வியர்க்கும் மனதுதோப்பை அழித்த இடத்தில்
எழும்பி
நிற்கிறது அடுக்குமாடி
கலைந்து
போனது குருவிக் கூடு
_____________________________________

யரழுத்த மின் கம்பிமேல்
ஒய்யாரமாய்
கரைகிறது காக்கை
வறுமையில்
வடை சுடும் பாட்டி
_____________________________________

டல்தாண்டி காசு ஈட்டும் கணவன்
புதிதாய்
பொருத்திய குளிரூட்டியிலுமவியர்க்கிறது மனது மட்டும்!
_____________________________________

ணிய மறந்த தலைக்கவசம்
பயமேதுமில்லை
உயிர்மீது
அபராதத்தை
நினைத்து மட்டுமே!
_____________________________________

பாகப்பிரிவினையில் வெட்டப்பட்டது

பொது இடத்தில் மரமும்
சிதைந்தது
கூட்டுக்குடித்தன தேன்கூடு
_____________________________________


30 comments:

நாடோடி இலக்கியன் said...

எல்லாமே அருமை.

2,3,5 ரொம்பப் பிடித்திருந்தது.

பின்றீங்க கதிர்.இனி நான் கவிதை எழுதனும்னா ரொம்ப யோசிக்க வைப்பீங்க போலிருக்கு.

வால்பையன் said...

//கடல் கடந்து கணவன்
புதிதாய் பொருத்திய ஏசி மெஷின்
வியர்க்கிறது மனது மட்டும்!//


பணம் பண்ணும் சோகம்!

nzpire said...

எல்லாமே நல்ல இருக்குங்க

குரு said...

//
கடல் கடந்து கணவன்
புதிதாய் பொருத்திய ஏசி மெஷின்
வியர்க்கிறது மனது மட்டும்!
//

ரொம்பப் பிடித்திருந்தது...

ப்ரியமுடன் வசந்த் said...

//கடல் கடந்து கணவன்
புதிதாய் பொருத்திய ஏசி மெஷின்
வியர்க்கிறது மனது மட்டும்!//

எனக்கு இது மாதிரி நடக்கக்கூடாது கடவுளே...

எல்லாமும் சுடும் உண்மைகள்

பழமைபேசி said...

நல்லா இருக்குங்க மாப்ளை...

//கடல் கடந்து கணவன்
புதிதாய் பொருத்திய ஏசி மெஷின்
வியர்க்கிறது மனது மட்டும்!
//

கடல் கடந்த கணவன்
பொருத்திய புதிய ஏசி மெசின்
வியர்வைப் புழுக்கத்தில் மனம்!

ஆ.ஞானசேகரன் said...

//கடல் கடந்து கணவன்
புதிதாய் பொருத்திய ஏசி மெஷின்
வியர்க்கிறது மனது மட்டும்!//

ஒரு நெருடல் தெரிகின்றது... எல்லாம் நல்ல இருக்கு நண்பா

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நன்றாக இருக்கிறது கதிர்.வாழ்த்துகள்.

vasu balaji said...

அருமை கதிர்.

/தோப்பை அழித்தாகிவிட்டது
அடுக்குமாடி வீடு கட்டிட
கலைந்து போனது குருவிக் கூடு/


தோப்பழித்துக் கட்டிய
தொகுப்பு வீட்டால்
தொலைந்து போயின குருவிக்கூடுகள்..

சீமான்கனி said...

//அணிய மறந்த தலைக்கவசம்
பயமேதுமில்லை உயிர் மேல்
கவலை அபராதத்தை நினைத்து!////கடல் கடந்து கணவன்
புதிதாய் பொருத்திய ஏசி மெஷின்
வியர்க்கிறது மனது மட்டும்!//

எல்லாமே அருமை பிடித்திருந்தது.

சந்தனமுல்லை said...

மிகவும் ரசித்தேன்!

/அழுத்த மின் கம்பிமேல்
ஒய்யாரமாய் கரைகிறது காக்கை
வறுமையில் வடை சுடும் பாட்டி/

:(

தொடர்ந்து எழுதுங்கள்!!

sakthi said...

கடல் கடந்து கணவன்
புதிதாய் பொருத்திய ஏசி மெஷின்
வியர்க்கிறது மனது மட்டும்!

