராக்குத்தான் சிங்கப்பூர், பிளைட்டு, மெட்ராசு, ட்ரெய்ன்னு..... இத்தன நாளா இந்த பில்டப் உட்டீங்களா? இதுல..... என்ன தூக்கத்துல வேற தூக்கிட்டு வந்தீங்களாக்கும்,

டமால்னு வெடிச்சமாதிரி இருந்துச்சு... அட இப்போத்தானே டயர் மாத்தினோம்னு அவசரமா கார் டயர பார்த்தா அங்க ஒன்னுமே ஆகல, அப்புறம்தான் தெரிஞ்சுது என்னோட இடது பக்க நெஞ்சுல வந்த புகையும், கருகல் வாசமும்

பொறுப்பி: பிரபாகர், வானம்பாடி ஏதாவது டேமேஜ் ஆகியிருந்தா பொறுத்தருள்க.  பிரபாகர் அனுப்பிய Panasonic DMC FS-42 கேமரா மிக சிறியதாக, அழகாக உள்ளது. படமும் தெளிவாக இருக்கிறது.

_____________________________________________________

58 comments:

பழமைபேசி said...

அஃகஃகா.... செரி படம் நாலு எடுத்து போடுங்க பாப்பம்!

vasu balaji said...

வெரயொன்னு போட்டா சொரயொன்னா முளைக்கும்னு சொலவடை..அப்பா குசும்பு அம்மா குசும்பு சேர்ந்த சின்ன குசும்பு கமெண்டு..யப்பா..என்னா பில்டப்பு:))

மாயாவி said...

சரி.........சரி மனசை தளரவிடாம
கொஞ்சம் படங்கள போடுங்க.
முடிஞ்சா கேமரா படத்தையும் போடுங்க.

cheena (சீனா) said...

கதிரு, கவலை வேண்டாம் = நட்பு பிரபா சரியாத்தான் வாங்கி அனுப்பி இருப்பாரு - கொஞ்சம் குறிப்புகளை எல்லாம் படிங்க - பயனபடுத்தத் துவங்குக - நல்ல காமெரா மேன் ஆகிடலாம் சீக்கிரமே - சரியா

நல்வாழ்த்துகள் கதிர்

Chitra said...

“பிரபா ஒரு கேமரா வாங்கனும், ஏதாவது ஐடியா கொடுங்கன்னு கேட்டேன்”.

............ஒரு ஐடியா கேட்டதுக்கு, இந்த பாடு உங்களுக்கு............ ஹா,ஹா,ஹா...

Paleo God said...

அது சரி.. அப்ப ரெட் ஒன் கேமெரா தான் அடுத்த பார்சல்..:))

பத்திரம் ரெடி பண்ணிக்குங்க ::))

------

பழமைபேசி said...
அஃகஃகா.... செரி படம் நாலு எடுத்து போடுங்க பாப்பம்!

ரிப்பீட்டு..!

Venkat M said...

Kathir - Congrats for your new purchase.... you are ahead of me...

சரவணகுமரன் said...

ஹா ஹா ஹா :-)

பழமைபேசி said...

//Venkatesan said...
Kathir - Congrats for your new purchase.... you are ahead of me...
//

வெங்கி, என்ன பீட்டரு? நெஜமா உங்ககிட்ட கேமரா இல்ல??

இருங்க அடுத்தவாரம் வந்து பாக்குறேன்.... இல்ல, இருக்குறது ரெண்டும் பொடியன்களுக்குன்னு ஆயிப் போச்சா??

கலகலப்ரியா said...

//அடக் கெரகமே ஜிமெய்ல் இவ்வ்வ்வளவு வே..க...மாவ்வ்...வா இருக்குது !!!... நாங்க டிசைன் பண்ணி புரூப் அனுப்பினா மட்டும் வரவேயில்லைனு பலதடவ பிரச்சனையாகும், ஆனா பாருங்க, நாம பணம் கட்டனும்னா மட்டும் பொசுக்குன்னு உடனே வந்துருது”.//

இதுதாம்பா வாழ்க்கை... ஹும்..

