அகம் மறைத்த புறம்












கோபத்தோடும் பயத்தோடும்
யாருக்கும் தெரியாத
பாதி மண் மூடிய கிணற்றுக்குள்

காமம் கொல்லாத சாமியார்
மக்கள் நலன் பாரா மன்னன்
மோகம் கிளறும் நடிகை
கொள்ளைக்கார மந்திரி
நாய் நக்கும் குடிகாரன்
விலை போகும் தலைவன்
மிரட்டும் போக்கிரி
கெட்டுப்போன தண்ணீர்
நாற்றமடிக்கும் காற்று
மண்ணைத் தின்ற இராசயனம்
நியாயம் இல்லா தொலைக்காட்சி
லஞ்சம் வாங்கும் காவல்துறை

எல்லோரையும் சாடி
வெண் காகிதத்தில்
கருப்பு மையில்
கடிதம் எழுதுகிறேன்

இப்படிக்கு என
என் பெயர் இட துளியும்
துணிவின்றி

தனித்தனியே உறையிலிட்டு
முகவரி சரி பார்த்து
வில்லை ஒட்டி அனுப்பி
நெஞ்சு நிமிர்த்தி வீடு செல்கிறேன்

விழித்துப்பார்க்கிறேன்
எல்லாத் தபாலும்
இறைந்து கிடக்கிறது
என் வீட்டு முற்றத்தில்

எழுதும் போது உணராத
என் பேனா மையின் புளித்த நாற்றம்....
இப்போது நாசி நிரடுகிறது...
என் மன நாற்றத்தோடு சேர்ந்து

33 comments:

Anonymous said...

எதார்த்தம்..

மணிஜி said...

படத்திற்கான கவிதையா கதிர்?

Ramesh said...

நல்ல கவிதை
.......எழுத மட்டுமே முடியும் மெளனம் கசியுது மனம் மட்டும் குமுறுது.. '

ரோகிணிசிவா said...

அசத்தல் கதிர்,
வாழ்த்துகளுடன் ,

vasu balaji said...

/எல்லாத் தபாலும்இறைந்து கிடக்கிறதுஎன் வீட்டு முற்றத்தில்
எழுதும் போது உணராதஎன் பேனா மையின் புளித்த நாற்றம்....இப்போது நாசி நிரடுகிறது...என் மன நாற்றத்தோடு சேர்ந்து/

நீல ரத்தம் தரும் அழுத்தம், இயலாமை, புழுங்கிப் புளித்த உணர்வுகள்..ம்ம்ம்..நன்று..குட். அச்சா..

T.V.ராதாகிருஷ்ணன் said...

அசத்தல்

பனித்துளி சங்கர் said...

பேருந்துக் காதல்..! - (தொடர் பதிவு)

அனைவரையும் தொடருக்கு அழைக்க ஆசைதான். நான் இப்போது இப்பதிவு குறித்து தொடர்பதிவு எழுதிட கீழ்கண்ட 10 நண்பர்களை நட்புடன் அழைக்கின்றேன் உங்களின் காதல் நினைவுகளை மறைவின்றி இந்த தொடர் பதிவின் வாயிலாக பகிந்துகொள்ளுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறேன்.
Cheena (சீனா)
கேபிள் சங்கர்
ஈரோடு கதிர்
Butterfly சூர்யா
இராகவன், நைஜிரியா
விக்னேஷ்வரி
சேட்டைக்காரன்
வெற்றி
பிரேமா மகள்
பிரவின்குமார்

நீங்கள் ஒவ்வொருவரும் நண்பர்களை அழைக்க வேண்டுகிறேன்.
http://wwwrasigancom.blogspot.com/2010/03/blog-post_23.html

பனித்துளி சங்கர் said...

எதார்த்தங்களை எதார்த்தமாகவே கசியவிட்டு இருக்கீங்க நண்பரே கவிதை அருமை !

Jerry Eshananda said...

சாமியார் முதல் காவல்காரர் வரை .......சரியாய் தான் சொல்லியிருகிறீர்கள் .

Unknown said...

நல்லாயிருக்குங்க.

