பகிர்தல் (17.01.2011)

பொங்கல்:

வழக்கத்திற்கு மாறான உற்சாகத்தோடு பொங்கல் நாள் மகிழ்ச்சியில் நகர்ந்தது. விவசாயப் பின்னணி என்பதால் மாட்டுப் பொங்கல் மட்டுமே வழக்கமாய்க் கொண்டாடி வருவதில் ஒரு மாற்றமாய் பொங்கல் தினத்தன்று உறவுகளோடு ஒன்று கூடி குழந்தைகள் சூழ பொங்கல் வைக்கலாமே என்ற ஆசை மிக அழகியதாய் நிறைவேறியது. பலகாரங்களைவிட, பொங்கலில் கலந்திருந்த வெல்லச் சுவையைவிட, சுற்றியிருந்த உறவுகளின் புன்னகைத்த முகங்களே கூடுதல் சுவையாய் இருந்தது.


அடுத்த நாளும் கிணற்றில் குளியல், தோட்டத்தில் வெட்டிய கரும்பு என மாட்டுப் பொங்கலும் மகிழ்வாய்ப் போனது!

ஓய்வில் உரல்களும், உலக்கைகளும்:

திங்களூருக்கு அருகில் இருக்கிறது அப்பிச்சிமார் மடம். குறிப்பிட்ட தினங்களில் பல ஊர்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள் வருவதுமுண்டு. பல நூற்றாண்டுகளுக்கும் மேலாக பலதரப்பட்ட மனிதர்களின் வேண்டுதலுக்குரிய ஓர் இடம். பல நூறு முறை திங்களூருக்குச் சென்று வந்தாலும் மடத்திற்குச் செல்ல நினைத்தது இந்த பொங்கல் தினத்தில் மட்டுமே. அப்பிச்சிமார், இராவணத்தன், மசிரியாத்தாள் ஆகியோரின் சமாதிகள் தனித்தனியே வணங்கப்படுகின்றன. 


குறிப்பிட்ட தினங்களில் ஆயிரக்கணக்கானோருக்கு பேய் ஓட்டுதல் நடைபெறும் என்று கூறுகிறார்கள். மடத்தில் ஒரேயொரு ஒற்றை மான் மட்டும் கம்பிகளுக்குள் இருந்து வருவோர் போவோரை ஏக்கமாய் பார்த்து நின்று கொண்டிருக்கிறது. அருகில் சென்றால் தடவிக் கொடுக்க ஏதுவாய் அமைதிகாக்கிறது. மடத்தில் கவர்ந்த விசயம் அழகாய்க் கிடந்த உரல்களும், உலக்கைகளும். நெல் கொண்டுவந்து அங்கேயே குத்தி, அரிசியாக்கி, பொங்கல் வைத்து சாப்பிட்டுப் போனதை நினைவுபடுத்தும் வகையில் அழகாய்க் கிடக்கின்றன உரல்களும் உலக்கைகளும்.

வலைப்பூக்களில் எழுத்தாளர்கள்:
கங்கணம், நிழல்முற்றம், கூளமாதாரி ஆகிய புத்தகங்களை எழுதிய நேசத்துக்குரிய எழுத்தாளரான திரு. பெருமாள் முருகன் சமீபத்தில் ”பெருமாள் முருகன்” என்ற வலைப்பூ மூலம் இணையத்தில் காலடி பதித்திருக்கிறார். சென்ற வாரம் வெளியான மாதொருபாகன் மிக நிச்சயமாக பேசப்படும் ஒரு புத்தகமா இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

தமிழகத்தில் ஒரு எழுச்சி மிகு பேச்சாளராக அறியப்படுபவரும், இராமைய்யாவின் குடிசை, என்று தணியும் ஆவணப்படங்களின் இயக்குனருமான பாரதிகிருஷ்ணகுமார் ”உண்மை புதிதன்று” என்ற வலைப்பூ வாயிலாக இணையத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.

இருவரையும் வலைப்பூ எழுத்தில் காண்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன்.