//நாலுநாளா குளிக்க சோப்பு வாங்கி வைக்க துப்பு இல்ல, இதுல சோப்பு மாதிரியாம்....//

அவங்களுக்கு தெரியுமில்ல கதிரு குளிக்கிற லட்சணம்... அடுத்த வருஷம் வாங்கிடுவாங்க...

நல்லா இருக்குடா சாமி கூத்து... குட்டி... நீதான் உங்கப்பாவ இப்டி குட்டி குட்டி டமால் ஆக்கணும்...

Cable சங்கர் said...

சிறிசு,பெரிசுன்னெல்லாம் கேமராவுல கிடையாது.. உங்களுக்கு புரியுதா..:)

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

ம்ம்ம்... நடத்துங்க :))

ஆனா பில்டப்பு கொஞ்சம் ஓவர் தான்.

சீமான்கனி said...

கொஞ்சம் ஓஓஒவர்.... தே...

அஃகஃகா.... செரி படம் நாலு எடுத்து போடுங்க பாப்பம்!
அதே..அதே..,

ஆரூரன் விசுவநாதன் said...

நயமாத்தான் வாங்கியிருக்கீங்க அப்பு....

சும்மா சொல்லப்படாது.....சிரிச்சு மாளல

sathishsangkavi.blogspot.com said...

உங்க பதிவில் இனி படமா பார்க்கலாம்....

Venkat M said...

// பழமைபேசி said...
Venkatesan said...
Kathir - Congrats for your new purchase.... you are ahead of me...

வெங்கி, என்ன பீட்டரு? நெஜமா உங்ககிட்ட கேமரா இல்ல?? //

Hi Pazhamaipesi... erally i don't know how to type in tamil.. (but am higher in tamil typewriting [don't laugh].. Moreover, am not the Venki you are referring... Any how one more friend for me...

புலவன் புலிகேசி said...

காலைலதான் பிரபாகர் அண்ணன் கிட்டப் பேசுனேன்...அதை வான்க அவர் பட்ட கஷ்டத்தையும் பதிஞ்சிருந்தாரு...ஐயா சொன்ன மாதிரி குசும்புதான் போங்க

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கேமரா கதை நல்லாருக்கு..புகைப்ப்டத்தோட , சீக்கிரம் படம் புடிச்ச கதை வருமென எதிர்பார்க்கிறோம்.. ;)

Unknown said...

வானம்பாடி சார் அனுப்புன கேமராவோட படத்தை இங்க போஸ்ட் பண்ணியிருந்தா நாங்களும் பாத்துட்டு வாழ்த்தியிருப்போம்ல?

ஆமா, அதென்னா கேமரான்னா சிங்கப்பூர்? அமெரிக்கா காரங்ககிட்டயெல்லாம் கேக்க மாட்டிங்களா?

Prathap Kumar S. said...

அண்ணே அதுல ரெண்டு படம் எடுத்துப்போடுங்க
அப்பத்தான் அது சிங்கப்பூர் கேமராவா இல்ல சிங்கநல்லூர் கேமராவான்னு...தெரியும்...

Anonymous said...

புத்திசாலிங்க அப்பு நீங்க இதுக்கு ஒரு திரைக்கதை எழுதி பதிவாக்கிட்டீங்க...

ம்ம்ம்ம் பாப்பா உங்களை கேள்வி கேட்ட நேரத்தில் டயராய் உடைந்த உள்ளத்தோடு அசடு வழிந்த உங்களை புது கேமராவில் படம் எடுத்து போட்டு இருந்தால் பதிவு இன்னும் சிறப்பாய் இருந்திருக்கும் போல..

Anonymous said...

//நாலுநாளா குளிக்க சோப்பு வாங்கி வைக்க துப்பு இல்ல, இதுல சோப்பு மாதிரியாம்....//

ஹிஹிஹிஹி சந்தோசம் தாங்கலை கதிர் நச்சுன்னு கேட்டு இருக்காங்க உங்க தங்கமணி....

Anonymous said...

//மத்தியானம் வரைக்கும் ஆபிஸ் வேல பார்த்துட்டு, மாமியார் வீட்ல காத்துகிட்டிருக்கிற கோழிக்கறியா இல்ல கேமாராவான்னு பட்டிமன்றம் நடத்தினதுல கோழிக்கறி ஜெயிக்க //

இதிலெல்லாம் நல்லா வெவரமாத் தான் இருக்கீங்க போல....

