தோல்வி
பூண்டவனின்
வரலாறென
பின்னட்டைக் குறிப்பு
சொல்லும்
அந்தப்
புத்தகத்தை பின்னட்டைக் குறிப்பு
சொல்லும்
இதுகாறும் வாசிக்கத்
துணிந்ததில்லை
பரிசெனக் கையில்
திணிக்கப்பட்டதை
தவிர்க்கவியலாமல்பிரிக்கையில்
வழிந்தோடி
விரலெங்கும் பிசுபிசுப்பாய்
நிலைத்திருப்பது
துரோகம் உலர்த்த முடியா
கண்ணீரும்
வஞ்சகம் பருகிய
உதிரத்தின் மிச்சமும் தவிர்த்து
வேறென்னவாக
இருந்துவிடப் போகிறது!
-
8 comments:
அருமை!
அருமையான வரிகள்....மொத்தமாய் ஒரு புத்தகம் போடுங்கள். நானே பதிப்பக ஆட்களிடம் சொல்கின்றேன். நீங்கள் சரி என்று சொல்லுங்கள்.....உங்கள் எண்ணங்களை நான் அச்சில் வார்த்தெடுத்து அணைத்து மக்களும் பயன் பெற அனுப்புவோம் பதிப்பகத்துக்கு.....
Beautiful words not replaceable
Beautiful words not replaceable
நல்ல கவிதை வரிகள்.வாழ்த்துக்கள்/
அருமை... அருமை அண்ணன்...
மனதில் அதிர்வலைகளை உண்டாக்கும் அருமையான வரிகள்..
துரோகம் உலர்த்தமுடியா கண்ணீரும்
வஞ்சகம் பருகிய உதிரத்தின் மிச்சமும்......
Post a Comment