தமிழ்மணம் விருதுகள்:

தமிழ் வலைப்பூக்களின் மிக முக்கிய அடையாளமாக இருக்கும் தமிழ்மணம் திரட்டியின் 2010 விருதுகளில் என்னுடைய

வுனியாவுக்குப் போயிருந்தேன்” இடுகைக்கு முதல் பரிசும், 

”கோடியில் இருவர்” இடுகைக்கு இரண்டாவது பரிசும் 
கிடைத்திருக்கிறது. முதல் இரண்டு கட்டங்களில் வாக்குகள் மூலம் தேர்வு பெற்று, நடுவர்கள் மூலம் இறுதிச்சுற்றில் தேர்வு பெற்றிருக்கின்றன. தேர்வு பெற உதவிய அனைவருக்கும், தமிழ்மணம் திரட்டிக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.

||தமிழ்மணத்தில்  நடுவராக நானும் கலந்து கொண்டிருந்தேன். உங்களதுவவுனியாவுக்குப் போயிருந்தேன் படைப்புச் செறிவும் மனவெழுச்சியைத் துாண்டுவதாகவும் அமைந்திருந்தது. ”எனது நண்பர்தான்... அப்படி இருப்பதனால் நல்ல படைப்பாக இருந்தும்கூட, அதைப் பரிந்துரைக்கத் தயக்கமாக இருக்கிறது. இது எனது ஆலோசனை. நீங்களே முடிவு செய்யுங்கள்என்று எழுதியிருந்தேன். தரமானதைத் தேர்ந்தெடுத்த அவர்களது முடிவு மகிழ்ச்சி அளித்தது.||

தமிழ்மணம் தேர்வு குறித்து, நடுவராக இருந்த நட்பிற்குரிய ஒரு பதிவர் எனக்கு அனுப்பியிருந்த மின்மடல். நட்பு என்ற காரணத்திற்காக இதைத் தேர்ந்தெடுங்கள் என்ற அழுத்தத்தைக் கொடுக்காமல், தன் கருத்தை நேர்மையாக திரட்டிக்கு அனுப்பிய நடு நிலைக்கு நன்றிகளும் வணக்கங்களும். நல்ல நடுவர்களை இனம் கண்ட தமிழ்மணத்திற்கும் பாராட்டுகள். 


புத்தகங்களை வாங்கும் பழக்கத்தில் தொய்வில்லாத போதும், இணையத்தில் அதிக நேரம் தீர்ந்து போவதால் வாசிப்பில் மிகப்பெரிய தொய்வு விழுந்து விட்டது உண்மையே. வாசிக்காமல் அலமாரியில் உறங்கும் புத்தகங்கள் மிகப் பெரிய குற்ற உணர்வை தொடர்ந்து ஏற்படுத்தும் சூழலில் தமிழ்மண விருதுகள் வாயிலாக வரவிருக்கும் புத்தங்கள் வாசித்தே தீர வேண்டும் என்ற நிர்பந்தத்தை மனதிற்குள் திணித்துக் கொண்டிருக்கிறது.

சபரி மலை:

இரண்டு நாட்களாய் தொலைக்காட்சியை விட்டு தொலைவில் இருந்ததால் அதிர்ச்சி தரும் செய்திகள் எல்லாம், காலம் கடந்து கேட்டதால் மிகச் சாதரணாமாவே தோன்றியது. சபரிமலையின் சாவுகள் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. எதைக்குறை சொல்ல, பக்தியோ, பணமோ ஆத்திரம் மிகுந்ததாகவே மாறிவிட்டது. எல்லாவற்றையும் பணத்தால் தீர்க்க முடியும் என்பது போல், எல்லாக் கஷ்டத்தையும் பக்தியால் கரைத்துக் கொள்ளமுடியும் என்ற எண்ணமும் மேலோங்கி வருகிறதோ என்றே தோன்றுகிறது. மாலையணிந்து செல்வதும், பாதயாத்திரையாய் பயணிப்பதும் ஒரு வித அழகியல் என்ற மனோநிலை கூடிவிட்டதோ? தேசிய நெடுஞ்சாலையில் பல கல் தொலைவிற்கு சாரைசாரையாய் பாதயாத்திரை செல்லும் பல்லாயிரக் கணக்கானோரின் வெற்றுப் பாதங்களைப் பார்க்கும் போது ஏதோ ஒரு நம்பிக்கை மனிதர்களை அதன் போக்கில் நடத்திச் செல்வது மட்டும் புரிகிறது.