வாவ் Excellent Kathir

வாழ்த்துக்கள்

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

கதிர், உங்கள் கவிதைகளைப் பார்த்து "வியக்கிறது மனது" :)

மணிஜி said...

/பின்றீங்க கதிர்.இனி நான் கவிதை எழுதனும்னா ரொம்ப யோசிக்க வைப்பீங்க போலிருக்கு.//

நானும்தான்...இரண்டு பக்கமும் ஷார்ப்...

குப்பன்.யாஹூ said...

அருமை.

சிறிய திருத்தம் செய்தால் இன்னும் கூட அழஅகாய் இருக்கும்.

அணிய மறந்தது தலை கவசம்

கவலை உயிர் மீது அல்ல அபராதம் மீதே

க.பாலாசி said...

எல்லாமே அருமைதான் என்றாலும், அருமை என்பதை அருமை என்று சொல்வதைவிட வேறெப்படி சொல்வது என்று தெரியவில்லை... எல்லாமே அருமை.... படித்தேன். ரசித்தேன்.. உணர்ந்தேன்...

இரும்புத்திரை said...

எனக்கு பிடித்த கதை நிறைய பேருக்கு பிடித்திருக்கு

ஆரூரன் விசுவநாதன் said...

பின் நவீனத்துவ வாடை வீசுகிறது....
இத....இத.... இத தான் எதிர்பார்த்தேன்...
வாழ்த்துக்கள்
அன்புடன்
ஆரூரன்

நாகராஜன் said...

அருமைங்க கதிர்... ஒவ்வொன்றும் நச்சுன்னு இருக்குதுங்க.

முதலாவதையும், கடைசியையும் சேர்த்து இப்படி கூட சொல்லலாமோ?

அண்ணன் தம்பி பாகப்பிரிவினை
வெட்டப்பட்டது பொது இடத்தின் மரம்
சிதைந்தது கூட்டுக்குடித்தன தேன்கூடு, கலைந்து போனது குருவிக் கூடு

ஈரோடு கதிர் said...

//நாடோடி இலக்கியன் said...
இனி நான் கவிதை எழுதனும்னா ரொம்ப யோசிக்க வைப்பீங்க போலிருக்கு.//

நன்றி @@ நாடோடி இலக்கியன்(ஏம்பா இப்படி போட்டுப்பாக்றீங்க)

//வால்பையன் said...
பணம் பண்ணும் சோகம்!//

ஆமாங்க அருண்


//nzpire said...
எல்லாமே நல்ல இருக்குங்க//

நன்றிங்க @@ nzpire

//குரு said...
ரொம்பப் பிடித்திருந்தது...//

நன்றிங்க @@ குரு

//பிரியமுடன்...வசந்த் said...
எனக்கு இது மாதிரி நடக்கக்கூடாது கடவுளே...

எல்லாமும் சுடும் உண்மைகள்//

நல்லதே நடக்கட்டும் வசந்த்

//பழமைபேசி said...
கடல் கடந்த கணவன்
பொருத்திய புதிய ஏசி மெசின்
வியர்வைப் புழுக்கத்தில் மனம்!//

இதுவும் நல்லாருக்குங்க மாப்பு

//ஆ.ஞானசேகரன் said...
ஒரு நெருடல் தெரிகின்றது... எல்லாம் நல்ல இருக்கு நண்பா//

நன்றிங்க @@ ஆ.ஞானசேகரன்

//ஸ்ரீ said...
நன்றாக இருக்கிறது//

நன்றிங்க @@ ஸ்ரீ

//வானம்பாடிகள் said...
தோப்பழித்துக் கட்டிய
தொகுப்பு வீட்டால்
தொலைந்து போயின குருவிக்கூடுகள்..//

