நிம்மதி சூழ்க..

தாங்க முடியாத இழப்பான மரணத்தை எதிர்கொள்ளும் கொடிய தருணத்தில் மனதில் நிம்மதி சூழ்ந்திட வைரமுத்து எழுதிய இந்த பாடல் மனதின் சோகத்தை நிறைய கரைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஜென்மம் நிறைந்தது
சென்றவர் வாழ்க

சிந்தை கலங்கிட
வந்தவர் வாழ்க

நீரில் மிதந்திடும்
கண்களும் காய்க

நிம்மதி நிம்மதி
இவ்விடம் சூழ்க!

ஜனனமும் பூமியில்
புதியது இல்லை

மரணத்தைப் போல் ஒரு
பழையதும் இல்லை

இரண்டுமில்லாவிடில்
இயற்கையும் இல்லை

இயற்கையின் ஆணைதான்
ஞானத்தின் எல்லை

பாசம் உலாவிய
கண்களும் எங்கே?

பாய்ந்து துழாவிய
கைகளும் எங்கே?

தேசம் அளாவிய
கால்களும் எங்கே?

தீ உண்டதென்றது
சாம்பலும் இங்கே

கண்ணில் தெரிந்தது
காற்றுடன் போக

மண்ணில் பிறந்தது
மண்ணுடல் சேர்க

எலும்பு சதை  கொண்ட
உருவங்கள் போக

எச்ச்ங்களால் அந்த
இன்னுயிர் வாழ்க

பிறப்பு இல்லாமலே
நாளொன்று இல்லை

இறப்பு இல்லாமலும்
நாளொன்று இல்லை

நேசத்தினால் வரும்
நினைவுகள் தொல்லை

மறதியைப் போல்
ஒரு மாமருந்தில்லை

கடல் தொடு ஆறுகள்
கலங்குவதில்லை

தரை தொடும் தாரைகள்
அழுவதும் இல்லை

நதி மழை போன்றதே
விதியென்று கண்டும்

மதி கொண்ட மானுடர்
மயங்குவதேன் !

மரணத்தினால் சில
கோபங்கள் தீரும்

மரணத்தினால் சில
சாபங்கள் தீரும்

வேதம் சொல்லாததை
மரங்கள் கூறும்

விதை ஒன்று வீழ்ந்திட
செடிவந்து சேரும்

பூமிக்கு நாம் ஒரு
யாத்திரை வந்தோம்

யாத்திரை தீரும் முன்
நித்திரை கொண்டோம்

நித்திரை போவது
நியதி என்றாலும்

யாத்திரை என்பது
தொடர்கதையாகும்

தென்றலின் பூங்கரம்
தீண்டிடும் போதும்

சூரியக் கீற்றொளி
தோன்றிடும் போதும்

மழலையின் தேன்மொழி
செவியுறும் போதும்

மாண்டவர் எம்முடன்
வாழ்ந்திட கூடும்

மாண்டவர் சுவாசங்கள்
காற்றுடன் சேர்க !

தூயவர் கண்ணொளி
சூரியன் சேர்க !

பூதங்கள் ஐந்திலும்
பொன்னுடல் சேர்க!

போனவர் புண்ணியம்
எம்முடன் சேர்க !
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மயிலிறகு குரலால்
மனப்புண்ணுக்கு மருந்திடும்
மயக்கும் சுதாவின் குரலில் அஞ்சலி இதோ:
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நெஞ்சு நிறைக்கும்
கண்ணிய அஞ்சலி
விஜய் யேசுதாஸின் வெண்கலக் குரலில் இதோ:
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நன்றி: வைரமுத்து, பாடகர்கள் விஜய் யேசுதாஸ், இசை: இனியவன்.
நன்றி : ஆத்மா அமைப்பு 


_____________________________________

30 comments:

vasu balaji said...

அழகான தமிழ், அமைதியான குரல், அர்த்தம் பொதிந்த வரிகள், நிறைவான அஞ்சலி..நெஞ்சுருக,நிறைய..பகிர்தலுக்கு நன்றி கதிர்..

சீமான்கனி said...

நல்லதொரு பகிர்வு அண்ணே..நன்றி...

Chitra said...

அருமையான பகிர்வுக்கு நன்றி. நெகிழ வைக்கும் வார்த்தைகள்.

கலகலப்ரியா said...

பகிர்தலுக்கு நன்றி கதிர்...

புலவன் புலிகேசி said...

நன்றீ கதிர் அண்ணா...

Unknown said...

ditto..

பத்மா said...

.நன்றி மனம் கனக்க வைக்கும் வார்த்தைகள் .மனதை உருக்கும் ராகம்

Thenammai Lakshmanan said...

கலங்கடித்தன வார்த்தைகள் கதிர்

அகல்விளக்கு said...

நல்ல பகிர்வு...

T.V.ராதாகிருஷ்ணன் said...

நிறைவான அஞ்சலி....பகிர்தலுக்கு நன்றி

Anonymous said...