பழகிப்போச்சு:

காலையில் பதிவுலக நண்பர்கள் பேசிக்கொண்டிருந்தோம், திரைப்படம், சில நடிகர்கள், அரசியல், பங்குச்சந்தை, சீனாவின் ஆதிக்கம் என என்னவேன்னவோ பேசிக்கொண்டிருந்தோம். யார் ஒருவரும் 63 ரூபாயை எட்டியிருக்கும் பெட்ரோல் விலை குறித்து நினைக்கவுமில்லை, பேசவுமில்லை. பேசியும் ஒன்றும் கிழிக்கமுடியாது என்பதில் மட்டும் எல்லோருக்கும் ஒருமித்த கருத்து. எனவே இது குறித்து முனகக்கூட மனதில்லை. இப்படித்தான் நடத்துவோம், உங்களால் என்ன செய்திட முடியும் என்ற அரசாங்கத்தின் மனோபாவத்திற்கு முன்னால் மண்டியிட்டு குரல்களற்றுக் கிடக்கிறோம். முப்பது நாட்களுக்குள் 12% அதிகரிக்கப்பட்ட பெட்ரோல் விலையில் எட்டணாவோ, ஒரு ரூபாயோ குறைக்கப்பட்டால் ஏற்படும் மகிழ்ச்சியில் ஏற்றங்களையும், ஏமாற்றங்களையும் மறந்துபோகும் வரம் நமக்கு இருக்கத்தானே செய்கின்றது.

-0

36 comments:

கோவி.கண்ணன் said...

உங்கள் ஈழம் கட்டுரை கண்டிப்பாக வெற்றிபெற வேண்டும் என்று விரும்பினேன்.

உங்களுக்கு கிடைத்த தமிழ்மணம் விருதுகளுக்கு பாராட்டுகள்.

G.Ganapathi said...

எத்தனை ஆயிரம் முறை ஏமந்தாலும் ஒரு முறை கூட சுதாரிக்கும் மன நிலை நமக்கு எல்லாம் துளியும் கிடையாது . குற்றம் சுமத்தவும் குறை கூறவும் ஆயிரம் வழிகள் உண்டு அது தான் அலட்சியத்திற்கும் பெரும் அவமானத்திற்கும் காரணம் . பெட்ரோல் விலைக்கு என்னை கம்பனிகளை குறை கூற முடியாது அந்த கம்பனிகளின் உற்ப்பத்தியுக்கும் இறக்குமதி கழல் வரி சுங்க வரி மதிப்பு கூட்ட பட்ட வரி என்று வரி மேல் வரி விதித்து சுண்டக்காய் கால் பணம் சுமைகூலி முக்காப்பணம் ஆகா மொத்தம் நம்ம மெத்தனத்துக்கு ஒரு பணம் என்று இருப்பதினால் தான் இத்தனை விலைகொடுக்கிறோம். உண்மையில் கச்சா என்னை விலை ஏறுகிறது ஏன் என்று ஒபாக் நாடுகளுக்கும் தெரியாது வாங்கும் நாடுகளுக்கும் தெரியாது யாரவது காரணம் கூறினாலும் ஒன்றும் புரியாது எண்ணையை போலவே இதுவும் ஆயிரம் இடங்களில் வழுக்கி விடும் . பொற்றோலிய பொருள்களில் விலையை கட்டுக்குள் வைத்தல் பொருளாதாரத்தின் சக்கரம் வேகமாக சுழல ஆரம்பிக்கும் . ஆனால் அது வேகம் எடுக்கும் வரை எந்த ஆட்சியாளருக்கும் தாங்கும் திறன் கிடையாது . இப்படியே நாமும் பேசிக்கொண்டே இருக்கலாம் .

