உச்சியில் நின்ற நாளில்
விரல் தொடும் தொலைவில்
நகர்ந்து போன மேகத்தில்
கொஞ்சம் கிள்ளி வந்தேன்
அதே குளிர்ச்சியோடும்
அதே மென்மையோடும்
இன்னும் பத்திரமாகத்தான்
என்னிடம் இருக்கின்றது
கிள்ளி வந்த மேகத்தில்
நனைந்து தணிவது
எதுவெனத் தெரியாமல்
தகித்தபடி நான்!
3 comments:
super! :-)
...
தகித்தபடி-ம்ம்ம்ம்ம்...
ஒரே வார்த்தையில் அத்தனை தவிப்பும்...
Post a Comment