பிடித்த திரைப்படங்கள்

அவ்வப்போது பார்த்த சில பிறமொழிப்படங்கள் குறித்த உணர்வுகளை சில வரிகளில் பதிக்கும் முயற்சி இது. முழுமையான ஒரு பார்வையை, விமர்சனத்தை வைப்பதைவிட அது குறித்து மேலெழும்பும் உச்சபட்ச உணர்வுகளை மட்டும் பதியனிடும் முயற்சி.

------------------------------------------------------------------------------------------------------------------------

மகனைத் தொலைக்கும் தாயின் கண்ணீரும், போராட்டமும், இன்னொரு குழந்தையை மகனென திணிக்கும் கயமைத்தனத்தின் முன் வழியும் இயலாமைத்தனமும், மறுக்கப்படும் நீதியும், காவல்துறை, மருத்துவத்துறையின் அக்கிரமும், குற்றவாளிச் சிறுவனிடம் பரிவு காட்டும் அதே காவல்துறையின் கனிவும், தூக்குத்தண்டனை காட்சியில் அவனின் கதறலும்...... இன்னும் நிறைய....

இத்தனைக்கும் கதை நடக்கும் காலம் 1928-1935. பார்த்த படங்களில் சிறந்த படம் என நினைப்பவற்றில் மிக நிச்சயமாக இதுவும் ஒன்று.

------------------------------------------------------------------------------------------------------------------------தனக்குப் பிடிக்காதைச் சூழலின் பொருட்டு ஏற்றுக்கொண்டு, அதுவே தனக்குப் பிடித்ததாக மாறிவிட, தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு பிடிக்காமல் போகும் சூழலையும் கடந்து செல்லும் நாயகனின் நகர்வுகள்...

இங்கே பிடிக்காத எனக்குறிப்பிடும் செயல்இறந்த உடல்களை சுத்தம் செய்து, உடைமாற்றி, மிக அழகாக ஒப்பனை செய்தல்

படம் பார்க்கும் எவருக்கும், அந்த நேர்த்தியான ஒப்பனைக்காகவே செத்துப்போகலாம் என்றும் கூடத் தோன்றலாம். :)

------------------------------------------------------------------------------------------------------------------------
சூழலின் பொருட்டு கிராமத்தை, உறவைப்பிரிந்து வெளிநாட்டில் பொருந்தா வயது கணவனோடு நாட்களைக் கடக்கும் ஒரு சாமனியப் பெண்ணின் நகர்வுகளை மிகத் துல்லியமாகக் காட்டும் படம். படத்தில் இருப்பது ஒருசில பாத்திரங்களே என்றாலும், ஒவ்வொன்றையும் மிக அழுத்தமாக படைத்திருப்பது வெகு அருமை.

கதாநாயாகிதனிஷ்தா சாட்டர்ஜியின் நடிப்பும், முகபாவங்களும் எத்தனை நாட்களானாலும் மறந்து போகாதாது.

------------------------------------------------------------------------------------------------------------------------
அப்பாவித்தனமாய் பாலியல் தொழிலில் இறங்கும் பள்ளித் தோழிகளின் விளையாட்டு மனோபாவமும்...

பேரன்பும், பெரும் வேதனையும், பதற்றமும் சூழ்ந்த ஒரு தந்தையின் போராட்டமும்...

இறுதிப்பகுதியில்... கலங்கடிக்கும் கொடுங்கனவும் கவிதையாய் நகரும் காட்சிகளும்... என

KIM KI DUK-
ன் மற்றொமொரு சிறந்த படைப்பு!

------------------------------------------------------------------------------------------------------------------------

ஊரின் மிக அழகிய பெண் மேல் பெருங்காமம் கொண்டு அலையும் விடலைப் பையனின் பார்வையில் அந்தப்பெண்ணின் நகர்வுகளையும் அவன் மன, உடல் போராட்டங்களையும் மிக அழகாய் உன்னதமாய்க் காட்டும் படம்.

குறிப்பு:
கண்டிப்பாக வயது வந்தோருக்கு மட்டும், அதில் மிக முக்கியம் மனமுதிர்வு கொண்டோருக்கு மட்டுமே

------------------------------------------------------------------------------------------------------------------------கொட்டிக்கிடக்கும் கவிதை அள்ளிக் கொண்டாடலாம் அனுபவித்துத் திளைக்கலாம்.