Anonymous said...

ச.செந்தில்வேலன் said...
ம்ம்ம்... நடத்துங்க :))

ஆனா பில்டப்பு கொஞ்சம் ஓவர் தான்.

கரெக்டா சொன்னீங்க செந்தில்...

பிரேமா மகள் said...

ஐயையோ. சும்மாவே கதிர் அங்கிளை கையில் பிடிக்க முடியாது. இனி ஊருல போற நாய் நரி முதல், பஸ் ஸ்டாண்டில் இருக்கிற குருவிக்காரன் வரை எல்லோரையும் போட்டோ எடுத்து பிளாக்-ல போடுவாரே?


பாவம் ஈரோடு-க்காரங்க.

க.பாலாசி said...

//”பிரபா அமௌண்ட் எங்க அனுப்பட்டும்”//

இதத்தான் வாயக்குடுத்து மாட்டிக்குறதுன்னு சொல்லுவாங்க...

//“ஒரு பார்ட் பிரண்டோட அக்கவுண்ட் நெம்பர் தர்றேன் அதுல கட்டிடுங்க, மீதிய நான் உங்கள பாக்கும்போது கலக்ட் பண்ணிக்கிறேன்”//

இதென்ன சின்னப்புள்ளத்தனமா??? வாங்கி குடுத்துட்டு காசு கேக்குறது...

//ஜிமெய்ல் இவ்வ்வ்வளவு வே..க...மாவ்வ்...வா இருக்குது !!!...//

இதெல்லாம் ரொம்ப கொடுமைங்க சார்...

//அவரோட தம்பி ஒரு இன்ட்ரஸ்டிங் கேரக்டர், அவர சந்திக்கிறது ரொம்ப சந்தோசம் கூடுதலா//

ஆமா வெண்ணை வாங்கிட்டு வந்தாரா???

//மாமியார் வீட்ல காத்துகிட்டிருக்கிற கோழிக்கறியா இல்ல கேமாராவான்னு பட்டிமன்றம் நடத்தினதுல கோழிக்கறி ஜெயிக்க//

அதான...வரலாறு முக்கியமாச்சே...

//”என்னங்க இது, மைசூர் சேண்டல் சோப் சைஸ்ல இருக்கு கேமரா” //

ஆகா...பொருள குறைச்சிட்டாங்களா????

//இது உங்களுக்கே ஓவராத் தெரியல, இந்த கேமராக்குத்தான் சிங்கப்பூர், பிளைட்டு, மெட்ராசு, ட்ரெய்ன்னு..... இத்தன நாளா இந்த பில்டப் உட்டீங்களா? இதுல..... என்ன தூக்கத்துல வேற தூக்கிட்டு வந்தீங்களாக்கும்,//

கேமரா வாங்குறங்கற பேர்ல என்னா டார்ச்சர் பண்ணியிருக்கீங்க...

ம்ம்ம்... கேமரா வாங்கியாச்சு....அடுத்ததா பிட், ஃபிளிக்கரு....ம்ம்ம்....நடத்துங்க....

KARTHIK said...

டிரீட் எப்போ தல
அத சொல்லலையே

கலக்குங்க :-))

பிரபாகர் said...

கதிர்,

ம்... வலிக்குது, வேணாம்... வேலைப்பளுவால் சோர்ந்திருந்த என்னை சுறுசுறுப்பாக்கி எழுத வெச்சிட்டீங்க! நன்றி.

பிரபாகர்.

வரதராஜலு .பூ said...

:-)

Sanjai Gandhi said...

அதுல ஒரு படம் எடுத்துப் போடறதுக்கு என்னவாம்?

Anonymous said...

அய்ய்யோ நீங்களும் இனி படமா போடுவீங்களா? :)

ஜாபர் ஈரோடு said...

\\சிறிசு,பெரிசுன்னெல்லாம் கேமராவுல கிடையாது.. உங்களுக்கு புரியுதா..:)\\

எனக்கு புரியல....

ஈரோடு கதிர் said...