இனியாவது பொது போக்குவரத்தை அதிகம் உபயோகிக்கலாம் . அடுத்தவரை குறை கூறுவதை கைவிடுவோம்.

r.v.saravanan said...

தமிழ்மணம் விருதுகளுக்கு பாராட்டுகள்
கதிர்

உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் எனது பொங்கல் நல் வாழ்த்துக்கள்

'பரிவை' சே.குமார் said...

உங்களுக்கு கிடைத்த தமிழ்மணம் விருதுகளுக்கு பாராட்டுக்கள்.
பகிர்தல் நல்லா இருக்கு.

பா.ராஜாராம் said...

நல்ல பகிர்வுகள் கதிர்! தமிழ்மண வெற்றிக்கு வாழ்த்துகளும்!

ஆரூரன் விசுவநாதன் said...

பி.கே. வோட நல்ல போட்டோ கிடைக்கல்லையா.கதிர்....இது ஏதோ தயிரு சோறாட்டமிருக்கு. நம்ம தனபாலன் சார் வீட்டு கல்யாண ஆல்பத்திலிருந்து அல்லது புத்தகத் திருவிழாவில் இருந்தோ ஒரு போட்டோவை எடுத்து அவருக்கும் சேர்த்து அனுப்பிவைங்க......

பெட்ரோல் விலை உயர்வு குறித்து அதிகமாக கவலைப்பட்டாலும், அதன் பயன்பாட்டை குறைத்துக் கொள்ளும் வகையில் ஏதாவது சிறு முயற்சியையாவது, குறைந்த பட்சம் ஓரிரு நாட்களுக்காவது எடுத்திருக்கிறோமா? இல்லையே...

அப்படியென்றால் நம் மீது திணிக்கப்படும் எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளத் தொடங்கிவிட்டோம் என்றுதானே பொருள்.

சரி விடுங்க.....சரசரி இந்தியனா இருப்போம். அறச்சீற்றத்தோடு பொங்கறதுக்குன்னு ஒரு நேரம் வரும். இந்த வருசம் மாரியம்பண்டிகைக்கு போடற நாடகத்துல ஹீரோ வேசம் போட்டு, பேச வேண்டியதெல்லாம் பேசி தீத்துக்குவோம்...விடுங்க

vasu balaji said...

அட இந்த வருசம் ‘மாப்புப் பொங்கல்’=)))). விருதுகளுக்கு வாழ்த்துகள்.

butterfly Surya said...

வாழ்த்துகள் கதிர்.

Unknown said...

வாழ்த்துகள் கதிர்.

பழமைபேசி said...

இரட்டைக்கு வாழ்த்துகள்!

முதலாளியை வழி மொழிகிறேன்!!

கல்நெய் விலை எட்டாக் கனியாக வேண்டும்; பயன்பாடு குறைய வேண்டும்; மாசு கட்டுப்படுத்தப்பட வேண்டும். கழுதைகள் மீண்டெழ வேண்டும்ன்னெல்லாம் சொன்னா, மக்கள் கோபிக்க மாட்டார்களா?!

பழமைபேசி said...

//அட இந்த வருசம் ‘மாப்புப் பொங்க//

சகலைகளின் அரசாட்சி!!!

க ரா said...

தமிழ்மண விருதுகளுக்கு வாழ்த்துகள் அண்ணா :)

manjoorraja said...

வாழ்த்துகள் கதிர்.

பெட்ரோல் விலை ஏறி இருந்தாலும் கூட பெட்ரோல் நிறுவனங்களுக்கு தினமும் கோடிக்கணக்கில் நஸ்டம் என்ற செய்தியை கேட்கும் போது எங்கோ இடிக்கிறது. ஆரம்பக்காலத்திலிருந்தே பெட்ரோல் நிறுவனங்களில் வேலை செய்பவர்களின் சம்பளம் அதிகம் என்பதும் சில காரணங்களில் ஒன்று.

