சில கூட்டல்களும் ஒரு சமக்குறியும்


ஊர்ப்பக்கம் அடிக்கடி ஒரு கதை சொல்வார்கள். ஒரு ஊரில், அந்தப் பகுதி முழுதும் கொள்ளையடித்த பின், ஒரு மிகப் பெரிய திருடனும், அவனின் எடுபிடியும், இரவாகிவிட்டதால் ஊர் ஓரமாய் இருக்கும் கோவிலில் படுத்திருந்துவிட்டு காலையில் செல்லலாம் என முடிவெடுக்கிறார்கள். சின்ன கோவில் என்பதால் எடுபிடி, இருக்கும் இடத்தில் சுருண்டு சமாளித்துக் கொள்கிறான். திருடன் மட்டும் இடம் போதவில்லை என்பதால் தில்லாக காலைத் தூக்கி சாமி தலைமேல் வைத்துக் கொண்டு உறங்குகிறான். பொறுத்துப் பொறுத்துப்பார்த்த சாமி பாரம் தாங்கமுடியாமல் ஒரு கட்டத்தில் திணருகிறது. ஒரு வழியாய் கையை நீட்டி அருகில் உறங்கும் எடுபிடியை அடித்து எழுப்புகிறது. ”டேய்… மரியாதையா அவனைக் காலை எடுக்கச்சொல்றியா? இல்ல உன்னோட கண்ணை நோண்டட்டுமாடா?” என்றது

+

எல்லா வரம்புகளையும் மிதித்து, எல்லா விதிகளையும் உடைத்து, பாகிஸ்தான் அடைகாத்து(!) வைத்திருந்த தனது ஒற்றை எதிரி ஒசாமாவை, அர்த்த ஜாமத்தில் வீரதீரமாகக் கொன்று கொக்கரிக்கிறது அமெரிக்கா. “எங்கள் இறையாண்மையின் விரைக்கொட்டைகளை நசுக்கிட்டீங்களேடா”ன்னு முனகிய பாகிஸ்தான் அதை முக்கிச் சொல்லவும்முடியல, ஒரு முடியைக்கூட பிடுங்கவும் முடியல.

பட்டியல் போட்டால் இரண்டு கை விரல்கள் பத்தாது என்பது போல், இந்தியாவுக்குத் தேவையான 25க்கும் மேற்பட்ட எதிரிகளை சொகுசாய் தனக்குள்ளே அடைகாத்துக் கொண்டே கர்ஜிக்கிறது பாகிஸ்தான் “ஏய், இந்தியா ஒழுங்கா பொத்திக்கிட்டு இரு. உள்ளுக்கே வரனும்னு நினைச்சா, தொலைச்சுப்புடுவேன் படவா”.

+

அலைக்கற்றையில் ஊழல், விளையாட்டில் ஊழல், ராணுவ விதவைகளுக்கான மனையில் ஊழல் என ஊழல்களின் ஒட்டுமொத்த தொகுப்பின் சூத்திரதாரியாக இருக்கும் தேசியக் கட்சியை நேரடியாகத் தீண்டமுடியாத சக்தி, ஒரு மாநிலக் கட்சியை ஓடஓட விரட்டுகிறது.

+

மிகப் பெரிய ஊழல் வெல்லக்கட்டியை திகட்டத் திகட்டத் தின்றவர்களை செரித்துக்கொள்ள அனுமதித்துவிட்டு, சுமந்துவந்து கொடுத்து விட்டு, ஒட்டிக்கொண்டிருந்ததை விரல் சூப்பிக்கொண்டிருந்தவரை மட்டும் ஒவ்வொரு கம்பியாய் எண்ணச் சொல்லி கணக்கு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

=

சொல்லவேண்டிய இடத்தில் பலவற்றைச் சொல்ல முடிவதில்லை, செயல்படுத்த வேண்டிய இடத்தில்  பலவற்றைச் செயல்படுத்த முடிவதில்லை. எல்லா இடத்திற்கும் இது பொதுச்சித்தாந்தம் தான் போல. அவரவர் நாட்கள் அதனதன் போக்கில் கரைந்து கொண்டிருக்கிறது. காலமும் எல்லாக் கருமங்களையும் கவனித்துக்கொண்டே கள்ள மௌனத்தோடு தன் எண்ணிக்கையைக் கூட்டிக்கொண்டிருக்கிறது.