தவறவிடக்கூடாத படங்களில் இதுவும் ஒன்று!  
 
------------------------------------------------------------------------------------------------------------------------
 
வாழ்க்கையைக் கடப்பதற்கான ஒரு சாமானியனின் போராட்டமும்..நேசிப்பவர்களை அடைகாக்க ஓடிக்கொண்டேயிருக்கும் ஒரு தந்தையின் அக, புறப் போராட்டமும்... புரிந்து கொள்ளக்கூடியவர்களை அவர்களுடனே போராடச் செய்கிறது மனதில் துளிர்க்கும் வியர்வைத்துளிகளுடனே...

வண்ணவண்ணக் கனவுகளை நிரப்பிய வண்ண மீன்கள் உயிர்பிழைக்கட்டுமேயென ஒரு கட்டத்தில் ஓடும் சாக்கடையில் தள்ளிவிடும் சிறுவனோடு நாமும் சிறுவனாகிறோம்...
 
 ------------------------------------------------------------------------------------------------------------------------
 
பள்ளிப் பிள்ளைகளின் மதிய உணவை மையமாக வைத்து ஒரு கதையை மிக நேர்த்தியாக உருவாக்கியதற்காக இந்தப் படத்தை ரசித்து ரசித்துப் பார்க்கலாம்!

Amol Gupte & Partho - அப்பாவும் பிள்ளையும் அசத்தல்.
 
 ------------------------------------------------------------------------------------------------------------------------

சூழ்நிலையின் முன் எதன் பொருட்டோ மனிதர்கள் தோற்றுக் கொண்டே இருக்கின்றனர் என்பதையும்...

உலகம் சுருங்கி உள்ளங்கையில் இருக்கிறதென்றாலும், தேடிய மனிதர்கள் சில அடி தொலைவில் இருந்தாலும் வாழ்க்கை அவர்களைப் பிரித்துப்போட்டே வைத்திருக்கின்றது என்பதையும்...

மனிதர்களுக்கிடையே சில முடிச்சு அவிழாமலே இருக்கின்றன. மனிதன் நினைப்பது, ஆசை, கனவு நிறைவடையாமலே போகின்றன என்பதையும்....

போகிற போக்கில் இந்தப் படம் எளிமையாகப் பதித்து விட்டுப்போகின்றது.
 
 ------------------------------------------------------------------------------------------------------------------------
 
10 comments:

அகல்விளக்கு said...

அனைத்துப்படங்களும் தாக்கத்தை ஏற்படுத்துபவை (/ஏற்படுத்தியவை)

ஒரு வரியில் நச்-சென்று விமர்சனம் அருமை... :-))

Unknown said...

சில வரிகளிலேயே வெளிப்படுத்தும் உங்கள் அழகிய அனுபவப்பகிர்வு படம்பார்த்தலுக்கான ஆர்வத்தை வெகுவாய்த் தூண்டிவிட்டது.... இனிப்பார்த்துவிட்டு மீண்டும் கருத்திடுவேன்.

Kayathri said...

இந்தப் படங்களை பார்க்கத் தூண்டும் வகையில் படங்களைப் பற்றிய தங்கள் கண்ணோட்டம் அருமை..பார்க்க முயற்சிக்கிறேன்..:)

Vetirmagal said...

Such beautiful movies, and a good review. Makes one seek those movies.
But where do you get these wonderful movies? Rental libraries or buy from stores?

vasu balaji said...

கொண்டையுள்ள சீமாட்டி. நடத்துங்க ராசா:))

ஷர்புதீன் said...

அட !

Kumky said...

இது போல சுறுக் விமர்சன ட்வீடெல்லாம் சரிப்பட்டு வராதுங் சாரே...

விரிவா எழுதோனும்.

Rizi said...

Superb,

Melena i wtched nice movie.

MANO நாஞ்சில் மனோ said...

படத்தை பார்க்கும் ஆவலை தூண்டுகிறது உங்கள் பதிவு நன்றி...!!!

க.பாலாசி said...

//வானம்பாடிகள் said...
கொண்டையுள்ள சீமாட்டி. நடத்துங்க ராசா:))//

கூந்தலுள்ள மகரா(சி)சன்.. :))