என்னச் சொல்ல எல்லாரையும் போல் நல்ல பகிர்வு கதிர்....

பிரேமா மகள் said...

ஓரு வேளை நான் நல்ல மூடில் இருக்கிறேனோ என்னவோ, இந்தில் உள்ள‌ வருத்தம் என்க்கு புலப்படவில்லை..பட் நல்ல வரிகள்..... உணர்வு...

Unknown said...

சூப்பருங்கண்ணா

நாடோடி இலக்கியன் said...

நெகிழச் செய்யும் வார்த்தைகள்.

பகிர்விற்கு நன்றிங்க கதிர்.

ரோகிணிசிவா said...

"மழலையின் தேன்மொழிசெவியுறும் போதும்
மாண்டவர் எம்முடன்வாழ்ந்திட கூடும்"
-எவ்வளவு உண்மையான வார்த்தைகள்!

"ஏனோ மனதில் அறைகிறது,நிறைகிறது!
சுதாவின் குரலா,இல்லை,
நாம் உணராதா மனதின் சோகமா, வைரமுத்துவுவின் வரிகளா ! "

நல்ல பகிர்வுக்கு நன்றி கதிர் !

ராமலக்ஷ்மி said...

பகிர்வுக்கு மிக்க நன்றி கதிர்!

தேவன் மாயம் said...

பகிர்தலுக்கு நன்றி கதிர்.

Anonymous said...

காலை பாடலை கேட்காமல் படித்து விட்டு மட்டும் போனேன்..இப்ப கேட்டேன் மனசு சுமைதாங்கியாய்.....பிறக்கவே வேணாமே என தோன்றுகிறது....

vasan said...

Last week, one of our close friend`s 18 months daughter died in on unusal accident. We felt the shock in every cells of ours.Invoke, may this LYRICS of Vaira Muthu and the melody of Sudha / Vijay Jesudass sooth/heal the family`s agony due to the tragedy.

க.பாலாசி said...

பாட்ட கேட்கமுடியல... உங்க ஃபீலிங்கும் வார்த்தைகளும் புலப்படுத்துகிறது.... பாடலின் அழுத்தத்தை....

தாராபுரத்தான் said...

திருப்பூர் மின் மயானத்தில் இப்பாடல் ஒலிபரப்பு செய்யப்படுகிறது.

காமராஜ் said...

நேரடியாகக் கவிதைக்குள் நுழைந்து, ஆஹா கதிர் ஒரு மாஹா கவிதை கொடுத்திருக்கிறாரே என்று புளகாங்கிதம் அடைந்தேன்.
அப்புறம்தான் வைரமுத்தெனத் தெரிந்து கொண்டேன்.
பாடல் கேட்கமுடியல நான் எனக்கொரு மெட்டமைஅத்துக்கொள்வேன். நல்ல பகிர்வு கதிர்.

அ.சந்தர் சிங். said...

vanakkam.naan tiruparil irukkiren.
inge rottary sangaththutku serntha min mayaanam ondru ullathu.athil dhinanthorum kurainthapatcham 6-7 udalgalai thaganam seigiraargal,appoluthu ovvoru muraiyum intha paadalaithan play seivargal.antha neraththil antha neraththil oru amaithi.antha paadaludan sernthu arththathodu anubhavippom.
chandru.

Kumky said...

இப்படி ஒரு பாடல் அந்த இடங்களில் புழங்குவதே இப்போதுதான் தெரிகிறது கதிர்.
எவ்வளவு ஆழமான அர்த்தம் பொதிந்தபாடல்...
பாடலுக்காகவே ஒரு முறை சாகலாம் போல...

பனித்துளி சங்கர் said...

நல்லதொரு பகிர்வு நன்றி !

Thamira said...

சிறப்பான பகிர்வு.

க.பாலாசி said...

அந்த சுதாவின் குரலில் என்வெகு இரவுகள் மயங்கிக்கொண்டிருக்கின்றன. என்னுடைய ‘இதுக்காகவே சாகனும்’ங்கிற போஸ்ட்டும் இந்த பாட்ட கேட்டபெறவுதான் உண்டானது... அமைதியை அடிமனம்வரை பரவவிடும் பாடல்... .. பகிர்வுக்கு நன்றிகள்...

அகல்விளக்கு said...

ஆழ்ந்த வெளியொன்றிற்கு அழைத்துச் செல்கிறது பாடல்...

ஏற்கனவே கேட்டிருந்தாலும், நிதர்சனத்தில் ஆற்றுவிக்கிறது...

Anonymous said...

ஒலிக்கோப்பு பதிவிறக்கம் சுட்டி கிடைத்தால் என் மின்னஞ்சலுக்கு அனுப்பவும். covairavee@gmail.com

Unknown said...

இந்த பாடல் தமிழ்நாட்டின் அனைத்து மின் மயானங்களிலும் சிதை எரியூட்டப்படும் பொழுது ஒளிபரப்பப் படுகிறது.