எப்போதாவது ”எல்லாம் ஒரு நாள் உள்ளே போய்டுவீங்கடா”னு எதோ மனநிலைபிறழ்ந்த மனிதனின் குரல் காதில் விழுந்து கொண்டிருக்கிறது. அதற்கேற்றார் போல் இயற்கையும் ஏதேதோ ரூபங்களில் எச்சரிக்கைகளை தெளித்துக்கொண்டிருக்கிறது.

-0-

15 comments:

cheena (சீனா) said...

ஒபாமா ஒசாமாவினைக் கொன்றது - பாகிஸ்தானுக்குத் தெரியாதென்பது நம்ப முடிகிறதா ? நம்மால் அதே பாகிஸ்தானை ஒன்றும் செய்ய இயலவில்லை. தேசியக் கட்சி - மாநிலக் கட்சி - சி பி ஐ - ம்ம்ம்ம்ம்ம்ம் - ஒன்றும் சொல்வதற்கில்லை.

பழமைபேசி said...

என்ன செய்யுறது... நமக்கு வாய்ச்சது நமக்கு.... புலம்பல் நெம்ப அதிகமா இருக்கு.... இஃகி இஃகி

*இயற்கை ராஜி* said...

செய்தி கேட்டதும் இதே கதைதான் நான் வீட்ல சொல்லிட்டு இருந்தேன்

ஓலை said...
This comment has been removed by the author.
ஊர்சுற்றி said...

வருத்தப்பட வேண்டிய விஷயங்கள்...வாடிக்கையான விஷயங்களாகி விட்டது !!
:(

KARTHIK said...

அட விடுங்க பாசு இதெல்லாம் சகசம் தான :-)))

KARTHIK said...

பயந்தா தொழில் பண்ணமுடியுமா!!!!!!!!

ஸ்ரீராம். said...

பாகிஸ்தானுக்கு தெரியாமல்தான் சம்பவம் நடந்திருக்கும் என்று முழுமையாய் நம்ப முடியுமா...
தேசியக் கட்சி மாநிலக் கட்சி எல்லாம் ஒரே பக்கம்...சுப்ரீம் கொர்ட்டுக்காக ஓடுவது போல பாவ்லா...
கடைசி இரண்டு பாராவும் டாப்...டாப் கிளாஸ்.

அகல்விளக்கு said...

//கார்த்திக் said...

பயந்தா தொழில் பண்ணமுடியுமா!!!!!!!!//

கரெக்டா சொன்னீங்க அண்ணா...

அகல்விளக்கு said...

:-(

எல்லாம் கடந்து போவது போல... இந்த 2G-யும் கடந்து போய்விடும்...

ஊடகங்கள் அப்படி...!!

ஷர்புதீன் said...

//இயற்கையும் ஏதேதோ ரூபங்களில் எச்சரிக்கைகளை தெளித்துக்கொண்டிருக்கிறது.//

i strongly believe this only

vasu balaji said...

14ம்தேதிதானுங்க சமன்பாடு, குறி எல்லாம் தெரியும்.

a said...

//
வானம்பாடிகள் said...
14ம்தேதிதானுங்க சமன்பாடு, குறி எல்லாம் தெரியும்.
//
ஆமாங்கோவ்...

க.பாலாசி said...

இந்தக்கதை எங்க பக்கத்துல சாமிக்கு நேரா கால நீட்டிகிட்டு தூங்குறத வச்சி சொல்லுவாங்க...

பாக்கிஸ்தான் காரங்கூட நம்மகிட்ட பயப்படாம படங்காட்ரான்... நம்மாளுங்க முடியகூட மூடிகிட்டுதான் பம்மறானுங்க..

ஆ.ஞானசேகரன் said...

///“ஏய், இந்தியா ஒழுங்கா பொத்திக்கிட்டு இரு. உள்ளுக்கே வரனும்னு நினைச்சா, தொலைச்சுப்புடுவேன் படவா”.///

நமக்கு நாட்டு உணர்வு கம்மிதானு நினைக்கின்றேன்