நன்றி @@ பழமைபேசி
சரிங்க மாப்பு

நன்றி @@ வானம்பாடிகள்
அது செரி

நன்றி @@ மாயாவி
கண்டிப்பாக

நன்றி @@ cheena (சீனா)
கேமரா நல்லாத்தாங்க இருக்கு
என்னோட நெலமதான் டரியலாயிடுச்சு

நன்றி @@ Chitra

நன்றி @@ ஷங்கர்
பத்திரம் எல்லாம் அப்பாகிட்ட பத்திரமா இருக்குங்க

நன்றி @@ Venkatesan

நன்றி @@ சரவணகுமரன்

நன்றி @@ கலகலப்ரியா
ஆத்தா.... ஏன் இந்தக் கொலவெறி

நன்றி @@ Cable Sankar
அய்யோடா.... உள்குத்தோ


நன்றி @@ ச.செந்தில்வேலன்
கொஞ்சம் இல்லீங்க... ரொம்ம்ம்ம்ப

நன்றி @@ seemangani

நன்றி @@ ஆரூரன் விசுவநாதன்
இருங்க முயல்குட்டி பையன டெவலப் பண்றேன்

நன்றி @@ Sangkavi
படமான்னு நீங்கதான் சொல்லோனும்


நன்றி @@ புலவன் புலிகேசி
ஆமாங்க பிரபா... ரொம்ப சிரமப்பட்டிருக்கார்

நன்றி @@ முத்துலெட்சுமி/muthuletchumi

நன்றி @@ முகிலன்
அமெரிக்காவில் இருக்கும் முகிலனுக்கு ஒரு லேப்டாப் ஆர்டர்

நன்றி @@ நாஞ்சில் பிரதாப்
ஆஹா.... பிரபா... ஐயேம் சாரிநன்றி @@ தமிழரசி
அல்ல்ல்லோவ்... சோப்பு மேட்டர் நான் சொன்னது...

நன்றி @@ பிரேமா மகள்
நீங்க எப்போ லண்டன் போறிங்க!!!


நன்றி @@ க.பாலாசி
//ஆமா வெண்ணை வாங்கிட்டு வந்தாரா???//

இல்ல பாலாசி... வெண்ணைதான் வந்தாரு

//பிட், ஃபிளிக்கரு....//
இன்னுமாடா கைப்புள்ள உன்ன உலகம் நம்புது

நன்றி @@ கார்த்திக்
நீங்க் எப்போ தந்தாலும், நான் ரெடி கார்த்திக்

நன்றி @@ பிரபாகர்
மிக்க நன்றி பிரபா

நன்றி @@ வரதராஜலு

நன்றி @@ SanjaiGandhi™
எடுக்கத் தெரிஞ்சா வஞ்சன பண்றோம்

நன்றி @@ மயில்
யாமிருக்க பயமேன்

நன்றி @@ jaffer erode
கேபிள் நெம்பர் தரட்டுமா!

Iyappan Krishnan said...

http://photography-in-tamil.blogspot.com pakkam vaangka. you can learn lot. also participate in upcoming contests in PiT

புது கேமராக்கு வாழ்த்துகள்.

சிநேகிதன் அக்பர் said...

அப்படியே ரெண்டு போட்டோ எடுத்து போட்டிருக்கலாம் பாஸ்.

நிகழ்காலத்தில்... said...

http://www.dpreview.com/reviews/specs/Panasonic/panasonic_dmcfs42.asp

எங்கள போட்டா புடிங்க.. அந்த போட்டா அழகா இருந்தா இது நல்ல கேமரா..

இல்லைன்னா அப்புறம் என்ன குத்தம் சொல்லப்படாது :)))))))))

Unknown said...

மாமியார் வீட்டு கோழிக்கறி கூட எது போட்டிக்கு வந்தாலும் மாமியார் வீட்டு கோழிக்கறி தான் ஜெயிக்கும்கிறது அடுத்த வரிய படிக்கிறதுக்கு முன்னாடியே தெரிஞ்சிடுச்சுங்கோவ்…! புதுக் கேமராவுல நல்ல, நல்ல படமா புடுச்சு போடுங்க !

பனித்துளி சங்கர் said...