இதுவும் நன்றாக இருக்கிறது ஐயா

//seemangani said...
எல்லாமே அருமை பிடித்திருந்தது.//

நன்றிங்க @@ சீமாங்கனி

//சந்தனமுல்லை said...
மிகவும் ரசித்தேன்!
தொடர்ந்து எழுதுங்கள்!!//

நன்றிங்க @@ சந்தனமுல்லை

//sakthi said...
வாவ் Excellent Kathir//

நன்றிங்க @@ சக்தி

//ச.செந்தில்வேலன் said...
"வியக்கிறது மனது" :)//

இது கவிதை செந்தில்

//தண்டோரா ...... said...
நானும்தான்...இரண்டு பக்கமும் ஷார்ப்...//

நன்றிங்க @@ தண்டோரா

//ராம்ஜி.யாஹூ said...
அணிய மறந்தது தலை கவசம்
கவலை உயிர் மீது அல்ல அபராதம் மீதே//

நன்றிங்க @@ ராம்ஜி.யாஹூ

//க.பாலாஜி said...
அருமை என்பதை அருமை என்று சொல்வதைவிட வேறெப்படி சொல்வது//

அருமை பாலாஜி
நன்றி @@ பாலஜி

//இரும்புத்திரை அரவிந்த் said...
எனக்கு பிடித்த கதை நிறைய பேருக்கு பிடித்திருக்கு//

கதையா!!!???
என்னாச்சு அரவிந்த்

//ஆரூரன் விசுவநாதன் said...
பின் நவீனத்துவ வாடை வீசுகிறது.... //

நன்றிங்க @@ ஆரூரன்

//ராசுக்குட்டி said...
ஒவ்வொன்றும் நச்சுன்னு இருக்குதுங்க.

அண்ணன் தம்பி பாகப்பிரிவினை
வெட்டப்பட்டது பொது இடத்தின் மரம்
சிதைந்தது கூட்டுக்குடித்தன தேன்கூடு, கலைந்து போனது குருவிக் கூடு//

இரண்டு கவிதையின் அடிப்படை வேறு வேறுதானே

நன்றிங்க @@ ராசுக்குட்டி

மாதவராஜ் said...

நன்றாய் இருக்கிறது கதிர்!.... இன்னும் கூட வார்த்தைகளைச் செதுக்கலாமோ?

அன்புடன் அருணா said...

எனக்கு ரொம்பப் பிடித்தது....பூங்கொத்து!

Ashok D said...

ஆழ்ந்த பார்வை
நல்லாயிருக்குங்க...
:)

கலகலப்ரியா said...

nallaarukku..! :)

jothi said...

//சிதைந்தது கூட்டுக்குடித்தன தேன்கூடு//

கலக்கல் பதிவு,. உங்களின் பழைய பதிவுகளை நிறைய மிஸ் பண்ணி இருக்கேன் போலிருக்கு

காமராஜ் said...

எல்லாமே அருமை, இருந்தாலும்
மனசு வியர்ப்பது கொடுமை.

ஈரோடு கதிர் said...

//மாதவராஜ் said...
இன்னும் கூட வார்த்தைகளைச் செதுக்கலாமோ?//

கருத்துகள் வந்த பின் நானும் உணர்ந்தேன்.

நன்றிங்க @@ மாதவராஜ்


//அன்புடன் அருணா said...
எனக்கு ரொம்பப் பிடித்தது....பூங்கொத்து!//

நன்றிங்க @@ அன்புடன் அருணா

//D.R.Ashok said...
ஆழ்ந்த பார்வை
நல்லாயிருக்குங்க... //

நன்றிங்க @@ D.R.Ashok

//கலகலப்ரியா said...
nallaarukku..! :)//

நன்றிங்க @@ கலகலப்ரியா

//jothi said...
கலக்கல் பதிவு,. உங்களின் பழைய பதிவுகளை நிறைய மிஸ் பண்ணி இருக்கேன் போலிருக்கு//

ஆமாம்... நீங்கள் சமீபத்தில்தான் வருகை தந்தீர்கள்

நன்றிங்க @@ jothi


//காமராஜ் said...
எல்லாமே அருமை, இருந்தாலும்
மனசு வியர்ப்பது கொடுமை.//

ஆமாங்க

நன்றிங்க @@ காமராஜ்

பித்தனின் வாக்கு said...

Good liriks. Good wordings.

ஈரோடு கதிர் said...

நன்றி @@ seemangani

நன்றி @@ PITTHAN

Marimuthu Murugan said...

அனைத்தும் அருமை.

//அணிய மறந்த தலைக்கவசம்
பயமேதுமில்லை உயிர்மீது
அபராதத்தை நினைத்து மட்டுமே!//

ஆமாங்க.