கூடுத‌லாய் பிரகாசித்தது....

மௌனமாய் அந்த மாலை...
கரிய இருள் போல்
ஏதோ குழப்பம் என்னை
சூழ்ந்திருந்த வேளை...

தேவதை போலெல்லாம் நீ
வரவில்லை....

சாதாரணமாகத்தான் நீ வந்தாய்...
எப்போதும் போல்

ஆனால்.....

என் உள்ளுண‌ர்வுக்கு ம‌ட்டும்
உன்னிட‌மிருந்து
சுக‌ந்தமாய் ஒரு வாச‌னை
குளிராய் மெல்லிய‌ காற்று....

நீ உற்று பார்த்த‌போது
உன் கண்க‌ளுக்குள்
நான் அழகாய் தெரிந்தேன்...

சாதார‌ண‌மாக‌ வ‌ந்த‌ நீ
திரும்பிப்போகும் போது
என்னை திருடிக்கொண்டு
போய்விடுவாய் என்ப‌தை வ‌ழ‌க்க‌ம்போல்
தாமதமாக‌வே உண‌ர‌ ஆர‌ம்பித்தேன்..

திருட‌ப்படுவ‌திலும் கூட‌
சுக‌மிருப்ப‌தை நான் உண‌ரும் போது
மாலை நேர‌ம் கொஞ்ச‌ம்
கூடுத‌லாய் பிரகாசித்தது....

9 comments:

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

அழகான கவிதை...

//நீ உற்று பார்த்த‌போது
உன் கண்க‌ளுக்குள்
நான் அழகாய் தெரிந்தேன்...//

கண்ணோடு கண் பார்த்ததை அழகாக வர்ணித்துள்ளீர்கள்.. ஓட்டும் போட்டுட்டேன்..

நேரம் இருந்தா நம்ம "பாட்டு பஸ்" அனுபவத்தையும் பார்த்துட்டுப்போங்க...

www.senthilinpakkangal.blogspot.com

சத்ரியன் said...

//திரும்பிப்போகும் போது
என்னை திருடிக்கொண்டு
போய்விடுவாய் என்ப‌தை வ‌ழ‌க்க‌ம்போல்
தாமதமாக‌வே உண‌ர‌ ஆர‌ம்பித்தேன்..//

அழகு கதிர்.

பிரேமா மகள் said...

//நீ உற்று பார்த்த‌போது
உன் கண்க‌ளுக்குள்
நான் அழகாய் தெரிந்தேன்.//

ஆண்டிக்கு கண்ணில எதாவது பிராபளமா அங்கிள்.. நல்ல டாக்டரா பாக்கச் சொல்லுங்க.. வயசான காலத்தில தேவையாஇது ரெண்டு பேருக்கும்?

க.பாலாசி said...

//நீ உற்று பார்த்த‌போது
உன் கண்க‌ளுக்குள்
நான் அழகாய் தெரிந்தேன்...//

அத அந்தம்மா சொல்லணும்... நாமளே ‘அழகாய்’ன்னு சொல்லப்படாது....

//திருட‌ப்படுவ‌திலும் கூட‌
சுக‌மிருப்ப‌தை நான் உண‌ரும் போது
மாலை நேர‌ம் கொஞ்ச‌ம்
கூடுத‌லாய் பிரகாசித்தது....//

வீட்ல எவனாவது வந்து திருடிகிட்டுப்போனா தெரியும்.... ப்ப்ப்ப்ரகாசமெல்லாம்....

சத்ரியன் said...

வாப்பா பாலாசி,

தொணைக்கு யாரையுங் காணமேன்னு பாத்தேன்.

நல்லாக்கேளு. ஒரைக்குறா மாதிரி...

பிரபாகர் said...

சின்னப் பசங்க கதிர்... காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சுங்கறது தெரியாது போலிருக்கு!

நாம தான் நமக்கு அழகு!

அப்புறம் யாரது?

பிரபாகர்...

Thenammai Lakshmanan said...

மாலை நேர‌ம் கொஞ்ச‌ம்
கூடுத‌லாய் பிரகாசித்தது.... //

ட்யூப் லைட் ரோட் லாம்ப் எதனாச்சியும் போட்டு இருப்பாங்கப்பா கதிரு... ஹிஹிஹி...:)))

கலகலப்ரியா said...

////நீ உற்று பார்த்த‌போது உன் கண்க‌ளுக்குள் நான் அழகாய் தெரிந்தேன்...// அத அந்தம்மா சொல்லணும்... நாமளே ‘அழகாய்’ன்னு சொல்லப்படாது.... //திருட‌ப்படுவ‌திலும் கூட‌ சுக‌மிருப்ப‌தை நான் உண‌ரும் போது மாலை நேர‌ம் கொஞ்ச‌ம் கூடுத‌லாய் பிரகாசித்தது....// வீட்ல எவனாவது வந்து திருடிகிட்டுப்போனா தெரியும்.... ப்ப்ப்ப்ரகாசமெல்லாம்...//

ரிப்பீட்டு.... :)))

VELU.G said...

super தலைவா

இன்னுமா இப்புடியெல்லாம் தெரியுது