ஆஹா இது நல்லா இருக்கே . அந்த கேமராவில் எடுத்த படங்கள் எதுவும் இல்லையா ?

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

சார்!கார் கூட சத்தமில்லாம வாங்கிட்டு,காமிரா வாங்குனதுக்கு இவ்.........ள நீளம்மான பதிவு.ஆனா சுவையான பதிவு சார்

*இயற்கை ராஜி* said...

// இத்தன நாளா இந்த பில்டப் உட்டீங்களா?//

இந்த மாதிரி பில்டப்ல தாண்டா குட்டி அப்பா வாழ்க்கையே ஓட்டிட்டு இருக்காரு.. நீ வளர வளர தெரிஞ்சிக்குவே:-)

*இயற்கை ராஜி* said...

//கிட்டத்தட்ட நான் அத மறந்துட்ட்ட்ட்ட்ட்ட்ட நேரத்துல//

தூக்கத்ததுல ஏதோ கேமரா, பிரபாகர்ன்னு எல்லாம் உளருரீங்கன்னு அன்னிக்கு ஒரு நாள் பாப்பா சொல்லுச்சே.. அது இதுதானா :-)

*இயற்கை ராஜி* said...

//கிட்டத்தட்ட நான் அத மறந்துட்ட்ட்ட்ட்ட்ட்ட நேரத்துல//

அப்போ பிரபாகர் அவ்ளோ லேட் பண்ணிடாருன்னு சொல்றீங்களா? (எப்படியோ கொளுத்திப் போடுறோமில்ல)

*இயற்கை ராஜி* said...

//எப்படியாவது ஒன் வீக்ல அக்கவுண்ட குடுங்க பிரபா... அப்போதானே அமௌன்ட் ட்ரேன்ஸ்பர் பண்ணமுடியும்னு //

அதுக்கு அப்புறம்ன்னா அமொண்ட் டிராண்ஸ்பர் ஆகாதா?

//டிசைன் பண்ணி புரூப் அனுப்பினா மட்டும் வரவேயில்லைனு //

உண்மையா அனுப்பினாதானே போகும்? சும்மானாச்சுக்கும் சமாளிபிகேஷன்க்கு சொன்னா?//அவர சந்திக்கிறது ரொம்ப சந்தோசம் கூடுதலா
//

உங்களுக்கு சந்தோஷம் .. அவருக்கு?

*இயற்கை ராஜி* said...

//அவசரப்பட்டு 48 மணிநேரம் முன்னாடி பணத்த அனுப்பிட்டோம்ங்கிற //

ஆமாம்..ஆமாம்.. ரொம்ப சீக்கிறம் அனுப்பிடீங்க‌

பத்மா said...

காமரா படம் எங்க ?

*இயற்கை ராஜி* said...

//என்ஜாய்! நோ தங்கமணி//

பாயிண்ட் நோட்டட.. போட்டுக் குடுக்க வேண்டிய இடத்தில் போடப்படும்//கேமரா வந்துடுச்சேன்னு அரைத் தூக்கத்துலேயே ஆர்வமா பேசினா,//

அவரப் பாக்கறாதுல ரொம்ப ஆர்வம் ந்னு முன்ன சொன்னது???????!!!


//கோழிக்கறி ஜெயிக்க //

தெரிஞ்ச விஷய்ம்தானே//நாலுநாளா குளிக்க சோப்பு வாங்கி வைக்க துப்பு இல்ல, .//

குளிக்கவா? நீங்க? என்ன அண்ணா காமெடி பண்றீங்க?

ரோகிணிசிவா said...

ஜிமெய்ல் இவ்வ்வ்வளவு வே..க...மாவ்வ்...வா இருக்குது !!!... -மெய்யான அங்கலாய்ப்பு !நேரிய தடவ வேண்டான வரும், வேணும் ன வராது !

*இயற்கை ராஜி* said...

அப்பாடி... இப்போ நிம்மதியா தூக்கம் வரும்....பை ..பை... சீ யூ:-)))

Kumar said...

ஜூப்பரு..

வால்பையன் said...

கேமரா நல்லாயிருக்குன்னு பாஸ் சொன்னார் வாழ்த்துக்கள்!

Romeoboy said...

