யார்யாரோ ஊட்டும் அவநம்பிக்கைகளை விட, யாரோ ஊட்டும் நம்பிக்கையில்தான் நகர்கின்றன நாட்கள்!
-
மரணம் பொதுவானது!
-
உலகத்திலேயே வெளியான முக்கால் மணி நேரத்துல ”வெற்றி நடை” போடுவது தமிழ் சினிமா ஒன்றாகத்தான் இருக்கமுடியும்
#இந்த வெற்றிநடை ரவுசு தாங்க முடியல
-
அது ’வேற’! இது ’வேற’! #உலகத்தின் மிக ’அரிய’ தத்துவம்!
-
நிரம்பியிருக்கும் பணப்பைகளை விட, காலியாக இருக்கும் பணப்பைகளே 'சுமையானது'
-
வாராத மழை வருமா!?. குளிக்காத
என் பைக் இன்றாவது குளிக்குமா!?
#ய்ய்ய்யேக்கம்!
-
ஒருவரையே Blogல
Follow பண்ணி, Google+ல Add பண்ணி,
Twitterல
Follow பண்ணி கடைசியா Facebookல
Friend ஆக்கும்போது புரிகிறது உலகம் உருண்டையேதானு!
-
தக்கிமுக்கி IRCTC வேலை செஞ்சா பேங்க்காரன் பணம் தரமாட்டேங்கிறான். பேங்க பணம் தர்றேனு சொன்னா IRCTC தொங்குது.
#பேங்ல வேற காசு இருக்கனுமாமே!
-
பெரும்ப*லான சமரசங்கள், அதில் கிடைக்கும் லாபத்தை கவனத்தில்கொண்டே அமைகின்றன.
# *ப குறில் அல்லது பா நெடில் :)
-
”என்கிட்ட”
நல்லா நோட் பண்ணுங்க... என்கிட்ட.... ஒருத்தர் போன்ல பேசிட்டே, அங்கே "நான் important callல இருக்கேன், disturb பண்ணாதீங்க”னு யார்கிட்டையோ சொன்னப்பத்தான் புரிஞ்சுது, ஊர்ல அடிக்கடி பலபேரு சொல்ற important callக்கு உண்மையான அர்த்தம் என்னானு! :))))
-
கரண்ட் கட் ஆனா (பதிலும்கூட
வராதுனு தெரியாம) EB ஆபிஸ்க்கு
போன் போட்டு, “கரண்ட் எப்ப சார் வரும்”னு கேட்கும் அப்புராணிகள் நிறைந்த உலகம் இது
-
அழுக்கும் ஒரு நிறம் தான்!
-
Good Morning. Have a "Good
Day"னு சொல்றதுக்குப் பதிலா Good Morning. Have a "Milk
Bikis" Day-னு மாத்தி சொல்றது தப்பா! தப்பா!! தப்பா!!!?
-
எதிர்பார்த்த அளவு எது நமக்கு கிடைக்கலையோ அதுபத்தியே தான் சிந்தனை, பேச்சு இருக்கும் #காதல் - முத்தம் - குடி - பணம் - பதவி - இன்ன பிற! :)
ஹேப்பி நியூ இயர், ஹேப்பி கவ் பொங்கல், ஹேப்பி டமில் நியூ இயர், அப்புறம்... ஹேப்பி விநாயகர் பர்த் டே-னு கூட சொன்னீங்க... சரி பரவாயில்ல... இப்ப ஹேப்பி ’பந்த்’டே சொல்றீங்களே... # உலகத்துல நீங்கெல்லாம் அம்புட்டு ஹேப்பியாவாடா இருக்கீங்க!
-
ஆழ்ந்த உறக்கம் ஒரு வரம்.
-
விநாயகர் சதுர்த்தி வாழ்த்து மட்டும் SMSல சொல்லுங்க, கொஞ்சம் கொழுக்கட்டை, சுண்டல் கொடுத்தா கொறஞ்சா போய்ருவீங்க! # வரும் ஆனா வராஆஆதுடா!
-
அள்ளிக் கொடுத்தாலும், கிள்ளிக்
கொடுத்தாலும் ”அன்பு = அன்பு”
-
இறுதியாகக் கணக்கிட்டுப் பார்த்தால், வாழ்க்கையில்
இழந்ததும், ஈட்டியிருப்பதும்
’வெறும்’ மனிதர்கள் மட்டுமே!
-
திருவள்ளுவர் ஏன் 1330 குறள்களோடு
மட்டும் நிறுத்திவிட்டார்? # எதிர்காலத்தில்
மனப்பாடம் செய்ய வேண்டிய பிள்ளைகள் பாவம் எனக்கருதி இருக்குமோ?
-
ஒரு கை பிடி திராட்சையை ஒன்றாய் தின்றாலும், ஒவ்வொன்றாய்
தின்றாலும் அளவு ஒன்றுதான், ஆனால் சுவை வேறுவேறு.
-
இலவசமாக ஒருநாள் கிடைக்கும் மரணத்தை, ஏன் சிலர் அவசர அவசரமாக விலை கொடுத்து வாங்குகிறார்கள்!
கடலை மிட்டாய்க்குள் இத்தனை சுவையை, ஒளித்து வைத்த(இறை)வன் ரசனை மிகுந்தவனாகத்தான் இருப்பான்!
-
ஒரு கையில் புகை வழியும் சிகரெட், மறுகையில்
ஆவி பறக்கும் தேநீர். அழைக்கும்
அலைபேசியை ஆட்கொள்ள மூன்றாம் கை இன்றி தவிக்கிறான் தேநீர்க்கடையில்!
-
மத்திய அரசு செய்யும் காரியங்கள் குறித்து உங்களுக்கு சரிவர புரியவில்லையெனினும் கவலைப்படாதீர்கள், அது சர்வ நிச்சயம், உங்களுக்கு
எதிரானதேதான்!
-
3 comments:
திருவள்ளுவருக்கு 7ம் நம்பர் ராசியாக இருக்குமோ
அருமை...நல்ல வலைத்தளம்...நன்றி
Arumai.....sema...
Post a Comment