Unknown said...

hello brother

Photo super but . my face not visible

Unknown said...

அண்ணா,

என்னுடைய முகம் நன்றாக தெரியவில்லை.

Unknown said...

பெட்ரோல் விலை அதிகம் என எனக்கு கார் பார்க்காம விட்டுடாதீங்க

அன்புடன் நான் said...

விருது பெற்றமைக்கு பாராட்டுக்கள்....

கலவையான பகிர்தல் நல்லாயிருக்கு....

திரு... கணபதி சொல்லுவதும் கூட சரியாதான் படுகிறது.... அது எவ்வளவு பேருக்கு சாத்தியப்படும்...?

ஈரோடு கதிர் said...

@@ கோவி.கண்ணன்
மிக்க நன்றி கோவி

@@ G.Ganapathi
இஃகி பொதுப் போக்குவரத்து இழுக்கு அல்லவா! கடன் வாங்கியாச்சும் பெட்ரோல் அடிச்சு வீலிங் வுட்டாத்தானே பெருமை கணபதி

@@ r.v.saravanan
நன்றி சரவணன்

@@ சே.குமார்
நன்றி சே.குமார்

@@ பா.ராஜாராம்
நன்றி பா.ரா

@@ ஆரூரன் விசுவநாதன்
தலைவரே அது அவரே அனுப்பின படம்தான்.


நல்ல மேக்கப் துணியா வாங்குங்க.. கலக்கிப்புடலாம்

@@ வானம்பாடிகள்
சகலைங்க பொங்கல்ங்ணா

@@ butterfly Surya
நன்றி சூர்யா

@@ தாமோதர் சந்துரு
அண்ணே நன்றி!

@@ பழமைபேசி
மாப்பு வாங்க வணக்கம்

@@ இராமசாமி
நன்றிங்க கண்ணன்

@@ manjoorraja
மிகப்பெரிய காரணமாக வரி’தான் நம்மேல் விழுகிறது
நன்றிங்க

@@ மகேந்திரன்
தம்பி நீ அழகா இருக்கேனு கொஞ்சம் சதி பண்ணிடுச்சு கேமரா!

@@ சி. கருணாகரசு
நன்றி கருணாகரசு

மாதவராஜ் said...

வாழ்த்துக்கள் கதிர்!

அம்பிகா said...

நல்ல பகிர்வுகள். தமிழ்மண வெற்றிக்கு வாழ்த்துகளும்!

Chitra said...

பொங்கல் கொண்டாடிய விதமும் படங்களும் - அழகு!

இரண்டு விருதுகள் பெற்றமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!

Unknown said...

நல்ல பகிர்வுகள். தமிழ்மண வெற்றிக்கு வாழ்த்துகளும்!

Ps: copy/paste kku poruththarulga.

T.V.ராதாகிருஷ்ணன் said...

தமிழ்மணம் விருதுகளுக்கு பாராட்டுகள்.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

ம்ம்... பொங்கல் புகைப்படம் நன்று.

பகிர்ந்த மற்ற விசயங்களும் நன்று.

சபரிமலை போன்ற செய்திகள் வருத்தமளிக்கின்றன.

வாழ்த்துகள் ஏற்கனவே சொல்லியாச்சு.

Mahi_Granny said...

தமிழ் மணவிருதுகளுக்கு வாழ்த்துக்கள். உறவினர் ஒருவரின் கடிதம் படித்தது போல இருந்தது தங்களின் பகிர்தல்.

செ.சரவணக்குமார் said...

வாழ்த்துகள் கதிர் அண்ணா.

கிராமத்துப் பொங்கல் காட்சிகள் அருமை. பாரதி கிருஷ்ணகுமாரின் வலைப்பூ அறிமுகத்திற்கு மிக்க நன்றி.