அண்ணே நம்ம ஊருல கேமரா கடையே இல்லையா ???

ஈரோடு கதிர் said...

நன்றி @@ Jeeves

நன்றி @@ அக்பர்

நன்றி @@ நிகழ்காலத்தில்
மாப்பு இந்த அழுகுணி ஆட்டம் ஆகாது... இருக்கிறதுதான் கேமராவுல வரும்... வேணும்னா போட்டோஷாப்ல மாத்திக்கலாம்

நன்றி @@ ஜீயெஸ்கே

நன்றி @@ வாசகனாய் ஒரு கவிஞன் சங்கர்

நன்றி @@ க.நா.சாந்தி லெட்சுமணன்.
கார் வாங்கினப்போ பாப்பா இல்லீங்க

நன்றி @@ இய‌ற்கை
ராஜி....
ஏஏஏஏஏஏன்.... இந்த கொலவெறி... எதுனாலும் பேசித்தீர்த்துகலாம்....

//அப்பாடி... இப்போ நிம்மதியா தூக்கம் வரும்....பை ..பை... சீ யூ:-)))
//
ம்ம்ம்ம்... இப்போ திருப்தியா

நன்றி @@ padma
வர்ர்ர்ர்ர்ரும்..... ஆனா.... வர்ர்ர்ர்ராது

நன்றி @@ rohinisiva

நன்றி @@ Kumar

நன்றி @@ வால்பையன்

நன்றி @@ ~~~Romeo~~~
பார்த்தீங்களா ரோமியோ... நம்ம ஊர்ல வெலையில்லீனா... வெளிநாடு போறாங்க!!!!

சாமக்கோடங்கி said...

என்னோடது sony DSC H-50... ரொம்ப தூரத்துல இருக்கிற ஒரு பொருள படம் புடிச்சிருக்கிறேன்.. கீழ இருக்குற லிங்க் ல வந்து பாருங்க.. முடிஞ்சா...

இடுகை நல்லா இருக்கு..


http://saamakodangi.blogspot.com/2010/01/blog-post_15.html

நன்றி..

ரோகிணிசிவா said...

அண்ணா, நீங்க பரவாஇல்லை, சிங்கப்பூர்ல இருந்து கேமரா வந்த கதையதான் எழுதரீங்க!, நம்ம நண்பர்,சாயுங்காலம் கிளம்பி பகரைன் போய் சரக்கு சாப்டுட்டு நைட் திரும்பி வந்த கதை எழுத ப்ளாக் போடறார்!

ஈரோடு கதிர் said...

நன்றி @@ பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி

நன்றி @@ ராமலக்ஷ்மி

//rohinisiva said...
நம்ம நண்பர்,சாயுங்காலம் கிளம்பி பகரைன் போய் சரக்கு சாப்டுட்டு நைட் திரும்பி வந்த கதை எழுத ப்ளாக் போடறார்!//

சுட்டி குடுங்க

Thamira said...

டேமேஜ் பண்றத பண்ணிட்டு அப்புறம் என்ன பெரிய பொறுப்பி? :-‍))

(குழ‌ந்தையின் எதிர்பார்ப்பு கண்முன் நிழலாடியது)

கொங்கு நாடோடி said...

சிங்கபூர் பிரபா சுமவே கொடுத்து இருக்கலாம்... ஒரு நாலாயிரம் ரூபாய நம்ப கதிர் ப்ளொக்லே படம்போட கொடுத்து உதவியதாக இருந்திருக்கும் .... பரவில்லை, அடுத்தமுறை DSLR நல்லதா வங்கி அனுப்பிட்டு அப்போ பணம் கேளுங்கோ அது நியாயமா இருக்கும்.

கொங்கு நாடோடி said...

சிங்கபூர் பிரபா சுமவே கொடுத்து இருக்கலாம்... ஒரு நாலாயிரம் ரூபாய நம்ப கதிர் ப்ளொக்லே படம்போட கொடுத்து உதவியதாக இருந்திருக்கும் .... பரவில்லை, அடுத்தமுறை Nikon DSLR D90 வங்கி அனுப்பிட்டு அப்போ பணம் கேளுங்கோ அது நியாயமா இருக்கும்.