நேசமித்ரன் said...

பாதி மண் மூடிய கிணற்றுக்குள்

:)

நல்லா இருக்குங்க

க.பாலாசி said...

நம் முதுகின் அழுக்கை, பார்ப்பதுகூட கடினம்தானே... கவிதை உண்மையின் பக்கம்....

Unknown said...

காமம் கொல்லாத சாமியார்
மக்கள் நலன் பாரா மன்னன்
மோகம் கிளறும் நடிகை
கொள்ளைக்கார மந்திரி
நாய் நக்கும் குடிகாரன்
விலை போகும் தலைவன்
மிரட்டும் போக்கிரி
கெட்டுப்போன தண்ணீர்
நாற்றமடிக்கும் காற்று
மண்ணைத் தின்ற இராசயனம்
நியாயம் இல்லா தொலைக்காட்சி
லஞ்சம் வாங்கும் காவல்துறை


இவங்க எல்லாம் மோசமானவங்களில் முக்கியமானவங்க

ரசித்தேன்

Romeoboy said...

ரைட் ... :)

கலகலப்ரியா said...

நல்லாருக்கு கதிர்.... இப்டி அடிக்கடி மனசாட்சி கிட்ட பேசிக்கணும் செரியா....

பழமைபேசி said...

//மண்ணைத் தின்ற இராசயனம்//

விளையாடுறார் பாருங்க!

*இயற்கை ராஜி* said...

nalla irukku..

தாராபுரத்தான் said...

இப்படிக்கு என
என் பெயர் இட துளியும்
துணிவின்றி


உண்மை.. உண்மை.

தேவன் மாயம் said...

மிகச் சரி கதிர்!!!

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

அருமையான பதிவு கதிர். உண்மை சுடுகிறது. உண்மைக்கு முன்பு குடும்பம், வேலை, பொறுப்பு போன்றவை கண்முன்னே நிற்கிறது.

Radhakrishnan said...

நல்லாருக்குங்க கதிர். மனதின் வலியும் எழுத்துகளில் புரியும்.

பா.ராஜாராம் said...

மிக அருமை கதிர்!!

Sanjai Gandhi said...

உங்க நேர்மை எனக்குப் பிடிச்சிருக்கு கதிர். ;)

ஆதங்கம் தான்..

பத்மா said...

அருமை

சீமான்கனி said...

எழுதி எழுதி தொற்று போனவர்கள் தானே நாம்...
அருமை அண்ணே...

Chitra said...

நாட்டு நடப்பில் உள்ள நஞ்சுகளை, நல்லா பட்டியல் போட்டு சொல்லி விட்டீர்கள்.

Unknown said...

ண்ணா நல்லா இருக்குங்கண்ணா

புலவன் புலிகேசி said...

இது மனிதனின் இயல்பான இயலாமை..

மாதவராஜ் said...

நல்லாயிருக்கு கதிர்.

பிரேமா மகள் said...

//எழுதும் போது உணராத
என் பேனா மையின் புளித்த நாற்றம்....
இப்போது நாசி நிரடுகிறது...
என் மன நாற்றத்தோடு சேர்ந்து//

உண்மைதான் அங்கிள்... சில சமயம்... நாம எழுதுற எழுத்துக்கள் நம்மையே திருப்பி தாக்குகின்றன... அதை பெரும்பாலும் உணர்வதில்லை நாம்.. உணர்ந்தாலும் விழித்துக் கொள்வதில்லை..

நிலாமதி said...

பட்டியல் மிகச்சரி.....இன்னும் இருக்கலாம்

காமராஜ் said...

ரொம்பவே நல்லயிருக்கு கதிர்.
அப்பப்ப நம்மை நாமே சரிபார்த்துக்கொள்ள அவசியம் இருக்கிறது. இல்லாவிட்டால் ரோட்டடியில் இருக்கும் வீட்டுக்குள் அடையும் தூசி போல, நம்மை முழுவதும் மூடிவிடும்.அப்பைக்கப்ப பெருக்கவேண்டும்.

Prapavi said...

Reality! Nice!