அதுவொன்றும்
சுயம்புவாய்
முளைத்த
மௌனமல்ல
விரும்பியும்
விரும்பாமலும்
நாமிட்ட
விதைகளில்
உறவின்
வெளியெங்கும்
விளைந்து
படர்ந்திருப்பதுதான்
கனத்து நிற்கும்
கனத்து நிற்கும்
மௌனத்தின்
இடையே
சொற்களை
விழுங்கிக்கொண்டே
ஒரு வழிப்பாதைகளில்
பயணித்திருக்கின்றோம்
மௌனத்தின்
பிரகாசத்தில்
கண்கூசியும்
வெம்மையில்
வாடியும்
இருளில்
தடுமாறியும்
இறுக்கத்தில்
குழைந்தும்
கடந்துகொண்டிருந்த
கணத்தில்
அந்த
மௌனத்தின் ஓட்டில்
அத்தனை
விசையாய்
தட்டியிருக்க
வேண்டாம்
இப்போது விரிசல்
விடும்
ஓட்டிலிருந்து
எது வந்தால்
உனக்கும்
எனக்கும்
உகந்தாக
இருக்கும்!?
-
-
5 comments:
மௌனக் கூடு அருமை.
சொல்லாத சொல்லுக்கு பாரம் அதிகம்
சொல்லாத சொல்லுக்கு பாரம் அதிகம்
சொல்லாத சொல்லுக்கு பாரம் அதிகம்
உகந்தது இருவருக்கும் பொதுவானதாக இருந்தால்
அதுவே மீண்டும் கூடு.இந்த முறை கூடு மௌனத்தால் விளைந்தது அல்ல.மௌன வலையை பாசாங்கை கிழிக்கும்.
Post a Comment