Udhayakumar said...

ஒரு வயதில், நினைவு தெரியாத ஒரு அமாவாசை நாளில் மொட்டை அடித்ததில் இருந்து 2009 நவம்பரில் அமெரிக்கா கிளம்பும் வரை மடத்துக்கு ஆயிரம் முறை போயிருந்தாலும் யாரிடமும் வரலாறு கேட்க வேண்டும் என தோன்றியதே இல்லை. உங்களுக்கு தெரியுமா?

ரிஷபன்Meena said...

வாழ்த்துக்கள் கதிர்

ராமலக்ஷ்மி said...

முற்றத்தில் பொங்கலிட்டு மூன்று பக்கம் கரும்பு கட்டி ஊர் நினைவைக் கொண்டு வரும் பொங்கல் காட்சி பகிர்வு அருமை:)!

உரல் உலக்கைகள் நல்ல படம்.//நெல் கொண்டுவந்து அங்கேயே குத்தி, அரிசியாக்கி, பொங்கல் வைத்து சாப்பிட்டுப் போனதை நினைவுபடுத்தும் வகையில்// ஆம், நினைவுபடுத்த மட்டும்.

கோடியில் இருவருக்கு வாங்கிக் கொடுத்திருக்கிறீர்கள் உரிய அங்கீகாரம். ஈழம் பிரிவில் இரண்டாம் பரிசு பெற்ற ஹேமாவுக்கு சொன்னதையை சொல்லுகிறேன். அம்மக்களின் துயர் தீர இரு இடுகைகளும் பதக்கங்களும் ஒரு பிரார்த்தனையாய் அனைவர் மனதிலும் நிற்கும். வாழ்த்துக்கள்!!

Romeoboy said...

தமிழ்மண விருதுகளுக்கு வாழ்த்துக்கள் தல .. அப்பறம் போன வருஷம் கரி நாளுக்கு எந்த கோழியை அடிக்கலாம்ன்னு கேட்டு நாலு கோழியை போட்டோ புடிச்சி போட்டு இருந்தீங்க. இந்த வருஷம் எதையும் காணோமே..

Kumky said...

தமிழ்மண விருதுகளுக்கு நிறைவான வாழ்த்துக்கள் மேயர்.,

இணைய இனைப்பின்றி நிம்மதியாக கழிந்தது சில வாரம்.

தாமத வரவுக்கும் வாழ்த்துக்கும் மன்னிக்க.

Kumky said...

பெட்ரோலுக்கு டேக்ஸ் போடுறாங்களாமே சார் பொந்தியாவுல...என்ன ஒரு அநியாயம்..

பெட்ரோல் பயன்பாட்ட குறைக்கலாமேன்னு மாட்டு வண்டி தயார் செய்ய சொன்னா ஏர் மாட்ட வித்துப்புட்டு கறவை மாடு வச்சிருக்கோம்னு பொலம்புறாய்ங்க....

சவிக்களு வாங்கி ஓட்டலாமுன்னு பார்த்தா முட்டி மொழங்காலெல்லாம் வலிக்கி...அப்புடியே சவிக்கள்ல போனாலும் உயிருக்கு உத்தரவாதமில்ல நம்ம ரோட்டுல...

நடந்தே போவலாமுன்னா நேரமாகிப்போகுதுங்களே எசமான்...

என்னதான் பன்னுறதுன்னு ஒரு ரோசனை சொல்லுங்களேன்....

ஷர்புதீன் said...

wishes!

விக்னேஷ்வரி said...

விருதுகளுக்கு வாழ்த்துகள்.

எளிய மனிதனாய் நல்ல பகிர்வு கதிர்.

Thenammai Lakshmanan said...

விருதுகளுக்கு வாழ்த்துக்கள் கதிர்..

Thamira said...

நல்ல பகிர்வுகள். தமிழ்மணம் விருது வென்ற உங்கள் கட்டுரை மிகத் தகுதியானது.!