சிலந்தி வலையை
விரல் கொண்டு கலைப்பது போல்
நம்பிக்கை அனைத்தையும்
விதி கலைத்துக்கொண்டு போய்விட்டது
எந்த மல்லிகை மணம் வீசும்..?
சதை கருகும் வாசனையை சுவாசித்தபின்
எந்த குயில் பாடும்..?
கன்னத்தில் கண்ணீர் கோடுகளோடு
கதறும் தாயின் குரலுக்குப் பின்
எந்த உணவு ருசிக்கும்..?
இறந்த தாயின் மார்பில்
பால் தேடிய குழந்தையை கண்ட பின்
இடிந்த கூரைகளை
எவர் வந்து வேயப்போகிறார்?
பிணம் மூடிய பள்ளங்களை
யார் வந்து தூர் வாரப்போகிறார்?
இழந்த கற்பை
எங்கே திரும்பப் பெறுவது?
கதறியழுதாலும்
கம்பி வேலி தாண்டுவதில்லை குரல்கள்
Subscribe to:
Post Comments (Atom)
விதைக்கப்படும் துயரங்கள்
நமக்கு வாழ்க்கை மீதிருக்கும் காதல் அலாதியானது. செய்யும் அத்தனையும் அதற்கானதுதான். உண்பது, உடுத்துவது, உழைப்பது, உறங்குவது எனும் அடிப்படைத...

-
வெயில் விழுதுகளாய் விழுந்து கொண்டிருக்கும் நடு மதிய நேரத்தில், கொழும்பு புறக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந...
-
அவர் அதுவரை என் பார்வையில் பட்டதில்லை. ஒருவேளை பட்டிருக்கலாம், நான் அவரை அடையாளப்படுத்தி மனதில் பதிந்துகொள்ளவில்லை. நடைபயிற்சியில் திரும்பி ...
-
வலையுலக வாழ்வில் மிக நெகிழ்ச்சியான நிகழ்வு இன்று இனிதே நிறைவேறியது. சென்ற ஆண்டு கொஞ்சம் ஆசையோடு நடத்திய பதிவர் சங்கமம் கொடுத்த உற்சாகம் எங்க...
10 comments:
"சிலந்தி வலையை
விரல் கொண்டு கலைப்பது போல்
நம்பிக்கை அனைத்தையும்
விதி கலைத்துக்கொண்டு போய்விட்டது.."
நல்ல கவிதை. அழகான வரிகள். நெஞ்சத்தோடு உறவாடும் கரு.
பாரட்டுக்கள்.
ஆயினும் நம்பிக்கை ஊட்டுவது படைப்பிற்கு அவசியம் என எண்ணுகிறேன்.
”ப்ச்”
ப்ரியமான பாராட்டுக்கள்
//ஆயினும் நம்பிக்கை ஊட்டுவது படைப்பிற்கு அவசியம் என எண்ணுகிறேன்.//
உங்கள் வார்த்தைகளை
ஏற்றுக்கொள்கிறேன்
நன்றி... பிரியமுடன்.........வசந்த்
வருகைக்கு நன்றி பழமை...
"ப்ச்"
இறுக்கமான,
கனமான வலியை
உணர்த்துகிறது
www.maaruthal.tk மூலமாக வந்தேன். தங்கள், கவிதை மனதைப் பிசைகிறது. நானும் ஈரோடு தான்.
சுமஜ்லா
dot.tk வை அறிமுகப்படுத்தியதற்கு முதலில் நன்றி.
வருகைக்கு நன்றி
தாங்களும் ஈரோடு என்பதில் கூடுதல் மகிழ்ச்சி
அற்புதமா இருக்குங்க
கம்பி வேலி தாண்டுவதில்லை.....இன்றும் பொருந்தும் வரிகள்!
Post a Comment